1.உங்களைப் பற்றி சுருக்கமாக சில வரிகள் ?
கிராமத்தின் இயற்கை எழிலோடு வாழவிரும்பும் ஒரு சாதாரண தமிழ்க்குடிமகன். படிப்பிற்காகவும், வேலை நிமித்தமாகவும் பலஊர், பலநாடு சுற்றியும் கூட இன்னமும் திருப்தியளிக்காமல் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து தேடிக்கொண்டேயிருக்கும் ஸ்டில் பேச்சுலர் (அப்பாடா சைடு கேப்ல ஒரு மேட்ரிமோனி விளம்பரம்)2.நீங்கள் வலைப்பதிவு எழுத வந்ததன் நோக்கம் ?
நோக்கமெல்லாம் ஒன்றும் இல்லை. நம்முடைய கருத்து நாலு பேருடன் ஒத்துப் போகிறது என எண்ணும் போது நாம் சொல்வது சரிதான் என்ற ஒரு நிம்மதி பிறக்கிறது. உன் சகோதரனுக்குத் தீங்கிழைக்கப்படும் போது நீ பொங்கியெழுந்தால் நாம் தோழர்களே என்ற சேகுவேராவின் வரிகள் கூட உதாரணம். என்னுடைய உள்ளக்குமுறலை பதிவிட்டு அதற்கு சில பின்னூட்டங்களும், ஓட்டுக்களும் கிடைக்கும் போது அதிலே இருக்கும் திருப்தியே நம் பாதைசரிதான் என எண்ணத்தோன்றும்.
3.உங்களின் பதிவுகளை சக பதிவர்கள் விமர்சிக்கும் போது அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள் ?
இதுவரை எந்தப் பதிவரும் என்னை விமர்சிக்கவில்லை. காரணம் இதுவரை நான் எழுதிய விசயங்களின் சாராம்சம் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கலாம். ஒருவேளை இனி ஏதாவது சர்ச்சைக்குரிய இடுகையொன்றை எழுதி அதை சகபதிவர்கள் விமர்சித்தால் அது என்னை சுய பரிசோதனை செய்துகொள்ளவே உதவும். விமர்சனங்கள் தவறை சுட்டிக்காட்டுவதேயன்றி விமர்சனங்களே தவறில்லை. ஆனால் அதுவும் ஒரு வரையறைக்குட்பட்டு இருப்பது நல்லது. (யாருக்கு?.......,யாருக்கோ...!)
6-எதிர் காலத்தில் பத்திரிகை , தொலைகாட்சி போன்று வலைப்பதிவும் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்று நம்புகிறீர்களா ?...
அதற்கேன் எதிர்காலத்திற்குப் போக வேண்டும்? இப்போதே அது சாத்தியமாகிவிட்டது என்பது தான் உண்மை. இப்போதெல்லாம் ஒரு பதிவை சாதாரணமாக 3000 பேர் வரை பார்வையிடுகிறனர், பெரிய அளவிலே விவாதம் நடைபெறுகிறது. இந்தநிலையே வலைப்பதிவும் தற்போது ஊடகத்துறையில் நுழைந்துவிட்டது என்பதற்கு ஒரு சிறந்த அத்தாட்சி.ஒரே ஒரு குறை வலைப்பதிவு இணையம் வழியாக மட்டுமே படிக்க முடியும் என்பதால் அது இன்னமும் சாமானிய, நடுத்தர வர்க்கத்தினரைச் சென்றடையவில்லை என்பதும் நிஜம். ஒருவேளை அதையும் மாற்றும் தொழில்நுட்பம் விரைவில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

4.பதிவுலகிற்கு வந்ததன் மூலம் நீங்கள் அடைந்த நன்மை மற்றும் தீமைகள் ?.
பதிவுலகிற்கு வந்தபிறகு எனக்கு பலமுகம் தெரியாத நண்பர்களின் அறிவுரையும் பாராட்டுக்களும் பின்னூட்டங்களாகவும் ஓட்டுக்களாகவும் கிடைக்கின்றன. இந்த வலைப்பூவில் எழுதும் எழுத்து மூலமாக நேரடியாக முடியாவிட்டாலும் மகிந்த ராஜபக்சேயின் சட்டையைக் கூட பிடித்து உலுக்க முடியும். ஒரு அதிகார வர்க்கத்திடம் சொல்ல நினைக்கக் கூடிய நமது எண்ணத்தையும்,நமது ஆதங்கத்தையும் எழுத்துக்களாக வெளிப்படுத்தினால் அது யார் மூலமாவது எப்படியாவது சென்று சேர்ந்துவிடவும் வாய்ப்பிருக்கிறது. இது நன்மை. தீமை இதுவரை இல்லை.
5-வலை உலகத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஐந்து பதிவர்கள் யார் ? யார் ?
வம்பில் மாட்டிவிடக்கூடிய கேள்வி. குறிப்பிட்டுச்சொல்லும் படியாக5 பதிவர்கள் அல்ல 50 பதிவர்களைக் கேட்டாலும் பட்டியல் போதாது. ஒவ்வொரு பதிவரிடமும் ஒவ்வொரு ஃபயர் இருக்கிறது. எனவே மற்றவரை எந்த வகையிலும் புண்படுத்தாத அனைத்துப் பதிவர்களின் எழுத்துக்களும் பிடிக்கும். இருந்தாலும் நான் அதிகம் படிக்கும் பதிவர்களின் பதிவுகள். 5 அல்ல. 7 சொல்லலாம்.
1) ராகவன் நைஜீரியா. இந்த அண்ணனின் நட்பு வட்டாரம் மிகப் பெரியது. ஒரு இடுகை போட்டால் நூறு பின்னூட்டத்திற்கு மேல் வாங்கும் அன்புள்ளம். அசராமல் அனைத்துப் பதிவர்களின் பதிவுகளிலும் அண்ணனின் பின்னூட்டம் அதிரடியாய் இருக்கும்.
2) அன்புடன் மலிக்கா. எங்கிருந்து தான் இவருக்கு கவிதையின் கருக்கள் கிடைக்கிறதோ தெரியவில்லை. கவிதை மழையை விடாமல் பொழிகிறார். எனக்கு சாப்பாட்டிற்கு பிறகு பிடித்தது நல்ல கவிதைகள் என்பதால் இவரின் கவிதைகள் பிடிக்கும்.
3)தமிழ் நெஞ்சம். அண்ணனின் தொழில்நுட்பம் சம்பந்தப் பதிவுகள் நன்றாக இருக்கும். அண்ணனின் சிரித்த முகம் அனைவருக்குமே பிடித்த ஒன்று.அதிகபட்சம் என் இடுகைக்கு முதல் ஓட்டுப் போடும் சிறந்த வாக்காளர்(ஹி..ஹி)
4) நண்பர் அ.மு.செய்யது. இவரின் கதைகள் படிப்பதற்கு மிக சுவாரஸ்யமாக இருக்கும். கதைக்கருக்கள் இதுவரை கேள்விப்படாத விதத்தில் இருப்பது சிறப்பு. நிறைய நண்பர்களை கொண்டவர்.
5)வானம்பாடிகள். அண்ணன் சமூக அக்கறை கொண்ட பதிவர். அண்ணனின் பதிவுகள் மட்டுமின்றி பின்னூட்டங்களிலும் ஆங்காங்கே அனல் பறக்கும்.
6)மாதவராஜ் அண்ணனின் தீராதபக்கங்கள். சமூக அக்கறை மட்டும் கம்னியூச சிந்தனை கொண்ட பதிவுகள் மிகமிகப் பிடிக்கும். சிறந்த சிந்தனையாளர் எதையும் விடாமல் படித்துவிடுவேன்.
7)நண்பர் நிஜாமின் பல்சுவை விருந்து எனக்குப் பிடிக்கும். அவர் எழுதும் காமெடிகள் அதிகபட்சம் புதுமையாக இருக்கிறது. எங்கிருந்தான் பிடிக்கிறாரோ தெரியவில்லை.
6-எதிர் காலத்தில் பத்திரிகை , தொலைகாட்சி போன்று வலைப்பதிவும் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்று நம்புகிறீர்களா ?...
அதற்கேன் எதிர்காலத்திற்குப் போக வேண்டும்? இப்போதே அது சாத்தியமாகிவிட்டது என்பது தான் உண்மை. இப்போதெல்லாம் ஒரு பதிவை சாதாரணமாக 3000 பேர் வரை பார்வையிடுகிறனர், பெரிய அளவிலே விவாதம் நடைபெறுகிறது. இந்தநிலையே வலைப்பதிவும் தற்போது ஊடகத்துறையில் நுழைந்துவிட்டது என்பதற்கு ஒரு சிறந்த அத்தாட்சி.ஒரே ஒரு குறை வலைப்பதிவு இணையம் வழியாக மட்டுமே படிக்க முடியும் என்பதால் அது இன்னமும் சாமானிய, நடுத்தர வர்க்கத்தினரைச் சென்றடையவில்லை என்பதும் நிஜம். ஒருவேளை அதையும் மாற்றும் தொழில்நுட்பம் விரைவில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
7-புதிதாக பதிவுலகத்திற்கு வரும் பதிவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை ?
3 மாதக்குழந்தையிடம் சென்று பந்தயத்தில் ஓடும் வீரர்களுக்கு அறிவுரை சொல் என்பதைப் போன்றது இந்தக் கேள்வி. நானும் புதிய பதிவர் தானே! இருந்தாலும் எனக்கென்ற வரைமுறைகள் சில இருக்கின்றன. அதைக் கூட அறிவுரையாக எடுத்துக்கொள்ளலாம்.
1) இடுகையின் நீளம் முடிந்த அளவு குறைக்கப் படவேண்டும். அதேநேரம் அதன் சுவை குறைந்துவிடக்கூடாது.
2)தலைப்பை மட்டும் பிரமாதமாக திரட்டிகளில் கொடுத்து விட்டு உள்ளே ஒன்றுமேயில்லாமல் இடுகையைப் போடுவது என்பது, போஸ்டரை பிரம்மாண்டமாகப் போட்டுவிட்டு அதைப் பார்த்து டிக்கெட் வாங்கி உள்ளே சென்றால் அங்கே எதுவுமேயில்லாமல் ஏமாந்து இடைவேளையோடு எஸ்கேப் ஆகும் ரசிகர்கள் நிலை போல ஆகிவிடும்.
3)பிறரை புண்படுத்துதல்,ஆபாசம் அறவே தவிர்க்கப் படவேண்டும்.
4)உறுதிப்படுத்தப் பட்ட உண்மை செய்தியை மட்டுமே இடவேண்டும்.
8 - தமிழ்10 தளம் பற்றிய உங்கள் கருத்து
பதிவர்கள் தயாரிப்பாளர்கள். திரட்டிகள் வினியோகஸ்தர்கள். என்னதான் சுவையான பொருளைத் தயாரித்தாலும் அதற்குரிய விளம்பர வினியோக யுக்தி இருந்தால் தான் அந்தப் பொருள் சந்தையிலே நிலைபெறும். அதேபோல இன்றைய நிலையில் பதிவர்களின் பதிவுகளை விளம்பரப்படுத்தி வெளியிடுவதில் திரட்டிகளின் பங்கு இன்றியமையாதது. அந்த வகையில் பதிவர்கள் மனதில் தமிழ்10 எப்போதுமே டாப்10 க்குள் இருப்பது உண்மை. உங்களின் சேவை பதிவர்களுக்குத் தேவை. தொடர்க தமிழ்ப்பணி.
9-நீங்கள் இவ்விருதினை பதிவுலகத்தில் யாருக்கு குடுக்க விரும்புவீர்கள்? (அதிகபட்சம் நான்கு பேர் வரை கூறலாம் , அதில் இருந்து ஒருவர் அடுத்த வார கிரீடம் பெறும் பதிவராக அறிவிக்கப்படுவார் )
மேலே குறிப்பிட்டவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
10 - இறுதிக் கேள்வி உங்கள் வாழ்வின் இலட்சியம் ?
1990** பஸ் டிரைவராக ஆகவேண்டும்
1998** டாக்டராக வேண்டும்
2000** கலெக்டராக வேண்டும்
2003** வழக்கறிஞராக வேண்டும்
2005** ஆசிரியராக வேண்டும்
2007** அரசு ஊழியராக வேண்டும்
2009** டிவி சேனல் டைரக்டராக வேண்டும் (இதுவாவது நடக்குமா???)
நன்றி தமிழ்10. நன்றி தமிழினி.
நண்பர்களே! இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் தயவுசெய்து சுட்டிக்காட்டுங்கள். நன்றி.
already seen this

good opening
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
congrats to you//
October 26, 2009 7
கருத்துக்கு நன்றி ஸ்டார்ஜன் சார். தொடர்ந்து இணைந்திருங்கள்.
என்னக்க்க் கொடும சார் இது ?
வாழ்த்துக்கள்
கொடுமைக்கு வாழ்த்துக்கள் சார்.........
உங்கள் கொடுமை இன்னும் தொடரட்டும்.
வாழ்த்துக்கள்!
பேட்டியும் நல்லா வந்துருக்கு தல!
வாழ்த்துகள் நண்பரே....
மேலும் மேலும் உங்கள் படைப்புகள் வளர வாழ்த்துகள் வாழ்த்துகள்..
பாராட்டுகள் நிஜாம். பேட்டி அழகாக உங்களைக் காட்டுகிறது. என்னை குறிப்பிட்டமைக்கு நன்றியும்.
//டிரைவராக ஆகவேண்டும் 1998//
எனக்கு கூட ஒரு காலத்தில் அப்படி ஒரு ஆசை இருந்தது.
வாழ்த்துகள்.
அருமையான பதிலகள்.
// நான் இன்றைக்கு பி.டி கத்தரிக்காய் குறித்து பதிவிட இருந்தேன் //
இன்னிக்கு கத்திரிக்காயை பிடிக்க முடியலைன்னா என்ன, நாளைக்கு பிடிச்சுட்டாப் போச்சு
// கிராமத்தின் இயற்கை எழிலோடு வாழவிரும்பும் ஒரு சாதாரண தமிழ்க்குடிமகன்.//
குடி மகன்... நோ...நோ... யூ மீன் சிட்டிசன்..
வெரி நைஸ். கீப் இட் அப்..
// ஏதோ ஒன்றை எதிர்பார்த்து தேடிக்கொண்டேயிருக்கும் ஸ்டில் பேச்சுலர் //
நாங்க வேண்டுமானால் உங்களுக்காக தேடட்டுமா... பேச்சுலர் ஸ்டேட்டஸ் விரைவல் மாற வாழ்த்துகள்.
// நோக்கமெல்லாம் ஒன்றும் இல்லை //
அப்படி எல்லாம் சொல்லக்கூடாதுங்க. டாக்டர் படிக்கணும் அப்படின்னு ஆசை, ஆனால், பதிவுலகம் என்னை இழுத்து வந்துடுச்சு... சேவை செய்வதற்காக வந்துட்டேன் அப்படின்னு சொல்லணும்.
// இதுவரை எந்தப் பதிவரும் என்னை விமர்சிக்கவில்லை. //
ஒருத்தர் மட்டும் கும்மி அடிச்சுகிட்டு இருக்கார். நேரில மட்டும் மாட்டடும், கும்மி விடப் போவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
// ஒவ்வொரு பதிவரிடமும் ஒவ்வொரு ஃபயர் இருக்கிறது. //
ஃபயரா... நல்லாத்தான் கொளுத்திப் போட்டு இருக்கீங்க... நடக்கட்டும்.
// .1) ராகவன் நைஜீரியா. இந்த அண்ணனின் நட்பு வட்டாரம் மிகப் பெரியது. ஒரு இடுகை போட்டால் நூறு பின்னூட்டத்திற்கு மேல் வாங்கும் அன்புள்ளம். அசராமல் அனைத்துப் பதிவர்களின் பதிவுகளிலும் அண்ணனின் பின்னூட்டம் அதிரடியாய் இருக்கும் //
அதிரடியா... ஏன் இந்த கொலை வெறி...
// அன்புடன் மலிக்கா. எங்கிருந்து தான் இவருக்கு கவிதையின் கருக்கள் கிடைக்கிறதோ தெரியவில்லை. //
அதுதான் அன்புடன் சொல்லிட்டாருள்ள... கருவைப் போலவே வார்த்தைகளும் அருமை.
// .3)தமிழ் நெஞ்சம். அண்ணனின் தொழில்நுட்பம் சம்பந்தப் பதிவுகள் நன்றாக இருக்கும். //
பல சமயங்களில் அண்ணனின் தொழில் நுட்ப இடுகைகள் எனக்கு ரொம்ப உதவியிருக்கின்றன. நன்றி அண்ணே.
// )4) நண்பர் அ.மு.செய்யது. இவரின் கதைகள் படிப்பதற்கு மிக சுவாரஸ்யமாக இருக்கும். //
வித்தகன் என் அன்புத் தம்பி செய்யது. எவ்வளவு விசயம் தெரிஞ்சு இருக்குங்க அவருக்கு. சிம்பிளி கிரேட்.
// 5)வானம்பாடிகள். அண்ணன் சமூக அக்கறை கொண்ட பதிவர். //
சரியாகச் சொன்னீர்கள். அண்ணன் இடுகைகளில் பலவற்றி கும்மி அடிச்ச போது கூட கலங்காம பதில் கொடுத்தவர்.
// .7)நண்பர் நிஜாமின் பல்சுவை விருந்து எனக்குப் பிடிக்கும். அவர் எழுதும் காமெடிகள் அதிகபட்சம் புதுமையாக இருக்கிறது. //
காம நெடி அடிக்காத காமெடிகள் நிஜாமின் காமெடிகள்.
// 1) இடுகையின் நீளம் முடிந்த அளவு குறைக்கப் படவேண்டும். அதேநேரம் அதன் சுவை குறைந்துவிடக்கூடாது. //
சரியாகச் சொன்னீர்கள். ரொம்ப பெரிய இடுகை ரொம்ப போரடிக்குது. அதனாலயே பல இடுகைகள் படிக்காமல் போகக் கூடிய சாத்தியங்க உண்டுங்க.
//2009** டிவி சேனல் டைரக்டராக வேண்டும் //
வாழ்த்துகள்.
மீ த 25...
பை பை...
//////அடுத்த மாதம் 2ம் தேதி முதல் என அறிவித்து விட்டு என்னவோ தெரியவில்லை இன்றைக்கே கிரீடத்தை சூட்டி விட்டார்கள் தமிழ்10 குழுவினர். நான் இன்றைக்கு பி.டி கத்தரிக்காய் குறித்து பதிவிட இருந்தேன்.///////
மன்னிக்க வேண்டும் நிஜாம் 2 ம் தேதி வரை என்பதற்குப் பதிலாக 2 ம் தேதி முதல் என்று தவறாக மாற்றி அனுப்பி விட்டோம் .தவறுக்கு வருந்துகிறோம் ,
மறுபடியும் வாழ்த்துக்கள்
நன்றி
தமிழினி
Congrat friend
//நண்பர் நிஜாமின் பல்சுவை விருந்து எனக்குப் பிடிக்கும். அவர் எழுதும் காமெடிகள் அதிகபட்சம் புதுமையாக இருக்கிறது. எங்கிருந்தான் பிடிக்கிறாரோ தெரியவில்லை.//
1. வாழ்த்துக்கள்.
2. என்னையும் எழுவரில் ஒருவராய் இணைத்துக்
கொண்ட அன்புள்ளம் தங்களுக்கு.
3. 'நண்பர் நிஜாம்' என்று பாசத்தோடு அணைத்துக்
கொண்ட அருமை நண்பருக்கு,
மேலும் பல விருதுகள் நிச்சயம் வரும்;
திருமணம் விரைவில் வரும். (முதல் பத்திரிகை
யாருக்கு?)
ட்டீ.வீ.டைரக்டராக வருக...
அன்பனின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
தாமத வருகைக்கு மன்னிக்கவும் நிஜாம்.
மேலும் கிரீடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள்.மிக குறுகிய காலத்தில்
வலைப்பக்கங்களில் நீங்கள் பிரபல மடைந்து விட்டீர்கள்.அதற்கு உங்கள் உழைப்பும் பயனுள்ள பதிவுகளை
இடுவதற்கு எடுத்துக்கொண்ட மெனக்கெடல்களும் தான் காரணம்.
உங்கள் அபிமான பதிவர்கள் பட்டியலில் என் பெயரும் இருப்பது கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தேன்.
மிக்க நன்றி !!!
//ஷாகுல் said...
என்னக்க்க் கொடும சார் இது ?
வாழ்த்துக்கள்//
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சாகுல். தொடர்ந்து இணைந்திருங்கள்.
//அகல் விளக்கு said...
கொடுமைக்கு வாழ்த்துக்கள் சார்.........
உங்கள் கொடுமை இன்னும் தொடரட்டும்.//
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அகல்விளக்கு. கொடுமை தொடர தொடர்ந்து இணைந்திருங்கள்.
//வால்பையன் said...
வாழ்த்துக்கள்!
பேட்டியும் நல்லா வந்துருக்கு தல!//
வாழ்த்துக்கு நன்றி வாலண்ணே! ஆனா நீங்க என்னய தலன்னு கூப்பிட்டது தான் தாங்க முடியல. என்ன தான் நீங்க வாலா இருந்தாலும் நீங்க தான் தல..
//மா.குருபரன் said...
வாழ்த்துகள் நண்பரே....
மேலும் மேலும் உங்கள் படைப்புகள் வளர வாழ்த்துகள் வாழ்த்துகள்..//
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மா.குருபரன் சார். தொடர்ந்து இணைந்திருங்கள்.
//வானம்பாடிகள் said...
பாராட்டுகள் நிஜாம். பேட்டி அழகாக உங்களைக் காட்டுகிறது. என்னை குறிப்பிட்டமைக்கு நன்றியும்.//
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வானம்பாடிகள் அய்யா. தொடர்ந்து இணைந்திருங்கள்.
//VISA said...
//டிரைவராக ஆகவேண்டும் 1998//
எனக்கு கூட ஒரு காலத்தில் அப்படி ஒரு ஆசை இருந்தது.//
சேம் திங்கிங்...,இப்ப நீங்க என்னவா இருக்கீங்க விசா அண்ணே!?
//இராகவன் நைஜிரியா said...
வாழ்த்துகள்.
அருமையான பதிலகள்.//
ஆகா அண்ணே! ஆரம்பிச்சிட்டாரு.
//இராகவன் நைஜிரியா said...
// நான் இன்றைக்கு பி.டி கத்தரிக்காய் குறித்து பதிவிட இருந்தேன் //
இன்னிக்கு கத்திரிக்காயை பிடிக்க முடியலைன்னா என்ன, நாளைக்கு பிடிச்சுட்டாப் போச்சு//
இன்னிக்கு பிடிச்சிட்டேன்ணே! ஆனா நீங்க ஊருக்கு வந்தா எந்தக் கத்தரிக்காய்னு கேட்டு அப்பறம் ஒரு பிடி பிடிங்க.
//இராகவன் நைஜிரியா said...
// கிராமத்தின் இயற்கை எழிலோடு வாழவிரும்பும் ஒரு சாதாரண தமிழ்க்குடிமகன்.//
குடி மகன்... நோ...நோ... யூ மீன் சிட்டிசன்..
வெரி நைஸ். கீப் இட் அப்..//
ஆஹா...,
//இராகவன் நைஜிரியா said...
// ஏதோ ஒன்றை எதிர்பார்த்து தேடிக்கொண்டேயிருக்கும் ஸ்டில் பேச்சுலர் //
நாங்க வேண்டுமானால் உங்களுக்காக தேடட்டுமா... பேச்சுலர் ஸ்டேட்டஸ் விரைவல் மாற வாழ்த்துகள்.//
சுதந்திரம் பறி போக வாழ்த்துக்களா! அடப்போங்கண்ணே!
//இராகவன் நைஜிரியா said...
// நோக்கமெல்லாம் ஒன்றும் இல்லை //
அப்படி எல்லாம் சொல்லக்கூடாதுங்க. டாக்டர் படிக்கணும் அப்படின்னு ஆசை, ஆனால், பதிவுலகம் என்னை இழுத்து வந்துடுச்சு... சேவை செய்வதற்காக வந்துட்டேன் அப்படின்னு சொல்லணும்.//
இதப் பத்தி மின்னாடி உங்ககிட்ட கேட்டிருக்கனும். கொஞ்சம் அவரசரப் பட்டு எழுதிட்டேன். அடுத்து தமிழ்மணப் பேட்டி வரட்டும். இதப் போட்டு தாக்கிடறேன்.(கொஞ்சம் ஓவரா இருக்கில்ல..,ஹி..ஹி)
//இராகவன் நைஜிரியா said...
// இதுவரை எந்தப் பதிவரும் என்னை விமர்சிக்கவில்லை. //
ஒருத்தர் மட்டும் கும்மி அடிச்சுகிட்டு இருக்கார். நேரில மட்டும் மாட்டடும், கும்மி விடப் போவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.//
ஆனா கும்மினாலும் அது ஆனந்தக் கும்மின்னு அந்த ஒருத்தருக்கு சொல்லிருங்கோ!
//இராகவன் நைஜிரியா said...
// ஒவ்வொரு பதிவரிடமும் ஒவ்வொரு ஃபயர் இருக்கிறது. //
ஃபயரா... நல்லாத்தான் கொளுத்திப் போட்டு இருக்கீங்க... நடக்கட்டும்.//
பாத்துண்ணே! தீப்பெட்டி கோவிச்சிகப் போறாரு!
//இராகவன் நைஜிரியா said...
// .1) ராகவன் நைஜீரியா. இந்த அண்ணனின் நட்பு வட்டாரம் மிகப் பெரியது. ஒரு இடுகை போட்டால் நூறு பின்னூட்டத்திற்கு மேல் வாங்கும் அன்புள்ளம். அசராமல் அனைத்துப் பதிவர்களின் பதிவுகளிலும் அண்ணனின் பின்னூட்டம் அதிரடியாய் இருக்கும் //
அதிரடியா... ஏன் இந்த கொலை வெறி...//
உண்மையத் தானே சொன்னேன். பின்னூட்டம் மட்டுமல்ல! கும்மியும் அதிரடி தான்.
//இராகவன் நைஜிரியா said...
// அன்புடன் மலிக்கா. எங்கிருந்து தான் இவருக்கு கவிதையின் கருக்கள் கிடைக்கிறதோ தெரியவில்லை. //
அதுதான் அன்புடன் சொல்லிட்டாருள்ள... கருவைப் போலவே வார்த்தைகளும் அருமை.//
ஆமாண்ணே!
//இராகவன் நைஜிரியா said...
// .3)தமிழ் நெஞ்சம். அண்ணனின் தொழில்நுட்பம் சம்பந்தப் பதிவுகள் நன்றாக இருக்கும். //
பல சமயங்களில் அண்ணனின் தொழில் நுட்ப இடுகைகள் எனக்கு ரொம்ப உதவியிருக்கின்றன. நன்றி அண்ணே.//
எல்லா இடுகைக்கும் ஓட்டுப் போடுவாரு. இந்த இடுகைக்கு மட்டும் அவர ஆளக் காணாமே! ஒரு வேள ஓய்வுல இருக்காரா?
//இராகவன் நைஜிரியா said...
// )4) நண்பர் அ.மு.செய்யது. இவரின் கதைகள் படிப்பதற்கு மிக சுவாரஸ்யமாக இருக்கும். //
வித்தகன் என் அன்புத் தம்பி செய்யது. எவ்வளவு விசயம் தெரிஞ்சு இருக்குங்க அவருக்கு. சிம்பிளி கிரேட்.//
நிபந்தனைகள் இன்றி வழிமொழிகிறேன்.உங்க சகோதர பாசத்தையும்.
//இராகவன் நைஜிரியா said...
// 5)வானம்பாடிகள். அண்ணன் சமூக அக்கறை கொண்ட பதிவர். //
சரியாகச் சொன்னீர்கள். அண்ணன் இடுகைகளில் பலவற்றி கும்மி அடிச்ச போது கூட கலங்காம பதில் கொடுத்தவர்.//
//கலங்காம பதில் கொடுத்தவர்.//
அய்யா வானம்பாடிகள் அவர்கள் கவனிக்க!
//இராகவன் நைஜிரியா said...
// .7)நண்பர் நிஜாமின் பல்சுவை விருந்து எனக்குப் பிடிக்கும். அவர் எழுதும் காமெடிகள் அதிகபட்சம் புதுமையாக இருக்கிறது. //
காம நெடி அடிக்காத காமெடிகள் நிஜாமின் காமெடிகள்.//
அதே அதே! கரெக்ட்ண்ணே!
//இராகவன் நைஜிரியா said...
// 1) இடுகையின் நீளம் முடிந்த அளவு குறைக்கப் படவேண்டும். அதேநேரம் அதன் சுவை குறைந்துவிடக்கூடாது. //
சரியாகச் சொன்னீர்கள். ரொம்ப பெரிய இடுகை ரொம்ப போரடிக்குது. அதனாலயே பல இடுகைகள் படிக்காமல் போகக் கூடிய சாத்தியங்க உண்டுங்க.//
ஆமாண்ணே! அதுல ரொம்ப கவனமா இருக்கனும். சின்ன இடுகையா இருந்தாலும் ஒரு லைன் போரடிச்சா போதும் நம்மள மூடிட்டு அடுத்தத தேட ஆரம்பிச்சிடுவாங்க!
//இராகவன் நைஜிரியா said...
//2009** டிவி சேனல் டைரக்டராக வேண்டும் //
வாழ்த்துகள்.//
நன்றிண்ணே! ஆனால் 2009 இன்னும் 2 மாசத்தில முடியப்போவுது
//இராகவன் நைஜிரியா said...
மீ த 25...
பை பை...//
நல்ல ரைமிங்...., டுவண்டி பை..,அப்பறம் பை..பை.. வாங்கண்ணே! அடுத்த கும்மியில் சந்திக்கலாம்.
//தமிழினி said...
//////அடுத்த மாதம் 2ம் தேதி முதல் என அறிவித்து விட்டு என்னவோ தெரியவில்லை இன்றைக்கே கிரீடத்தை சூட்டி விட்டார்கள் தமிழ்10 குழுவினர். நான் இன்றைக்கு பி.டி கத்தரிக்காய் குறித்து பதிவிட இருந்தேன்.///////
மன்னிக்க வேண்டும் நிஜாம் 2 ம் தேதி வரை என்பதற்குப் பதிலாக 2 ம் தேதி முதல் என்று தவறாக மாற்றி அனுப்பி விட்டோம் .தவறுக்கு வருந்துகிறோம் ,
மறுபடியும் வாழ்த்துக்கள்
நன்றி
தமிழினி//
மன்னிப்பெல்லாம் வேண்டாம் தமிழினி! வாழ்த்துக்களுக்கும் , கிரீடத்திற்கும் நன்றிகள் ஆயிரம். தொடர்ந்த உங்களின் ஆதரவிற்கு நன்றி.
//குடி காரனின் said...
Congrat friend//
நன்றி நண்பரே! தொடர்ந்து இணைந்திருங்கள்
//NIZAMUDEEN said...
//நண்பர் நிஜாமின் பல்சுவை விருந்து எனக்குப் பிடிக்கும். அவர் எழுதும் காமெடிகள் அதிகபட்சம் புதுமையாக இருக்கிறது. எங்கிருந்தான் பிடிக்கிறாரோ தெரியவில்லை.//
1. வாழ்த்துக்கள்.
2. என்னையும் எழுவரில் ஒருவராய் இணைத்துக்
கொண்ட அன்புள்ளம் தங்களுக்கு.
3. 'நண்பர் நிஜாம்' என்று பாசத்தோடு அணைத்துக்
கொண்ட அருமை நண்பருக்கு,
மேலும் பல விருதுகள் நிச்சயம் வரும்;
திருமணம் விரைவில் வரும். (முதல் பத்திரிகை
யாருக்கு?)
ட்டீ.வீ.டைரக்டராக வருக...
அன்பனின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!//
நன்றி நிஜாம்! முதல் பத்திரிகை யாருக்கு...????????(பிரிண்டிங் பிரஸ்ஸில் உள்ள பிழை திருத்துபவருக்குத் தான்.அவர் சரி செய்த பின்பு தான் அடுத்தக் காப்பி ஓட ஆரம்பிக்கும்.ஹிஹி சும்மா ஜோக்குக்கு சொன்னேன்!)
//அ.மு.செய்யது said...
தாமத வருகைக்கு மன்னிக்கவும் நிஜாம்.
மேலும் கிரீடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள்.மிக குறுகிய காலத்தில்
வலைப்பக்கங்களில் நீங்கள் பிரபல மடைந்து விட்டீர்கள்.அதற்கு உங்கள் உழைப்பும் பயனுள்ள பதிவுகளை
இடுவதற்கு எடுத்துக்கொண்ட மெனக்கெடல்களும் தான் காரணம்.
உங்கள் அபிமான பதிவர்கள் பட்டியலில் என் பெயரும் இருப்பது கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தேன்.
மிக்க நன்றி !!!//
நன்றி செய்யது! லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாகத் தான் வந்துள்ளீர்கள், வாழ்த்துக்கு நன்றிகள்.
// அதற்கு உங்கள் உழைப்பும் பயனுள்ள பதிவுகளை
இடுவதற்கு எடுத்துக்கொண்ட மெனக்கெடல்களும் தான் காரணம்.//
அது மட்டுமின்றி சகபதிவர்கள் மற்றும் வாசகர்களின் அன்பும் ஆதரவும், திரட்டிகளின் உதவியும் தான் முக்கிய காரணம்.