Oct 1, 2010

அயோத்தி விவகாரம் - அற்புதமான தீர்ப்பு

நிஜாம் கான் @ 6:25 PM
கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவை இம்சித்துக் கொண்டிருந்த ஒரு பிரச்சனைக்கு சரியான தீர்ப்பினை வழங்கிவிட்டார்கள் நீதியரசர்கள். இந்தியாவின் ஜனநாயகம் காக்கப்பட்டு விட்டது, சமநிலையான தீர்ப்பு என அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் கருத்தினை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்கள். இது போன்ற தீர்ப்பினை இதுவரையிலே இந்திய நீதிமன்றங்கள் அளித்தது இல்லை என்றால் தான் இந்த தீர்ப்பு குறித்து நாம் ஆச்சரியப்படவேண்டும். ஆனால் வழக்கமாக வரும் அடிப்படையிலே இந்த தீர்ப்பும் அமைந்திருப்பது தான் வருத்தப் படவைக்கிறது. இனிமேல் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் மசூதிகளை இடிக்கலாம். அந்த வழக்கும் நீதிமன்றத்திடம் செல்லும். ஏம்பா ரெண்டு பேரும் அடிச்சிக்கிறீங்க? இந்தாங்க ஆளுக்குப் பாதியா பிரிச்சிக்கிங்க. அதுவும் இடித்தவர்களுக்கு முக்கிய இடங்களாகப் பிரித்து விட்டு இடிபட்டவனுக்கு கக்கூஸ் இருந்த இடம் மற்றும் காம்பவுண்ட் இருந்த இடங்களை ஒதுக்கிக் கொடுங்கள் என இனிமேல் இந்தியாவில் இருக்கும் அனைத்து நீதிமன்றங்களிலும் தீர்ப்புகள் வெளியாகலாம்.


அதிலும் நீதிபதிகளில் முக்கியமானவரான நீதியரசர் டிவி.சர்மா கீழ்க்கண்டவாறு அறிவிக்கிறார்,.

* சர்ச்சைக்குரிய இடம் இராமர் பிறந்த இடம் தான்
* அங்கு பாபரால் கட்டிடம் எழுப்பப்பட்டது
* அது எந்த வருடம் என்பது தெரியவில்லை. ஆனால் அது இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முரணாக இருந்தது. மசூதிக்கு உரிய அம்சங்களே அதில் இல்லை. எனவே அதை மசூதியாக கருதமுடியாது.ஏற்கனவே இருந்த பழமையான கட்டிடத்தை இடித்து விட்டுத்தான் இந்த கட்டிடம் கட்டப்பட்டு இருக்கிறது..

என  தன் கருத்தினைச் சொல்லி இருக்கிறார். இந்தியாவின் மத நல்லிணக்கத்திற்கு வேட்டு வைத்து தங்களின் அரசியல் வெறியை தீர்த்துக் கொண்ட ஒரு கூட்டத்தினருக்கு மேலும் வலுசேர்க்கும் இந்த தீர்ப்பு.



அடித்தவனுக்கு 100 ரூபாய் அபராதமும், அடிவாங்கியவனுக்கு 200 ரூபாய் அபராதமும் இனிமேல் நீதிமன்றங்களில் விதிக்கப்படலாம். சட்டம் ஒரு இருட்டறை என அன்றைக்கே அறிஞர் அண்ணா சொல்லிவிட்டார். இந்த தீர்ர்பு குறித்து திராவிடர் கழகத்தலைவர் அய்யா கி.வீரமணி அவர்கள் கீழ்க்கண்டவாறு தெரிவித்து இருப்பது கொஞ்சம் நமக்கு ஆறுதலை தருகிறது.

சட்டக் கோர்ட்டா? நம்பிக்கைக் கோர்ட்டா?

புராண கால கற்பனைகளுக்கும், இதிகாச கால நம்பிக்கைகளுக்கும் மதப் பூச்சு பூசப்பட்டதாலேயே வெறும் நம்பிக்கை அடிப்படையில் ராமர் அங்குதான் பிறந்தார் என்றெல்லாம் இதுபோன்ற தீர்ப்புகளில் எழுதப்படுவது, நீதிமன்றங்களை - சட்ட கோர்ட்டுகள் (Courts of Law) என்பதற்குப் பதிலாக, நம்பிக்கை கோர்ட்டுகளாக (Courts of belief and Faith) ஆக்குவதாக அமைந்துள்ளது. இதன் தீய விளைவு நிகழ்காலத்தில் மட்டுமல்ல, வருங்காலத்திலும் நியாய விரோத தீர்ப்புகள், புற்றீசல்கள்போல் கிளம்ப வழிவகுத்து விடும்.







இது போன்ற வார்த்தைகளிலேயே நடுநிலையாளர்கள் இந்த தீர்ப்பினை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம். இதுபோன்ற தீர்ப்புகள், மக்கள் கடைசி கடைசியாக நம்பி வரும் நீதிமன்றங்களின் மீது ஒரு நம்பிக்கையின்மையையே ஏற்படுத்துகிறது. நீதியரசர் சொல்வதைப் போல அந்தக் கட்டிடம் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானது அல்ல. ஆனால் முழுக்க முழுக்க இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிராக ஆக்ராவில் கட்டப்பட்டிருக்கும் தாஜ்மஹாலை மட்டும் ஏன் தொல்லியல் துறை, சுற்றுலா துறை பாதுகாக்கிறது என தெரியவில்லை.





இதை எப்படி சமநீதியான தீர்ப்பு என ஏற்றுக் கொள்ள முடியும்? உதாரணமாக‌

ஒரு கிராமத்தில் "A" என்பவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரீடத்திலே வீடு கட்டி வாழ்ந்து வருகிறார் என வைத்துக்கொள்வோம். ஒரு நாள் அந்த வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த "B" அங்கே தன் பண்டபாத்திரங்களை வைத்துவிட்டு இது என் வீடு என்கிறார். வழக்கு நாட்டாமையிடம் போகிறது. வழக்கை மிகவும் நேர்மையாக விசாரித்த நாட்டாமை, அப்படியா சங்கதி!! வீடு யாருக்கும் இல்லை, இழுத்துப் பூட்டு என்கிறார். வீடு இழுத்துப் பூட்டப்படுகிறது. இந்த நிலையில் "C" என்பவர் இந்த நிலம் என் தாத்தா காலத்து பூர்வீகம், எனவே நான் தான் அதற்கு உரிமையாளர் என சொல்கிறார்.அ தையும் நாட்டாமை ஏற்றுக்கொள்கிறார். ஒருநாள் "B" பஞ்சாயத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்கிறார்.அதாவது என்னுடைய பாத்திரங்களை நான் கழுவி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் அது துருபிடித்து விடும் என கேட்கிறார். அப்படியா அப்படியானால் நீ ஜன்னல் வழியாக திறந்து அதை செய்து கொள் என்கிறார் நாட்டாமை.

உடனே அந்த வீட்டின் உரிமையாளர் "A" நாட்டாமையிம் அவருக்கு மட்டும் ஜன்னலை திறந்து விடுவது மாதிரி எனக்கும் கொஞ்சம் கதவைத் திறந்து விட்டா நான் அந்த வீட்டுக்கு ஒட்டடை அடித்துக் கொள்வேனே என கேட்க, அதெல்லாம் முடியாது வழக்கு பஞ்சாயத்துல இருக்கு என்கிறார் நாட்டாமை. கொஞ்ச நாளில் "B" தன் ஆட்களை அழைத்து வந்து அந்த வீட்டை இடித்து தரைமட்டமாக்குகிறார். செய்வதறியாத "A" நாட்டாமையிடம் முறையிட அவரை தேடி அலைகிறார். ஆனால் வீடு இடிக்கப்படும் வரை நாட்டாமை தலைமறைவாகி விடுகிறார். சரி வீடு போனா போகட்டும் அந்த நிலமாவது மிஞ்சுமே என மீண்டும் நாட்டாமையை தேட அப்போதும் அவர் கிடைக்கவில்லை. அதற்குள்ளாக "B" தன் பாத்திரங்களை வைப்பதற்கு ஏற்ப ஒரு தற்காலிகமாக கொட்டகை அமைத்துக் கொள்கிறார்.


இப்போது மீண்டும் வழக்கு நாட்டாமையிடம் வருகிறது. இப்போது நாட்டாமை சொல்கிறார், கொஞ்ச நாள் ஆறப்போட்டு அப்புறமா பாத்துக்கலாம் என்று. நீண்ட நாள் குறித்து தன்னுடைய கட்டப்பஞ்சாயத்தைக் கூட்டி நாட்டாமை ஒரு அழகான தீர்ப்பினைச் சொல்கிறார். அதாவது "A" இருந்தது வீடே அல்ல. அது ஒரு பேய் பங்களா. ஆனாலும் அவருக்கு உரிமை உண்டு. "B" தான் இப்போது அந்த இடத்தை பராமரித்து வருகிறார். எனவே அதிலே அவருக்கும் உரிமை உண்டு. இது "C" யின் தாத்தா காலத்து நிலமாம். எனவே அவருக்கும் அதிலே உரிமை உண்டு. ஆக இதை மூன்றாக பிரித்து "B" பாத்திரம் வைத்திருக்கும் முக்கிய இடமான ஹால் மற்றும் அறைகளை அவருக்கும், தாத்தா காலத்து வாரிசுதாரரான "C"க்கு ஹால் மற்றும் முற்றப்பகுதிகளும், ஆதாரமேயில்லா விட்டாலும் போனா போவுது "A" க்கு மாட்டுக்கொட்டகை மற்றும் காம்பவுண்டு சுவர் பகுதியும், அதிலும் மூன்றாக‌ பிரிக்கும் போது இடம் போறாவிட்டால் "A"க்கு அவர் வீட்டு வாசலில் கொஞ்சமாக கிடக்கும் ஏரிப்புறம் போக்கையும் சேர்த்து அவர் கணக்கை செட்டில் செய்ய தீர்ப்பளிக்கிறேன் என ஒரு சாதாரண கட்டப்பஞ்சாயத்து கிராமத்து நாட்டாமை சொன்னா நாமெல்லாம் ஏற்றுக் கொள்வோமா?

இதுபோன்றவற்றையெல்லாம் பார்க்கக் கூடாது என்று தானோ என்னவோ நீதி தேவதை தன் கண்களைக் கட்டிக் கொண்டிருக்கிறாள் போலும். ஆனாலும் இன்னமும் நீதியின் கண்கள் மங்கிவிடவில்லை. தூரத்தில் இருக்கும் உச்ச நீதிமன்றத்தை நோக்கி மேல் முறையீடு செய்யப்படுகிறது.அதிலாவது சரியான நீதி கிடைக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உச்ச நிதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும். காரணம் நாம் வாழும் நாட்டின் இறையான்மைக்கு எந்த வகையிலும் உலக அரங்கில் குந்தகம் வந்துவிடக் கூடாது. உலக அரங்கில் ஜார்ஜ் புஷ் மற்றும் ராஜபக்சே போன்றவர்கள் குற்றவாளிகளாக கைகட்டி நிற்கும் நிலை நம் நாட்டுக்கும் வந்து விடக்கூடாது. எனவே மேல்முறையீட்டுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர் நோக்க வேண்டும். அதுவும் இப்படியே வந்தால் நாம் மனம் உவந்து நமக்கென வழங்கப்பட்ட இடத்தையும் கோவிலுக்காக கொடுத்து விட்டு ஒதுங்கி விடவேண்டும். சகோதரத்துவமான இந்தியாவின் நிலையை சீர்குலைக்க சதி செய்யும் சண்டாளர்களின் சூழ்ச்சிகளில் இனியும் சிக்கி யாரும் பலியாகிட வேண்டாம். பொருமையே சிறந்த ஆயுதம். இறைவன் பொருமையாளர்களுடன் இருக்கிறான்.
already seen this

32 Response to "அயோத்தி விவகாரம் - அற்புதமான தீர்ப்பு"

  1. நட்புடன் ஜமால் said...

    ஒரு பிள்ளைக்கு இரண்டு தாய் சொந்தம் கொண்டாடினாங்களாம்

    ஆளுக்கு பாதி என்று தீர்ப்பு சொன்னார்களாம்

    சரியென்று பெறாத பெண் சொன்னார்களாம்
    அவர்களிடமே கொடுத்துடுங்கன்னு பெற்ற தாய் சொன்னார்களாம்

    இந்த கதையில் எதுனா ‘நீதி’ தெரியுதா

    அது சரி ‘நீதி’ன்னா என்னன்னு தான் கேட்கனும்

  2. இனியா said...

    enna oru aniyaayamaana theerppu :(

  3. goma said...

    நீதிதேவதை,கண்ணைக்கட்டிக்கொண்டிருப்பதால்தான்

    தீர்ப்புகள் கண்மூடித்தனமாக அமைந்து விடுகிறதோ

  4. ~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

    எனக்கு பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட (1992) நாளைவிட, முஸ்லிம்களை தொழ அனுமதிக்காமல் பள்ளியை பூட்டி சீல்வைத்த(1950)நாளைவிட, இந்த ரவுடித்தன கட்டப்பஞ்சாயத்து 'தீர்ப்பு'(?) வந்த அன்றுதான் இந்தியாவிற்கு பெருத்த தலை குனிவாய் கேவலமான அவமானமாய் ஆகி உள்ளது.

    நேற்றைய தீர்ப்பு என்பது, உண்மையில் நீதியை நிலை நாட்டுவதற்கும்… ஹிந்துத்வா ஆதரவு நிலைக்கும்… இடையேயான ஒரு முக்கியமான அமில சோதனை, அல்லாஹ்-ஆ-பாத் ஹைக்கோர்ட்டுக்கு. கடைசியில் வழக்கம்போலவே ஹிந்துத்வாதான் வெற்றி பெற்று விட்டது.

    அறுபது ஆண்டுகாலமாக கோமாவில் கிடந்த நீதி நேற்று ஒரேயடியாய் செத்து விட்டது…

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்…

    நல்லடக்கமா அல்லது தகனமா… அது… (அதாங்க… மேல்முறையீடு செய்தபின்னர் வரணுமே …சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு… அதுதான்…) அது எப்போது என்று தெரியவில்லை.

    அநேகமாய், முஸ்லிம்களிடம் கொடுக்கப்பட்ட மீதம் உள்ள மூன்றில் ஒரு பகுதி நிலத்தையும் அன்று சுப்ரீம் கோர்ட்டில் முழுசாய் பிடுங்கிக்கொண்டு அம்போவென முஸ்லிம்களை ஓட ஓட விரட்டி அடித்து அனுப்பப்போகிறார்கள்.

    உச்ச நீதிமன்றம் ஒன்றும் நீதியை நிலைநாட்டிவிடும் என்று நம்ப வேண்டாம். ஹிந்துதுவாவா...? இஸ்லாமா...? என்று வரும்போது ஒருபொழுதும் உச்சநீதிமன்றம் நீதியை நிலைநாட்டியது கிடையாது. அப்சல் குருவின் மீதான குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்றாலும் "தேசத்தின் பெரும்பான்மை மனசாட்சியின் விருப்பத்தின்" அடிப்படையில்தானே தூக்குத்தண்டனை அளிக்கப்பட்டது? சட்டத்தின் அடிப்படையிலா தீர்ப்பு வழங்கப்பட்டது? அதுமட்டுமா? இதற்கு மேலும் விரிவான பொழிப்புரை இங்கே: http://www.onlinepj.com/vimarsanangal/ithara_vimarasanagal/neethi_seththathu/

    என்னைக்கேட்டால், முஸ்லிம்கள் முட்டாள்த்தனமாய் மேல்முறையீடு எல்லாம் செய்யாமல், ஓரமாய் தரப்பட்ட அந்த ஒரு துக்கடா நிலத்தை தங்கள் கபருஸ்தான் நிலமாக ஆக்கிக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவில் மதக்கலவரத்தில் கொல்லப்படும் அனைத்து முஸ்லிம்களையும் கொண்டு போய் அங்கே அடக்கம் செய்யலாம்.

    இனி, மேலும் மேலும் பல பல மசூதிகளில் இரவோடு இரவாக கதவை-பூட்டை உடைத்து ஹிந்து கடவுள் சிலைகளை உள்ளே வைத்து அப்புறம் கேஸ் போட்டு அந்த மசூதிகளை பூட்டி பாழடைய வைத்து பின்னர் ஒருநாள் இடித்துத்தள்ளிவிட்டு அவற்றை தங்கள் வசமாக்கிக்கொள்ள ஹிந்துத்துவாக்களை உற்சாகப்படுத்தும்படியான ஒரு கெட்ட அழிவுப்பாதையின் தொடக்கம்தான் நேற்று வந்த இந்த தீர்ப்பு.

    ‘இந்திய மதச்சார்பின்மை’ எனும் மாயையிலிருந்து முற்றிலும் விடுபட மேலும் ஒரு வாய்ப்பு என்பதைத்தவிர இத்தீர்ப்பால் முஸ்லிம்களுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை.

    ஆனால், நிலம் பெற்றவர்கள் பெருத்த மகிழ்ச்சியில் உள்ளார்கள். உடனடியாய் கோவில் கட்டி பெரிய்ய்ய்ய்ய்ய்ய உண்டியல் வைத்து கோடி கோடியாய் சம்பாதித்து திருப்பதி ஏழுமலையானையே விரைவில் ஓவர்டேக் செய்வார்கள். இவர்கள் இவ்வளவுதூரம் மெனக்கெடுவது பக்தர்களின் காணிக்கை மூலம் தங்கள் கஜானாவை நிரப்பிக்கொள்ளத்தானே...!

    வாழ்க … இந்துயா…

    நன்றி … அநீதி மன்றம்…

  5. Thekkikattan|தெகா said...

    அடாவடியான நேர்மையற்ற தீர்ப்பு...

  6. அருள் said...

    அயோத்தி தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடம் "இராமர் பிறந்த இடம்" என்று நீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் அவ்வாறு தீர்ப்பில் கூறப்படவில்லை.

    இராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதாக மட்டுமே கூறப்பட்டிருக்கிறது. நம்புவது வேறு, உண்மை வேறு. இரண்டும் ஒன்றல்ல.

    நீதியரசர் D.V.சர்மா தீர்ப்பு மட்டுமே அது இராமர் பிறந்த இடம் என்கிறது. நீதியரசர் D.V.சர்மாவின் தீர்ப்பு பெரும்பான்மை தீர்ப்பல்ல. மற்ற இரு நீதியரசர்களின் தீர்ப்பே பெரும்பான்மையானது. அதில் “இராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதாக மட்டுமே கூறப்பட்டிருக்கிறது”. அந்த தீர்ப்புகள் இதோ:

    GIST OF THE FINDINGS by Justices Sudhir Agarwal:

    “The area covered under the central dome of the disputed structure is the birthplace of Lord Rama as per faith and belief of Hindus.”

    GIST OF THE FINDINGS by Justices S.U.Khan:

    “5. That for a very long time till the construction of the mosque it was treated/believed by Hindus that some where in a very large area of which premises in dispute is a very small part birth place of Lord Ram was situated, however, the belief did not relate to any specified small areawithin that bigger area specifically the premises in dispute.

    6. That after some time of construction of the mosque Hindus started identifying the premises in dispute as exact birth place of Lord Ram or a place wherein exact birth place was situated.”

    இராமர் அங்குதான் பிறந்தார் என்று நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டதாக பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தினர் பிரச்சாரம் செய்கின்றனர்.

    அயோத்தி தீர்ப்புக்கு பின் நீதிமன்ற வாசலில் பேட்டியளித்த பி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் இரவிசங்கர் பிரசாத் "இராமர் பிறந்த இடம் இதுதான் என்று நீதிமன்றம் கூறிவிட்டது" என்று திரித்துப்பேசினார். அது தொலைக்காட்சியில் உடனடியாக ஒளிபரப்பப்பட்டது. பல பத்திரிகைகளும் அதே கருத்தை வெளியிட்டு வருகின்றன.

    ஏன் இந்த பித்தலாட்டம்?

    இராமர் பிறந்த இடம் இதுதானா என்பது வழக்கே அல்ல. அப்புறம் எதற்கு பச்சைப்பொய் புளுகவேண்டும்?

  7. smart said...

    இந்த இடுகையைப் படித்தால் தீர்ப்பின் நீதி புரியும்

  8. நிஜாம் கான் said...

    //நட்புடன் ஜமால் said...
    October 1, 2010 6:36 PM
    ஒரு பிள்ளைக்கு இரண்டு தாய் சொந்தம் கொண்டாடினாங்களாம்

    ஆளுக்கு பாதி என்று தீர்ப்பு சொன்னார்களாம்

    சரியென்று பெறாத பெண் சொன்னார்களாம்
    அவர்களிடமே கொடுத்துடுங்கன்னு பெற்ற தாய் சொன்னார்களாம்

    இந்த கதையில் எதுனா ‘நீதி’ தெரியுதா

    அது சரி ‘நீதி’ன்னா என்னன்னு தான் கேட்கனும்//

    அ'நீதியான விசயத்திற்கு சரியான நீதிக்கதை ஜமால். நன்றிகள்

  9. நிஜாம் கான் said...

    //இனியா said...
    October 1, 2010 6:54 PM
    enna oru aniyaayamaana theerppஉ :(//

    நடுநிலையாளர்களே ஆச்சரியப்படுகிறார்கள் இனியா! நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்

  10. நிஜாம் கான் said...

    //goma said...
    October 1, 2010 6:58 PM
    நீதிதேவதை,கண்ணைக்கட்டிக்கொண்டிருப்பதால்தான்

    தீர்ப்புகள் கண்மூடித்தனமாக அமைந்து விடுகிறதோ//

    நன்றி ஹோமா! தெளிவானதை உணர்ந்து கொண்டதற்கு

  11. நிஜாம் கான் said...

    //mohamed ashik said...
    October 1, 2010 7:40 PM
    //
    நன்றி ஆசிக்! சிறந்த அலசல்

  12. நிஜாம் கான் said...

    //Thekkikattan|தெகா said...
    October 1, 2010 7:55 PM
    அடாவடியான நேர்மையற்ற தீர்ப்பு...//

    நன்றி நண்பரே! தொடர்ந்து இணைந்திருங்கள்

  13. நிஜாம் கான் said...

    //அருள் said...
    October 2, 2010 12:06 AM

    சரியான அலசல் அருள். சிறப்பான கருத்துக்கள்

  14. நிஜாம் கான் said...

    //smart said...
    October 2, 2010 1:54 AM
    இந்த இடுகையைப் படித்தால் தீர்ப்பின் நீதி புரியும்//

    இடுகையைப் படித்தேன்.. நீங்கள் 4வது நீதிபதியாய் இருந்திருக்க வேண்டியவர் ஸ்மார்ட்.

  15. நிஜாம் கான் said...

    நடுநிலையாய் புரிந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும், திணமனி உள்ளிட்ட பத்திரிகைகளுக்கும் நன்றி!!!

  16. அப்துல்மாலிக் said...

    இந்த கேடு கெட்ட தீர்ப்புக்கு எதுக்கு 60 வருஷம் எடுத்துக்கிட்டானுங்கனு தெரியலே, கிராமத்துலே நடந்தா 60 நிமிஷத்துலே சொல்லிடலாமே(சொன்ன கட்டப்பஞ்சாயத்து விளக்கம் அருமை),

    அநீதி இழைக்கப்பட்டுள்ளது..

  17. Kiruthigan said...

    பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்...

  18. THE UFO said...

    //சட்டக் கோர்ட்டா? நம்பிக்கைக் கோர்ட்டா?//
    //ஒரு கிராமத்தில் "A" என்பவர்...கட்டப்பஞ்சாயத்து கிராமத்து நாட்டாமை...// என இடுகை நன்றாக இருக்கிறது.

    இதுதான் தீர்ப்பு... இப்படித்தான் இதை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
    அதாவது...
    இனிமேல் ஒரு இடம்/கட்டிடம் ஒருத்தருக்கு வேண்டும் என்றால், அதை "சட்டப்பூர்வாமாக அபகரிக்க" வேண்டுமானால், முதலில் ஏதாவது கதை சொல்ல வேண்டும் 'ராமரு பீமரு' என்று.

    அப்புறம் அந்த கதை சார்ந்த ஏதாவது ஒரு 'பொருளை' இரவோடு இரவாக கொண்டுபோய் 'திருட்டுத்தனமாய்' அங்கே உள்ள கட்டிடத்தில் வைத்துவிட்டு வந்துவிட வேண்டும்.

    பிறகு அதை வன்முறை அராஜக கரசேவை செய்து இடித்துவிடவேண்டும்.

    அப்புறம் தொல்லியல் துறை குழிதோண்டி ஆராய்ந்து பார்த்து 'இதற்கு முன் அந்த இடத்தில் ஏதோ கட்டிடம் இருந்தது' என்று அறிக்கை கொடுக்கும்.

    நீதிபதிகள் இடித்த கதையை, இடிக்கப்பட்ட கட்டிடத்தை , வன்முறையை அதை தொடர்ந்து நடந்த கலவரத்தை எல்லாவற்றையும் விட்டு விட்டு... அந்த இடத்தை மூனாபிரிச்சு... அட போங்கப்பா... நீங்களும் உங்க அநீதியும்...

    இன்றைய செய்தி:

    பா.ஜ.கவும், காங்கிரஸும் அறிவித்திருக்கின்றன:
    இரு தரப்பும் மேல்முறையிட்டிற்கு எல்லாம் போவாதீங்கப்பா... பேசி தீத்துக்கங்கப்பா... என்று.

    அவர்கள் சொல்லாமல் மறைத்தது...
    ""இந்த 'தீர்ப்பு' பெறவே கோடி கோடியா லஞ்சம கொடுத்து தாவு தீந்துருச்சு... மீண்டும் சுப்ரீம் கோர்ட்டுக்கு வேற அழனுமா... கஜானா காலிப்பா... பிளீஸ் சமாதானமா போங்களேம்பா...""

    பாபர்மஸ்ஜித் இடித்த இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்வது கூட முஸ்லிம்களுக்கு பிரச்சனை இல்லை . இனியும் இது போல் இடிப்புகள் தொடரக்கூடாது என்பதே முக்கியம்...பயம். அதனால், சுப்ரீம் கோர்ட்டுக்கு போய் அடுத்த கட்டப்பஞ்சாயத்துக்கு அங்கே நூறு வருஷமானாலும் பரவாயில்லை... அதற்கு மேலே ஆனாலும் பரவாயில்லை...( எப்படியும் ஹிந்துத்துவாவிற்கு எதிராய் இஸ்லாம் என்றால்...முஸ்லிம்கள் என்றாலே சட்டப்படி தீர்ப்பு வராதே...கட்டப்பஞ்சாயத்து தாதா அடாவடிதானே வரும்...) அடுத்த கட்டப்பஞ்சாயத்து வரும் வரையிலாவது இனியும் இது போல் வேறொரு மஸ்ஜித் இடிப்புகள் (அவர்களிடம் இதேபோல ஆயிரம் மஸ்ஜிதுகள் கொண்ட லிஸ்ட் இருக்காமே) தொடராது என்பதே தற்போதைய ஒரு ஆறுதல்.

    டிஸ்கி:
    ஒரு விஷயம் கவனித்தீர்களா நிஜாம் பாய்,
    எப்போதுமே மதப்பிரச்சினைகளையே பேசிக்கொண்டும், பின்னூட்டிக்கொண்டும் திரியும் நாத்திக வேஷம்போட்ட 'அழுக்கு'ராஜா(சாக்)கடையின் நான்கு ஆர்.எஸ்.எஸ்.தறுதலைகளை கடந்த மூன்று நாட்களாக எங்குமே கானவில்லையே. பாபர் மஸ்ஜித் இடிக்கும் அன்று காணாமல் போன பிரமர் போல... இவர்களின் நாத்திக சாயம் இன்று வெளுத்துவிட்டது...

  19. நிஜாம் கான் said...

    //அப்துல்மாலிக் said...
    October 2, 2010 12:19 PM
    இந்த கேடு கெட்ட தீர்ப்புக்கு எதுக்கு 60 வருஷம் எடுத்துக்கிட்டானுங்கனு தெரியலே, கிராமத்துலே நடந்தா 60 நிமிஷத்துலே சொல்லிடலாமே(சொன்ன கட்டப்பஞ்சாயத்து விளக்கம் அருமை),

    அநீதி இழைக்கப்பட்டுள்ளது..


    நன்றி மாலிக்! இன்னும் நிறைய தகவல்களுடன் இன்ஷா அல்லாஹ் இன்னொரு பதிவும் விரைவில் போட இருக்கிறேன்.

  20. நிஜாம் கான் said...

    //Cool Boy கிருத்திகன். said...
    October 2, 2010 1:33 PM
    பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்...//


    நன்றி கிருத்திகன்! இன்னும் நிறைய தகவல்களுடன் இன்னொரு பதிவும் விரைவில் போட இருக்கிறேன்.

  21. நிஜாம் கான் said...

    ////UFO. said...
    October 2, 2010 1:33 PM
    ..//

    எப்போதுமே மதப்பிரச்சினைகளையே பேசிக்கொண்டும், பின்னூட்டிக்கொண்டும் திரியும் நாத்திக வேஷம்போட்ட 'அழுக்கு'ராஜா(சாக்)கடையின் நான்கு ஆர்.எஸ்.எஸ்.தறுதலைகளை கடந்த மூன்று நாட்களாக எங்குமே கானவில்லையே. பாபர் மஸ்ஜித் இடிக்கும் அன்று காணாமல் போன பிரமர் போல... இவர்களின் நாத்திக சாயம் இன்று வெளுத்துவிட்டது...

    நான் தான் அப்போதே சொல்லிவிட்டேனே! அவர்கள் சார்ந்த தெய்வங்கள் யாரைப் பற்றியும் அந்த (சாக்)கடை பிளாக்கிலோ அல்லது அதன் உரிமையாளர்களின் சொந்த பிளாக்கிலோ எந்த ஒரு இடுகையும் இல்லை என்று. அவர்கள் நாத்தீக போர்வை போர்த்திய பச்சை காவி பயங்கரவாதிகள் தான் என்பது என்றைக்கோ நிறுபனமாகிவிட்டது.

  22. ஷாகுல் said...

    appo naamum kadai paraieduththaathan neethi kidaikkum pola irukku

  23. அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

    இது உண்மைகளை உணர்த்தும் தீர்ப்பல்ல;
    நம்பிக்கையின் அடிப்படையிலான தீர்ப்பு.
    அதிலும் நீதிமான்(?) டி.வி.சர்மா கூறியுள்ளவை
    ஊகத்தின் அடிப்படையிலேயே உள்ளது.

    இந்த தீர்ப்பினால் விளையக்கூடிய தீயமுன்னுதாரணத்தை
    A, B, C ஆகிய கதாபாத்திரங்கள்மூலம் தெளிவாக
    விளக்கினீர்கள், நிஜாம். தி.க.தலைவர் திரு.கி.வீரமணி
    அவர்களின் கூற்றும் இதையே உரைக்கின்றது.

  24. ஹுஸைனம்மா said...

    //mohamed ashik said...
    October 1, 2010 7:40 PM
    என்னைக்கேட்டால், முஸ்லிம்கள் முட்டாள்த்தனமாய் மேல்முறையீடு எல்லாம் செய்யாமல், ஓரமாய் தரப்பட்ட அந்த ஒரு துக்கடா நிலத்தை தங்கள் கபருஸ்தான் நிலமாக ஆக்கிக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவில் மதக்கலவரத்தில் கொல்லப்படும் அனைத்து முஸ்லிம்களையும் கொண்டு போய் அங்கே அடக்கம் செய்யலாம்.//

    :-))))

  25. அருள் said...

    அயோத்தி: நடந்தது இதுதான்!

    இங்கே காண்க:

    http://arulgreen.blogspot.com/

  26. அஸ்மா said...

    A,B,C கதை ரொம்ப‌ அருமை நிஜாம் நானா! நீங்க எப்படிதான் A,B,C யிலிருந்து பாடம் சொல்லிக் கொடுத்தாலும் காவி மன்றங்கள் காதில் போட்டுக் கொள்ளாச் செவிட்டு வேஷம்தான் போடுவார்கள். அதற்காக நாம் சும்மா இருந்துவிடவும் முடியாது.

  27. நிஜாம் கான் said...

    //ஷாகுல் said...
    October 2, 2010 6:09 PM
    appo naamum kadai paraieduththaathan neethi kidaikkum pola irukku
    //

    நன்றி சாகுல் தொடர்ந்து இணைந்திருங்கள்

  28. நிஜாம் கான் said...

    // NIZAMUDEEN said...
    October 2, 2010 11:07 PM
    இது உண்மைகளை உணர்த்தும் தீர்ப்பல்ல;
    நம்பிக்கையின் அடிப்படையிலான தீர்ப்பு.
    அதிலும் நீதிமான்(?) டி.வி.சர்மா கூறியுள்ளவை
    ஊகத்தின் அடிப்படையிலேயே உள்ளது.

    இந்த தீர்ப்பினால் விளையக்கூடிய தீயமுன்னுதாரணத்தை
    A, B, C ஆகிய கதாபாத்திரங்கள்மூலம் தெளிவாக
    விளக்கினீர்கள், நிஜாம். தி.க.தலைவர் திரு.கி.வீரமணி
    அவர்களின் கூற்றும் இதையே உரைக்கின்றது.//

    நன்றீ நிஜாம் பாய்! தொடர்ந்து இணைந்திருங்கள்

  29. நிஜாம் கான் said...

    //ஹுஸைனம்மா said...
    October 3, 2010 12:34 PM
    //mohamed ashik said...
    October 1, 2010 7:40 PM
    என்னைக்கேட்டால், முஸ்லிம்கள் முட்டாள்த்தனமாய் மேல்முறையீடு எல்லாம் செய்யாமல், ஓரமாய் தரப்பட்ட அந்த ஒரு துக்கடா நிலத்தை தங்கள் கபருஸ்தான் நிலமாக ஆக்கிக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவில் மதக்கலவரத்தில் கொல்லப்படும் அனைத்து முஸ்லிம்களையும் கொண்டு போய் அங்கே அடக்கம் செய்யலாம்.//

    :-))))//

    நன்றி ஹூசைனம்மா! தொடர்ந்து இணைந்திருங்கள்

  30. நிஜாம் கான் said...

    //அருள் said...
    October 3, 2010 1:25 PM
    அயோத்தி: நடந்தது இதுதான்!

    இங்கே காண்க:

    http://arulgreen.blogspot.com/
    //

    அருமையான நடு நிலையான இடுகை அய்யா! நன்றி

  31. நிஜாம் கான் said...

    //அஸ்மா said...
    October 3, 2010 7:38 PM
    A,B,C கதை ரொம்ப‌ அருமை நிஜாம் நானா! நீங்க எப்படிதான் A,B,C யிலிருந்து பாடம் சொல்லிக் கொடுத்தாலும் காவி மன்றங்கள் காதில் போட்டுக் கொள்ளாச் செவிட்டு வேஷம்தான் போடுவார்கள். அதற்காக நாம் சும்மா இருந்துவிடவும் முடியாது.//

    நன்றி அஸ்மா! தொடர்ந்து இணைந்திருங்கள்

  32. kadaroli said...

    Sirantha alasal! nalla karuthayvu! nizam mattumalla, inke comment kodutha perumbalanor miga sirappaga aaraayndhu solli irukirarkal. manithanai manithan thinnum kalam nerunki vittathagave unarkiren...

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,