இன்றைய இயந்திர வாழ்க்கையில் கடந்து போன முந்தைய சில நிமிடங்களைக் கூட நமக்கு திரும்பிப் பார்க்க நேரமில்லை. இன்றைக்கு நமக்கு இருக்கக்கூடிய எவ்வளவோ பணிச்சுமைகளில் நமது முந்தைய காலத்தை கொஞ்சம் நினைத்துப் பார்க்கவே இந்தப் பதிவு. தனியார் தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் நிறைந்துவிட்ட இன்றைய நிலைக்கு எதிர்ப்பதமாக அன்றைக்கு இருந்த ஒரேஒரு சேனலான தூர்தர்ஷனில் நாம் கண்டு ரசித்த சில விளம்பரங்கள் இதோ உங்களின் பார்வைக்கு..,
"நான் வளர்கிறேனே மம்மி" என தினம் பலமுறை நம்மை ரசிக்கத் தூண்டிய அன்றைய பிரபலமான பானம் காம்ப்ளான். என்றைக்கும் மறக்காத ஐ ஆம் எ காம்ப்ளான் பாய், ஐ ஆம் எ காம்ப்ளான் கேர்ள்.இன்றைக்கு ஹார்லிக்ஸ் மற்றும் பூஸ்ட் ஆகியவை முதல் இரண்டு இடங்களைப் பிடித்துவிட காம்ப்ளான் இப்போது மருத்துவரால் மட்டுமே பரிந்துரைக்கப்படும் பானமாக மாறிவிட்டது.
முதன்முதலாக டூ பீஸோடு குளியல்போட்ட விளம்பரம் என் நினைவு தெரிந்து இதுதான் என நினைக்கிறேன். லைப்பாய் தவிர்த்து அன்றைக்கு இருந்த பிரபலமான குளியல் சோப் இந்த லிரில் தான். இந்த லிரில் விளம்பரம் டிவியில் வரும்போதெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு இதைப்பார்க்காமல் தவிர்த்த அந்த கால நினைவுகள்.
இரண்டு கட்டைகளை பெவிக்கால் கொண்டு ஒட்டி அதை யானை வைத்து இழுத்துப்பார்த்தாலும் அறுந்துவிடாத ஒரு பிணைப்பு இந்த பெவிக்கால் . இன்றைக்கு எவ்வளவோ ஒட்டும் பசைகள் வந்தாலும் நீங்காத இடம்பிடித்துள்ள பெவிக்காலின் பழைய விளம்பரம்
இன்றைக்கு பலமுகம் மாறிவந்தாலும் அந்த பழைய தூர்தர்ஷனின் அன்றைய பிரபல சோப்புத்தூள் விளம்பரம். நிர்மாவிற்கு கடும் போட்டியாக இருந்த பளிச்சிடும் வெண்மைக்கு "சர்ப்" சோப்புத்தூளின் பழைய விளம்பரம்
இன்றைக்கும் நீங்காத அதே ரீங்காரம் நம் காதுகளில். இன்று வரை நமக்கு ஹிந்தி தெரியாவிட்டாலும் கூட அர்த்தம் தெரியாமல் அன்றைக்கு சுருதியோடு ரசித்த ஹமாரா பஜாஜ். ஹமாரா என்றால் என்னுடையது என்பது இப்போது தான் எனக்கே தெரியும். அதே நினைவுடன் இதே ஹமாரா பஜாஜ்
அன்றிலிருந்து இன்றுவரை பென்சிலில் சிறந்ததாக விளங்கும் நட்ராஜ் பென்சிலின் அழகான விளம்பரம். தூர்தர்ஷன் கடந்தும் கூட பல தனியார் தொலைக்காட்சிகளிலும் காணமுடிந்த நல்ல விளம்பரம்
விக்ஸ் மாத்திரை சாப்பிடுங்க, கிச்கிச் போக்குங்க என்று கூவிக்கூவி விற்ற மாத்திரை மிட்டாய். இன்றைக்கு ஹால்ஸ், மின்டோ ஃபிரஸ் என பல அயிட்டங்கள் வந்துவிட்டாலும் விக்ஸ் மாத்திரைக்கு இருக்கும் மவுஸூ இன்னமும் இருக்கத்தான் செய்கிறது.
அமெரிக்கா ஆதிக்க பானங்கள் ஆக்டோபஸ்ஸாக ஆக்கிரமித்திருக்கும் இன்றைய காலகட்டங்களுக்கு முந்தைய குளிர்பானங்களின் பட்டியலில் இதற்கு ஒரு நிரந்தர இடம் இருந்தது. தூர்தர்ஷனில் மட்டுமின்றி அன்றைக்கு சென்னையில் நிகழ்த்தப்பட்ட எஸ்வி.சேகர்,கிரேஸி மோகன், காத்தாடி ராமமூர்த்தி, ஒய்ஜி ஆகியோர்களின் மேடை நாடகங்களிலும் இந்த விளம்பரங்களைக் கேட்டிருக்க முடியும். அவ்வளவு பிரபலாமான கோல்ட் ஸ்பாட் குளிர்பான விளம்பரம். ஆனால் இன்றைக்கு அதன் காலி பாட்டிலைக் கூட பார்க்கமுடியவில்லை.
யாராலுமே மறக்கமுடியாத வாசிங்பவுடர் நிர்மா, வாசிங் பவுடர் நிர்மா. பாலைப் போலே வெண்மை, நிர்மாவாலே வருமே, வண்ணத்துணிகள் எல்லாம் பளபளப்பு பெறுமே, எல்லோரும் போற்றும் நிர்மா..
அன்றைக்கு இருந்த மிகச்சிறந்த இந்திய குளிர்பானங்களில் இந்த லிம்காவும் ஒன்று. பெப்ஸி, கோக்கின் போட்டியை சமாளித்து சந்தையில் நிற்க முடியாமல் அவர்களிடமே கொடுத்துவிட்ட லிம்காவின் பழைய விளம்பரம்
ஆகா! யாரால் மறக்க முடியும்? இந்த சின்னப்பிள்ளையின் ஐ லவ் யுவை. இன்றைக்கு பார்த்தாலும் அதே நினைவுகள் ரீங்காரமிடுகிறது. ஐ லவ் யு ரஸ்னா.
இந்த விளம்பரங்களோடு சேர்த்து நான் முன்னர் தூர்தர்ஷனின் பொன்விழாவை முன்னிட்டு எழுதிய சிறப்புப் பதிவு "தூர்தர்ஷனின் பொன்விழா நினைவுகள்" .
already seen this



tarpoothu varum vilamparanakalai appapaa paarkavee sakikkalai.
sorry tamil fant not working..
///ஆரோக்கிய வாழ்விற்கு ஒரு லைப்பாய்...
லைப்பாய் என்றதுமே ஆரோக்கியம் நம்மிடமே...
லை..ப்..பா..ய்...
ஆம்! அழுக்கில் உள்ள கிருமிகளை கழுவிக்களைகிறது ..லைப்பாய் சோப்.
லை..ப்..பா..ய்... ///--இத மறந்துட்டீங்களே...
லிரில் விளம்பரம்
ஐ லவ் யூ ரஸ்ணா விளம்பரம்
மறக்கவே முடியாதது.
பழைய நினைவுகளை கிளறிவிட்டீர்கள்
என்னை எனது சிறிய வத்திற்கு அழைத்து சென்று விட்டீர்கள் நன்றி..
சுவைமிகு விளம்பரங்கள்; மற்றும் இடுகை நிஜாம்!
அந்த (தூர்தர்ஷன்) காலத்தில் எங்கள் வீட்டில்
ட்டீ.வீ. கிடையாது. (எங்கள் தாத்தாவின் ஆணை)
ஆனால், நான் ரேடியோ கேட்பேன். அப்பொழுது,
சென்னை வானொலியின் விவித் பாரதியின்
வர்த்தக ஒலிபரப்பில் இந்த விளம்பரங்கள்
கேட்டிருக்கிறேன். நினைவூட்டியமைக்கு
நன்றி!
சாலிடேர்
ஒனிடா
பூஸ்ட் இஸ் த சீக்ரட் ஆப் மை எனர்ஜி
போன்றவைகளும் நினைவில் வருகின்றன
--
அது சரி
இந்த விளம்பரங்களின் இசையமைப்பாளர் யார் ??
மலறும் நினைவுகள் மறுபடியும்.
//அன்புடன் மலிக்கா said...
July 19, 2010 3:19 PM
tarpoothu varum vilamparanakalai appapaa paarkavee sakikkalai.
//
நன்றி மலிக்கா! தமிழ் எழுதியை முயற்சிக்கவும்.
///வதூவசீ said...
July 19, 2010 3:36 PM
///ஆரோக்கிய வாழ்விற்கு ஒரு லைப்பாய்...
லைப்பாய் என்றதுமே ஆரோக்கியம் நம்மிடமே...
லை..ப்..பா..ய்...
ஆம்! அழுக்கில் உள்ள கிருமிகளை கழுவிக்களைகிறது ..லைப்பாய் சோப்.
லை..ப்..பா..ய்... ///--இத மறந்துட்டீங்களே...//
நான் மறந்தாலும் தாங்கள் மறக்காமல் எடுத்து வைத்ததற்கு நன்றி சகோதரரே!
//வரதராஜலு .பூ said...
July 19, 2010 3:59 PM
லிரில் விளம்பரம்
ஐ லவ் யூ ரஸ்ணா விளம்பரம்
மறக்கவே முடியாதது.
பழைய நினைவுகளை கிளறிவிட்டீர்கள்//
நிச்சயமாக சகோதரரே! கருத்துக்கு மிக்க நன்றி!
//R. Ranjith Kumar said...
July 19, 2010 4:13 PM
என்னை எனது சிறிய வத்திற்கு அழைத்து சென்று விட்டீர்கள் நன்றி..//
நன்றி நண்பரே! ஒரு சின்ன பிளாஸ்பேக் தான். தொடர்ந்து இணைந்திருங்கள்
//NIZAMUDEEN said...
July 19, 2010 9:07 PM
சுவைமிகு விளம்பரங்கள்; மற்றும் இடுகை நிஜாம்!
அந்த (தூர்தர்ஷன்) காலத்தில் எங்கள் வீட்டில்
ட்டீ.வீ. கிடையாது. (எங்கள் தாத்தாவின் ஆணை)
ஆனால், நான் ரேடியோ கேட்பேன். அப்பொழுது,
சென்னை வானொலியின் விவித் பாரதியின்
வர்த்தக ஒலிபரப்பில் இந்த விளம்பரங்கள்
கேட்டிருக்கிறேன். நினைவூட்டியமைக்கு
நன்றி!//
நன்றி நிஜாம் பாய்!! உங்கள் கருத்தும் அருமை. இந்த விசயமாக உங்களிடமிருந்து ஒரு அனுபவ பதிவை எதிர்பார்க்கிறேன்
//புருனோ Bruno said...
July 19, 2010 9:33 PM
சாலிடேர்
ஒனிடா
பூஸ்ட் இஸ் த சீக்ரட் ஆப் மை எனர்ஜி
போன்றவைகளும் நினைவில் வருகின்றன
--
அது சரி
இந்த விளம்பரங்களின் இசையமைப்பாளர் யார் ??//
நன்றி மருத்துவர் அய்யா! நான் எவ்வளவோ முயன்றும் சாலிடர், டைனோரா மற்றும் ஒனிடாவின் (கொம்பு வைத்த மனிதன்) விளம்பரங்கள் கிடைக்கவில்லை. ரஹ்மான் நடித்த புதுப்புது அர்த்தங்கள் படத்தில் சாலிடர் டிவிக்கு இரண்டு மூன்று இடங்களில் விளம்பரம் வரும். டைனோரா சுவடே இல்லை. பழைய கபில்தேவ் நடித்த பூஸ்ட் விளம்பரம் விடுபட்டுப்போய் விட்டது. நினைவு படுத்தியதற்கு நன்றி டாக்டர்.
இந்த விளம்பரங்களில் குளோசப் விளம்பரம் மட்டும் ஏ.ஆர்.ரகுமான் இசை. மற்றவை பற்றி தெரியவில்லை. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.
//ராஜவம்சம் said...
July 19, 2010 9:59 PM
மலறும் நினைவுகள் மறுபடியும்..//
அதுதான் இந்த பதிவின் நோக்கம் நண்பரே! மலரும் நினைவுகள் என்ற பெயரில் தூர்தர்ஷனில் ஒரு நிகழ்ச்சி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. நன்றி
"ஏய் லல்லி, ஆளே வெள்ளையா கலர் மாறிட்டியே?"
"ஓ அதுவா, ஃபேர் அன்ட் லவ்லிதான் காரணம்!
நீயும் தடவு"
"பேர் என்ன லல்லி?"
"ம்ஹூம், ஃபேர் அன்ட் லவ்லி!"
இந்த விளம்பரம் இருக்கா?
அப்போது விவித் பாரதியில் தினம் திங்கள்லிலிருந்து
வியாழன் வரை 'வண்ணச்சுடர்'இல் 4 பகுதிகள் தொடர் நாடகம்
8 பகுதிகள் மேடை நாடகம் போடுவார்கள். வெள்ளிக் கிழமைகளில்
கால் மணி நேர் சிறு நாடகம் போடுவார்கள். அப்புறம் ஒன்பதரையில்
இருந்து திரைப்பட விளம்பரங்கள் 10 - 10 நிமிடங்கள்.
நான் அப்போது நாடகங்களின் இரசிகன்.
//நன்றி நிஜாம் பாய்!! உங்கள் கருத்தும் அருமை. இந்த விசயமாக உங்களிடமிருந்து ஒரு அனுபவ பதிவை எதிர்பார்க்கிறேன்//
நன்றி நண்பர் நிஜாம்.
விரைவில் எழுதுகிறேன்...
//NIZAMUDEEN said...
நன்றி நண்பர் நிஜாம்.
விரைவில் எழுதுகிறேன்...//
இதுபோன்ற நிறைய விசயங்களை உங்களிடம் எதிர்பார்க்கிறேன் பாய். தூர்தர்ஷன் மட்டுமல்ல ஆல் இந்தியா ரேடியோவைப் பற்றியும் அதன் முந்தைய ஒலிபரப்புகள் பற்றியும் எழுதுங்கள்.
//தூர்தர்ஷன் மட்டுமல்ல ஆல் இந்தியா ரேடியோவைப் பற்றியும் அதன் முந்தைய ஒலிபரப்புகள் பற்றியும் எழுதுங்கள்.//
தங்களின் அருமையான யோ(ஆலோ)சனைக்கு
மிக்க நன்றி!
நிஜாம் செம! பழைய நினைவுகள் பல வந்து விட்டன...
எந்த விளம்பரத்தை கூறுவது ..அனைத்துமே எனக்கு பிடித்தவை தான்.. ஹமாரா பஜாஜ், வாஷிங் பவுடர் நிர்மா, லிரில் ....ம்ம்ம் எதையும் விட முடியலை அனைத்தும் சூப்பர்.
ரொம்ப நன்றி இதை பகிர்ந்தமைக்கு. YouTube போன்றவை இல்லாமல் போய் இருந்தால் பல பழைய அடையாளங்களும் அழிந்தே போய் இருக்கும்.
வானொலி பற்றிய எனது அனுபவங்களை
ஓர் இடுகை போட்டிருக்கிறேன். வந்து,
படித்துவிட்டு கருத்து சொல்லுங்களேன்.
http://nizampakkam.blogspot.com/2010/08/67radiocw.html
//கிரி said...
July 31, 2010 9:08 AM
நிஜாம் செம! பழைய நினைவுகள் பல வந்து விட்டன...
எந்த விளம்பரத்தை கூறுவது ..அனைத்துமே எனக்கு பிடித்தவை தான்.. ஹமாரா பஜாஜ், வாஷிங் பவுடர் நிர்மா, லிரில் ....ம்ம்ம் எதையும் விட முடியலை அனைத்தும் சூப்பர்.
ரொம்ப நன்றி இதை பகிர்ந்தமைக்கு. YouTube போன்றவை இல்லாமல் போய் இருந்தால் பல பழைய அடையாளங்களும் அழிந்தே போய் இருக்கும்.//
மிக்க நன்றி கிரி சார். முற்றிலும் உண்மை
வாசிங் பவுடர் நிர்மா...... இனி அதுபோல் பவுடர் வருமா ? நிர்மா ..நிர்மா
இது விளம்பரம்.
இன்னிக்கி .....ஏரியல்..வாங்குங்க .....பளீர்..தராட்டி அதுக்கு நான் கியரன்டின்னு ஒரு அம்மா சொல்லுது. என்ன உலகமைய்யா இது ?
Mohamed Ayoub K