Jul 7, 2010

வீடு தேடிவரும் ஊடக விபச்சாரத் தூதுவர்கள்

நிஜாம் கான் @ 3:18 PM
முக்கிய குறிப்பு: கீழ்க்கண்ட இந்த படங்கள் அனைத்தும் தினத்தந்தியில் தொடர்ந்து வெளியானவையாகும். தினத்தந்தியின் சமூகசீர்கேட்டைத் தெரிவிக்கவே இப்படங்கள் எந்தவிதமான மாற்றமும் இன்றி அப்படியே வெளியிடப்பட்டிருக்கின்றன.

பாரதத்தாயையும், இன்னும் பல தெய்வங்களையும் பெண்ணாக வைத்து தான் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் வணங்கிவருகிறார்கள். எல்லாத்துறைகளிலும் 33% இடஒதுக்கீடு பெண்களுக்கு தருமாறு பலபுறங்களில் இருந்து வரும் குரல்களும் பெண்களுக்காகத்தான்.அரசியல் அதிகாரத்தில் 33% இடஒதுக்கீட்டையும் பெண்களுக்குத் தருவதற்குரிய சட்டமசோதா நாடாளுமன்றத்திலே நிறைவேற்றப்பட்டு விட்டது. அந்த அளவிற்கு பெண்களுக்கு மதிப்பளிக்கும் இந்திய தேசத்தில் மிகக்குறிப்பாக தமிழ‌கத்தில் இன்றைய பெண்களின் நோக்கு நிலை மிகமோசமான கட்டத்தை நெருங்கிவிட்டது. பெண்களின் ஆடைக்குறைப்புகள் ஒருபுறம் சென்றுகொண்டிருக்க, கண்ணிற்கு புலப்படாமல் ஒரு ஆபத்து நெருங்கிக் கொண்டேயிருக்கிறது. அது தான் ஊடகங்கள் செய்து வரும் விபச்சார விளம்பரங்கள். சாதாரணமாக சினிமா விபச்சாரத்தை ஊக்குவிக்கிறதென்றால், அதை ஊருக்கு ஒதுக்குப் புறமாக அல்லது ஏதோ ஒரு திரையரங்கை நாடிச்சென்று தான் அதைப் பார்க்க வேண்டும். ஆனால் இன்றைய நிலை என்ன?

இத்தனை காலமும் சினிமாக்கள் இரண்டு விதமாக இருந்து வந்தது. ஒன்று குடும்பத்தோடு பார்க்கும் படம், இன்னொன்று குடும்பம் நடத்துவதைப் பார்க்கும் படம். ஆனால் இன்றைக்கு  இரண்டையுமே ஒன்றாகக் கலந்து கட்டி அடிக்கிறார்கள். அதேபோல பழைய சினிமாக்களில் ஏதாவது ஒரு கவர்ச்சி நடனம் இருக்கும். அதற்கென தனி நடிகைகள் இருப்பார்கள். ஆனால் இப்போது அந்த வேலையையும் கதாநாயகிகளே செய்துவிடுகிறார்கள். அதன் பெயர் தான் அயிட்டம் சாங் என்ற புதுவியாக்கியானத்தை கொடுக்கிறார்கள் நடன இயக்குனர்கள். அயிட்டம் என்றால் விபச்சாரம் செய்யும் பெண்ணைக் குறிக்கும் ஒரு குறி வார்த்தை.அப்போ அயிட்டம் டான்ஸ் என்றால் விபச்சாரி நடனம் என்று தான் பொருள் படுத்த வேண்டும் போலிருக்கிறது.



இதெல்லாம் நாம் போய் திரையரங்குகளில் பார்த்தால் தான் அது நம் முதுகில் ஏறிக்கொள்ளும் என்று இல்லை. அந்தப் பணியை இப்போது பிரஸ்ஸாக  நம் தொலைக்காட்சி சேனல்கள் செய்துகொண்டு இருக்கின்றன. என்றைக்கு மியூசிக் சேனல்கள் துவங்கப்பட்டதோ அன்றைக்கே ஆரம்பித்து விட்டது சமுதாய சீரழிவு. எந்த மியூசிக் சேனலைத் திறந்தாலும் யாராவது ஒரு நடிகை டூ பீஸ் உடையில் ஓடிக்கொண்டிருக்கிறாள்  அல்ல‌து யாருடனாவது கட்டிப்புரண்டு கொண்டு இருக்கிறாள். இப்போது நான் சொல்ல வந்தது அந்த மேற்படி படங்கள் தியேட்டர்கள் ஓடியது போக, இப்போது தொலைக்காட்சிகளிலும் ஓட ஆரம்பித்துவிட்டது. இரவு 12 மணிக்கு மேல் இதுபோன்ற படங்கள் ஓடிய காலம் போய் இப்போது பட்டப்பகலிலேயே ரிலீஸ் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை பாலிமர் டிவி, நடிகை சோனா நடித்த பத்து பத்து என்ற பச்சை கள்ள உறவு விபச்சார திரைப்படத்தினை எந்த விதமான வெட்டுகளும் இன்றி அப்படியே ஒளிபரப்பியது. சரி அதெல்லாம் நாம் ஏன் பார்க்க வேண்டும்?  நான் செய்திகள் மற்றும் செய்திச்சேனல் மட்டும் தான் பார்ப்பேன் என அடம்பிடித்தால் அங்கேயும் தப்பிக்க முடியாது. செய்திகளுக்கு இடையே வரும் விளம்பரங்கள் குறித்து சொல்லவே வேண்டாம். மாம்பழச்சாறு விளம்பரத்திற்கு அதை பெண்ணின் உதட்டிலே ஊற்றிக் காட்ட வேண்டுமா? ஆண்களுக்கான ஃபர்பியூம் விளம்பரங்கள் அதை விட மோசம். இப்படியே போய்க்கொண்டிருந்தால் இன்னும் சில நாட்களில் பிரா விளம்பரங்கள் கூட செய்முறையோடு வந்துவிடவும் வாய்ப்பிருக்கிறது. 

விபச்சாரத்தின் அடித்தளமான சினிமா, தன் ஆக்டோபஸ் கரங்களை நீட்டி வீடுகளிலும் விற்பனை செய்ய ஆரம்பித்து விட்டது தான் வருத்தப்பட வேண்டிய விசயமாக இருக்கிறது. இது கூட நிலையற்றவை தான். பெண்கள் அறைகுறை ஆடைகளுடன் ஆண்களுடன் சல்லாபித்திருக்கும் காட்சிகளைக் கொண்ட‌ போஸ்டர்களை நகர் முழுவதும் ஒட்டிச்செல்கின்றனர். மக்கள் அதிகம் கூடும் பஸ் நிறுத்தங்களில் இவைகள் அதிகமாக ஒட்டப்படுகின்றன. இப்போது நினைத்துப் பாருங்கள். அந்த பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகளின் நிலை என்னவாக இருக்கும்? பொது இடங்களில் புகைப் பிடிக்க தடைவிதித்த அரசு இதுபோன்ற உணர்ச்சிகளைத் தூண்டும் விசயங்களை மட்டும் கண்டுகொள்ளாதிருப்பது ஏன்?


இதைவிடக் கொடுமை இப்போது பத்திரிகை உலகங்கள் பயணிக்கும் பாதை தான் வருத்தப்பட வைக்கிறது.

தினத்தந்தி..அன்றுமுதல் இன்றுவரை தமிழகத்தில் தனக்கென ஒரு வட்டாரத்தை வைத்திருக்கும் பத்திரிகை. முன்பெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சினிமா விளம்பரங்களை போட்டுவந்த அதன் நிலை மாறி இன்றைக்கு சினிமா போஸ்டர்களை எப்படியெல்லாம் போடுகிறார்கள் என்பதற்கு கீழ்கண்ட படங்கள் உதாரணம். 



காசு தருகிறான் என்பதற்காக கன்னட பிரசாத் போன்ற மாமாக்கள் தரும் விளம்பரத்தைக் கூட போடுவதற்கு தயங்கமாட்டார்கள் போலிருக்கிறது. இவை சென்று சேரும் இல்லங்களில் இருக்கும் படிக்கும் சிறுபிள்ளைகளின் நெஞ்சிலே காம எண்ணங்களை வளர்ப்பதில் முதலிடத்தை வகிக்கின்றன இது போன்ற பத்திரிகைகள். வெள்ளிக்கிழமைகளிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் சொல்லவே வேண்டாம். வெறும் நீச்சல் உடையில் விதவிதமான நடிகைகளின் தரிசனத்தைக் காணலாம். இவை எல்லாவற்றுக்கும் மூல ஆசனாக இருந்து வழிநடத்துவது இந்த சினிமா தான்.

தினத்தந்தியின் குடும்பத்திலிருந்து வரும் ராணி வார இதழில் குடும்பப் பத்திரிகை என போட்டிருக்கும். ஆனால் அதை மாற்றி குடும்பத்தைக் கெடுக்கும் பத்திரிகை எனப்போட்டுக்கொண்டால் நன்றாக இருக்கும். அந்த அளவிற்கு அதிலே நிறைய விசமங்கள் இருக்கின்றன. ராணியைப் படித்த ஒவ்வொருவரும் அதைப் புரிந்திருப்பார்கள்.



அடுத்தது நக்கீரன். அதிகபட்சமான‌வாரஇதழ்களின் போட்டியைச் சமாளிக்க நக்கீரன் ஏந்தியிருக்கும் ஆயுதமும் பெண்கள் தான். வாரா வாரம் ஏதாவது கற்பழிப்பு செய்திகளை பரபரப்பாகப் போட்டு தங்கள் விற்பனையை சூடாக செய்கின்றனர். உதாரணமாக‌ அதன் போஸ்டரில், கல்லூரி மாணவிகள் மயக்க மருந்து கொடுத்து கற்பழிப்பு என மசாலா தூவிய வாசகங்கள், அதற்கு சம்பந்தமே இல்லாமல் ஏதோ ஒரு மளையாளப் படத்தில் இருந்து ஒரு உறவுக்காட்சியைப் போட்டுத் தான் நக்கீரன் சம்பாதிக்கிறது. சினிக்கூத்து, வண்ணத்திரை குறித்து சொல்லவே வேண்டாம்.அடுத்து குமுதம். ஒருகாலத்தில் பச்சை பச்சையான கதைகளைப் போட்டு முழு மஞ்சல் பத்திரிகையாக விளங்கிய குமுதம் இன்றைக்கும் அந்த நிலையை மாற்றிக் கொண்டதாகத் தெரியவில்லை. அதுமட்டுமில்லாமல் இப்போது ஒற்றைப் பக்கஅளவிற்கு உணர்ச்சியூட்டும் கிசுகிசு செய்திகளை சத்தமில்லாமல் எழுதிக்கொண்டிருக்கிறது குமுதம்.  

இன்னும் இதுபோல எவ்வளவோ சீர்கேடுகள் முழுக்க முழுக்க வியாபார நோக்கத்தில் விபச்சாரத்தை விற்பனை செய்கின்றன. இன்றைக்கு அதிகபட்சமாக செய்திகளில் உலவுவது கள்ளக்காதல் கொலைகளும்,திருமணமான பெண் காதலனோடு ஓட்டம் என்றும் தான். ஆக இதுபோல பெண்களை போகப்பொருளாக மாற்றி சமுதாயத்தை சீர்கெடுத்த‌ பெருமை சினிமாவுக்கே உண்டு. சினிமாவின் கிளைகள் தான் இவை யாவையும். சினிமா தான் கன்னட பிரசாத்தையும், ஆட்டோ சங்கரையும் உருவாக்கியது என்பது மறுக்க முடியாத உண்மை. இதுபோன்று அப்பட்டமாக நடக்கும் அக்கிரமகங்களை பெண்ணீயம் பேசுகிறவர்களும் கண்டிப்பதில்லை, அரசும் கண்டுகொள்வதில்லை.இதற்கெல்லாம் நாம் என்ன செய்வது? யாருக்குமே தெரியாது. எல்லாமே எல்லை மீறிப் போய்விட்டன.
already seen this

11 Response to "வீடு தேடிவரும் ஊடக விபச்சாரத் தூதுவர்கள்"

  1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

    //பொது இடங்களில் புகைப் பிடிக்க தடைவிதித்த அரசு இதுபோன்ற உணர்ச்சிகளைத் தூண்டும் விசயங்களை மட்டும் கண்டுகொள்ளாதிருப்பது ஏன்?//

    சென்சார் போர்டு இருப்பதுபோல், சுவரொட்டிகளுக்கும் தணிக்கை அவசியம் தேவை.
    எல்லைமீறி போகும்போது, பெண்கள் அமைப்பினர் எதிர்ப்புக் குரல் எழுப்புவர். பிறகு
    நிலைமை சீரானதும், மறுபடியும் இது (போஸ்டர்) தலைதூக்கும். அரசு இரும்புக்கரம்
    கொண்டு இதை நசுக்கவேண்டும்.
    இலவச தொ(ல்)லைக்காட்சி தரும் அரசு, சினிமா கலாச்சாரத்தை, அதாவது பலான
    படங்கள் ஒ(ளி)லிபரப்புவதை கண்டுக்காமல் விடுவது, கண்டிக்கவேண்டியது.

  2. கிரி said...

    நிஜாம் பிரச்சனை ஊடகங்கள் இல்லை.. அதை ஆதரிக்கும் பொது மக்கள் தான். இந்த மாதிரி செய்திகள் படங்கள் வந்தால் நாங்கள் வாங்க மாட்டோம் என்று முடிவு செய்தால் இவர்கள் வெளியிடுவார்களா!

    தினமணி ஓரளவு நடுநிலையான பத்திரிகை திரை செய்திகள் மற்ற பத்திரிக்கைகளை விட குறைவு ஆனால் அதன் விற்பனை...!!!

    என்னை பொறுத்தவரை பிரச்சனை மக்கள் தான் ஊடகங்கள் அல்ல. வாங்குபவன் இருக்கும் வரை விற்பவனும் இருப்பான், அந்த விற்பனையை எப்படி மேலும் இதைப்போல கீழ்த்தரமாக செய்து உயர்த்தலாம் என்று தான் யோசிப்பான்.

  3. vasu balaji said...

    ஒரு ரெண்டு நாள் வாங்காம விட்டா சரியாயிடுவாங்க. நமக்குதான் இது இல்லைன்னா போவாதே:((

  4. ராம்ஜி_யாஹூ said...

    as giri and vaanambaadikal say, we have to blame oursleves, nothing to do with dina thandi or cinema express.

  5. வீரராகவன் said...

    சுவரொட்டிகளுக்கும் தணிக்கை உண்டு. அது சரியாக செயல்படுவதில்லை. கிரி கூறியது நூற்றுக்கு நூறு சரியே. தொலைக்காட்சி சேனல்களில் மக்கள் தொலைக்காட்சி பிடிவாதமாக தமிழ் கலாச்சாரத்தை ஒட்டி தொடர்களையும் செய்தித் தொகுப்புகளையும் தயாரிக்கிறார்கள். கட்சி பேதமின்றி அதற்கு நாம் ஆதரவு நல்குவது நல்லது. இல்லாவிடில் செவிடன் காதில் ஊதிய சங்குதான். தினமணி போல் தரமாக இருந்த விகடனும் இப்போது குமுதத்திற்கு போட்டியாக இருக்கிறது.

  6. Mohamed Faaique said...

    நீங்கள் ஏன் இவ்வளவு மோசமான படங்களை(photos ) உங்கள் பதிவுக்கு போட்டீர்கள். இதுவும் ஒரு வியாபார உத்தி'தானே ........

  7. தனி காட்டு ராஜா said...

    உளறல் ......2010 ஆனாலும் பாலியல் அறிவில் தெளிவில்லாத ஒரு மனிதரின் உளறல் என்றே எடுத்து கொள்ள வேண்டி உள்ளது .....

  8. நிஜாம் கான் said...

    அன்பான கருத்துக்களுக்கு நன்றி!

    நண்பர் NIZAMUDEEN ...
    நண்பர் கிரி..
    அண்ணன் வானம்பாடிகள்..
    நண்பர் ராம்ஜி யாஹூ..
    அண்ணன் வீரராகவன்..

  9. நிஜாம் கான் said...

    //Faaique Najeeb said...
    July 8, 2010 8:54 AM
    நீங்கள் ஏன் இவ்வளவு மோசமான படங்களை(photos ) உங்கள் பதிவுக்கு போட்டீர்கள். இதுவும் ஒரு வியாபார உத்தி'தானே ........//

    நண்பர் நஜீப், பதிவின் மேற்கண்ட வரிகளை முதலில் நன்கு படியுங்கள். இதை நான் அப்படியே வெளியிட்டால் தான் அதன் உண்மை நிலை புரியும். அதைவிடுத்து சும்மா கற்பனை செய்து கொண்டு எழுத முடியாது. இங்கே கிடைத்திருக்கும் ஓட்டுக்கள் இங்கு குறிப்பிட்ட விசயத்திற்காக மட்டுமேயன்றி இங்கே போட்டிருக்கும் படங்களுக்காக அல்ல. அப்படி கவர்ச்சிப் படங்களுக்கு ஓட்டு விழவேண்டுமென்றால் தினசரி எவ்வள்வோ பதிவுகள் வருகிறது, அதெற்கெல்லாம் ஏன் ஓட்டு விழுவது இல்லை? நான் இந்தப் படங்களைப் போட்டது வலைத்தளத்தில் மட்டும் தான். ஆனால் தினத்தந்தி வீடுவீடாகச் செல்கிறதே! நான் இந்தப் படங்களைப் போடாமல் இருந்திருந்தால் சரியான ஆதாரம் காட்டியிருக்க முடியாது..

  10. Mohamed Faaique said...

    நீங்கள் ஒட்டு விழ வேண்டும் என்பதற்காக போட்டு இருக்கிறீர்கள் என்று சொல்லவில்லை. இந்த பதிவின் கருத்திற்கு போட்டோ முரணாக இருக்கிறதே.. இல்லாமலிருந்தால் நன்றாய் இருக்கும். உங்கள் மற்றைய பதிவுகள் மீது மதிப்பு வைத்திருக்கிறேன்

  11. நிஜாம் கான் said...

    //Faaique Najeeb said...
    நீங்கள் ஒட்டு விழ வேண்டும் என்பதற்காக போட்டு இருக்கிறீர்கள் என்று சொல்லவில்லை. இந்த பதிவின் கருத்திற்கு போட்டோ முரணாக இருக்கிறதே.. இல்லாமலிருந்தால் நன்றாய் இருக்கும். உங்கள் மற்றைய பதிவுகள் மீது மதிப்பு வைத்திருக்கிறேன்//

    இல்லை நண்பரே! இது நானாக உருவாக்கியது அல்ல! ஒரு தினசரியால், தினசரி வீடுகளுக்கு அனுப்பப்படும் ஒரு விசமம். அதை அப்படியே வெளியிட்டால் தான் அதிலே உள்ள கருத்துக்கள் வெளிப்படும். கருத்துக்கு நன்றி!

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,