இன்றைக்கு தோழர் வினவு அவர்கள் அலாவுதீன் ஒரு அற்புதவிளக்கு என்ற ஒரு அற்புதமான விளக்கத்தை அளித்துள்ளார். வழக்கமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மீது சேறு வீசும் சில்லறைகளின் வேலையைத் தான் இவரும் செய்திருக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் ஜமாத்தாருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் மணமகன் அலாவுதீன், மணமகள் ஷபனா ஆஸ்மி ஆகியோருக்கிடையில் நடைபெற்ற சீர்திருத்த திருமணம் குறித்த செய்தியை புதிய ஜனநாயகம் இதழ் வெளியிட்டிருந்தது. அந்தச்செய்தியில் மணமகளின் தந்தை தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் துணைத் தலைவர் என்று தவறுதலாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த விவரப்பிழை குறித்து புதிய ஜனநாயகம் இதழுக்கு தவ்ஹீத் ஜமாத் மறுப்புக் கடிதம் அனுப்பியது. அதுமட்டுமின்றி மணமகளின் தந்தை அப்பாஸ் என்பவர் தவ்ஹீத் ஜமாத்தின் கிளைப்பொருப்பில் இருந்தும் சில நாட்களுக்கும் முன்பு அவரே விளகிவிட்டார் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
புதிய ஜனநாயகம் இதழுக்கு தவ்ஹீத் ஜமாத் அனுப்பிய அறிக்கை இது
தான்
மதிப்பிற்குரிய புதிய ஜனநாயகம் மாத இதழின் ஆசிரியர் சண்முகம் அவர்களுக்கு,ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக!கடந்த அக்டோபர் 2010 இதழின் 17 ஆம் பக்கத்தில் புதுக் கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில துணைத் தலைவரின் மகளுக்கு புரட்சிகரப் பாடல்கள் பாடப்பட்டு திருமணம் நடந்ததாக செய்தி வெளியிட்டிருந்தீர்கள்.ஆனால் மணமகளின தந்தைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. கடந்த காலங்களில் அவர் சாதாரண கிளைப் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார்.அதுமட்டுமின்றி தற்போது மாநில துணைத் தலைவர்களாக பதவி வகிக்கும் எம்.ஐ.சுலைமான் மற்றும் ஆர்.ரஹ்மத்துல்லாஹ் அவர்களுக்கு திருமணமாகும் வயதில் பிள்ளைகளும் இல்லை. மேலும் இத்திருமணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை, மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் உட்பட எவரும் கலந்து கொள்ளவில்லை என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்.எனவே இதையே மறுப்பு செய்தியாக வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.குறிப்பு: இஸ்லாமிய திருமணம் என்பது மணமக்களுக்கு இரண்டு சாட்சிகளுடன் மணமகளின் தந்தை அல்லது பொறுப்பாளர் திருமண ஒப்பந்தம் செய்து கொடுப்பதே இஸ்லாமிய திருமணம்.இதில் மாலைகள் கூட இருக்காது.இதைத்தவிர இதில் எந்த வித சடங்குகள் , சம்பரதாயங்கள் , பாடல்கள் , வரதட்சணை ,பெண் வீட்டார்களிடமிருந்து எந்த விதமான கையூட்டலும் பெறாமலும் புரோகிதர்கள் துணையின்றி தனித்தன்மையுடன் நடைபெறும் திருமணமே இஸ்லாமிய திருமணம்.இதையே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும் அதைச் சார்ந்தவர்களும் பின்பற்றி பிரச்சாரம் செய்து வருகின்றனர் குறிப்பிடுகிறோம்.இப்படிக்குஆர்.ரஹ்மத்துல்லாஹ்
மாநில துணைத் தலைவர்
ஆனால் தோழர் வினவு அவர்கள் அவரை "நான் உறுப்பினர் இல்லை என்று அறிக்கை விடும்படி நிர்ப்பந்திப்பதாகவும் எழுதியிருக்கிறார். இந்த இடத்தில் தோழர் வினவு அவர்கள் ஒரு விசயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைப் பொருத்தவரை கொள்கைகளுக்கு மாற்றாக நடப்பவர்களை தானே விளகிக் கொள்ளச் சொல்லியோ அல்லது அறிக்கை விடுமாறோ நிர்பந்திப்பது கிடையாது. அப்படி யாராவது கொள்கைக்கு விரோதமாக நடந்தால் அவர் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் உடனே தூக்கி எறியப்படுவார். உதாரனமாக தவ்ஹீத் ஜமாத்தின் மிகப்பெரிய பொருப்பில் இருந்த பொதுச்செயலாளர் தவறு செய்தார் என்ற காரணத்திற்காக எவ்வித நிபந்தனையும் இன்றி தூக்கி எறியப்பட்டார். அத்தோடு இந்த திருமணத்துக்கு சென்று கலந்து கொண்ட தவ்ஹீத் ஜமாத்தின் பொறுப்பாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன எனவும் எழுதியிருக்கிறார். ஒருவேளை அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீதும் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படுஎனபதிலே மாற்றுக்கருத்து இல்லை. காரணம் வரதட்சனை வாங்கும் திருமணம், ஒலிபெருக்கிகள் கட்டி கச்சேரி நடத்தி நிகழும் திருமணம், இஸ்லாமிய கொள்கைகளுக்கு மாற்றாக நடைபெறும் திருமணம் ஆகியவற்றில் தவ்ஹீத் ஜமாத்தினர் கலந்து கொள்ளக்கூடாது என்பது தெளிவான விதி. அதை மீறுபவர்கள் தவ்ஹீத் ஜமாத்தில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த செய்தி குறித்து புதிய ஜனநாயகம் இதழுக்கு அனுப்பிய மறுப்புக் கடிதத்தில் கீழ்க்கண்ட வாசகங்கள் இஸ்லாமியத் திருமணம் குறித்து சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன.
இஸ்லாமிய திருமணம் என்பது மணமக்களுக்கு இரண்டு சாட்சிகளுடன் மணமகளின் தந்தை அல்லது பொறுப்பாளர் திருமண ஒப்பந்தம் செய்து கொடுப்பதே இஸ்லாமிய திருமணம்.
இதில் மாலைகள் கூட இருக்காது.இதைத்தவிர இதில் எந்த வித சடங்குகள் , சம்பரதாயங்கள் , பாடல்கள் , வரதட்சணை ,பெண் வீட்டார்களிடமிருந்து எந்த விதமான கையூட்டலும் பெறாமலும் புரோகிதர்கள் துணையின்றி தனித்தன்மையுடன் நடைபெறும் திருமணமே இஸ்லாமிய திருமணம்.
ஆக இவ்வளவு தெளிவான முழு பூசனிக்காயை சோற்றிலே மறைக்கப்பார்க்கிறார் வினவு. இவ்வளவு எழுதியவர் அங்கு நடந்தது இஸ்லாமிய திருமணமே இல்லை என்பதை ஏன் மறைத்தார்? அப்படி என்ன காழ்ப்புணர்வு தவ்ஹீத் ஜமாத் மீது.
அலாவுதீன் திருமணத்தில் புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டால் என்ன அல்லது ஒப்பாரி பாடப்படால் என்ன? இஸ்லாம் குறித்து முழு அறிவு இல்லாதவன் வீட்டில் என்ன எழவு வேண்டுமானாலும் நடக்கட்டுமே! ஆனால் இதை ஒரு செய்தியாக ஏதோ தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்தவன் அப்படி செய்தான் இப்படி செய்தான், அலாவுதீன் வீட்டு கல்யாணத்தில் தலைவர்கள் படம் வைக்கப்பட்டது பாருங்கள் தவ்ஹீத் ஜமாத்தின் நிலையை என்ற தோரணையில் தான் புதிய ஜனநாயகம் செய்தி வெளியிட்டது. அதற்கு அழகிய முறையிலே தவ்ஹீத் ஜமாத், அவருக்கும் ஜமாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மறுப்பு கொடுத்து இருக்கிறது. இது தான் நடந்த விசயமே! அதை தெளிவாக்குவதை விட்டு விட்டு வினவு அவர்கள் தன் மனோஇச்சைப் படி குதிரையை ஓட்டியதன் விளைவு தான் அலாவுதீனும் அற்புத விளக்கும்.
இஸ்லாத்தில் பிறந்தவர் யாருடைய கொள்கைகளை வேண்டுமானாலும் பின்பற்ற உரிமை இருக்கிறது. திராவிடர் கழகத்திலே எத்தனையோ பேர் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். இவ்வளவு ஏன்? என் தந்தை கூட மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியில் தான் இன்றுவரை கிளைச்செயலாளர் பொருப்பிலே இருக்கிறார். அதனால் அவருடன் பழகும் மாற்று மத நண்பர்கள் இல்லாமலா போய்விடுகிறார்கள். இதையும் விட சிறந்த உதாரணம் பதிவுலகிலே கவிமதி என்ற பசீர் இருக்கிறார். அவர் இஸ்லாமிய கொள்கைகளை விட பெரியாரிச கொள்கைகளையே அதிகம் கடைபிடிக்கிறார். அதனால் இஸ்லாத்திற்கு என்ன கேடு ஆகிவிட்டது? ஆனால் வினவு அவர்கள் மாற்று மத சகோதரர்களுடன் பழகுவதையே தவ்ஹீத் ஜமாத் எதிர்க்கிறது என வழக்கமாக காவிகள் போடும் கோசத்தைப் போட்டு இருக்கிறார். எங்கு போய் முட்டிக்கொள்வதோ தெரியவில்லை.
நீங்கள் நடத்தும் சுயமரியாதை திருமணங்கள் கூட பெரிய மண்டபம் பிடித்து தலைவர்களை அழைத்துத் தான் நடத்தப்படுகின்றன. ஆனால் தெருவிலே நடக்கும் பொதுக்கூட்டத்திலே திருமணம் செய்து காட்டும் ஒரு இயக்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தான். காரணம் திருமணம் என்பது எல்லோருக்கும் எளிமையாக்கப் படவேண்டும் என்று தான் பல காலமாக போராடி வருகிறது தவ்ஹீத் ஜமாத். தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர்கள் யாரும் எவருடைய திருமணத்திலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதாக ஏதாவது தகவல் இதுவரை உண்டா?
இவ்வளவு ஆவேசமாக அலாவுதீனுக்கு பல்லக்கு தூக்கும் தோழர் வினவு அவர்களே! அந்த அலாவுதீன் அந்த மணப்பெண்ணை மணந்து கொள்வதற்காக அவரது தந்தையிடம் சீர்வரிசையாக வாங்கிய பொருட்களை ஏன் வெளியிடவில்லை. அவரது வீட்டார் மணமகளுக்கு கொடுக்கச்சொன்ன நகைகளின் பட்டியலை ஏன் வெளியிடவில்லை? அலாவுதீன் வரதட்சனை வாங்காமல் (பணமாக வாங்காமல்) திருமணம் செய்திருக்கிறார் என்றால் சரி. ஆனால் மணமகளுக்கு அவர் வாங்கிய நகைகளின் அளவு எத்தனை சவரன் என்பதையும், அவர் மணமகள் வீட்டாரிடமிருந்து பெற்ற சீர்வரிசைகள் பற்றியும் முதலிலே கேட்டு வைத்துக் கொள்ளுங்கள். இதற்குப் பெயர் சுயமரியாதை திருமணமாம். காரித்துப்ப வேண்டும் போலிருக்கிறது.
already seen this




விளக்கமாத்தை ஏன் பாஸ் நாம கேவலப்படுத்தனும்?. அது சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்கவாவது உதவுமே?..
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர் நிஜாம் அவர்களே,
இஸ்லாம் என்று வந்துவிட்டால், எழுதும் அனைத்தும் பொய்யாகவோ, நுனிப்புல் மேய்ந்தோ, எந்த ஒரு விஷயத்தையும் உள்வாங்கிக்கொண்டோ, தீர விசாரித்து அல்லது படித்து அறிந்தோ எழுதியதில்லை, வினவு. கேள்வி கேட்டால் ஒன்றுக்கும் பதிலளிக்கவும் தெரிவதில்லை.
இவர்களின் மற்ற அரசியல் பதிவுகள் எல்லாம் சிறப்பாக எழுதப்படுகின்றன. அதிலெல்லாம் முரனோ போலித்தனமா குழப்பமோ இன்றி தெளிவாக எழுதுபவர்கள், கேட்கப்படும் கேள்விக்கும் குழப்பாமல் ஆணித்தரமாய் பதிலளிப்பவர்கள், இஸ்லாம் என்றால் மட்டும் மறை கழண்டு முன்னுக்குப்பின் என்ன சொல்வது என்று தெரியாமல் தட்டுத்தடுமாறி தமக்குத்தாமே முரண்பட்டு பைத்தியக்காரர்கள் போல உளறுகிறார்கள். ஏகப்பட்ட தில்லுமுல்லு பித்தலாட்டங்கள்.
வினவின் பித்தலாட்டம் அம்பலம்...
http://ethirkkural.blogspot.com/2010/10/blog-post.html
திருந்த மாட்டீர்களா வினவு?
http://ethirkkural.blogspot.com/2010/10/blog-post_12.html
அவற்றை படித்துவிட்டு, இனி இந்த கும்பலை எல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நாம் நம் வேலையை பார்ப்போம்.
ஏனென்றால்,
முதலில் //மாக்சிய ஆசான்கள், பகத்சிங் படங்கள் சூழ ஒரு இசுலாமியத் திருமணம்!!//என்று பதிவிட்டவர்கள்...//அவர் செய்த ஒரே குற்றம் இசுலாமிய முறைப்படி திருமணம் செய்யாததுதான்//என்று அடித்த அந்தர் பல்டிகளையும்...,
//ஏசுவிடமும், நபிகள் நாயகத்திடமும், புத்தனிடமும் அக்காலத்து மக்கள் பல கேள்விகளை எழுப்புகிறார்கள். அவற்றுக்கெல்லாம் அவர்கள் சளைக்காமல் விடையளித்தார்கள். அதன் காரணமாகத்தான் அவர்கள் முன்னோடிகளாகவும், ஞானிகளாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள். சொல்வதைச் செய். கேள்வி கேட்காதே என்பது அவர்கள் கொள்கையாக இருந்திருந்தால் நமக்கு பைபிளோ, குர்ஆனோகிடைத்திருக்காது. குண்டாந்தடி மட்டும்தான் கிடைத்திருக்கும்.//--x
// கேள்வி கேட்டு விடை தேடியவர்களின் வாரிசுகள் கம்யூனிஸ்டுகள். குண்டாந்தடிகளின் வாரிசுகள் மதவாதிகள்//-y (x contradicts y)
என்பன போன்ற முன்னுக்குபின்னான தெளிவற்ற பொருளற்ற லூசுத்தனமான உளறல்களையும்...,
மேலும் தவ்ஹீத் ஜமாத்துக்கும் சுன்னத் ஜமாத்துக்கும் கூட வித்தியாசம் தெரியாமல் (சொல்லப்பட்ட ஊர் விலக்கல் விவகாரம் பொய்யாகவும் இருக்கலாம், சொன்னது வினவாச்சே!) இரண்டையும் குழப்பிக்கொண்டு பதிவு போடுவதும்...,
இன்னும் நீங்கள் சுட்டிக்காட்டிய அத்தனை விஷயங்களையும் பார்த்துவிட்டு...,
அந்த 'அணைந்தவிளக்கு' பதிவில் தொடர்ந்த 'வினவு மற்றும் வினவுகளின்' கோமாளித்தன மறுமொழி குப்பைகளையும் படித்த பின்னர்...,
அதையெல்லாம் தொகுத்து ஒரு பதிவு போட்டு விளக்கலாம் என்றால்...,
முதலில் இவர்கள் நாம் சொல்லும் எதையும் புரிந்து கொள்ளும் மனநிலையில் இருக்கிறார்களா?
சூரியஒளி எப்பக்கம் கிடைக்கிறதோ அப்பக்கமாக வளைந்து நீண்டு வளரும் ஒரு மரத்தை விட கேவலமான அறிவை கொண்டவர்களான மண்ணாங்கட்டி களிமண் மண்டைகளான இவர்களிடம் போய் என்னத்த விவாதித்து என்னத்த புரியவைத்து... என்று நினைத்து...
வினவை விட உயர்ந்த சிறந்த மக்களுக்கு என்றென்றும் பயனுள்ள ஜீவனாகிய 'மரங்களை வளர்ப்போம்'. அதைப்பற்றி விரிவாக...
http://pinnoottavaathi.blogspot.com/2010/10/we-want-more-more-green.html
//"நாம் ஒருவர். நமக்கு நால்வர்." ( !? ) / "We Want more & more GREEN"//
நல்ல சாட்டையடி
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் நிஜாம்,
வினவு பொய்யை மூலதனமாக்கி புரட்சி செய்ய வந்த புண்ணியவான்கள். எனவே அவர்களிடம் நேர்மையை எதிர்பார்ப்பது சங்பரிவார்களிடம் மனிதாபிமானத்தை எதிர்பார்ப்பது போன்றது.
//அலாவுதீன் அந்த மணப்பெண்ணை மணந்து கொள்வதற்காக அவரது தந்தையிடம் சீர்வரிசையாக வாங்கிய பொருட்களை ஏன் வெளியிடவில்லை. அவரது வீட்டார் மணமகளுக்கு கொடுக்கச்சொன்ன நகைகளின் பட்டியலை ஏன் வெளியிடவில்லை? அலாவுதீன் வரதட்சனை வாங்காமல் (பணமாக வாங்காமல்) திருமணம் செய்திருக்கிறார் என்றால் சரி. ஆனால் மணமகளுக்கு அவர் வாங்கிய நகைகளின் அளவு எத்தனை சவரன் என்பதையும், அவர் மணமகள் வீட்டாரிடமிருந்து பெற்ற சீர்வரிசைகள் பற்றியும் முதலிலே கேட்டு வைத்துக் கொள்ளுங்கள். இதற்குப் பெயர் சுயமரியாதை திருமணமாம். காரித்துப்ப வேண்டும் போலிருக்கிறது//
இது மிகவும் அதிர்ச்சிகரமான தகவல். இது உண்மையா? எந்த அடிப்படையில் இதை சொல்லுகிறீர்கள் நிஜாம்? தங்களால் இந்த கூற்றை நிருபிக்க முடியுமா? ஏனெனில் வினவு அலாவுதீன் வரதட்சணையே வாங்கவில்லை என்று தம்முடைய இணையதளத்தினில் சொல்லியிருக்கின்றது.
நன்றி தமிழ்ப்பிரியன்..,
நன்றி முகமது ஆசிக்..,
நன்றி தியா.. தொடர்ந்து இணைந்திருங்கள்
//பி.ஏ.ஷேக் தாவூத் said...
இது மிகவும் அதிர்ச்சிகரமான தகவல். இது உண்மையா?
தங்களால் இந்த கூற்றை நிருபிக்க முடியுமா?
சகோதரர் சேக்தாவூத், இது பிரச்சனை ஆகாமல் இருந்து இருந்தால் இதை மிகத்தெளிவாக நிறுபித்து இருக்கலாம். ஆனால் இப்போது இது தவ்ஹீத் ஜமாத்தினை முன்னிறுத்தி பிரச்சனைக்குரியதாகிவிட்டதால் இனிமேல் நிறுபிப்பது கொஞ்சம் சிரமம் தான்.
எந்த அடிப்படையில் இதை சொல்லுகிறீர்கள் நிஜாம்?
இதை இனிமேல் நிறுபிக்க அலாவுதீனோடு முபாஹலா தான் செய்ய முடியும், ஆனால் அலாவுதீன் ஆல்ரெடி பித்அத்ல் இறங்கி விட்டதார். நபிவழிக்கு மாற்றமாக இருக்கும் ஒருவர் எப்படி மூமினாக இருக்கமுடியும்? உங்களால் முடிந்தால் அலாவுதீனைச் சந்திக்க ஒப்பந்தம் செய்து தாருங்கள்.
//ஏனெனில் வினவு அலாவுதீன் வரதட்சணையே வாங்கவில்லை என்று தம்முடைய இணையதளத்தினில் சொல்லியிருக்கின்றது.//.
இதை எங்கே படித்தீர்கள் என்பது தெரியவில்லை. கம்னியூஸ்டுகள் பார்வையில் சுயமரியாதை திருமணம் என்பது தாலி கட்டாமல் ஒப்பந்தம் செய்து கொண்டு சில கோசங்களை முழங்குவார்கள். அவ்வளவே! மற்றபடி பிளாக்கிலும் ஒயிட்டிலும் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். அலாவுதீன் வரதட்சனை எந்த வகையிலும் வாங்காமல் (பார்க்க) எந்த வகையிலும் பெறாமல் மஹர் கொடுத்து திருமணம் செய்திருந்தால் அது நபிவழி சுன்னத் திருமணம் ஆகி இருக்கும். அதற்கு இவ்வளவு பெரிய மண்டபம் தேவையில்லை. இவ்வளவு ஆடம்பரம் தேவையில்லை. ஆக நடந்தது முழுக்க முழுக்க நபிவழிக்கு மாற்றமான பித்அத் ஆன ஒரு நிகழ்வே!
பொதுவெளியில் ஆதாரமில்லாமல் ஒரு குற்றச்சாட்டை நாம் வைக்கும் போது படிப்பவர்கள் நம்மை போகிற போக்கில் குற்றம் சொல்கிறவர் என்று எண்ணி விடுவார்கள். குறைந்தபட்சம் அந்த ஊரில் இருக்கிற சகோதரர்களுக்கு தெரியாமலா இருக்கும் இந்த வரதட்சணை விவகாரம். உங்களுக்கு எப்படி தெரிந்தது அலாவுதீன் வரதட்சணை வாங்கினார் என்று. நான் அவருக்கு ஆதரவாக பேசுகிறேன் என்று என்ன வேண்டாம். அவர்களை அயோக்கியத்தனங்களை ஆதாரத்தோடு வெளியிட வேண்டுமென்று தான் உங்களிடம் கோரிக்கை வைக்கிறேன். வெறும் யூகமாக இருந்தால் தயவு செய்து வரதட்சணை வாங்கினார் என்பதை நீக்கி விடுங்கள். ஏனெனில் நம்பகத்தன்மை மிகவும் முக்கியம் சகோதரரே.
வினவு அலாவுதீன் வரதட்சணை வாங்கவில்லை என்று பின்னூட்டத்தில் சொல்லியிருக்கின்றது. ( உங்க பெயரிலும் போலி பின்னூட்டம் வந்திருச்சு போல வினவுல. )
அன்பு சகோதரர் ஷேக்தாவூத்,
அலாவுதீன் வரதட்சனை வாங்கவில்லை என்று தான் நானும் சொல்கிறேன். ஆனால் அவர் மணப்பெண்ணுக்கு மஹர் கொடுத்து நகைகள் எதுவுமே வாங்காமல் அல்லது வலியுறுத்தாமல் அவர் திருமணம் செய்தார் என முதலில் அலாவுதீனுக்கு கொடி பிடிக்கும் வினவு நிறுபிக்கட்டும். அப்படி நிறுபித்தால் அது அப்படி இல்லை என நான் நிறுபிக்க தயாராய் இருக்கிறேன்.. அதனால் தான் அலாவுதீனுடன் நேரடியாக உரையாட வாய்ப்பு கேட்கிறேன். மேலும் ஒரு கூடுதல் தகவல். என்னுடைய சொந்த ஊர் மணமேல்குடிக்கு அருகே உள்ள கோட்டைப்பட்டினம் தான். அதனால் தான் இவ்வளவு தைரியமாக சொல்கிறேன். அதுமட்டுமின்றி வினவு மற்றும் புதிய ஜனநாயகத்தின் முக்கிய நோக்கமே அலாவுதீன் திருமணத்தை வெளிக்காட்ட வேண்டும் என்பதை விட தவ்ஹீத் ஜமாத்தைக் குறை சொல்ல வேண்டும் என்பதையே முக்கிய குறிக்கோளாக கொண்டிருக்கிறது. நான் மீண்டும் மீண்டும் ஒரு விசயத்தை வலியுறுத்துகிறேன். அலாவுதீன் வரதட்சனை வாங்கவில்லை என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் அவருடைய மணமகளுக்கு எந்த ஒரு நகையுமே வேண்டாம் என வலியுறுத்தி சொல்லி சீர்திருத்தமாக திருமணம் செய்தாரா என்பது தான் என் கேள்வியே!
இக்கட்டுரையில் மணமகன் அலாவுதீனின் மீது அபாண்டமாகக் குற்றம் சுமத்தியுள்ளார் பதிவாளர். அலாவுதீன் எவ்வித சீர்வரிசையும் பெற்றுக்கொள்ளவில்லை என்பதோடு மஹரும் கொடுக்கவில்லை. மேலும் வினவின், ’இஸ்லாம் சமூகத்தில் ஒரு சீர்திருத்தக் கல்யாணம்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் எந்த ஒரு இஸ்லாமிய அமைப்பையும் குறை சொல்லும் விதமாக எழுதப்படவில்லை. அதில் அனைவரும்(தவ்ஹீது உள்பட)கலந்துகொண்டு சிறப்பித்தனர் என்றுதான் உள்ளது. பின்பு தவ்ஹீதைச் சேர்ந்தவர்கள், பின்னூட்டங்களிலும் மற்ற இஸ்லாமிய தளங்களிலும் வினவை எதிர்க்கிறோம் என்ற போர்வையில் அவர்களாகவே அம்மபலப்பட்டுக்கொண்டனர். அதன் பிறகே வினவு அலாவுதீனும் - அற்புத விளக்கு என்ற பதிவை எழுதினார்.
//மற்றபடி பிளாக்கிலும் ஒயிட்டிலும் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம்.//
தோழர்கள் பிளக்கிலும் ஒயிட்டிலும் வாங்கினார்கள் என்பதை நண்பர் ஷேக் உங்களால் நிரூபிக்க முடியுமா! அவுர ஆதாரத்தோட் எழுதனும்னு சொல்லிட்டு நீங்க அவுத்து விட்றீங்களே
கம்யூனிசம் வெல்லும்.
// kalai said...
October 17, 2010 12:56 PM
//
அலாவுதீனுக்கு மணமேடையில் விசிறி வீசியவரைப் போல இவ்வளவு அழகாக சாட்சி சொல்லியுள்ளீர்கள் கலை. அலாவுதீன் சீர்வரிசை வாஙகாமல் இருந்திருக்கலாம். ஆனால் மணமகளுக்கு போடப்பட்ட அல்லது நிர்பந்திக்கப்பட்ட நகைகள் பற்றி மட்டும் ஆதாரமாக சொல்லுங்கள். அதை விடுத்து உங்கள் கற்பனைகளை இங்கே பதிவிட வேண்டாம். கம்யூனிசம் மண்ணைக் கவ்வி ஆண்டுகள் பல ஆகிவிட்டது. செத்துப்போய் விட்ட ஒரு கொள்கையை வைத்துக் கொண்டு ஆளுக்கு ஒரு பக்கம் தாங்கள் சொல்வது தான் சரி என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் கலை,
////மற்றபடி பிளாக்கிலும் ஒயிட்டிலும் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம்.//
தோழர்கள் பிளக்கிலும் ஒயிட்டிலும் வாங்கினார்கள் என்பதை நண்பர் ஷேக் உங்களால் நிரூபிக்க முடியுமா! அவுர ஆதாரத்தோட் எழுதனும்னு சொல்லிட்டு நீங்க அவுத்து விட்றீங்களே
கம்யூனிசம் வெல்லும்.//
நான் எங்கேயாவது கம்யூனிஸ்ட்டுகள் பிளாக்கிலும் ஒய்ட்டிலும் வாங்கியிருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறேனா? கலை ஏன் என் மீது அபாண்டமாக பழி சுமத்தி இருக்கிறீர்கள்? நான் இவ்வாறு சொன்னதாக நீங்கள் நிருபிக்க வேண்டும்.
கம்யூனிசம் வெல்லும்- கனவு காண்பதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. உங்கள் உரிமையில் நான் தலையிட முடியாது. நீங்கள் தாரளமாக பகல் கனவு கூட காணலாம்.
மன்னிக்கவும் ஷேக். நிஜாம் அவர்கள் சொன்னதை நீங்கள் சொன்னதாக தவறுதலாக குறிப்பிட்டுவிட்டேன்.மன்னிக்கவும்.
நிஜாம் உங்களால் நிரூபிக்க முடியுமா?
நிஜாம், நான் விசிறி வீசியதாகவே வைத்துக்கொள்ளுங்களேன். மணமகளுக்கு அலாவுதீன் எவ்வித நகையும் போடவில்லை.
எங்கே நான் கம்யூனிசக் கொள்கைகளை இங்கு பதிந்திருக்கிறேன்? கம்யூனிசக் கொள்கை செத்துப்போய்விட்டது என்பதை அதனுடைய கொள்கையிலிருந்து உங்களால் விளக்கமுடியுமா?
கம்யூனிசம் வெல்லும்.
அன்பின் சகோதரர் கலை,
//கம்யூனிசக் கொள்கை செத்துப்போய்விட்டது என்பதை அதனுடைய கொள்கையிலிருந்து உங்களால் விளக்கமுடியுமா?//
கம்யூனிசக் கொள்கை செத்துப் போய்விட்டது என்பதை உங்களிடம் மட்டுமல்ல உங்கள் இயக்க தலைவர்களிடமும் ( நீங்கள் ம.க.இ.க இயக்கம் சார்ந்தவராக இருந்தால்) நிருபிக்கிறோம் என்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை சார்ந்த இஸ்லாமிய அறிஞர்கள் சவாலாகவே வைத்திருக்கின்றனர். ஆனால் கண்டிப்பாக அது என்றடி விவாதமாக இருக்க வேண்டும். அதை விட்டி விட்டு ஜவ்வு போல இழுக்கும் எழுத்து விவாதம் என்றெல்லாம் இருக்க கூடாது. ஏனெனில் நேரடி விவாதத்தில் தெரிந்து விடும் எந்த கொள்கை சிறந்த கொள்கை என்று. முடிந்தால் கம்யூனிச கொள்கை வீழும் என்று நினைக்கின்ற தாங்கள் கம்யூனிஸ்ட்டுகளை நேரடி விவாதத்தில் கலந்து கொள்ள வற்புறுத்துங்கள். இன்று வரை நேரடி விவாதத்திற்கு வராமல் பயந்து ஓடுகின்றனர் கம்யூனிஸ்ட்டுகள். மனிதர்களுக்கேற்ற கொள்கை இஸ்லாமா அல்லது கம்யூனிசமா? இஸ்லாம் தான் சிறந்த கொள்கை என்று நாங்கள் சொல்லுகிறோம். தைரியம் இருந்தால் கம்யூனிசம் தான் சிறந்த கொள்கை என்று நம்புகின்றவர்கள் பொது மக்கள் முன்னிலையில் நேரடி விவாதத்தில் கலந்து கொண்டு தங்களின் கொள்கைகளை நிறுவவும்.
நண்பர் ஷேக்,
கொள்கையில் சிறந்தது இஸ்லாமா? அல்லது கம்யூனிசமா? என விவாதத்தினுள் நுழைய வேண்டி அக்கேள்வியை நான் கேட்கவில்லை. கம்யூனிசக் கொள்கைகள் செத்துவிட்டது எனத் தாங்கள் கூறுவதினால் செத்துவிட்ட அளவிற்கு அக்கொள்கையில் என்ன தவறு உள்ளது என அக்கொள்கையிலிருந்தே விளக்குங்கள் என்றும், மேலும் அதனை நான் அறிந்துகொள்ள வேண்டியே அக்கேள்வியை எழுப்பியிருக்கிறேன்.
மற்றபடி மகஇகவை விவாத்த்திற்கு அழைப்பது என் வேலையல்ல. அது அவர்களுக்கு அவசியமானதும் அல்ல என்பதும் என் கருத்து. இப்படிக்கூறுவதாலேயே அவர்கள் பயந்து ஓடுகிறார்கள் என்ற பொருளும் அல்ல. அவர்கள் களத்திலேயே முதலாளித்துவத்தை சமரசமின்றி துணிவுடன் எதிர்கொள்பவர்கள். பொதுக்கூட்டங்களில் அனைத்து சாதி,மதப் பிரிவினர்களுக்கு மத்தியிலும் அவர்களது கொள்கைகளை விளக்குகிறார்கள். அனைத்தையும் விமர்சிக்கிறார்கள். இருந்தும் பலர் அனைத்து பிரிவினைகளையும் மீறி ”தோழர்” என்ற அடையாளத்துடன் மகஇகவினை ஆதரிப்பதும், போராட்டங்களில் கலந்து கொள்வது, கலந்துகொள்வதும்தான் கம்யூனிசத்தின் வெற்றி. வேண்டுமானால் நீங்களும் அனைத்துப் பிரிவினரும் கலந்திருக்கும் ஒரு பொதுக்கூட்டத்தில் உங்களது கொள்கைகளை விளக்கிப் பேசிப்பாருங்களேன்! அல்லது ஒரு போராட்டம் நடத்திப் பாருங்களேன்! அனைவருக்குமாக.
கம்யூனிசமே வெல்லும்.
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் கலை,
இங்கு கம்யூனிஸ்ட்டுகளுக்கும் முஸ்லிம்களுக்கும் அடிப்படை பிரச்சனையாக இருப்பதே எது வாழ்வியல் நெறி என்பது தான். தமது கொள்கைகள் தான் சரியான வாழ்வியல் சித்தாந்தம் என்று இரண்டு பிரிவினர்களுமே நம்புகின்றனர். அவ்வாறிருக்க அதை தீர்க்காமல் வேற எந்த ஒன்று பேசினாலும் தீர்வு ஏற்படாது. எனவே எந்த கொள்கை சரியான கொள்கை என்று இரண்டு சித்தாந்தங்களின் அறிஞர்களும் ஒரு நேரடி விவாதத்தில் பொதுமக்கள் முன்னிலையில் அமர்ந்து பேசிவிட்டால் மக்கள் சரியானதை விளங்கி கொள்வார்கள். அதை விடுத்து அதை சமாளிக்க நீங்கள் வேறு எந்த காரணம் கூறினாலும் விவாதத்தை கண்டு ம.க.இ.க பயந்து ஓடி மறைவதாக தான் அர்த்தம். முதலாளித்துவத்தை எதிர்க்கின்ற வலு பெற்றவர்கள் நேரடி விவாதம் என்றால் ஏன் வர பயப்பட வேண்டும்?
//அனைத்துப் பிரிவினரும் கலந்திருக்கும் ஒரு பொதுக்கூட்டத்தில் உங்களது கொள்கைகளை விளக்கிப் பேசிப்பாருங்களேன்! //எல்லா பிரிவினர்களும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி தான் "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" அதில் எல்லா பிரிவினர்களும் கலந்து கொள்கின்றார்கள். தமிழகத்தில் இந்நிகழச்சி நடக்காத நகரங்கள் இல்லை எனும் அளவிற்கு நடந்து கொண்டிருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகள் உட்பட பலரும் கலந்து கொள்கின்றனர். இதில் எங்களுடைய கொள்கையை தெளிவாகவே சொல்கிறோம்.
//அல்லது ஒரு போராட்டம் நடத்திப் பாருங்களேன்! அனைவருக்குமாக.//
டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடும் போராட்டம் பலவற்றை நாங்கள் நடத்தியிருக்கிறோம். அதெல்லாம் எல்லா பொதுமக்களுக்கும் உரிய போராட்டம் தான். மீண்டும் சொல்கிறேன் நேரடி விவாதத்திற்கு ம.க.இ.க வந்து தன்னுடைய கொள்கையான கம்யூனிசம் வெல்லும் என்பதை நிருபிக்கட்டும். கம்யூனிசம் தான் வாழ்வியல் நடைமுறை என்பதை நிருபிக்கட்டும். நான் ஏற்றுக் கொள்கிறேன் கம்யூனிசம் வெல்லும் என்பதை.
உழைப்பவனும் உழைக்காதவனும் சமம்.
படித்தவனும் படிக்காதவனும் சமம்.
முயலாத ஏழையும் முயன்ற பணக்காரனும் சமம்.
தகுதியுள்ள அதிகாரியும் தகுதியற்ற அடிநிலை ஊழியனும் சமம்.
உடலால் உழைப்பவனும் மூளையால் உழைப்பவனும் சமம்.
சுருசுருப்பாளியும் சோம்பேறியும் சமம்.
குற்றம் செய்பவனும் குற்றம் செய்யாதவனும் சமம்.
தருமம் செய்பவனும் பிச்சைக்காரனும் சமம்.
ஆசிரியரும் மாணவனும் சமம்.
ஆத்திகனும் நாத்திகனும் சமம்.
போலிசும் திருடனும் சமம்.
அரசும் மக்களும் சமம்.
இந்த கெட்ட கேட்டில்... //கம்யூனிசமே வெல்லும்.//---நல்லவேளை...! இதுவரை அது வெல்லவில்லை. தப்பித்தோம்...! பிழைத்தோம்...!
ஆனால், "இஸ்லாம் வெல்லும்" என்று சொல்லும் அவசியம் இல்லை. ஏனென்றால் அது ஆல்ரெடி எப்போதோ வென்றுவிட்டது..!
நண்பர் ஷேக்,
அனைவரும் சமமாக இருக்கமுடியாது, இருக்கக்கூடாது, இருப்பது நல்லதும் அல்ல, அது வாழ்வியல் நெறிக்கு முரணானது என்று முடிவிற்கு வந்த பிறகும் கூட அது தன்னுள் அனைவருக்குமான வாழ்வியல் நெறியை கொண்டிருக்கிறது என்பதாகக் கருதுவது என்னவிதமான புரிதல் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருவேளை உங்களது வாழ்வியல் நெறி ஏழையானவனை சுரண்ட பயன்படுவதால் உங்களது ஆன்மா அவ்விசுவாசத்துடன் ஒத்துப்போகலாம். ஆனால் இதற்கு நேரெதிரான வாழ்வியல் நெறியைக் கம்யூனிசம் கொண்டுள்ளதினாலேயே இது போன்ற ஒரு விவாதம் அவசியமானதல்ல என்றும் நான் கூறினேன். கவனிக்கவும் இது என் கருத்துதான். வேண்டுமானால் நீங்களாக மகஇக வை தொடர்புகொண்டு விவாதம் செய்வதைப் பற்றி பேசிப்பார்க்கலாமே!இடைத்தரகராக ஒரு நபர் தேவைதானா!
மற்றபடி, நீங்கள் நடத்தும் "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" வினாடிவினா நிகழ்ச்சியை ஒத்தது. அது நீங்கள் மதப்பிரச்சாரம் செய்ய நடத்தப்படும் ஒரு தந்திர உத்தி. டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடும் போராட்டங்கள் நடத்திய உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். எனது கேள்வி அப்போராட்டத்தில் மதவேறுபாடுகளைக் கடந்து அனவரையும் திரட்டியிருந்தீர்களா? என்பது.
மேலும், “கம்யூனிசக் கொள்கைகள் செத்துவிட்டது எனத் தாங்கள் கூறுவதினால் செத்துவிட்ட அளவிற்கு அக்கொள்கையில் என்ன தவறு உள்ளது என அக்கொள்கையிலிருந்தே விளக்குங்கள்” என்ற எனது கோரிக்கை இன்னும் அப்படியே இருக்கிறதே?
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் கலை,
நான் சொல்கிறேன் என்று கோபித்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் சரியாகவே கருத்தை படிக்காமல் அதற்கு எதிர் கருத்து போட்டு விடுகிறீர்கள். ஏதாவது கருத்து சொல்லணுமே என்ற விதத்தில் கருத்து சொல்லுகிறீர்கள் போல் தெரிகிறது. அது மட்டுமின்றி யார் எந்த கருத்தை சொல்லியிருக்கின்றார்கள் எனவும் சரியாக பார்க்காமல் எதிர்வினை புரிகின்றீர்கள். முஹம்மத் ஆஷிக் சொன்னதை நான் சொன்னேன் என்று புரிந்து எனக்கு பதில் கொடுக்கிறீர்கள். முஹம்மத் ஆஷிக் சொன்னால் ஆஷிக் அஹமத் சொன்னதாக நினைத்து கொள்கிறீர்கள்.
என்னமோ நான் உலக பணக்காரர்கள் வரிசையில் ஒருவனாகவோ அல்லது உள்ளூர் பணக்காரர்களில் ஒருவனாகவோ இருப்பதாக உருவகித்து கொண்டே பேசுகிறீர்கள். ஒருவேளை கம்யூனிசத்திற்கு எதிரான மனநிலையில் இருப்பவர்கள் எல்லாம் இலட்சாதிபதிகளும் கோடீஸ்வரர்களும் மட்டும் தான் என்று எண்ணுகிறீர்கள் போல. நான் மாத சம்பளம் வாங்கும் சாதாரண ஊழியன் மட்டுமே.
//நேரெதிரான வாழ்வியல் நெறியைக் கம்யூனிசம் கொண்டுள்ளதினாலேயே இது போன்ற ஒரு விவாதம் அவசியமானதல்ல என்றும் நான் கூறினேன்//
நேரெதிரான கொள்கைகளை கொண்ட இரண்டு விசயங்களுக்கு தான் எது சிறந்தது என்ற விவாதம் தேவை. ஒத்த கொள்கைகள் இருந்தால் அத்தகைய விவாதத்திற்கு அவசியமே இல்லை கலை. எனவே மீண்டும் மீண்டும் சொல்கிறேன் நேரடி விவாதத்தை கண்டு ம.க.இ.க பயந்து தான் ஓடுகிறது. இது சம்பந்தமாக செங்கொடி , சாகித் போன்றவர்கள் எல்லாம் வெறும் வாக்குறுதி மட்டுமே கொடுத்து விட்டு இன்றுவரை உறுதியான பதிலை சொல்லாமல் பயந்து ஓடுகின்றனர். நீங்கள் ம.க.இ.க வின் உறுப்பினர் இல்லையா கலை? அதனுடைய சித்தாந்தங்களோடு உடன்பட்டு அந்த இயக்கத்தை தூக்கி பிடிப்பவர் தானே? பின்னர் விவாதம் என்று வந்து விட்டாம் மட்டும் ஏன் இந்த பின்வாங்கல்?
//நீங்கள் நடத்தும் "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" வினாடிவினா நிகழ்ச்சியை ஒத்தது.//
நீங்கள் எதாவது அனைத்து மக்களும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை நடத்துகிறீர்களா என்று கேட்டீர்கள். அதற்கு நான் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற நிகழ்ச்சியை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடத்துகிறோம் என்று குறிப்பிட்டேன். நாங்கள் எங்களின் கொள்கையை மக்களின் முன்னிலையில் சொல்லி அதில் இருந்து மக்கள் எழுப்புகிற கேள்விகளுக்கு பதில் சொல்லுகிறோம். இதை விட வேறு எதை எதிர்பார்க்கிறீர்கள்? இல்லை ம.க.இ.க தன்னுடைய கம்யூனிச கொள்கையை மக்களிடம் இத்தகைய கேள்வி பதில் மூலம் சொல்லுகிறதா? மக்கள் கேட்கின்ற அனைத்து கேள்விகளுக்கு பதில் சொல்லுகின்றனரா ம.க.இ.க வினர்கள்.
//டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடும் போராட்டங்கள் நடத்திய உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். எனது கேள்வி அப்போராட்டத்தில் மதவேறுபாடுகளைக் கடந்து அனவரையும் திரட்டியிருந்தீர்களா? //
அனைவருக்கும் சேர்த்து தான் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறோம் . கலந்து கொள்வதும் கலந்து கொள்ளாமல் இருப்பதும் அவர்களுடைய இஷ்டம். ஆனாலும் சில இந்து சகோதரர்களும் கலந்து கொள்கின்றனர்.
நண்பர் ஷேக்,
”நான் நாடியவரையே செல்வந்தராக்குகிறேன்” என்ற கொள்கையில் நீங்கள் உடன்பாடில்லாதவரா என்ன நீங்களும் பதிலளிக்கலாமே! நீங்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் என்பதினால், இங்கு நான் உங்கள் அனைவரையும் நோக்கியே எனது கருத்தை பொதுவாகவே முன் வைக்கின்றேன். உங்களில் யாரேனும் ஒருவர் பதிலளிப்பதில் எனக்கொன்றும் பிரச்சினையில்லை. உங்களுக்கு அதில் பிரச்சினையென்றால் இனி தவிர்த்துக்கொள்கிறேன்.
உங்களால் கூறப்பட்ட ”கம்யூனிசம் பகல்கனவு” என்ற எள்ளலுக்கும், கம்யூனிசக் கொள்கை செத்துப் போய்விட்டது (என்பதை உங்களிடம் மட்டுமல்ல உங்கள் இயக்க தலைவர்களிடமும்) என்ற அவதூறுக்கும் பலமுறை விளக்கம் கேட்டும் இன்னும் பதிலில்லையே ஷேக்!
இப்படிக்கு நிஜாம்,
//செத்துப்போய் விட்ட ஒரு கொள்கையை//
நீங்கள் எப்படிக்கு வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போங்கள்.
“கம்யூனிசக் கொள்கைகள் செத்துவிட்டது எனத் தாங்கள் கூறுவதினால் செத்துவிட்ட அளவிற்கு அக்கொள்கையில் என்ன தவறு உள்ளது என அக்கொள்கையிலிருந்தே விளக்குங்கள்”
நண்பர் ஷேக் மற்றும் நிஜாம் அவர்களே,
மீண்டும் ஒருமுறை.....................
கொள்கையில் சிறந்தது இஸ்லாமா? அல்லது கம்யூனிசமா? என விவாதத்தினுள் நுழைய வேண்டி அக்கேள்வியை நான் கேட்கவில்லை. கம்யூனிசக் கொள்கைகள் செத்துவிட்டது எனத் தாங்கள் கூறுவதினால் செத்துவிட்ட அளவிற்கு அக்கொள்கையில் என்ன தவறு உள்ளது என அக்கொள்கையிலிருந்தே விளக்குங்கள் என்றும், மேலும் அதனை நான் அறிந்துகொள்ள வேண்டியே அக்கேள்வியை எழுப்பியிருக்கிறேன்.
இப்படிக்கு கம்யூனிசமே தெரியாமத்தான் இவ்வளவு நாளும் சவடால் விட்டுக்கிட்டு இருந்தீங்களா! எல்லோரும் எஸ்கேப்பா?
அன்பின் சகோதரர் கலை,
மிக தெளிவாக நான் குறிப்பிட்டு விட்டேன். நேரடி விவாதத்திற்கு உங்கள் தரப்பை சம்மதிக்க வைத்தால் இது குறித்தும் பேசுவோம் என்று. ஏற்கெனவே நேரடி விவாதத்திற்கு வருகிறேன் வருகிறேன் என்று சொல்லியே நைசாக காலம் நகர்த்திய கோழை செங்கொடி நேரடி விவாதத்தில் கலந்து கொள்ள மாட்டேனென்று அறிவித்து விட்டார். நேரடி விவாதத்திற்கு தயாராகிறேன் என்று சொல்லிய சாகித் நான் அனுப்பிய மெயில்களுக்கு பதிலேதும் அனுப்பாமல் இருக்கிறார். ஒருவேளை அவரும் எப்படி நேரடி விவாதத்தை தவிர்க்கலாம் என்று ரூம் போட்டு யோசிக்கிறார் போல. எனவே முடிந்தால் ம.க.இ.க கம்யூனிஸ்ட்டுகள் நேரடி விவாதத்திற்கு வரட்டும். கோழை போல பயந்து ஓடி மறைய வேண்டாம். நேரடி விவாதம் என்றால் தொடருங்கள் கலை. இல்லையெனில் பின்னூட்டத்தை நீங்கள் தொடருங்கள். நான் பதில் அழிக்க போவதில்லை.
நண்பர்களே,
என்ன இது கொடுமை பாரீர்! எனது பின்னூட்டங்களின் இறுதியில் “கம்யூனிசமே வெல்லும்” என்று எழுதியதற்காக ஒருவர் கம்யூனிசம் செத்துப்போய்விட்டது என அவதூறாகக் கூறினார், மற்றொருவர் கம்யூனிசம் பகல் கனவு என்று எள்ளலாகவும் அது செத்துப் போய்விட்டதை ஊர்கூடித்தான் விவாதிக்கமுடியும் என்றும் தேதி குறிக்கச் சொன்னார், இன்னொருவர் நல்லவேளை தப்பித்தோம் என பெருமூச்சுவிட்டார். நான் என்னுடைய பதிலில் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளேன், இங்கு கம்யூனிசமா? இஸ்லாமா? என விவாதம் செய்ய வேண்டி விளக்கம் கேட்கவில்லை என்று. உங்களது விளக்கத்தின் மூலம் உங்களது கம்யூனிசப் புரிதலை விளங்கிக் கொள்ளவே விளக்கம் கோரினேன் அவ்வளவே. இதற்கு எதற்கு கோழை, பயந்தாங்கொள்ளின்னு அர்ச்சனைகள். இல்லை நாங்க அப்படித்தான் போகிறபோக்குல சொல்லுவோம் விளக்கமெல்லாம் கேட்கக்கூடாது என்கிறீர்களா!
சரி. தெரியலைன்னா தெரியலைன்னு சொல்ல வேண்டியதுதானே!
அலாவுதீன் இல்லாத இடத்தில் அவரைப்பற்றி பேசுவது புறம் பேசுவதாக ஆகாதா எனதருமை முஸ்லீம் தோழர்களே...
இப்படி நீங்கள் இஸ்லாமிய கொள்கைக்கு எதிராக நடப்பதால் இஸ்லாம் செத்துவிட்டது என யாராவது சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா?
முதலில் அலாவுதீன் என்னதான் சீர்திருத்த திருமணம் செய்தார் என அவர்தரப்பிலிருந்து நம்பகமான் செய்தியை பதியுங்கள் பிறகு விவாதிக்கலாம்.அவரும் பதில் தரட்டும்.
வீணாக எந்த கொள்கை செத்துவிட்டது என பட்டிமன்றம் நடத்த வேண்டாம்.
எந்த கொள்கையை நான் ஏற்றுக்கொண்டேன் ஆனால் அதன்படி நடக்கமாட்டேன் என்று யாராவது சொன்னால் அது அவர்களின் மேல் உள்ள தவறு அல்லது அந்த கொள்கையின்மேல் விமர்சனம் வைப்பதாக பொருள். ஒருவன் கடைபிடிக்கவில்லை என்பதற்காக அந்த கொள்கையே செத்துவிட்டது எனபது அறியாப்பிள்ளைத்தனம் அல்லது நுனியின் நுனிப்புல் மேய்வது. அதுதான் இப்போது இங்கே நடந்துக்கொண்டிருக்கிறது.
அலாவுதீன் பேசட்டும் பின் தேவைப்பட்டால் நாம் பேசுவோம்.
நுனிப்புல் மேய்வதைப் பற்றி நீங்கள் பேச வேண்டாம் கவிமதி என்கிற பசீர் பாய்..
கலை!
//“கம்யூனிசக் கொள்கைகள் செத்துவிட்டது எனத் தாங்கள் கூறுவதினால் செத்துவிட்ட அளவிற்கு அக்கொள்கையில் என்ன தவறு உள்ளது என அக்கொள்கையிலிருந்தே விளக்குங்கள்”//
நேரடி விவாதத்துக்கு வர சம்மதிக்காததே கம்யூனிஸ கொள்கை தோற்றதற்கு அடையாளமாக எடுத்துக் கொள்ளலாம். மேலும் பெரிய ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை. முன்பு கம்யூனிச கொள்கைகளின் படி ஆட்சி நடத்தி அதில் தோல்வி கண்ட ரஷ்யாவும் சீனாவும் இன்று கம்யூனிஸத்தை கை கழுவவில்லையா? மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் ஆட்சியில் இத்தனை காலம் இருந்த கம்யூனிஸ்டுகள் சாதித்தது என்ன? என்ன மாற்றத்தை அவர்களால் ஏற்படுத்த முடிந்தது? இதை திரு கலை விளக்குவாரா?