ஒரு காலத்தில் மிளகாய்,மல்லி,சீரகம்,சோம்பு,மிளகு என எல்லாவற்றையும் தனித்தனியாக வாங்கி தேவையான போது அம்மி மூலமாக அரைத்து சுவையான குழம்பு தயாரிக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு ரெடிமேட் மசாலாக்கள் அறிமுகபடுத்தப் பட்டன. மிளகாய் தூள், மல்லித்தூள் என தனித்தனியாக வந்து கொண்டிருந்த மசாலாக்கள் பின்னர் குழம்புத்தூள்,மீன் மசாலா, கறி மசாலா என வேகம் கண்டது. ஆனால் இப்போது என்ன நிலை? உடனடி மீன்குழம்பு, உடனடி வத்தக் குழம்பு, உடனடி புளிக்குழம்பு என டப்பாக்களில் அடைக்கப் பட்டு தாயாராய் கிடைக்கிறது. அதிலே கொஞ்சம் சுடு தண்ணீரை ஊற்றிக் கலந்தாலே போதும். குழம்பு தயார். அதுமட்டுமின்றி இன்றைக்கு உடனடி சப்பாத்தி, உடனடி பரோட்டா, உடனடி தயிர்சாதம் என அனைத்துமே உடனடியாகி விட்டது. இன்னும் கொஞ்ச நாட்களில் உடனடி தாய்ப்பால் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

அம்மிகளும், ஆட்டுக்கல்லும் செய்த வேலைகள் பறிக்கப்பட்டு மிக்சிகளுக்கும் கிரைண்டர்களுக்க்கும் வேலை கொடுக்கப்பட்டது. இன்னும் கொஞ்ச நாட்களில் அவைகளுக்கும் வேலையிருக்காது. நீங்கள் நினைக்கலாம் என்னடா தலைப்புக்கே சம்பந்தம் இல்லாமல் கதை போயிக்கிட்டு இருக்கு என்று. சம்பந்தம் இருக்கிறது.

ரேசன் பொருட்கள் வாங்குவதற்கும், கரண்டு பில் மற்றும் போன் பில் கட்டுவதற்கும்,குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்கும் என பல வேலைகள் இருந்ததால் அவர்களின் சேவை அனைவருக்கும் தேவையாய் இருந்தது.ஆனால் இப்போது பில் கட்டுவதற்கும், குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்கும் பல நிறுவனங்கள் முளைத்து விட்டதால் முதியவர்கள் இன்றைய நிலையில் ஒரு பெரும் சுமையாகவே மாறிவிட்டனர் பிள்ளைகளுக்கு. அதுமட்டுமின்றி மிக முக்கியமாக இளம்தம்பதிகளின் சந்தோசத்திற்கு பெரியவர்கள் தடையாய் இருந்து இம்சை செய்கிறார்கள் என்பதாலேயே அதிகஅதிகமாக பெற்றோர்கள் முதியோர் இல்லங்களை நோக்கித் தள்ளப்படுகின்றனர். இந்தியாவிலே மொத்தம் ஒரு லட்சத்து 65 ஆயிரம் முதியோர் இல்லங்கள் இருப்பதாகவும் இதிலே தமிழகம் தான் முதலிடம் வகிப்பதாகவும் சமீபத்திய சர்வே ஒன்று தெரிவிக்கிறது. தமிழகத்திலே உள்ள ஆதரவற்ற முதியவர்களின் எண்ணிக்கை சுமார் 4 லட்சம் என்றும் அதிலே 3 லட்சம் பேர் பெண்கள் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

மேலும் மருமகள் கொடுமையாலேயே அதிகபட்சமாக கணவனின் பெற்றோர்கள் முதியோர் இல்லங்களிலே கொண்டு தள்ளப்படுவதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஆக இங்கே நாம் தெரிந்துகொள்ள வேண்டியது கணவனின் பெற்றோர்கள் தான் அதிகமாக முதியோர் இல்லங்களிலே தள்ளப்படுகிறார்கள் என்பதை. காரணம் என்ன? தற்சமயம் பெருகிவிட்ட தொலைக்காட்சி தொடர்களில் அதிகதிகமாக காட்டப் படுவது மருமகள் மாமியாரை எப்படி போட்டுத் தள்ளுவது? மாமியார் மருமகளுக்கு எப்படி சோத்திலே விசத்தை வைப்பது என பலவிதமான டிரிக்குகளை அள்ளிவழங்குகின்றன மெகா தொடர்கள். அதைப் பார்க்கும் மாமியாருக்கும்,மருமகளுக்கும் வேறு என்ன தோன்றப் போகிறது?
சமீபத்தில் மக்கள் தொலைக்காட்சி செய்திகளின் சிறப்புப் பார்வையில் கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்படும் முதியவர்கள் திரும்ப அழைத்துக் கொள்ளப் படுவதில்லை என்ற அதிர்சியான செய்தியுடன் அந்த முதியவர்களின் அழுகையுடன் கூடிய பேட்டியும் ஒளிபரப்பப் பட்டது. பெரியவர்களை மதித்து அவர்களைக் கவுரவித்து அவர்கள் மீது அன்பு செலுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி 1990ம் ஆண்டு ஐ.நா. பொது அவை அக்டோபர் 1ம் தேதி உலக முதியோர் தினம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று அறிவித்தது.ஆனால் நமது தேசத்தைப் பொருத்தவரை அது முதியோர் இல்லங்களிலே உள்ளவர்களுக்காக கொண்டாடப் படுவதாக நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். இப்போது இருக்கக் கூடிய முதியோர் இல்லங்களை இனியும் குறைக்க இயலாது. ஆனால் இனியும் உருவாகாமல் நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.


அவமானகரமான விடயம். அருமையாய்ச் சொல்லி இருக்கிறீர்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா! தொடர்ந்து இணைந்திருங்கள்
//பல வேலைகள் இருந்ததால் அவர்களின் சேவை அனைவருக்கும் தேவையாய் இருந்தது.ஆனால் இப்போது பில் கட்டுவதற்கும், குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்கும் பல நிறுவனங்கள் முளைத்து விட்டதால் முதியவர்கள் இன்றைய நிலையில் ஒரு பெரும் சுமையாகவே மாறிவிட்டனர் பிள்ளைகளுக்கு.//
ம்ம்ம் உண்மைதான்.. அழகா சொல்லிய பாங்கு நன்றாக இருக்கு
@ஆ.ஞானசேகரன்
நன்றி திரு.ஆ.ஞானசேகரன்.தொடர்ந்து இணைந்திருங்கள்
முதியோர்களை பாரமாக நினைக்கும் காலமாகிப் போய்விட்டது.
பழுத்த மட்டையைப் பார்த்து குருத்து மட்டை சிரித்ததாம் என்று நம் ஊரில் சொல்லுவார்கள். அதுமாதிரி வருங்கால முதிய்வர்களுக்கு, இன்றைய இளைஞர்கள் கொடுக்கும் மரியாதை இதுவாகிவிட்டது.
உண்மை சுடும் என்பார்கள்.ஆனால் இங்கே கொதிக்கிறது.
முதியோர் இல்லங்கள் மிகச்சிறந்த சேவை செய்தபோதிலும் அவையனைத்தும் கலாச்சாரத்தின் கரும்புள்ளிகளே. இவை உருவாக மூலக்காரணமானவர்கள் பிள்ளைகள் என்று சொல்லிக்கொள்ள அருகதையற்றவர்கள்.
நல்ல பதிவு நிஜாம்
இது அவசர உலகமாம். போகும்போதே சாப்பிட்டு கொண்டு போகிறார்கள்.ஆனால் மேலே போகும் போது எதை கொண்டு போக முடியும். அருமையான கட்டுரை தொடர்ந்து எழுதுங்கள்.நன்றி
nandri ketta magani vida naaygal melada.VIZZY.
சிந்திக்க வேண்டிய தகவல் பிள்ளைகள் புரிந்து கொண்டு நாளை நமக்கும் இதே நிலை தான் என்று புரிந்து செயல் பட்டால் மட்டுமே மாற்றங்களை உருவாக்க முடியும்
கண்டிப்பாக எல்லோரிடமும் சென்று சேர வேண்டிய பதிவு இது நிஜாம்! இணைந்திருப்போம்!!
The reason is with the advent of the working style and living style require the privacy of life more for the young couple with the present patent of the living accomodation is not give the required privacy. We need to change this
சூடோ சூடு !!!!!!
நல்லாச் சொன்னீங்க நிஜாம்!
பிள்ளைகள்மீது பெற்றோர் எவ்வளவு
பாசம் வைத்திருந்தாலும் அப்பிள்ளைகளின்
மறுபாதியின் விபரீத புத்தியினால்தான்
பெற்றோர் தன்மைப் படுத்தப்பட்டு
முதியோர் இல்லங்களில் காலம் தள்ளுகின்றனர்.
அதனால், எவ்வளவு நல்ல பிள்ளையெனினும்
எவ்வளவு நம்பிக்கை வைத்திருப்பினும்
பெற்றோர்கள் தங்கள் எதிர்காலத்திற்கு
பணரீதியிலும் மனரீதியிலும் தங்களை
முன்கூட்டியே தயார் செய்து கொள்ள வேண்டும்
எப்பதற்கு இக்கட்டுரை ஓர் எச்சரிக்கை ஒலி!
பாராட்டுக்கள் நிஜாம்!
http://tamil498a.blogspot.com/2009/10/blog-post_05.html
வீட்டுப் பிரச்னையை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டுபோகும்போது, கேஸ் அவங்க பக்கம் ஸ்ட்ராங்கா இருக்கணும்கறதுக்காக மாமியார், மாமனார் உட்பட புகுந்த வீட்டுல இருக்கு எல்லார் மேலயும், இருக்கிற எல்லா பிரிவுலயும் புகார் கொடுத்துடறாங்க. போலீஸும், விசாரணை கூட இல்லாம உடனே கைது செய்யறாங்க. 'நாங்க அப்பாவிங்க'னு அவங்ககிட்ட நிலைமையை எடுத்துச் சொன்னாகூட, 'சட்டம் என்ன சொல்லுதோ, அதைத்தான் செய்யு முடியும்'னு ஒரு வரியில பதில் கொடுக்கறாங்க.
நல்ல பதிவு..
//இராகவன் நைஜிரியா said...
முதியோர்களை பாரமாக நினைக்கும் காலமாகிப் போய்விட்டது.
பழுத்த மட்டையைப் பார்த்து குருத்து மட்டை சிரித்ததாம் என்று நம் ஊரில் சொல்லுவார்கள். அதுமாதிரி வருங்கால முதிய்வர்களுக்கு, இன்றைய இளைஞர்கள் கொடுக்கும் மரியாதை இதுவாகிவிட்டது.//
அருமையான பழமொழிண்ணே! இன்றைய குருத்து மட்டைகள் நாளைய பழுத்த மட்டைகள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே!
//goma said...
உண்மை சுடும் என்பார்கள்.ஆனால் இங்கே கொதிக்கிறது.//
நிச்சயமாக உண்மை திரு கோமா. நன்றி வருகைக்கும் கருத்துக்கும். தொடர்ந்து இணைந்திருங்கள்.
//S.A. நவாஸுதீன் said...
முதியோர் இல்லங்கள் மிகச்சிறந்த சேவை செய்தபோதிலும் அவையனைத்தும் கலாச்சாரத்தின் கரும்புள்ளிகளே. இவை உருவாக மூலக்காரணமானவர்கள் பிள்ளைகள் என்று சொல்லிக்கொள்ள அருகதையற்றவர்கள்.
நல்ல பதிவு நிஜாம்//
பெற்ற பிள்ளைகளுடன் குடிசையில் வாழும் மகிழ்ச்சசியை கட்டிடத்தில் இயங்கௌம் முதியோர் இல்லங்கள் கொடுத்து விடப்போவதில்லை. இதிலென்ன வேண்டியிருக்கிறது சேவை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நவாஸ்ஜி.
//விடுதலைவீரா said...
இது அவசர உலகமாம். போகும்போதே சாப்பிட்டு கொண்டு போகிறார்கள்.ஆனால் மேலே போகும் போது எதை கொண்டு போக முடியும். அருமையான கட்டுரை தொடர்ந்து எழுதுங்கள்.நன்றி//
அவசர உலகம் என்று சொல்லியே அவசர அவசரமாக தன் ஆயுளையும் குறைத்து விட்டது இன்றைய தலைமுறை. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி திரு.விடுதலை வீரா. நீங்களும் தொடர்ந்து வாருங்கள்
//Vijayan said...
nandri ketta magani vida naaygal melada.VIZZY.//
அருமையான வாசகங்கள் திரு.விஜயன். நாய்க்கு இருக்கும் பாசம் கூட பிள்ளைகளிடம் இருப்பதில்லை. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.
//Suresh Kumar said...
சிந்திக்க வேண்டிய தகவல் பிள்ளைகள் புரிந்து கொண்டு நாளை நமக்கும் இதே நிலை தான் என்று புரிந்து செயல் பட்டால் மட்டுமே மாற்றங்களை உருவாக்க முடியும்//
நிச்சயமாக திரு.சுரேஷ்குமார். தொடர்ந்து இணைந்திருங்கள். கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
//கலையரசன் said...
கண்டிப்பாக எல்லோரிடமும் சென்று சேர வேண்டிய பதிவு இது நிஜாம்! இணைந்திருப்போம்!!//
ஆமாம் திரு.கலை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. பின்னே துபாய் எப்படி இருக்கு இப்போ?
//Ram said...
The reason is with the advent of the working style and living style require the privacy of life more for the young couple with the present patent of the living accommodation is not give the required privacy. We need to change this//
என்ன தான் வாழ்க்கைமுறை மாறினாலும் அம்மாவை அம்மா என்று தான் சொல்ல முடியும். ஆனாலும் உங்களின் கருத்துக் ஏற்கத்தக்கது தான். நன்றி கருத்துக்கும் வருகைக்கும்.
//செந்தழல் ரவி said...
சூடோ சூடு !!!!!!//
இந்த சூட்டிலாவது நம்மவர்கள் திருந்தினால் நலம் ரவி சார். நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.
//NIZAMUDEEN said...
நல்லாச் சொன்னீங்க நிஜாம்!
பிள்ளைகள்மீது பெற்றோர் எவ்வளவு
பாசம் வைத்திருந்தாலும் அப்பிள்ளைகளின்
மறுபாதியின் விபரீத புத்தியினால்தான்
பெற்றோர் தன்மைப் படுத்தப்பட்டு
முதியோர் இல்லங்களில் காலம் தள்ளுகின்றனர்.
அதனால், எவ்வளவு நல்ல பிள்ளையெனினும்
எவ்வளவு நம்பிக்கை வைத்திருப்பினும்
பெற்றோர்கள் தங்கள் எதிர்காலத்திற்கு
பணரீதியிலும் மனரீதியிலும் தங்களை
முன்கூட்டியே தயார் செய்து கொள்ள வேண்டும்
எப்பதற்கு இக்கட்டுரை ஓர் எச்சரிக்கை ஒலி!//
நிச்சயமாக நிஜாம். இனியாவது திருந்தட்டும். தவறிழைத்தவர்கள் வருந்தட்டும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
//Suresh Ram said...
http://tamil498a.blogspot.com/2009/10/blog-post_05.html
வீட்டுப் பிரச்னையை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டுபோகும்போது, கேஸ் அவங்க பக்கம் ஸ்ட்ராங்கா இருக்கணும்கறதுக்காக மாமியார், மாமனார் உட்பட புகுந்த வீட்டுல இருக்கு எல்லார் மேலயும், இருக்கிற எல்லா பிரிவுலயும் புகார் கொடுத்துடறாங்க. போலீஸும், விசாரணை கூட இல்லாம உடனே கைது செய்யறாங்க. 'நாங்க அப்பாவிங்க'னு அவங்ககிட்ட நிலைமையை எடுத்துச் சொன்னாகூட, 'சட்டம் என்ன சொல்லுதோ, அதைத்தான் செய்யு முடியும்'னு ஒரு வரியில பதில் கொடுக்கறாங்க.//
அதிலும் எல்லார் மேலேயும் வரதட்சனை கேஸ் தான். சட்டம் (வாங்கிய அளவுக்கு) தன் கடமையைச் செய்யும். நன்றி கருத்துக்கும் வருகைக்கும்.
//தீப்பெட்டி said...
நல்ல பதிவு..//
நன்றி தீப்பெட்டி! வருகைக்கும் கருத்துக்கும். நம்மல பத்தி ஒரு நாலு பேருகிட்ட பத்தவைங்களேன்.
sirantha...
samugach sadal...
natpudan.
kanchi murali...