நடுவர் : பேராசிரியர் பான் கீ மூன்
ராஜபக்சேயே!: முனைவர் கண்மோகன் சிங்
பொன்சேகாவே! : பேராசிரியர் குர்தாரி
கண்மோகன்: நடுவர் அவர்களே! இன அழிப்பை மிகச்சரியாகசெய்ய எங்கள் நண்பர் ராஜபக்சேயைத் தவிர இந்த உலகத்திலேவேறுயார் இருக்க முடியும்? இனஅழிப்பு என்பதெல்லாம் ஒருமேட்டரே அல்ல! ஆனால் இவ்வளவு பேரையும் கொன்று விட்டுஎதுவுமே தெரியாத நல்ல பிள்ளை போல நடிப்பதற்குராஜபக்சேயைத் தவிர வேறு ஆளை உங்களால் காட்டமுடியுமா?"புத்தம் சரணம் கச்சாமி" என்று திரிந்தவர்களை எல்லாம் "ரத்தம்வரனும் கந்தசாமி" என பயிற்றுவித்து கொன்றுகுவித்த எங்கள்தளபதி ராஜபக்சே தான் இனஅழிப்பிலே சிறந்தவர் என்பதை நான்இங்கே பதிவுசெய்ய விரும்புகிறேன். என்ன தான் சீனாஆயுதஉதவி செய்தாலும் அதை ஆப்பரேட் பண்ண ஆள் உதவிசெய்தது எங்கள் நாடு தான் என்பதை இங்கே பெருமையாகச்சொல்லிக்கொள்கிறேன். புத்த மதத்தைத் சார்ந்த ஒருவர்திருப்பதிக்கு விஜயம் செய்து ஏழுமலையானை தரிசிக்கிறார்என்றால் அதிலிருந்தே தெரிந்துகொள்ளுங்கள் அவர் அனைத்துமதத்தினருக்கும் நண்பர் என்பதை. சில வீணர்களும்,சிலவெளங்காத ஊடகங்களும் மட்டும் தான் அவரை கெட்டவராகச்சித்தரிக்கின்றன. மற்றபடி ராஜபக்சே அவர்கள் வாயிலே விரலை வைத்தாலும் கடிக்கத்தெரியாத குழந்தை தான் என்பதை இங்கே சுட்டிக்காட்டுகிறேன். எனவே இனஅழிப்பை மிகச்சிறப்பாகச்செய்தது ராஜபக்சேயே..,ராஜபக்சேயே என தெரிவித்துவாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி!வணக்கம்.
பான்கீமூன்: அருமை! அருமை! அடுத்ததாக பொன்சேகாவே எனபேசுவதற்கு பேராசிரியர் குர்தாரியை அழைக்கிறேன்.

குர்தாரி: இந்த அருமையான பட்டிமன்றத்தின் நடுவர் அவர்களே!எரிந்து கருகிப்போன மரங்களைக் கேளுங்கள், அது சொல்லும்இனஅழிப்பை மிகச்சரியாக செய்தது சரத்பொன்சேகா என்பதை.எங்கள் நாட்டினர் எதுவுமே செய்யவில்லை என்பதைப் போலஇதற்கு முன்பேசிய கண்மோகன் அவர்கள், அவர் நாட்டிலிருந்துஆள் அனுப்பியதைச் சொன்னார். எங்கள் உதவி இல்லாவிட்டால்இந்தப் போரிலே இலங்கை வென்றிருக்க முடியுமா? கொரில்லாதாக்குதல்கள் பற்றி குமுறிக்குமுறி பாடமெடுத்ததையெல்லாம்மறந்துவிடக்கூடாது. நாங்களும் உங்களுக்கு சளைத்தவர்கள்அல்ல. புரிந்துகொள்ளுங்கள். ஆனால் இலங்கை கடற்படையோடுசேர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்கும் வாய்ப்பை இந்தியாபெற்ற அளவிற்கு, சீனா பெற்ற அளவிற்கு நாங்கள்பெறவில்லை என்பதை வருத்தத்தோடு சொல்லிக்கொள்கிறேன்.அடுத்ததாக எங்கள் பொன்சேகா அவர்கள் எதுவுமேசெய்யவில்லை என்பதைப் போல ராஜபக்சேவை தலையில்தூக்கி வைத்து பேசினார் கண்மோகன். அவர் திருப்பதியிலேசுதந்திரமாக நடமாடினாராம். அவர் மட்டும் எங்கள் நாட்டுக்குவந்திருந்தால் இறங்கிய இரண்டே நிமிடங்களில் இறைவனடிசேர்ந்திருப்பார். ஆக பொன்சேகா இல்லையென்றால் போரேஇல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே இனஅழிப்பைமிகச்சிறப்பாகச் செய்தது பொன்சேகாவே!...,பொன்சேகாவே!எனக்கூறி வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி அமர்கிறேன். நன்றி!வணக்கம்.


பட்டிமன்றத் தலைவரும் இனஒழிப்புக்கு சிறப்பாகப் பங்காற்றியமையை மறந்துவிடக் கூடாது. அருமை:)
சபாஷ் !!!! சவுக்கடி நிஜாம் !!!
அதிரடியான பதிவு !!!
இன்னும் நிறைய போட்டு தாளித்திருக்கலாம்.ஷாட்டா முடிச்சிட்டீங்க..!!!
இந்த பதிப்பு 'Black Humour' பாணியில் உள்ளது.
அருமை!! வாழ்த்துக்கள்!!
ADA NAMA TAMIL NADU KARUNAVA VEDUDIKA ETHU NAYAMA?
// வானம்பாடிகள் said...
பட்டிமன்றத் தலைவரும் இனஒழிப்புக்கு சிறப்பாகப் பங்காற்றியமையை மறந்துவிடக் கூடாது. அருமை:)//
ஆமாண்ணே! கடைசி வரை அருமையா மெயின்டன் பண்ணிட்டார். நன்றிண்ணே!
// அ.மு.செய்யது said...
சபாஷ் !!!! சவுக்கடி நிஜாம் !!!
அதிரடியான பதிவு !!!
இன்னும் நிறைய போட்டு தாளித்திருக்கலாம்.ஷாட்டா முடிச்சிட்டீங்க..!!//
நன்றி செய்யத்! நம்ம உடன்பிறப்புகளுக்கு இதப் படிக்கவே மூச்சு வாங்குதாம். தாளிக்க நிறைய விசயம் இருக்கு, ஆனா அதப் படிக்கும் பொருமை யாருக்குமே இல்லை.
//Arun KK said...
இந்த பதிப்பு 'Black Humour' பாணியில் உள்ளது.
அருமை!! வாழ்த்துக்கள்!!//
நன்றி அருண் சார்! தொடர்ந்து இணைந்திருங்கள்
//chidambararajan said...
ADA NAMA TAMIL NADU KARUNAVA VEDUDIKA ETHU NAYAMA?//
நன்றி திரு சிதம்பர ராஜன்.
தொடர்ந்து இணைந்திருங்கள்
தம்பீ.. என்னை விட்டு விட்டாயே.. நான் ஒட்டு மொத்த தமிழ் இனத்திருக்கே..நான் குத்தகைதாரியடா.. என்னை ஏன் விட்டு விட்டாய்..