அது என்னவோ நம்ம வீட்டுக்கல்யாணம் போலத்தான் இருந்தது. என்ன வேலை இருந்தாலும் செய்யதுவின் திருமணத்தில் எப்படியாவது கலந்து கொள்ளவேண்டும் என உள்மனது சொல்லிக்கொண்டே இருந்தது. அத்தோடு மட்டுமின்றி இதுவரை நம் பதிவுச்சொந்தங்கள் யாரையுமே சந்திக்கவில்லை, எனவே இதை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற முடிவும் இருந்தது. திருமணம் எழும்பூரில் உளள சிராஜ் மஹால் என்பதால் ரொம்பவும் வசதியாகியிருந்தது.
மாலை 6.30 - 7.30 க்குள் திருமணம் நடைபெறும் நேரம் என்பதால் சரியாக 7 மணிக்கு சென்று விடலாம் என முடிவு செய்து 6.30க்கே கிளம்பிவிட்டோம். மாலை நேரம் சென்னையின் போக்குவரத்து நெரிசலை சொல்லவே வேண்டாம். டூ வீலருக்கே இந்த கதி என்றால் பஸ் பயணம் செய்பவர்கள் நினைத்தே பார்க்கவேண்டாம். அடித்துப் பிடித்து வந்து சேர 7.30 ஆகிவிட்டது. நிக்காஹ் நேரத்தை தவறவிட்டு விட்டோமோ என்ற நினைப்பிலேயே உள்ளே வந்து சேர்ந்தோம். ஆனால் இன்னமும் எந்தவிதமான சலனமும் இன்றி மணமேடை காலியாக இருந்தது. சரியான நேரத்துக்குத் தான் வந்திருக்கோம் என நினைத்துக் கொண்டு முதலில் இது செய்யதுவின் திருமணமா என உறுதிப்படுத்திக் கொண்டோம்.
மண்டபத்துக்குள் நுழையும் போது நல்ல முறையில் வரவேற்பு கிடைத்தது. சிலர் என்னிடம் வந்து கை கொடுத்து நலம் விசாரித்தார்கள். உண்மையிலேயே அவர்கள் யாரையும் எனக்குத் தெரியாது என்பது தான் உண்மை. ஒருவேளை அவர்களுக்கு என்னைத் தெரிந்திருக்கலாம் போல. மண்டபத்தை அப்படியே ஒரு சுற்று சுற்று நம் பதிவுத்தோழர்கள் யாராவது இருக்கிறார்களா எனத் தேடிப்பார்த்தேன். யாரையும் தெரியவில்லை. சரி கடைசியாக பார்த்துக் கொள்ளலாம் என ஓரிடத்தில் அமர்ந்து விட்டோம்.
சரியாக 7.45 மணியளவில் ஜமாத் பெரியவர்கள் மேடையில் அமர நம் விழாவின் நாயகன் செய்யது அவர்கள் மணமகன் உடையில் வந்து அமர்ந்தார். ஏற்கனவே செய்யதுவின் முகம் பரிச்சயம் என்பதால் அடையாளம் காண்பதில் எளிமையாக இருந்தது. செய்யது அமர்ந்தவுடன் ஜாமாத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் மைக்கைப் பிடித்து நீண்ண்ட வரவேற்புரை ஆற்றினார். அதன்பின்னர் செய்யதுவுக்கு திருக்குரான் பரிசாக வழங்கப்பட்டது. இருவீட்டாரும் மேடையில் அமர முதலில் மணப்பெண்ணிடம் கையெழுத்து வாங்கப்பட்ட பதிவுப் புத்தகம் செய்யதுவிடம் தரப்பட்டது. அதிலே அவரும் கையெழுத்திட்டார். பெண்ணின் தரப்பு சாட்சிகள் முன்னிலையில் செய்யது மணப்பெண்ணிற்கு மணக்கொடையாக 32 கிராம் மதிப்புடைய ஒரு நெக்லஸை வழங்கினார். அதன்பின்னர் பதிவுப்புத்தகம் படிக்கப்பட்டு நிக்காஹ் நிறைவேற்றப்பட்டது. மணமக்கள் ஷாபி மதஹபினர் என்பதை கொஞ்சம் அழுத்தமாக பதிவுசெய்தனர் பதிவுப் புத்தகத்தைப் படித்தவர்கள். திருமணம் இனிதே நிறைவடைய செய்யதுவை நண்பர்களும் உறவினர்களும் சூழ்ந்து கொண்டனர். தங்கள் பரஸ்பரம் மகிழ்ச்சியைத் தெரிவிக்கத் தொடங்கியிருந்தனர்.
அப்போது கூட நம் பதிவுத்தோழர்களைத் தேடியே என் கண்கள் மோதின. அந்த நிலையில் நம்ம ஜாமாலின் உருவம் கொண்ட ஒரு நபரைக் காணமுடிந்தது. ஆனால் அது ஜமால் தானா என்பதை என்னால் உறுதி செய்யமுடியவில்லை.
சரி பின்னால் பார்க்கலாம் என நினைத்து செய்யதுவிடம் அறிமுகம் செய்து கொண்டு அது ஜமால் தானா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். அது ஜமால் தான் என்பது உறுதியானது. உடனடியாக மேடையில் இருந்து இறங்கி நேராக சாப்பாட்டுக் கூடத்தின் அருகிலே ஜமாலைப் பிடித்தேன். நீங்க ஜமால் தானே எனக்கேட்க ஜாமலும் நீங்க நிஜாம் தானே எனக் கேட்கவும் சரியாக இருந்தது. எப்படித் தெரியும் எனக்கேட்டேன். எல்லாம் ஒரு அனுமானம் தான் என்றார். அங்கே ஜமால் மட்டுமின்றி நம் பதிவுலகின் தோழர்கள் தோழியர்களின் சிலரும் இருந்தனர். அவர்களிடமும் பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டு பேசிக்கொண்டிருந்தோம். வானம்பாடிகள் பாலா அண்ணன் வந்தாரா யாரும் பார்த்தீர்களா எனக்கேட்டேன். அவர்களும் அண்ணனைத் தேடுவதாகவும் அண்ணன் வரவில்லை எனவும் தெரிவித்தனர். ஒருவேளை அண்ணனுக்கு சரியான தகவல் கிடைக்கவில்லை என நினைக்கிறேன்.
பின்னர் சைவப்பந்திக்கு ஜமால் நம் சகத்தோழர்களை அழைத்துச்செல்ல எங்களுக்கு வேலையிருந்ததாலும் வாசல் அருகிலேயே இரண்டு இடம் காலியாக இருந்ததாலும் பந்திக்கு முந்து என்ற பழமொழியின் அடிப்படையில் சட்டென புகுந்துவிட்டோம். திரும்பிவந்த ஜமால் நாங்கள் அங்கே இல்லாமல் தேட நாங்கள் உள்ளே அமர்ந்து இலையோடு விளையாடிக்கொண்டிருந்தைப் பார்த்து அருகிலே வந்து இதெல்லாம் நியாயமே இல்லை எனச் சொல்லிவிட்டு கையோடு இன்னும் ஒரு சகத்தோழரை அழைத்து வந்தார். சாப்பாடும் கையுமாக அவரோடு அறிமுகம். பரவாயில்லை நம்மை ஒப்பிடும் போது ஜமாலுக்கு எவ்வளவு அறிமுகங்கள் என்பதை நினைத்து பெருமையாக அல்லது பொறாமையாக இருந்தது.
சாப்பாட்டினைப் பற்றி கொஞ்சம் இங்கே சொல்லியாக வேண்டும். அநேகமாக ஆம்பூர் அல்லது வாணியம்பாடி பிரியாணியாக இருக்க வேண்டும். அவ்வளவு ருசி. அத்தோடு சேர்ந்து வந்த வெங்காய பச்சடி பேஷ்.. பேஷ்.. ஸ்வீட் ஏ.ஒன். எங்க ஊர் பக்கம் தாள்சாவும் சேர்த்து கொடுப்பார்கள். அது மட்டும் மிஷ்ஷிங். ஆனால் தாள்சா இல்லாமலேயே இரண்டு ரவுண்டு கட்டி விட்டோம். ஜமால் எத்தனை ரவுண்டு கட்டினார் என்பதை அவரே சொல்லுவார். சைவ உணவு அலர்ஜி என்பதால் அந்த திசைப்பக்கமே போகவில்லை. எல்லாம் முடிந்து சகபதிவர்களிடம் விடைபெற்று ஜமாலிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டோம்.பார்க்கிங்கில் எங்கள் வண்டியைச் சுற்றி மற்றவர்கள் ஆக்கிரமித்து இருந்ததால் கொஞ்சம் நேரம் வெளியே நின்று கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் அண்ணன் அபுஅப்ஸர் ஜாமாலுக்கு தொலைபேசியில் அழைத்திருக்கிறார். நான் இப்போது தான் போனேன் என்றும் சொல்லிவிட்டு வந்த ஜமால் நான் வெளியே நிற்பதைப் பார்த்து இதைச் சொன்னார். கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. அத்தோடு நண்பர்களுடன் விடைபெற்று கிளம்பினோம். என்னோடு வந்த நண்பர் ஜெயப்பிரகாஷ் நான் சொல்ல சொல்ல சளைக்காமல் போட்டோக்களை எடுத்து தள்ளினார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். மணமக்கள் நீடு வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.
பாரகல்லாஹ் ல(க்)க வபார(க்)க அலை(க்)க வஜமாஅ பைனகுமா ஃபீகைர்
பொருள்:
அல்லாஹ் உங்களுக்கு (பரக்கத்) அருள் புரிவானாக. உங்களிலும் (உன் சந்ததிகளிலும்) அருள் பொழிவானாக. உங்களிருவரையும் நல்லறங்களில் ஒன்றிணைப்பானாக.
பொருள்:
அல்லாஹ் உங்களுக்கு (பரக்கத்) அருள் புரிவானாக. உங்களிலும் (உன் சந்ததிகளிலும்) அருள் பொழிவானாக. உங்களிருவரையும் நல்லறங்களில் ஒன்றிணைப்பானாக.
இனி நம் பதிவுச்சொந்தங்கள்:
நன்றி!!!
already seen this
















































syed avarkalukku thirumana vazththukkal
ரெம்ப ஃபாஸ்ட்டா இருக்கியளே
சூப்பர் போட்டோஸ்
ராஸா நான் ஒரு ரவுண்டு கூட முழுசா முடிக்கலை
கோழி போட்டிருந்தா தெரிஞ்சிருக்கும், எப்படின்னு
சரி போகட்டும் வேற சான்ஸ் கிடைக்காதா என்னா
வேறு ஒரு திருமண வரவேறு நிகழ்ச்சி இருந்ததால் கலந்துகொள்ள முடியவில்லை. வருத்தம் தான். புகைப்படங்கள் அருமை.
செய்யதுக்கும் மனைவிக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்.
ஆஹா நிஜாம் ஒரு திருமண ஆல்பமே போட்டுடீங்க, கலக்கல்
உங்களிடம் பேசாதது கண்டு எனக்கும் வருத்தமே (அபுஅஃப்ஸர்)
மணமக்கள் எல்லா வளங்களும் பெற்று நீடூழி வாழிய பல்லாண்டு என இறைவனிடம் வேண்டுகிறேன்.
திருமணப் பதிவுக்கு மகிழ்ச்சி.
பதிவர்கள் யாரென்று பேர் போட்டால் நல்லது.
செய்யது திருமண விழா படங்களுக்கு நன்றி..
மணமக்களுக்கு இனிமையான வாழ்வு அமைய வாழ்த்துக்களும், துவாக்களும்.
//ஷாகுல் said...
September 20, 2010 1:48 PM
syed avarkalukku thirumana vazththukkal
//
நாமலும் சொல்வோம் சாகுல்.. நன்றி
//நட்புடன் ஜமால் said...
September 20, 2010 1:51 PM
ரெம்ப ஃபாஸ்ட்டா இருக்கியளே
சூப்பர் போட்டோஸ்
ராஸா நான் ஒரு ரவுண்டு கூட முழுசா முடிக்கலை
கோழி போட்டிருந்தா தெரிஞ்சிருக்கும், எப்படின்னு
சரி போகட்டும் வேற சான்ஸ் கிடைக்காதா என்னா//
ஜமால் பாய் கேட்குற சான்ஸ் என்னத்துக்குன்னு புரியுதா???
//VISA said...
September 20, 2010 2:02 PM
வேறு ஒரு திருமண வரவேறு நிகழ்ச்சி இருந்ததால் கலந்துகொள்ள முடியவில்லை. வருத்தம் தான். புகைப்படங்கள் அருமை.
செய்யதுக்கும் மனைவிக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்.//
நன்றி சகோதரரே! உங்கள் வாழ்த்துக்கள் அவரை சென்றடையும்.
//அப்துல்மாலிக் said...
September 20, 2010 2:15 PM
ஆஹா நிஜாம் ஒரு திருமண ஆல்பமே போட்டுடீங்க, கலக்கல்
உங்களிடம் பேசாதது கண்டு எனக்கும் வருத்தமே (அபுஅஃப்ஸர்)
மணமக்கள் எல்லா வளங்களும் பெற்று நீடூழி வாழிய பல்லாண்டு என இறைவனிடம் வேண்டுகிறேன்.//
நீங்க ஹூசைனம்மாவுக்கு தான் நன்றி சொல்லனும். அவங்க தான் நேற்றய ஜமாலுடைய பதிவில் இது பத்தி கேட்டாங்க. நானும் திட்டமிட்டு செய்யல.. ஏதோ உடனடியா தோன்றுன ஐடியா தான்,,..
//ஹுஸைனம்மா said...
September 20, 2010 2:40 PM
திருமணப் பதிவுக்கு மகிழ்ச்சி.
பதிவர்கள் யாரென்று பேர் போட்டால் நல்லது.//
பதிவர்களில் ஜமால் மட்டுமே தெரிந்த முகம். அடுத்து பதிவர் ரம்யா அவர்களும் வந்திருந்தார்கள். மற்ற பதிவர்களின் பெயர்களை சாப்பிடும் ஆர்வத்தில் விட்டுவிட்டேன்.
//இராகவன் நைஜிரியா said...
September 20, 2010 2:47 PM
செய்யது திருமண விழா படங்களுக்கு நன்றி..//
இராகவன் அண்ணன பாத்து ரொம்ப நாளாச்சி.. நன்றிண்ணே!
//தமிழ் பிரியன் said...
September 20, 2010 6:42 PM
மணமக்களுக்கு இனிமையான வாழ்வு அமைய வாழ்த்துக்களும், துவாக்களும்.//
துவாக்களுக்கு நன்றி தமிழ்பிரியன்..
மணமக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
திருமண நிகழ்ச்சியின் வர்ணனை மிக சுவாரஸ்யம்.
சுமார் 40 புகைப்படங்கள்; மிக்க அருமை.
//மற்ற பதிவர்களின் பெயர்களை சாப்பிடும் ஆர்வத்தில் விட்டுவிட்டேன். //
பந்திக்கு முந்து. ஹா... ஹா...
செய்யது தம்பதிகள்... இறைவன் அருளால் எல்லா வளமும் பெற்று இனிதே வாழ வாழ்த்துகிறேன்..
அருமையான போட்டோக்கள்.. நிஜாம் நீங்க எந்த போட்டோல இருக்கிங்க.. குறிப்பிடல..
மணமக்களுக்கு இனிமையான வாழ்வு அமைய வாழ்த்து
//NIZAMUDEEN said...
September 20, 2010 9:34 PM
மணமக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
திருமண நிகழ்ச்சியின் வர்ணனை மிக சுவாரஸ்யம்.
சுமார் 40 புகைப்படங்கள்; மிக்க அருமை.
//மற்ற பதிவர்களின் பெயர்களை சாப்பிடும் ஆர்வத்தில் விட்டுவிட்டேன். //
பந்திக்கு முந்து. ஹா... ஹா...//
நன்றி நிஜாம் பாய்! மொத்த புகைப்படங்கள் 120க்கும் மேல் அதிலிருந்து எடிட் செய்யப்பட்டதே மீதம்..
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
September 20, 2010 11:05 PM
செய்யது தம்பதிகள்... இறைவன் அருளால் எல்லா வளமும் பெற்று இனிதே வாழ வாழ்த்துகிறேன்..
அருமையான போட்டோக்கள்.. நிஜாம் நீங்க எந்த போட்டோல இருக்கிங்க.. குறிப்பிடல..//
நன்றி ஸ்டார்ஜன் அண்ணே! கருப்பு சட்டையில் பிரியாணியும் கையுமா இருப்பது நான் தான். கருப்பு டீசர்ட்டில் இருப்பது ஜமால்..
//T.V.ராதாகிருஷ்ணன் said...
September 21, 2010 1:51 AM
மணமக்களுக்கு இனிமையான வாழ்வு அமைய வாழ்த்து//
நன்றி ராதாகிருஷ்ணன் சார்..தொடர்ந்து இணைந்திருங்கள்
நிஜாம்,
நீங்கள் நிக்காஹ்வுக்கு வந்ததே இன்ப அதிர்ச்சியாகத் தான் இருந்தது.
இப்போது இந்த பதிவைப் பார்த்து இன்னும்...இவ்வளவு மெனக்கெடலா ???
வானாளில் மறக்க முடியாத ஒரு அற்புத திருநாளின் நினைவுகளையும் அத்தர் மல்லிகை நறுமணத்தையும் மில்லிமீட்டர் குறையாமல் இங்கே கொணர்ந்திருக்கிறீர்கள்.
அல்ஹம்து லில்லாஹ் ! வாழ்த்திய நண்பர்களுக்கு அன்பும் நன்றியும் !
பிரியாணிய மிஸ் பண்ணிட்டேனே :))
வாழ்வு சிறக்க வாழ்த்துவோம்!
//அ.மு.செய்யது$ said...
September 21, 2010 11:54 ஆம்///
நன்றி செய்யத்.அல்லாஹ் உங்களுக்கு (பரக்கத்) அருள் புரிவானாக. உங்களிலும் (உன் சந்ததிகளிலும்) அருள் பொழிவானாக. உங்களிருவரையும் நல்லறங்களில் ஒன்றிணைப்பானாக.
//பாலா said...
September 21, 2010 12:45 PM
பிரியாணிய மிஸ் பண்ணிட்டேனே :))//
கொஞ்சம் பீலிங்காத்தான் இருக்கும்
//சத்ரியன் said...
September 21, 2010 5:30 PM
வாழ்வு சிறக்க வாழ்த்துவோம்!//
நிச்சயமாக நண்பரே! இணைந்து கொண்டதற்கு நன்றி
வாழ்க வளமுடன்
சைவ உணவு அலர்ஜி என்பதால் அந்த திசைப்பக்கமே போகவில்லை.//
ஹாஹாஹா சூப்பர் நிஜாம்..
அது சரி எனக்கு பிரியாணி போச்சே..:))
செய்யது ஹம்சியா நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பி்ரார்த்திக்கிறேன்..
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.
சென்னையில் நோன்புக்கு முன் இங்கு தெரிந்தவங்க கல்யாணத்துக்கு வந்தேன், எங்க சென்னை பிரியாணி அதுவும் வாழையிலையில் தயிர் பச்சடியுடன் சூப்பராக இருக்கும்,
பதிவர்க்ளின் பெயரை குறிப்பிட்டு இருக்கலாம்
//தமிழ்தோட்டம் said...
September 22, 2010 11:47 AM
வாழ்க வளமுடன்//
நன்றி தமிழ்த்தோட்டம். தொடர்ந்து இணைந்திருங்கள்..
//தேனம்மை லெக்ஷ்மணன் said...
September 22, 2010 12:38 PM
சைவ உணவு அலர்ஜி என்பதால் அந்த திசைப்பக்கமே போகவில்லை.//
ஹாஹாஹா சூப்பர் நிஜாம்..
அது சரி எனக்கு பிரியாணி போச்சே..:))
செய்யது ஹம்சியா நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பி்ரார்த்திக்கிறேன்..//
நன்றி சகோதரி..உங்கள் பிரார்த்தனைகள் மணமக்களின் மணவாழ்வை பெலப்படுத்தட்டும்..
//அது சரி எனக்கு பிரியாணி போச்சே..:))//
கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு..
//Jaleela Kamal said...
September 22, 2010 1:56 PM
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.
சென்னையில் நோன்புக்கு முன் இங்கு தெரிந்தவங்க கல்யாணத்துக்கு வந்தேன், எங்க சென்னை பிரியாணி அதுவும் வாழையிலையில் தயிர் பச்சடியுடன் சூப்பராக இருக்கும்,//
உண்மைதான் ஜலிலாக்கா. பிரியாணி பிரமாதம்..
//Jaleela Kamal said...
September 22, 2010 1:57 PM
பதிவர்க்ளின் பெயரை குறிப்பிட்டு இருக்கலாம்//
அதிலே கொஞ்சம் நிர்வாகச்சிக்கல் இருக்கிறது. அதான் அவ்வளவா கேர் எடுக்கல..
நீங்கள் பெரம்பூரில் வசிக்கின்றீர்களா? இன்று காலை செயின்ட் மேரிஸ் பள்ளியில் உங்களைப் பார்த்தேன். நேரமாகிவிட்டதால் பேசமுடியவில்லை.
//Rahim said...
September 22, 2010 10:52 PM
நீங்கள் பெரம்பூரில் வசிக்கின்றீர்களா? இன்று காலை செயின்ட் மேரிஸ் பள்ளியில் உங்களைப் பார்த்தேன். நேரமாகிவிட்டதால் பேசமுடியவில்லை.//
ஒருவரைப் போல 7 பேர் இருப்பார்களோ? அடுத்தமுறை அவரைப்பார்த்தால் விவரம் கேட்டு என்னிடம் தொடர்பு கொள்ளவும். நன்றி