Jul 20, 2010

நித்யானந்தா நேற்றும் இன்றும்

நிஜாம் கான் @ 4:34 PM
நித்யாவைப் பற்றி எத்தனையோ பதிவுகள் எழுதியாகிவிட்டது. இனிமேல் அதைப் பற்றி எதுவும் எழுதவேண்டாம் என நினைத்தாலும் அவர் விடமாட்டார் போலும். ஒரு வழியாக மாமியார் வீட்டு விருந்தை முடித்துக் கொண்டு வெளியே வந்துவிட்ட நித்தி சூட்டொடு சூடாக தன் பிரச்சாரத்தையும் துவங்கி விட்டார் . வழக்கத்தை விட அதிகமாகவே களைகட்டியது கூட்டம். நடிகை ரஞ்சிதாவைத் தொடர்ந்து நடிகை மாளவிகாவும் நித்தியாவின் ஆஸ்தான பக்தை ஆகிவிட்டதைப் போல அந்தக் கூட்டத்தில் ஆர்வமாக கலந்து கொண்டு கலக்கினார் . மற்ற‌வர்களுக்கு துறவரத்தை போதித்து விட்டு தான் மட்டும் ரகசிய இல்லறம் மேற்கொண்டதன் மூலம் ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயத்தையே ஏமாற்றி விட்டார் நித்யா என கருநாடக உயர் நீதிமன்றம் தன் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்து இருந்தது. அவரின் கடப்பிதழ் முடக்கப்பட்டு இனி அவர் பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது  எனவும் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இவர் பிரச்சாரம் செய்யாவிட்டால் பழையபடி கல்லா கட்ட முடியாது என பயந்த ஆஸ்ரம நிர்வாகஸ்தர்கள் யாரை எங்கே பிடிக்க வேண்டுமோ அவர்களைப் பிடித்து நித்யா பிரச்சாரம் செய்வதற்கு இருந்த தடையை நீக்க உத்தரவும் வாங்கி விட்டார்கள்.



அத்தோடு மாளவிகாவையும் களமிறக்கி தங்களின் பிஸினஸை புதுப்பிக்க ஆரம்பித்தார்கள். வழக்கமாக நித்யாவின் கூட்டத்திற்கு கட்டணமாக‌ 5000 முதல் 2 லட்சம் வரை வசூலித்து வந்தார்கள் மடாதிபதிகள். ஆனால் போலீஸ், ரைடு, சிடி என ஏகத்துக்கும் மாட்டிக்கொண்டதால் முன்போல‌ பழைய கட்டணங்களை வசூலிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. டிஆர்பி ரேட்டிங்கும் அடிமட்டத்தில் இறங்கிவிட்ட காரணத்தால் கட்டண சேனலாக இருந்த நித்யா டிவியை கொஞ்ச நாளைக்கு ஃபிரி சேனலாக இயக்க முடிவு செய்துவிட்டார்கள் மட இயக்குனர்கள் அதாவது மடத்தின் இயக்குனர்கள். பிஸினஸ் போட்டி காரணமாக செல்போன் சிம்கார்டுகள் இலவசமாக கிடைப்பது போல இனி நித்யாவின் போதனைகளும் கொஞ்ச நாளைக்கு இலவசமாக கிடைக்கும். அதன்பிறகு வழக்கமான கூட்டம் சேர்ந்ததும் பழையபடி கட்டணச் சேனலாக மாறிவிடும். எல்லாம் ஒரு விளம்பரம் தான். 

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இனிமே நித்யாவைப் பத்தி எழுதக்கூடாதுன்னு நெனச்சிக்கிட்டு இருந்த போது தான் கீழ்க்கண்ட இந்த போஸ்டர் என் கண்களில் பட்டுத் தொலைத்தது. அதாவது வரும் ஜூலை 25 ஆம் தேதி குருபௌர்ணமியை முன்னிட்டு நித்யானந்தாவின் அருளாசி பெற அனைவரும் வாரீர்...வாரீர்.. அனுமதி இலவசம் என ஏதோ பொருட்காட்சிக்கு ஒட்டப்பட்ட விளம்பர போஸ்டரைப் போல இருந்தது நித்யாவின் அடுத்த ரவுண்டுக்கான அழைப்பு. சரி இருக்கட்டுமே என அதை என் மொபைலில் சுட்டுக்கொண்டேன். இன்றைக்கு அந்த இடத்தைக் கடக்கும் போது அங்கே ஒரு வித்தியாசம் தெரிந்தது. என்னவென்று அருகிலே சென்று பார்த்தால் செய்தியை அப்படியே விட்டு விட்டு நித்தியின் முகத்தை சுற்றி கிழிக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே நித்தியின் முகத்திரை கிழிக்கப்பட்டு விட்டாலும், நீ என்னத்தடா கிழித்தாய் என யாரோ சவடால் விட அந்த முகம்தெரியாத மேற்படியாளர்க‌ள், நம்மாள நித்தியாவைத் தான் கிழிக்க முடியல.., அட்லீஸ்ட் அவன் முகத்தையாவது கிழிப்போமே என கிழித்துவிட்டார்க‌ள் போலும்..,

இது நேற்றைய நித்யா :







இது இன்றைய நித்யா:







சென்ற வார ஜூவியில் "பரிதாப பிரேம்ஸ்,படுஜாலி நித்தி" என ஒரு அருமையான கட்டுரை வந்தது. அதிலே லோக்கல் சாமியார் பிரேமானந்தா கிட்னி பாதிப்பால் கடலூர் மருத்துவமனை பெட்டில் உருண்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் படுஜாலியாக ஐஎஸ்டி சாமியார் நித்யா தன் பக்தகோடிகளுடன் புரண்டு கொண்டிருந்தார். பிரேம்ஸ் தன் செல்வாக்கை திருச்சியுடன் நிறுத்திக் கொண்டதால் அவருக்கு உதவிசெய்ய யாருமே இல்லை. ஆனால் நித்யாவின் வலை வெளிநாடு வரை நீண்டிருப்பதால் யார் என்ன செய்தாலும் தப்பிக்க வைக்க ஆள் இருக்கிறார்கள்.

முன்னால் முதல்வர் ஜெயலலிதா, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து கோடிக்கணக்கில் மதிப்புள்ள நகைகள் கைப்பற்றப் பட்டன. அவர் சிறை சென்றுவிட்டு வெளியே வந்தபின் பத்திரிகையாளர் சந்திப்பில் இனி நான் கைக்கடிகாரம் கூட அணிய‌மாட்டேன் என தெரிவித்து அதை இன்றுவரை நடைமுறைப்படுத்தி வருகிறார். இது தான் மானமுள்ள மனிதர்களுக்கு அழகு. ஆனால் மானங்கெட்ட நித்யா, தான் செய்த பிரம்மசாரி பிரச்சாரம் துவைத்து தொங்கவிடப்பட்டு சாயம் போன பின்னரும் இப்போது மறுபடியும் புதுப்பொலிவுடன் தன் வழக்கமான பிரச்சாரத்தை துவங்கிவிட்டார்.யார் மீது குற்றம்? மக்களை முட்டாளாகப் பார்க்கும் நித்யாவின் மீதா ?அல்லது எவ்வளவு முட்டாளாக்கினாலும் முண்டியடித்துச் சென்று அமரும் மக்களின் மீதா? தானே சிந்தித்து திருந்தினாலேயன்றி இவர்களை வழிகேட்டிலிருந்து யாராலும் மீட்க முடியாது.
already seen this

16 Response to "நித்யானந்தா நேற்றும் இன்றும்"

  1. உண்மைத்தமிழன் said...

    [[[அவர் சிறை சென்றுவிட்டு வெளியே வந்தபின் பத்திரிகையாளர் சந்திப்பில் இனி நான் கைக்கடிகாரம்கூட அணிய‌மாட்டேன் என தெரிவித்து அதை இன்றுவரை நடைமுறைப்படுத்தி வருகிறார். இதுதான் மானமுள்ள மனிதர்களுக்கு அழகு.]]]

    சந்தடிச்சாக்கில் ஜெயலலிதாவுக்கு இப்படி வக்காலத்து வாங்குவது தப்புங்கண்ணா..!

    "எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. நான் தப்பு செஞ்சிட்டேன். திருடினது உண்மைதான். மன்னிச்சுக்குங்க.. இனிமேல் நான் அரசியலில் ஈடுபட மாட்டேன். விலகிக் கொள்கிறேன்" - இப்படி அந்தம்மா சொல்லிட்டுப் போயிருந்தாங்கன்னா நீங்க சொல்ற மாதிரி "மானமுள்ள மனிதர்களுக்கு அழகு" என்ற பதத்துக்கு பொருத்தமானவராக இருந்திருப்பார்..!

  2. அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

    மறுபடியும் நித்தியாவோடு
    மாளவிகாவா?
    இலவச சேனலா?
    மீண்டும் ஜூலை 25-க்குப் பின்
    செய்திகள் தொடரும் நமது
    எதிரொலியில்.

  3. நிஜாம் கான் said...

    //சந்தடிச்சாக்கில் ஜெயலலிதாவுக்கு இப்படி வக்காலத்து வாங்குவது தப்புங்கண்ணா..!//

    அண்ணே! என்னுடைய பழைய இடுகைகளைப் பாருங்கள். நான் இதுவரை அந்த அம்மையாரைப் பற்றி எழுதியிருப்பதெல்லாம் எதிராகவே தான். இந்தப் பக்கம் இருந்துக்கிட்டு அங்கிட்டு ஆதரவா எழுதினா விட்டுடுவாங்களா? ஆனாலும் இன்று வரை அந்த அம்மையார் நகை அணியால் இருப்பது உண்மை. அதற்காக அரசியலில் இருந்தெல்லாம் ஓய்வு பெற வேண்டியது இல்லை. காரணம் எதிர்ப்பு இருந்தால் தான் இன்னும் நன்றாக செயல்பட முடியும்

  4. நிஜாம் கான் said...

    //"எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. நான் தப்பு செஞ்சிட்டேன். திருடினது உண்மைதான். மன்னிச்சுக்குங்க.. இனிமேல் நான் அரசியலில் ஈடுபட மாட்டேன். விலகிக் கொள்கிறேன்" //

    அரசியலில் ஊழல் சகஜமாகிவிட்டது. என்றைக்கு நகைகளை எடுத்து காட்டினார்களோ அன்றையிலிருந்து அந்த அம்மையார் நகை அணிய மாட்டேன் என சபதமெடுத்தது உண்மை. அதேபோல நித்யா பிரம்மச்சரியத்தை தொடர்ந்து பிரச்சாரம் செய்யாமல் சம்சாரியாக வாழ்வது நலம் என்பது தான் என் கருத்தே தவிர, அவர் இனி வாழவே வேண்டாம் என பொருள் இல்லை. இருந்தாலும் தங்களின் கருத்துக்கு நன்றிண்ணே!

  5. நிஜாம் கான் said...

    //மறுபடியும் நித்தியாவோடு
    மாளவிகாவா?
    இலவச சேனலா?
    மீண்டும் ஜூலை 25-க்குப் பின்
    செய்திகள் தொடரும் நமது
    எதிரொலியில்.//

    உங்கள் ஆதரவோடு நிச்சயம் நல்ல செய்திகள் மட்டுமே வரும்ணே! தொடர்ந்து இணைந்திருங்கள்

  6. தமிழன்-கோபி said...

    இதே ஆதங்கத்தில் தான் நண்பரே நானும் பதிவு எழுதினேன்.....எவனும் திருந்துற மாதிரி இல்ல....நித்திய திட்டுரதவிட
    இன்னும் நம்பிட்டு இருகனுன்களே அவனுங்கள சொல்லணும் ..

    http://4questions4u.blogspot.com/

  7. vasu balaji said...

    நல்லா படிச்சி பெரிய ஆளா வரணும்னு சொல்லி சொல்லியே கெடுத்துட்டாய்ங்கப்பா. படிக்காம பெரிய சாமியாராவணும்னு வாழ்த்தியிருக்கப்படாதா:))

  8. அபி அப்பா said...

    வானம்பாடி அய்யா, என் குபீர் சிரிப்புக்கு நீங்க தான் பொருப்பு:-)

  9. நிஜாம் கான் said...

    //தமிழன்07 said...
    July 20, 2010 10:33 PM
    இதே ஆதங்கத்தில் தான் நண்பரே நானும் பதிவு எழுதினேன்.....எவனும் திருந்துற மாதிரி இல்ல....நித்திய திட்டுரதவிட
    இன்னும் நம்பிட்டு இருகனுன்களே அவனுங்கள சொல்லணும் ..//


    நிச்சயமாங்க தமிழன்! அவர்களாகத் திருந்தாத வரை நாம் என்ன சொன்னாலும் எடுபடாது

  10. நிஜாம் கான் said...

    //வானம்பாடிகள் said...
    July 20, 2010 10:51 PM
    நல்லா படிச்சி பெரிய ஆளா வரணும்னு சொல்லி சொல்லியே கெடுத்துட்டாய்ங்கப்பா. படிக்காம பெரிய சாமியாராவணும்னு வாழ்த்தியிருக்கப்படாதா:))//

    அண்ணே! உங்களுக்கு இந்த ஆச வேற இருக்கா? பாத்துண்ணே, வீட்டம்மாவுக்கு தெரிஞ்சா அப்பறம் ஒரு வாரத்துக்கு கேண்டீன் சாப்பாடு தான்

  11. நிஜாம் கான் said...

    // அபி அப்பா said...
    July 20, 2010 11:09 PM
    வானம்பாடி அய்யா, என் குபீர் சிரிப்புக்கு நீங்க தான் பொருப்பு:‍)//

    உங்களுக்கு மட்டுமல்ல அபிஅப்பா! எல்லாருக்கும் தான்..

  12. அப்துல்மாலிக் said...

    நித்யா: யாரை நம்பி நான் பொறந்தேன் போங்க்டா போங்க.. இந்த மூடர்கள் இருக்கும்வரை நாந்தான் ராஜா....

  13. நிஜாம் கான் said...

    //அப்துல்மாலிக் said...
    July 21, 2010 6:13 PM
    நித்யா: யாரை நம்பி நான் பொறந்தேன் போங்க்டா போங்க.. இந்த மூடர்கள் இருக்கும்வரை நாந்தான் ராஜா....//

    நல்ல சிச்சுவேசன் சாங். நன்றி மாலிக்

  14. கிரி said...

    நிஜாம் உங்கள் பதிவில் உள்ள மாளவிகா நடிகை மாளவிகா அல்ல என்பதையும் அது டிவி சீரியல் மாளவிகா என்பதையும் மாளவிகா அகில உலக ரசிகர்கள் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன் :-)))

    நடிகை மாளவிகா வந்து இருந்தாலும் நல்லா டமாசா இருந்து இருக்கும் ;-) (சேம் சைட் கோல் போடுபவர்கள் சங்கம்)

  15. நிஜாம் கான் said...

    //கிரி said...
    July 31, 2010 9:13 AM
    நிஜாம் உங்கள் பதிவில் உள்ள மாளவிகா நடிகை மாளவிகா அல்ல என்பதையும் அது டிவி சீரியல் மாளவிகா என்பதையும் மாளவிகா அகில உலக ரசிகர்கள் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன் :-)))

    நடிகை மாளவிகா வந்து இருந்தாலும் நல்லா டமாசா இருந்து இருக்கும் ;-) (சேம் சைட் கோல் போடுபவர்கள் சங்கம்)//

    உங்க சேம் சைடு கோல்க்கு நன்றி கிரி சார். தொடர்ந்து வாங்க‌

  16. anbarasan said...

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,