Jul 3, 2010

மோட்டுச்சிங்களவன் - நிறுபித்த புத்தபிக்குக‌ள்

நிஜாம் கான் @ 9:34 AM
மோட்டுச்சிங்களவன் நிறுபித்த புத்த‌பிக்குகள்:

இலங்கையில் ராஜபக்சே சகோதரர்களால் இனிதே நடந்தமுடிந்த கொடுமையான  இனஅழிப்பு குறித்து விசாரிக்க சமீபத்தில் குழு ஒன்றை அமைத்தார் அமெரிக்க ரப்பர் ஸ்டாம்ப் பான்கீமூன். இந்தோனேசியா,தென்ஆப்பிரிக்கா நாடுகளைச் சார்ந்த மூவர் அந்தக் குழுவில் இடம்பெறுவார்கள் என்றும், அவர்கள் இலங்கையில் நடந்த தெளிவான இனஅழிப்பை விசாரிப்பார்கள் எனவும் உத்தரவிட்டிருந்தார். இதனால் கொதித்து எழுந்த சிங்களவன்கள், சில புத்தபிக்குகள் தலைமையில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். இதை அனைத்து மீடியாக்க‌ளுமே ஒளிபரப்பின. இந்த இடத்தில் அனைவருமே ஒருவிசயத்தை கவனிக்க மறந்தது விட்டார்கள்.ஆமாம் அது அவர்களுக்கு அவர்களே வைத்துக் கொண்ட ஆப்பு ஆகும். இந்த விசயம் கோத்தபயாவுக்குத் தெரிந்தால் புத்தபிக்குகளை பிச்சுப்போட்டு இருப்பான். அது என்னவென்றால் அந்தக் கூட்டத்தில் நின்றவர்கள் நிறைய கண்டனப் பதாகைகளை ஏந்தியிருந்தார்கள். அதிலே ஒரு அட்டையிலே எழுதியிருந்த வாசகம்

"இங்கே விசாரனைக் குழு அனுப்பும் பான்கீமூனே! பாலஸ்தீனத்தின் காஸாவிலும்,ஆப்கானிஸ்தானிலும் நடந்த இனஅழிப்பு குறித்தும் விசாரிக்க குழு அமைப்பாயா" என்று.(புரியாதவர்கள் மறுமுறை படியுங்கள்)  இதிலே நாம் கவனிக்க வேண்டிய விசயம் காஸாவிலும், ஆப்கனிலும் நடந்த இனஅழிப்பு போலவே தங்கள் நாட்டிலும் நடந்தது ஒரு தூய்மையான இனஅழிப்பு என சொல்லாமல் சொல்லிய அந்த கூமுட்டை மோட்டுச்சிங்களவன்களை பாராட்டியே ஆகவேண்டும். ஒரு இனத்தையே வெற்றிகரமாக அழித்து ஒழித்ததை வெளிப்படையாக மறுத்தாலும் அவர்கள் உள்ளத்தில் இருப்பது வெளிவருகிறதே என்று நினைத்து மகிழ்சியடைவதா வருத்தப்படுவதா என்று தெரியவில்லை. 

எங்கே செல்லும் இந்த பாதை:

கடந்த சில தினங்களாக சில விசமிகளின் வெறியாட்டத்தால் பதிவுலகம் மாறிய பாதை என்னை மட்டுமின்றி இன்னும் நிறைய நண்பர்களையும் பாதித்து விட்டது. ஏகப்பட்ட மெயில்கள் மூலம் நண்பர்கள் பலர் விசாரித்து இந்த விசயத்தையும், இதற்கு காரணமானவர்களையும் தாங்கள் கடுமையாக கண்டிப்பதாகவும், இதுபோன்று மற்றவர்கள் பின்பற்றும் மதங்களையும், அதன் தலைவர்களையும், கொள்கைகளையும் இழிவுபடுத்தி சுகமடைந்த‌ இவர்களின் செயலுக்கு தாங்கள் மன்னிப்பு கோருவதாகவும் எழுதியிருந்தனர்.இன்னமும் மனிதநேயம் மறைந்து விடவில்லை என நிறுபித்த‌ அந்த நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அடையாளம் காணப்பட்ட கோரமுகங்களை அனைவருக்கும் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் அனைவருக்குமே உள்ளது.

தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் நடந்த பல சுவாரஸ்ய நிகழ்ச்சிகளை பதிவிட்டு பகிர்ந்து கொள்ளலாம் என மிக ஆர்வமாக வந்து அமர்ந்தால் இதயமே வெடித்து விடும் போன்ற நிலை ஏற்பட்டது. காரணம் உலகமுஸ்லீம்கள் தங்கள் உயிருக்கும் மேலாக மதிக்கும் ஒரு தலைவரின் மரணத்தை மிக கொச்சைப்படுத்தி எழுதிவைத்து அதற்கு சில லிங்குகளையும் கொடுத்து உண்மை போல காட்டியிருந்தார்கள்.ஆக அவர்களின் நோக்கம் நிறைவேறியது. படிக்கிறது ராமாயணம், இடிக்கிறது பெருமாள் கோயில் என்ற மொழியின் வழி பார்ப்பணீயத்தை எதிர்க்கிறேன் என வெளியே சொல்லிக்கொண்டு இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வேலையை செவ்வனே செய்திருந்தார்கள் சகோதரர்கள். இதே பாணியில் தான் இந்தியா முழுவதும் கலவரங்கள் தூண்டப்படுகிறது. அதே பாணியை கடைபிடிப்பவர்கள் எப்படி அவர்களை எதிர்ப்பவர்களாக இருக்க முடியும் என்பதே என் கேள்வி. இதுபோன்ற நிலையில் நடுநிலை வகித்த நண்பர்களையும், மெயில் அனுப்பிய‌ நண்பர்களையும் நினைக்கும் போது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.இனிமேல் இதுபோன்ற ஒரு இழிச்சூழ்நிலை உருவாகாமல் இருக்க இறைவனைப் பிரார்த்திப்போம்.

செம்மொழியான தமிழ்மொழியாம்:

செம்மொழி மாநாடு சிறப்பாக நடந்த முடிந்த போதிலும் அதன் மீதான விமர்சனங்கள் இன்னமும் குறைந்தபாடில்லை. செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த வெளிநாட்டு அறிஞர்கள் பேசிய தமிழ் உண்மையிலேயே புல்லரிக்க வைத்தது. மாநாட்டுத் திடல் முழுவதும் அவர்கள் தமிழிலேயே பேசி வலம் வந்தார்கள். நான் மலேசியாவில் இருக்கும் போது அங்கே இருக்கும் சீனர்கள் சிலர் கொச்சுத்தமிழ் பேச கேட்டிருக்கிறேன். நாம் பிறர் மொழியை அரைகுறையாக பேசும் போது எப்படி இருக்கும் என நமக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் நம்மொழியை அரைகுறையாக பேசும்போது தான் அந்த பேச்சு நடை தெரியவந்தது. யாழினிது, குழலினிது என்ற வள்ளுவனின் குறலில் இடமிருந்தால் இன்னொரு வரியைச் சேர்த்திருக்கலாம். வெளிநாட்டு அறிஞர்களின் தமிழ்மொழி கேளாதார் என. இங்கே மாநாட்டுக்கு வந்திருந்த ஐரோப்பிய அறிஞர்கள் சிலரிடம் பேசும் சந்தர்பம் கிடைத்தது. நான் அவர்களின் கேட்டேன், நீங்கள் தமிழை மனப்பாடம் செய்து பேசுகிறீர்களா அல்லது புரிந்து தான் பேசுகிறீர்களா? என்று, 

அதற்கு அவர் சிரித்தவாறே சொன்னார், மனப்பாடம் செஞ்சு பேசுனா உனக்கு எப்படி சரியா பதில் சொல்றேன்? என எதிர்கேள்வி கேட்டார். அவரின் தமிழை நினைத்து வியந்து போனேன். சிலப்பதிகாரத்தில் தமிழ் என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்தார். ஆச்சரியமாக இருந்தது. உங்கள் நாட்டு மக்களில் தமிழை விரும்பும் மக்களை படிக்க விடாமல் தடுப்பது எது என்று கேட்டேன், உடனே அவர் சிரித்தவாறே சொன்னார்,"தமிழ் எழுத்துக்கள் தான், ஆங்கிலத்தில் மொத்தம் 26 மட்டும் தான். தமிழின் மொத்த எழுத்துக்களை பார்ப்பவர்கள் மயக்கம் அடைந்துவிடுகிறார்கள்.ஆனால் கொஞ்சம் சிரத்தையெடுத்தால் கற்றுக்கொள்வதற்கு இனிமையான மொழி தமிழ் என்றார். இதை எங்க ஊர் தமிழ்மக்களுக்கு சொல்லனும் என நினைத்துக் கொண்டே அவரிடம் இருந்து விடைபெற்றேன். கடைசிவரை அவரின் பெயரின் நினைவிலே நிற்கவில்லை. இன்னும் சில சுவாரஸ்யங்களை அடுத்த பதிவிலே சொல்கிறேன்.
already seen this

6 Response to "மோட்டுச்சிங்களவன் - நிறுபித்த புத்தபிக்குக‌ள்"

  1. vasu balaji said...

    good one nijam as usual:)

  2. அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

    //இதுபோன்ற ஒரு இழிச்சூழ்நிலை உருவாகாமல் இருக்க இறைவனைப் பிரார்த்திப்போம்.//

    இதுமாதிரியான சூழல் வரவேண்டாம்.
    இறைவன் காத்தருள வேண்டும்.

  3. Anonymous said...

    அது சரிதானுங்க சிங்களவன் மொடையன் என்கிறது

  4. நிஜாம் கான் said...

    //வானம்பாடிகள் said...
    good one nijam as usuஅல்:)//

    நன்றியண்ணே!

  5. நிஜாம் கான் said...

    //NIZAMUDEEN said...
    //இதுபோன்ற ஒரு இழிச்சூழ்நிலை உருவாகாமல் இருக்க இறைவனைப் பிரார்த்திப்போம்.//

    இதுமாதிரியான சூழல் வரவேண்டாம்.
    இறைவன் காத்தருள வேண்டும்.//

    நிச்சயமாக..

  6. நிஜாம் கான் said...

    //A.சிவசங்கர் said...
    அது சரிதானுங்க சிங்களவன் மொடையன் என்கிறது//

    அதுமட்டுமில்ல.. உலகத்தின் அடிமுட்டாள்களும் அவனுக தான்.

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,