Jul 13, 2010

பல்பு வாங்கிய சிங்ப்பூர் மணி

நிஜாம் கான் @ 4:21 PM
உலகம் ஒரு பக்கம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. விஞ்ஞானம் தன் பாதையில் மிக வேகமாக பயணிக்கிறது. வானியல் சம்பந்தமாக ஒரு காலத்தில் சொல்லப்பட்ட பாட்டி கதைகளை இன்றைக்கு விஞ்ஞானம் முறியடித்து விட்டது. ஆனால் இன்னொரு பக்கம் இதைவிட வேகமாக பின்னோக்கி இழுத்துச்சென்று கொண்டிருக்கிறது. எவையெல்லாம் மூட நம்பிக்கைகள் என நிறுபிக்கப்பட்டதோ அதெல்லாம் மேலும் போட்டி போட்டுக்கொண்டு மீண்டும் முளைத்துவிட்டன. அந்த வகையில் இப்பொழுது பிரபலமாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் பால் என்ற ஆக்டோபஸ்ஸின் சாதனைகள் தான் இன்றைக்கு முக்கிய நிகழ்வாக வியப்பாக பார்க்கப்படுகிறது.


பால் என்று பெயரிடப்பட்ட ஆக்டோபஸ்ஸை வைத்து உலககோப்பை கால்பந்து போட்டிகளின் வெற்றிக்கு வைக்கப்பட்ட கணிப்புகள் அனைத்துமே உண்மையாகிப்போய் விட்டன. இந்த ஆக்டோபஸ்ஸால் எப்படி இவ்வாறு சரியாக கணிக்க முடிந்தது என்பது தான் இன்றைக்கு உலகைச் சுற்றி வட்டமடிக்கும் பிரம்மாண்ட கேள்வியாகும். இந்த ஆக்டோ கடந்த 8 ஆட்டங்களின் முடிவுகளைச் சரியாகவே கணித்தது.அதாவது ஆக்டோ இருக்கும் கண்ணாடி பெட்டிக்குள், போட்டியில் கலந்து கொள்ளும் இரண்டு அணிகளின் கொடிகளைக் கொண்ட பெட்டிகள் வைக்கப்பட்டன. இரண்டு பெட்டிகளிலுமே சமஅளவு உணவுகள் நிரப்பப்பட்டன. இப்போது விழாவின் கதாநாயகன் பால், தான் எந்தப் பெட்டியை விரும்பிச்சென்று அதை தன் கரங்களால் அணைத்து அந்த உணவுகளை கைபார்க்கிறாரோ, அந்தப் பெட்டியில் இருக்கும் கொடியுடைய நாடு அந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் என்பது தான் அவர்களின் கணிப்பு. இதேபோல கடந்த 8 ஆட்டங்களுக்கும் தலைவர் பால் மிகச்சரியாக கணித்துவிட்டார். அரை இறுதிப்போட்டியில் ஜெர்மனியுடன் நெதர்லாந்து மோதிய போது நெதர்லாந்து வெற்றியடையும் என தன் கணிப்பைச் சொன்னார். அதேபோலவே ஜெர்மனி வீழ்ந்தது. இதனால் வெகுண்டெழுந்த ஜெர்மானியர்கள் அந்த ஆக்டோபஸ்ஸை பிடித்து வறுத்துத் தின்றுவிட வேண்டும் என்றெல்லாம் கதற ஆரம்பித்தார்கள்.


                                      


ஆனால் ஜெர்மானியர்களால் ஆக்டோவுக்கு எந்த பாதிப்பும் வராமல் முழுபாதுகாப்பு கொடுப்போம் என ஸ்பெயின் பிரதமர் ரோட்ரிகஸ் சபாட்ரோ ஒரு அறிக்கையே விடுத்தார். இதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்ளாத அல்லது தெரியாத ஆக்டோ பால் தனது இருப்பிடமான அருங்காட்சியகத்தில் தன் வழக்கமான பணியை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் யார் மூன்றாம் இடத்திற்கு வருவார்கள் என்ற கணிப்பை திரு.பால் அவர்களிடம் வைக்க, ஏற்கனவே ஜெர்மானியர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட பால் போனால் போகட்டும் என ஜெர்மனியை மூன்றாமிடத்திற்கு கைகாட்டிவிட்டார். அதேபோல மூன்றாமிடத்தை ஜெர்மனி வென்றது. இதனால் கடும் கொதிப்பிலிருந்த ஜெர்மனி கால்பந்து ரசிகர்கள் கொஞ்சம் ஆறுதலடைந்தார்கள். அடுத்த வந்த இறுதிப்போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி ஸ்பெயின் உலக கோப்பையை வெல்லும் என தனது ஆருடத்தைச் சொன்னார்.


இதற்கிடையில் உலகப்புகழ் பெற்றுவிட்ட பால் ஆக்டோவுக்கு போட்டியாக சிங்கப்பூரைச் சேர்ந்த முனியப்பன் என்பவர் வளர்க்கும் மணி என்ற கிளி களத்தில் இறக்கப்பட்டது. ஏற்கனவே கிளி மணி நான்கு போட்டிகளின் முடிவுகளை சரியாக அறிவித்ததாகவும் கூறப்படுகிறது. வழக்கமாக வைக்கப்படும் கருப்பனசாமி, காளியாத்தா, மாரியாத்தா, ராமன், முருகன், முனீஸ்வரன் படங்களுக்கு பதிலாக நெதர்லாந்து நாட்டுக்கொடியும், ஸ்பெயின் நாட்டுக்கொடியும் ஒட்டபட்ட சீட்டுகள் கிளியார் மணிக்கு முன்பதாக வைக்கப்பட்டது. நாடு செழிக்க வேணும்,நல்ல குறி சொல்ல வேணும், ஆத்தாவ நேந்துக்கிட்டு அழகான சீட்டை எடு, நாளைக்கு அசத்தப்போவது யாரு, உலகையே கலக்கப்போவது யாரு, உலககோப்பையை வெல்லப்போவது யாருன்னு சளைக்காம சீட்ட எடு..சரியா கணிச்சுட்டா தங்கத்துல கூண்டு தாரேன் என வழக்கமான பல்லவியைப் பாடிவைத்து கூண்டைத் திறக்க,


 கொஞ்சமாய் சோம்பல் முறித்த மணி, "ஏன்டா நீ போடுற ரெண்டு நெல்லு மணிக்கு சீட்ட எடுக்க வாரேன், அதுக்கு இன்னாமா பில்டப்பு உடுறான் பாரு" என்று நினைத்த படியே வெளியே வந்து பார்த்த மணிக்கு கடும் அதிர்ச்சி. "என்னாடா இது வழக்காம ஒரு கட்டு சீட்டு கெடக்கும், நானும் நாலஞ்ச உருவிப்போட்டுட்டு ஒரு சீட்ட எடுத்துக் குடுப்பேன், அத கைல வச்சிக்கிட்டு வந்தவன்கிட்ட கதறகதற கதை சொல்லுவான் இந்த ஆளு, இன்னிக்கு என்னடான்னா வெறும் ரெண்டு சீட்டுதான் இருக்குது? சரி நமக்கு எதுக்கு வம்பு ஏதாவது ஒரு சீட்ட எடுத்துக் குடுத்துட்டு போயி தூக்கத்த கண்டினியு பண்ணுவோம்" அப்டின்னு நெனச்ச கிளி இங்கி பிங்கி பாங்கி போட்டுப் பாத்து ஒரு சீட்ட எடுக்க அங்க வந்தது நெதர்லாந்து கொடி. நம்ம ஊருக்கிளி நெதர்லாந்துக்கு பச்சக்கொடி காட்டிடிச்சின்னு வேகமா ஓடிப்போயி 10 டாலருக்கு சீட்டு எழுதுன கூட்டம் நிறைய. ஏற்கனவே கால்பந்து வந்தா களைகட்டும் மலேசியா, நமம் ஊரு கிளி வாக்கு குடுத்திருச்சின்னு 1000 வெள்ளிக்கு சீனன்கிட்ட சீட்டு எழுதின கூட்டம் ஏராளம்.





கடைசியா பாத்தா பால் சொன்னது பலித்தது. மணி சார் பல்பு வாங்கிட்டார். ஒருவேளை மணி சொன்னது நடந்து இருந்தால் என்ன ஆகி இருக்கும். கைல பிடிக்க முடியாத அளவிற்கு விஐபி ஜோதிடர் ஆகியிருப்பாரு முனியப்பன். மணிக்கு ராஜமரியாதை கிடைத்து இருக்கும். பால் ஆக்டோபஸ் கவனிப்பாரில்லாமல் போயிருப்பார்.


இதுமட்டுமில்லாம ஊருக்கு ஊரு ஒட்டக ஜோசியம், குரங்கு ஜோசியம் என களைகட்டிய இந்த உலககோப்பையைத் தொடர்ந்து, அடுத்த உலக கோப்பைக்கு இந்த ஐடியாக்களை பின்பற்றலாம் என எனக்குத் தோன்றியது.அதாவது நாய்ஜோசியம், கழுத ஜோசியம், எருமஜோசியம். அதாவது ஒட்டக ஜோஸியம் எப்படின்னா ரெண்டு நாட்டு கொடியையும் விரிச்சி வச்சி அதன் மேல சில பழங்களை வச்சிருவாங்க. எந்த நாட்டு கொடியில் உள்ள பழங்களை அந்த ஒட்டக்ம் சாப்பிடுதோ அந்த நாடு ஜெயிக்குமாம். அதேமாதிரி கழுதஜோசியம். கழுதை வழக்கமா படுக்குமிடத்தில் ரெண்டு நாட்டு கொடிகளையும் வச்சிடனும். எந்த கொடியின் மீது கழுதை படுக்குதோ அந்த நாடு ஜெயிச்சிடும். அடுத்து எருமை ஜோசியம். அருகருகே இருக்கும் இரண்டு சேற்றுக்குட்டைகளில் இரண்டு நாட்டுக் கொடிகள் கட்டப்படும். எந்தக் குட்டையில் சென்று எருமை புரளுகிறதோ அந்த நாடு ஜெயித்துவிடும். அடுத்து நாய்ஜோசியம். இரண்டு கரண்டு கம்பங்கள் மீது இரண்டு நாட்டு கொடிகள் கட்டப்படும். எந்த கரண்டு கம்பத்தில் நாய் மூச்சா போகுதோ அந்த நாடு ஜெயிக்கும்.


                                          
ஆக ஒரு நாட்டின் பலம். அணியின் திறமை. வீரகளின் தனித்திறமை. கைதேர்ந்த பயிற்சியாளர் என எல்லாருடைய முயற்சிகளையும், தியாகங்களையும் தூர எறிந்துவிட்டு எதுவுமே அறியாத ஆக்டோபஸ்ஸை தூக்கி தலையில் வைத்துக் கொண்டு ஆடுகிறது இந்த உலகம். ஆறறிவு உள்ள மனிதன் ஓறறிவு,ஈறறிவு பிராணிகளிடம் சென்று தன் எதிர்காலம் பற்றி கேட்கிறான். அவைகளும் தங்கள் பழக்கப்படுத்தப்பட்டது போல தங்களின் பணிகளைச் செய்கின்றன. தமிழகத்திலே இன்றைக்கு மனிதர்களின் எதிர்காலத்தை கணிப்பதில் கிளிஜோசியமும், எலிஜோசியமும் முன்னிலையில் இருக்கின்றன. இன்னும் கொஞ்ச நாட்களில் மெரினா பீச் பக்கம் நடந்தால் ஒருகுரல் கேட்க வாய்ப்பு இருக்கிறது. அது "ஆக்டோபஸ் ஜோசியம் பாக்கலியோ, ஆக்டோபஸ் ஜோசியம்......
already seen this

10 Response to "பல்பு வாங்கிய சிங்ப்பூர் மணி"

  1. vasu balaji said...

    இந்த மனுசப்பயவ பொழப்புக்கு வாயில்லாத ஜீவனுங்களைக் கூட விட்டு வைக்கிறதில்லை.

  2. அரபுத்தமிழன் said...

    :-)))

  3. அப்துல்மாலிக் said...

    அறிவு நாளுக்கு நாள் மங்குவதையே காட்டுகிறது

  4. THE UFO said...

    இதே ஆக்டோபஸ் பால், 2008-ஈரோ கப் இறுதிப்போட்டியில் ஜெர்மனிதான் ஜெயிக்கும் ஸ்பெயின் தோக்கும்ன்னு சொல்லி அப்பவே பல்பு வாங்கிடுச்சு.

    ஆனால், இரு தருணங்களிலும் இதை வைத்து பணம் பண்ணிய புக்கிகள்தான் பல்பே வாங்காதவர்கள்...
    ...'பிழைக்கத்தெரிந்த பில்லியனர்கள்'..!

  5. இனிய தமிழ் said...

    அருமையா எழுதி இருக்கீங்க...

  6. Anonymous said...

    அருமை....

  7. நிஜாம் கான் said...

    //வானம்பாடிகள் said...
    July 14, 2010 11:26 AM
    இந்த மனுசப்பயவ பொழப்புக்கு வாயில்லாத ஜீவனுங்களைக் கூட விட்டு வைக்கிறதில்லை.//

    கருத்துக்கு நன்றிண்ணே! தொடர்ந்து வாங்க‌

  8. நிஜாம் கான் said...

    நன்றி

    அரபுத்தமிழன் .
    அபுஅஃப்ஸர் ..

    தொடர்ந்து இணைந்திருங்கள்

  9. நிஜாம் கான் said...

    //UFO said...
    July 14, 2010 9:54 PM
    இதே ஆக்டோபஸ் பால், 2008-ஈரோ கப் இறுதிப்போட்டியில் ஜெர்மனிதான் ஜெயிக்கும் ஸ்பெயின் தோக்கும்ன்னு சொல்லி அப்பவே பல்பு வாங்கிடுச்சு.

    ஆனால், இரு தருணங்களிலும் இதை வைத்து பணம் பண்ணிய புக்கிகள்தான் பல்பே வாங்காதவர்கள்...
    ...'பிழைக்கத்தெரிந்த பில்லியனர்கள்'..!//

    நல்ல தகவல் நண்பரே! தொடர்ந்து இணைந்திருங்கள்

  10. நிஜாம் கான் said...

    //iniya said...
    July 15, 2010 2:54 AM
    அருமையா எழுதி இருக்கீங்க...
    rasarasachozhan said...
    July 15, 2010 2:56 AM
    அருமை....//

    நன்றி இனியா மற்றும் ராசராசசோழன். தொடர்ந்து இணைந்திருங்கள்

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,