பரீட்சை நேரங்களில் மட்டுமே படித்து பழக்கப் பட்டுவிட்ட நமக்கு மற்ற நாட்களில் புத்தகத்தை எடுத்தால் தூக்கம் தான் வரும். இப்படியே மந்தமாக போய்க்கொண்டிருக்கும் எங்கள் பள்ளி வாழ்க்கை திடீரென ஒரு நாள் சூடுபிடிக்கும். அது தான் இன்ஸ்பெக்சன். இன்ஸ்பெக்சன் என்பது அந்த மாவட்டத்தின் கல்வி அதிகாரி அந்த ஏரியா பள்ளிகளைப் பார்வையிட தன் பட்டாளத்தோடு அந்தகால ஊதா கலர் ஜீப்பிலே வருகை தரும் நிகழ்வாகும். யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல கல்விஅதிகாரி பார்வையிட வருவதற்கு ஒரு வாரம் முன்பே அந்தந்த பள்ளிகளுக்கு தகவல் அறிவிக்கப் பட்டுவிடும்.
அன்றிலிருந்து பார்க்க வேண்டுமே எங்கள் பள்ளி ஆசிரியர்களின் பொருப்புணர்வை. காரை பெயர்ந்த பள்ளியின் சுவர்கள் பட்டி பார்க்கப்பட்டு புதிய பெயிண்டு அடிக்கப்படும். அனைத்து வகுப்புகளிலும் வெள்ளை நிறத்திற்கு மாறிவிட்ட கரும்பலகைகளுக்கு அழகாக கருப்பு பெயிண்டு அடிக்கப்பட்டு அதைச் சுற்றிலும் மஞ்சல் நிற பார்டரும் அடிக்கப் படும். ஊனமுற்ற பெஞ்சுகள், சேர்கள், நாற்காலிகள், கதவுகள் சிகிச்சை செய்யப் பட்டு மாற்றப்படும். இரவில் ஆடுகளும் மாடுகளும் சுகமாக படுத்துறங்கும் பள்ளி வளாகத்திலிருந்து அவை விரட்டப் பட்டு வளாகம் தினசரி சுத்தம் செய்யப்படும்.
அந்த மாடுகள் ஒரு நாள் விரட்டப் பட்டால் அடுத்த நாள் அவைகள் தானாகப் புரிந்துகொள்ளும், "ஓஹோ! டிஇஓ வர்றாரு போலிருக்கு, இனி ஒரு வாரத்துகύகு நம்மள உள்ளக்க விட மாட்டாய்ங்கே! வாங்கடா வேற எடம் பாத்துக்கலாம்", என அடுத்த நாள் முதல் அவைகளின் வரத்து நின்றுவிடும். அனைத்துப் பள்ளிகளும் அலங்கரிக்கப் பட்டு அறிவியல் சார்ந்த புகைப்படங்கள், வரைபடங்கள் ஒட்டப்படும். டிஇஓ வரும் அன்றைக்கு என்ன பாடம் எடுக்கப்படும் என அனைத்து ஆசிரியர்களும் முன்பே குறித்து தந்துவிடுவார்கள். அது அநேகமாக ஏற்கனவே எடுக்கப் பட்ட பாடமாகத்தான் இருக்கும். அதையே ரிப்பீட்டாக நடத்தி கேள்விகள் கேட்பார்கள்.
சாதாரண நாட்களில் யாருமே நுழையமுடியாத கழிவறைகள் அவசரம் அவசரமாக சுத்தம் செய்யப் பட்டு 24X7 தண்ணீர் வசதி செய்யப்படும். கழிவறையின் உள்ளே கரியால்,ஆணியால் கல்வெட்டாய எழுதப்பட்டிருக்கும் ஐலவ்யூக்கள் அழிக்கப்பட்டு அழகிய வர்ணம் பூசப்படும்.இன்ஸ்பdžக்சன் வருவதற்கு முன்பாக ஆசிரியர்களே தங்களின் நண்பர்களைத் தயார் செய்து போலி இன்ஸ்பெக்சன் நடத்துவார்கள். அதாவது போலி இன்ஸ்பெக்சன் நடத்துவது மூலம் யார்யார் எப்படி பதிலளிக்கிறார்கள் என முடிவுசெய்து அவர்களை தரம்பிரிப்பார்கள். அதற்குப் பிறகு தான் எங்களுக்கே தெரியும் அது போலி இன்ஸ்பெக்சன் என்று.
அப்பாடா இன்னியோட இம்ச தொலஞ்சதுடா என நிம்மதி பெருமூச்சி விட்டால் அது போலி எனத் தெரிய மறுபடியும் தலைவலி ஆரம்பமாகிவிடும். நல்லா படிக்கும் மாணவர்களை பரவலாக அமரவைப்பார்கள். கொஞ்சம் மந்தமாய் இருப்பவர்கள் பாடு பெரும் திண்டாட்டம் தான்.அவர்களை மாற்றி மாற்றி அமரவைத்து சோதிப்பார்கள். எல்லாம் சரி செய்யப்பட்டு விடும். குறிப்பிட்ட நாளில் காலை 9.30க்கே அனைவரும் ஆஜராக உத்தரவு வந்துவிடும். சரியாக 9.45க்கு பிரேயர் நடக்கும். தமிழ்தாய் வாழ்த்து முடிந்து என்றுமேயில்லாமல் அன்றைக்கு தலைமை ஆசிரியர் பலவிதமான நீதி பொதிந்த அறிவுரைகளை அள்ளிவிடுவார். அன்றைக்கு மட்டும் ஆசிரியர்கள் அனைவரும் சரியான நேரத்திற்கு ஆஜராகிவிடுவார்கள்.
சாதாரண நாட்களில் வேஷ்டி கட்டிக்கொண்டு வரும் ஆசிரியர்கள் அன்றைக்கு மட்டும் அவர்கள் வைத்திருக்கும் ஒரேயொரு பச்சை அல்லது நீலக்கலர் சுப்ரமணியபுரம் குழாயை மாட்டிக்கொண்டு அந்தக் கால பாக்யராஜின் கூலிங்கிளாசை கண்களில் பொருத்திக்கொண்டு காமெடி பீஸாய் வலைய வருவார்கள்.
எங்கள் ஏரியாவிலேயே சிறந்த சமயல்காரரைக் கொண்டு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, மீன் ஃப்ரை, இரால் தொக்கு, கணவாய் சம்பல் என கமகமக்கும் ருசியில் உணவு தயார் செய்யப்படும்.அனைத்து ஆசிரியர்களும் வகுப்பறைகளில் ஆஜராகி வாசலில் நின்று அந்த ஜீப்பை எதிர்பார்ப்பார்கள்.காலை 11 மணிக்கு அந்த நீல நிற ஜீப் உள்ளே வரும். வந்ததும் போதும், அனைவரும் கடகட என பாடம் நடத்த ஆரம்பித்து விடுவார்கள். டிஇஓ நேராக தலைமை ஆசிரியருடன் பேசிக்கொண்டிருந்து விட்டு பின்னர் ஒவ்வொரு வகுப்பாக வலம்வர ஆரம்பித்து விடுவார்.
அந்தந்த வகுப்பறை ஆசிரியர்கள் ஏற்கனவே சொல்லிவைத்த பாடத்தை நடத்திக் கொண்டிருப்பார்கள். அவர்களின் புத்தகத்தை வாங்கி அதிலிருந்து சில கேள்விகளை கேட்பார். ஏற்கனவே தயார்படுத்தப் பட்ட மாணவர்கள் அந்தக் கேள்விகளுக்கு டக்கு டக்கு என பதிலளிப்பார்கள். வெரிகுட், பெண்டாஸ்டிக், மார்வலஸ் என அவருக்கு தெரிந்த ஆங்கில வார்த்தைகளை அள்ளிவிட்டு விட்டு அடுத்த வகுப்புக்கு போய்விடுவார். மதிய உணவு இடைவேளையின் போது சாப்பாட்டிற்கு வீட்டுக்குச் செல்ல வெளியே வந்து ஒரு குறிப்பிட்ட அறையைக் கடக்கும் போது மேற்படி பிரியாணி வாடை நம்மைப் பிடித்து உள்ளே இழுக்கும். நைசாக அந்த ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தால் அங்கே அந்த கல்வி அதிகாரிகள், அறுசுவை அயிட்டங்கள் பரப்பப்பட்ட இலையின் முன்னால் அமர்ந்திருக்க ஆசிரியர்கள் சுற்றி நின்று தலை தீபாவளிக்கு மாமியார் வீட்டுக்கு வந்த மருமகனை கவனிப்பது போல கவனித்துக் கொண்டிருப்பார்கள்.
எல்லாம் முடிந்து கிளம்பும் நேரத்தில் எங்கள் பள்ளி தலைமை ஆசிரியரையும், மற்ற ஆசிரியர்களையும் வாயாரப் புகழ்ந்துவிட்டு இந்தப் பள்ளி போல இந்த ஏரியாவிலேயே சிறந்தப் பள்ளி கிடையாது என சொல்லிவிட்டு வாய் நிறைய பீடாவைப் போட்டுக்கொண்டு அந்த ஓட்டை ஜீப்பிலே ஏறி பயணிக்க ஆரம்பித்து விடுவார்கள். அடுத்த நாள் முதல் எங்கள் பள்ளி வளாகத்தில் பழையபடி ஆடு மாடுகள் படுக்க ஆரம்பித்து விடும்.
சென்ற வாரம் இலங்கை சென்ற தமிழக எம்பிகள் குழு அங்கிருந்த அண்ணன் ராஜபக்சேவின் முள்வேலி முகாம்களை பார்வையிட்டு விட்டு அவர் கொடுத்த விருந்தை சிறப்பாக முடித்து விட்டு, பொன்னாடையும் போர்த்திவிட்டு திரும்பியிருக்கும் நிகழ்சியை நினைத்துப் பார்த்த போது , எனக்கு இந்த நிகழ்ச்சி தான் நினைவுக்கு வந்தது.. மற்றபடி அண்ணன் ராஜபக்சேவுக்கும் எனக்கும் எந்தவிதமான தனிப்பட்ட விரோதமும் கிடையாது.
already seen this



இது இடுகை...
கலக்கல் - அவளவுதான் சொல்லுவேன்..
// நான் அப்போது எங்கள் ஊர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.//
எனக்குத் தெரிஞ்சு 6 வகுப்பு உயர் நிலைப் பள்ளியில்தாங்க படிக்க முடியும்..
// அந்த வகுப்பில் நான் எப்படியும் 5 க்குள் ரேங்க் எடுத்துவிடுவேன். //
அதுவே பெரிய விசயம்... 5 ரேங்குக்குளா...???
// அதேபோல அடுத்த இரண்டாவது மூன்றாவது இடங்களில் பெரும்பாலும் அம்மனிகள் தான்.//
நாமெல்லாம் எப்போதுமே தாய்குலங்களுக்கு வழி விடுவோமில்ல..
கொஞ்சம் கும்மி அடிக்கும் ஆசையிருக்கு. நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியலை... அதனால மீதி உங்க ரெஸ்பான்ஸ் பார்த்தபின்..
//இராகவன் நைஜிரியா said...
இது இடுகை...
கலக்கல் - அவளவுதான் சொல்லுவேன்..//
அது போதும்ணே!
//எனக்குத் தெரிஞ்சு 6 வகுப்பு உயர் நிலைப் பள்ளியில்தாங்க படிக்க முடியும்..//
அண்ணே! வேணாம்....
//அதுவே பெரிய விசயம்... 5 ரேங்குக்குளா...???//
வலிக்குது...,
//நாமெல்லாம் எப்போதுமே தாய்குலங்களுக்கு வழி விடுவோமில்ல..//
அழுதுருவேன்..,அழுதுருவேன்..,
//கொஞ்சம் கும்மி அடிக்கும் ஆசையிருக்கு. நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியலை... அதனால மீதி உங்க ரெஸ்பான்ஸ் பார்த்தபின்..//
அண்ணே! கொஞ்சம் என்ன குத்திக்குமுறுங்க...., எப்ப??????
ராகவன் அண்ணனுக்கு இல்லாத உரிமை வேறு யாருக்கு உள்ளது. அதேமாதிரி நான் ஒன்னு உங்ககிட்ட கேக்காம செஞ்சிப்புட்டேன். அது தான் "என்னக்க்க் கொடும சார் இது" ன்னு இன்னும் கொஞ்ச நாள்ள ஒரு மேட்டர் வரப்போவுது. அப்ப அதப் பாத்து கண்டிப்பா கருத்து சொல்லனும். இருந்தாலும் உங்கள கோர்த்து விட்டது கொஞ்சம் பயமாத்தான் இருக்குண்ணே!
// இப்படிக்கு நிஜாம்.., said...
//நாமெல்லாம் எப்போதுமே தாய்குலங்களுக்கு வழி விடுவோமில்ல..//
அழுதுருவேன்..,அழுதுருவேன்.., //
நோ... நோ... அழப்பிடாது... கண்ண துடைச்சுக்கோங்க..
வலைப்பூ எழுத வந்துட்டு, கும்மிக்கு அழக்கூடாது... ஆமாம் சொல்லிப்புட்டேன்...
// ஆக எங்கள் வகுப்பில் நல்லாப் படிப்பவர்கள் ஒரு 15 பேர் தேறுவோம்.//
ஆயிரத்தில் ஒருவன் மாதிரி 15 பேரில் ஒருவன் நீங்களா?
// பரீட்சை நேரங்களில் மட்டுமே படித்து பழக்கப் பட்டுவிட்ட நமக்கு //
ஓ... பரீட்சை நேரத்தில படிப்பீங்களா? வெரிகுட் வெரிகுட்... கீப் இட் அப்.
// எங்கள் பள்ளி வாழ்க்கை திடீரென ஒரு நாள் சூடுபிடிக்கும் //
யாரவது பெஞ்சுக்கு அடியில கொளுத்திப் போடுவாங்களா?
// எங்கள் பள்ளி ஆசிரியர்களின் பொருப்புணர்வை. //
பொறுப்புணர்வு ?
// இரவில் ஆடுகளும் மாடுகளும் சுகமாக படுத்துறங்கும் பள்ளி வளாகத்திலிருந்து அவை விரட்டப் பட்டு வளாகம் தினசரி சுத்தம் செய்யப்படும். //
இரவில் உறங்கும் ஆடுமாடுகளை விரட்டி விட்டு, பகலில் படிக்கும் ஆடு, மாடுகளை மேய்க்க ஆரம்பிப்பார்கள்.
// தலை தீபாவளிக்கு மாமியார் வீட்டுக்கு வந்த மருமகனை கவனிப்பது போல கவனித்துக் கொண்டிருப்பார்கள். //
இது... அனுபவம் பேசுகின்றதோ?
// " நான் ஊங்காள் நாண்பான்" எனச்சொல்லி ஊரை மட்டுமல்ல உலகையே ஏமாற்றும் நீதியரசன் ராஜபக்சேவின் தமிழ்ப்பணி தொடர நாம் வாழ்த்துத் தெரிவிப்போம்.//
இளிச்சவாயன் தமிழன் என்பதை மற்றுமொரு முறை நிரூபித்திருக்கின்றான்.
// இப்படிக்கு நிஜாம்.., said...
ராகவன் அண்ணனுக்கு இல்லாத உரிமை வேறு யாருக்கு உள்ளது. அதேமாதிரி நான் ஒன்னு உங்ககிட்ட கேக்காம செஞ்சிப்புட்டேன். அது தான் "என்னக்க்க் கொடும சார் இது" ன்னு இன்னும் கொஞ்ச நாள்ள ஒரு மேட்டர் வரப்போவுது. அப்ப அதப் பாத்து கண்டிப்பா கருத்து சொல்லனும். இருந்தாலும் உங்கள கோர்த்து விட்டது கொஞ்சம் பயமாத்தான் இருக்குண்ணே! //
இதுக்கெல்லாம் பயந்தா ஆகுமா... போட்டுத் தாக்குங்க..
கறுப்பு சிவப்பு போட்டு கிட்டு ராஜபக்சேவ கிண்டல் பன்றீங்க. இது அறிவாலயத்திற்க்கு தெரியுமா?
// பரீட்சை நேரங்களில் மட்டுமே படித்து பழக்கப் பட்டுவிட்ட நமக்கு //
நாங்களும் அப்படிதாமுல
//இதுக்கெல்லாம் பயந்தா ஆகுமா... போட்டுத் தாக்குங்க..//
அண்ணே! போட்டுத்தாக்கிட்டீங்க. தொடர்ந்து குத்திக்குதறுங்க. இந்தக் கும்மிக்கு நன்றி. இருங்க..,இருங்க உங்கப் பதிவுல ரிப்பே பண்றேன்.
//கறுப்பு சிவப்பு போட்டு கிட்டு ராஜபக்சேவ கிண்டல் பன்றீங்க. இது அறிவாலயத்திற்க்கு தெரியுமா?//
ஷாகுல்! தலைவர் கலைஞரை மற்றவர்கள் தப்பாய் புரிந்துகொண்டிருப்பது போலத்தான் நீங்களும் புரிந்து கொண்டுள்ளீர்கள். உண்மை ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும். ராஜபக்சேயை கொன்றால் கூட தலைவர் மகிழ்ச்சிதான் அடைவாரே தவிர வருந்த மாட்டார். என்ன செய்ய சந்தர்பங்களும் சூழ்நிலைகளும் கலைஞருக்கு எதிராகவே அமைந்து விடுகிறது.
//புலவன் புலிகேசி said...
// பரீட்சை நேரங்களில் மட்டுமே படித்து பழக்கப் பட்டுவிட்ட நமக்கு //
நாங்களும் அப்படிதாமுல//
ஒன்றே குலமென்று பாடுவோம்