நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரைப்படி மத்தியில் முஸ்லீம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ய்புகளில் 10% இடஒதுக்கீட்டை அமுல்படுத்தக் கோரி தமிழ்நாடு தவ்ஹீஜ் ஜமாத் சார்பில் சென்னை தீவுத்திடலில் பிரம்மாண்ட பேரணி மற்றும் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்தியாவில் வாழும் முஸ்லீம்களின் கல்வி மற்றும் பொருளாதார நிலை தலித் மக்களை விட மோசமாக இருப்பதாகவும், எனவே அவர்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் இடஒதுக்கீடு கொடுத்தால் மட்டுமே முன்னேற்றம் ஏற்படும் என்றும் மத்திய காங்கிரஸ் அரசால் நீதிபதி ராஜேந்திர சச்சார் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன் தெரிவித்திருந்தது. அதை உறுதிப்படுத்த மீண்டும் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் ஒரு குழுவை அமைத்தது காங். தனது அறிக்கையைத் தாக்கல் செய்த மிஸ்ராவும் இதையே வலியுறுத்தி முஸ்லீம்களுக்கு 10% இடஒதுக்கீடை அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் அறிக்கையை தாக்கல் செய்தார்.
காங்கிரஸின் துரோகம்:
வழக்கமாக "எல்லா விசயத்திலும்" முதுகில் குத்தி துரோகம் இழைத்து வரும் காங்கிரஸ் அரசாங்கம் இதிலும் அதே நிலையைப் பின்பற்றியது. 2004 தேர்தலில் முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு என்ற பிரச்சாரத்துடன் களமிறங்கிய காங்கிரஸ் வெற்றிபெற்றது. ஆனால் வழக்கம்போல தன் நரி வேலையைக் காட்டிய தலைமை , அடுத்த ஆட்சியில் நிச்சயம் அமுல்படுத்துவோம் என சால்ஜாப்பு வேலையில் இறங்கியது. அதையும் நம்பி மீண்டும் காங்கிரஸூக்கே வாக்களித்தது இஸ்லாமிய சமூகம். 2009ல் மிகப்பெரிய தனி மெஜாரிட்டியில் வெற்றியடைந்தது காங்கிரஸ். இந்த நிலையில் தான் ரங்கநாத் மிஸ்ரா தன் அறிக்கையை தாக்கல் செய்தார். ஆனால் எருமை மாட்டில் மழை பெய்தது போல எதையுமே கண்டுகொள்ளாமல் ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறது காங்கிரஸ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்:
இதற்கு மேல் காங்கிரஸை நம்பி பிரையோசனம் இல்லை என அதிரடியாக களமிறங்கியது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத். இந்திய அளவில் அனைத்து ஜமாத்களையும் களமிறக்கி 15 லட்சம் முஸ்லீம்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தது. ஜூலை 4ம் தேதி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று ஜூலை 4 தமிழகம் முழுவதும் இருந்த முஸ்லீம்கள் திரள் திரளாக சென்னையில் அணிவகுத்தத் தொடங்கினர். மாலை 3 மணிக்கு பேரணி துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி சென்னை பல்லவன் இல்லத்திலிருந்து பேரணி துவங்கியது. இதனால் அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமையாதலால் பயணிகளுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை(அப்படி ஏற்பட்டிருந்தால் எங்களின் வருத்தத்தை தெரியப்படுத்துகிறோம்). தமிழகம் முழுவதுமிருந்து வந்திருந்த மக்களை இறக்கிவிட்ட பிறகு பேருந்துகளை சென்னை கடற்கரைக்கு திருப்பி விட்டனர் காவல்துறையினர். நேரம் ஆகஆக கூட்டம் அதிகமாகவே 3.30க்கு பேரணி ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டமாக அணிவகுத்த மக்கள் தீவுத்திடலை நோக்கி சாரை சாரையாக நடக்க ஆரம்பித்தனர். தீவுத்திடல் மிகஅருகில் இருந்தாலும் பேரணியின் இறுதிபாகம் வந்து சேரமாலை 6 மணிக்கு ஆகிவிட்டது.ஆனால் 5 மணிக்கே திடல் நிறைந்து விட்டதால் அனைத்து வாயில்களும் அடைக்கப்பட்டன. இதனால் உள்ளே இடமில்லாமல் கூட்டம் தீவுத்திடலைச் சுற்றி சாலைகளில் அமரஆரம்பித்தது. மெரீனா சாலைகளையும் முழுமையாக ஆக்கிரமித்திருந்தனர் மக்கள்.


காங்கிரஸ் எம்.பி ஹாரூன்:
மாநாட்டின் முதல் அமர்வில் கேரளா, கருநாடகா, ஆந்திரா,மும்பையைச் சார்ந்த இயக்கத்தலைவர்கள் உரையாற்றினார்கள். இரண்டாவது அமர்வில் அரசியல் தலைவர்களை மேடையில் அமரவைத்து சகோ.பிஜே உரையாற்றினார். அழைப்பு விடுக்கப்பட்டதால் என்ன நிகழ்ச்சி என்று தெரியாமல் வந்து உக்கார்ந்து விட்டார் காங்கிரஸ் எம்.பி ஹாரூன் என்று தான் நினைக்கத்தோன்றியது. காரணம் பிஜேயின் பேச்சு முழுக்க முழுக்க காங்கிரஸை சுளுக்கெடுக்கும் விதமாகவே இருந்தது. காலங்காலாமாக முஸ்லீம்களுக்கு காங்கிரஸ் செய்துவந்த துரோகத்தை பட்டியிலிட,
எங்கே இது தன் பதவிக்கு ஆப்பு வைத்து விடுமோ என
நாடாளுமன்
ற
உறுப்பினர் ஹாரூன் நெளிய ஆரம்பித்தார். அதுமட்டுமின்றி முஸ்லீம்களை கூட்டமாக காட்டிக்காட்டியே ஒரு சீட்டும், இரண்டு சீட்டும் பேரம் பேசும் அரசியல் தலைவர்களையும் ஒட்டுமொத்தமாக ஒருபிடி பிடிக்க, மேடையில் உக்கார்ந்திருந்த முஸ்லீம் சமுதாய தலைவர்கள் முள்ளில் உக்கார்ந்தது போல நெளிந்து வளைந்தனர் (இனி தவ்ஹீத் ஜமாத் கூட்டத்திற்கு கட்சிக்காரர்கள் யாரும் வர மாட்டார்கள் என நேற்றே தெரிந்துவிட்டது).


வரும் தேர்தலுக்குள் மிஸ்ரா பரிந்துரையை அமுல்படுத்தா விட்டால் காங்கிரஸைத் தோற்றகடிக்க எங்களின் சொந்த காசை செலவு செய்து முழுபலத்தையும் பிரயோகித்து தோற்கடிப்போம் எனவும், பிஜேபி வந்தாலும் பரவாயில்லை, காங்கிரஸுக்கு சாவு மணியடிக்க இந்தியா முழுவதும் உழைப்போம் எனவும் தன் உரையில் குறிப்பிட்டார். அதே போல புதுச்சேரியில் காங்கிரஸ் அரசமைக்க இடஒதுக்கீடு தருவோம் என எழுத்துப்பூர்வ வாக்குறுதி தந்துவிட்டு இதுவரை எதையும் கண்டுகொள்ளாத காங்கிரஸுக்கு இது தான் கடைசி ஆட்சி எனவும் தெரிவித்தார். மற்ற அமைப்பினரைப் போல தாங்கள் மக்கள் கூட்டத்தைக் காட்டி சீட்டுப்பொருக்குபவர்கள் அல்ல என்றும், தங்களின் சுய தேவையைக் கூட இதை வைத்து நிறைவேற்றிக் கொள்ளமாட்டோம் எனவும் பேசினார்.அவர் பேசப் பேச இஸ்லாமிய அரசியல் தலைவர்கள் அனைவரும் அசடு வழிந்தனர். பார்ப்பதற்கு பாவமாய் இருந்தது.


ஹாரூனுக்கு செக் வைத்தபி.ஜே:
கட்சித்தலைவர்கள் யாருக்கும் பேசுவதற்கு வாய்ப்புத் தரப்படவில்லை. ஆனால் எம்.பி ஹாரூன் , தனக்கு பேச வாய்ப்புக் கேட்டு மைக் முன்னாள் வந்து தன் சிறுஉரையைத் துவக்கினார். மண்மோகன் காலத்தில்,சோனியா காலத்தில் இடஒதுக்கீடு வாங்க முடியாவிட்டால் யார் காலத்தில் வாங்குவது என தன் எஜமானர்களுக்கு சோப்பு போட்டார். தானே வலியுறுத்துவதாகவும் தெரிவித்து விட்டு அமர்ந்தார். உடனே மைக்கைப் பிடித்த பிஜே, மக்களே! பார்த்துக்கொள்ளுங்கள் நமது நாடாளுமன்ற உறுப்பினர் வாக்குறுதி அளித்துவிட்டார் என சொல்லவும், "கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டோமோ" என்ற ரீதியில் அவரைப் பரிதாபமாகப் பார்த்தார் ஹாரூன். கடைசியாக மா நாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்களின் சுருக்கங்கள்:
1) இந்தியாவின் சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றிய முஸ்லீம்களின் இன்றைய அவல நிலையை அழுத்தமாக பதிவுசெய்து, 10% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பரிந்துரைத்த நீதிபதி சச்சார், மிஸ்ரா ஆகியோருக்கு இம்மாநாடு நன்றி தெரிவிக்கிறது.
2) ஐஐடி,ஐஐஎம் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் முஸ்லீம்களுக்கு 10% இடஒதுக்கீட்டை சட்டமாக்க வேண்டும்.
3)அனைத்து மத்திய அரசுப்பணிகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் முஸ்லீம்களுக்கு 10% இடஒதுக்கீட்டை சட்டமாக்க வேண்டும்.
4) நாட்டில் நடக்கும் வகுப்புக் கலவரங்களின் போது காவல்துறை,உளவுத்துறை , மத்திய காவல்படை, இராணுவம் ஆகியவைகள் சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுவதை பல்வேறு கமிஷன்கள் ஆதாரப்பூர்வமாக சுட்டிக்காட்டியுள்ளன. எனவே இராணுவம்,உளவு உள்ளிட்ட பாதுகாப்புத்துறைகளில் முஸ்லீம்களுக்கு 20% இடஒதுக்கீட்டை சட்டமாக்க வேண்டும்.
5) அரசியல் அதிகாரத்திலும், உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றத்திலும் முஸ்லீம்களுக்கு 10% இடஒதுக்கீட்டை சட்டமாக்க வேண்டும்.
6) மத்திய,மாநில அரசுகளின் அனைத்து நலத்திட்டங்களிலும் முஸ்லீம்கள் முற்றாக புறக்கணிக்கப்படுகிறார்கள். எனவே அரசின் அனைத்து நலத்திட்டங்களிலும் முஸ்லீம்களுக்கு 10% இடஒதுக்கீட்டை சட்டமாக்க வேண்டும்.
7) உத்திரப்பிரதேசத்தில் இருப்பது போல அனைத்து மாநிலங்களிலும் முஸ்லீம் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட வேண்டும்.
8) 2004 ஆம் ஆண்டு தாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்ற காங்கிரஸின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
9) முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்க சட்டத்தில் எந்த தடையும் இல்லை என்ற மிஸ்ராவின் வாதத்தை இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது.
10) இடஒதுக்கீட்டை சட்டமாக்க காங்கிரஸ் முன்வந்தால் பாஜக,சிவசேனா தவிர அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தரும் வாய்ப்பு இருப்பதை இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது.
11) முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிப்பதை தள்ளிப்போட இனி எந்த காரணமும் இல்லை எனவும், இனி சாக்குபோக்கு சொல்வதை யாரும் நம்பமாட்டார்கள் எனவும் சமுதாயத்தின் சார்பில் தெரிவிக்கிறோம்.
12) இடஒதுக்கீட்டை அடையும் வரை எந்த தியாகமும் செய்ய இஸ்லாமிய சமூகம் தயார்
13) அடுத்த தேர்தலில் இடஒதுக்கீடு தவிர வேறு எந்த கோரிக்கையையும் கருத்தில் கொள்ள மாட்டோம்.
14) முஸ்லீம்களுக்கு தனிஇடஒதுக்கீடு அளித்து வரும் தமிழ்நாடு, கேரளா, கருநாடகா போன்று அனைத்து மாநிலங்களும் அமல்படுத்த வேண்டும்.
15) 2009 தேர்தலில் இடஒதுக்கீடு தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு இன்றுவரை ஏமாற்றிவரும் புதுவை அரசுக்கு இம்மாநாடு இறுதி எச்சரிக்கை விடுக்கிறது.
16) தமிழகத்தில் இருக்கும் 3.5% இடஒதுக்கீட்டுல் அதிகாரிகள் செய்யும் குளறுபடிகளை சரிசெய்ய இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
17) ரங்கநாத் மிஸ்ரா கமிஷனை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் 3.5% மாக இருக்கும் இடஒதுக்கீட்டை 7%மாக உயத்தித்தர இம்மாநாடு வேண்டுகிறது.
18) முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசை தமிழக முதல்வர் கலைஞர் வலியுறுத்த வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது
19) ஆங்கிலேயர்கள் காலத்தில் முஸ்லீம்களுக்கு தனிஇடஒதுக்கீடு இருந்தபோதிலும் வெள்ளையர்களை எதிர்க்கவேண்டும் என்ற நோக்கில் ஆங்கிலம் படிக்க மாட்டோம் எனவும், ஆங்கிலேயர்களின் ஆளுமையின் கீழ் வேலைசெய்ய மாட்டோம் எனவும் உதறிவிட்டு வந்த முஸ்லீம்களின் இன்றைய நிலையைக் கருத்தில் கொண்டு நியாயமான கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறது.
20) முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு தேவை என பல வகைகளிலும் குரல்கொடுத்து வரும் அனைத்து கட்சி தலைவர்களையும், சமுதாய தலைவர்களையும், இயக்கங்களையும், பத்திரிகைகளையும், எழுத்தாளர்களையும், தனி நபர்களையும் மன நிறைவுடன் இம்மாநாடு பாராட்டுகிறது. நன்றியும் தெரிவித்துக்கொள்கிறது.
21)அரசியல் சட்டம் பிரிவு 15(டி),16(4) பின்தங்கிய அரசின் கல்வி வேலைவாய்ப்புகளில் போதிய பிரதிநிதித்துவம் இடம்பெறாத வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கியுள்ளது. இதில் வகுப்பினர் என்ற வார்த்தை சிறுபான்மை மக்களைத் தான் குறிக்கும் என அரசியல் சாசனம் விளக்கமளிக்கிறது. இதை "சிறுபான்மையினர் மற்றும் பின்தங்கிய வகுப்பினர்" என தெளிவாக திருத்தம் செய்யுமாறு இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
already seen this










//14) முஸ்லீம்களுக்கு தனிஇடஒதுக்கீடு அளித்து வரும் தமிழ்நாடு, கேரளா, கருநாடகா போன்று அனைத்து மாநிலங்களும் அமல்படுத்த வேண்டும்.//
இந்த வர்யை, இன்னொரு முறை படித்து பாருங்கள்
//Adirai Express said...
இந்த வர்யை, இன்னொரு முறை படித்து பாருங்கள்//
புரியவில்லை நண்பரே! தீர்மானத்தில் அப்படித்தான் உள்ளது..விளக்குங்கள்.
pls contact me -thnking you
8124248660 ( regarding blog)
நிஜாம் பாய்,
அல்ஹம்துலில்லாஹ்.
///12) இடஒதுக்கீட்டை அடையும் வரை எந்த தியாகமும் செய்ய இஸ்லாமிய சமூகம் தயார்//
இழந்த உரிமையை இறைவன் மீட்டுக்கொடுக்க வேண்டுகிறேன்.
மாநாட்டுத்தீர்மானங்கள் அனைத்தையும் அழகாக பட்டியலிட்டதற்கு நன்றி.
மாநாடு சிறப்பாக நடந்ததுக்கு இறைவனுக்கு ந்ன்றி.
//வழக்கமாக "எல்லா விசயத்திலும்" முதுகில் குத்தி துரோகம் இழைத்து வரும் காங்கிரஸ் அரசாங்கம்//
இவனுங்களை விட்டா பிறகு, பி.ஜே.பி தான், அவனுங்க இதை விட மோசமாச்சே!
காங்கிரஸ் எவ்வளவோ பரவாயில்ல தல, இடபங்கீடு மட்டும் கொஞ்சம் அழுத்தமா கேட்டு வாங்குங்க!
//வால்பையன் said...
//வழக்கமாக "எல்லா விசயத்திலும்" முதுகில் குத்தி துரோகம் இழைத்து வரும் காங்கிரஸ் அரசாங்கம்//
இவனுங்களை விட்டா பிறகு, பி.ஜே.பி தான், அவனுங்க இதை விட மோசமாச்சே!
காங்கிரஸ் எவ்வளவோ பரவாயில்ல தல, இடபங்கீடு மட்டும் கொஞ்சம் அழுத்தமா கேட்டு வாங்குங்க!//
ஆமாண்ணே! அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. பிரதமருடன் சந்திப்பு குறித்த லிங்க் கொடுத்திருக்கிறேன் பார்த்துக் கொள்ளுங்கள்.
இதோ பிஜேபியும் தனது வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டது.
"முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்" என்று காட்டம் காட்ட துவங்கிவிட்டார்கள்.
நாலாந்தர குடிமக்களாக, சிறையில் மட்டும் அபரிதமான இடஒதுக்கீட்டுடன் இந்தியாவில் இசுலாமிய சமூகம் வாழ்ந்து வருகிறது. ஒரு சமூகம் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேற்றம் காண இடஒதுக்கீடு தாருங்கள் என்பது பிஜேபிக்கு குற்றமாக தெரிகிறது. முஸ்லிம் என்றால் ஏன் இந்த குரோதமும் வெறுப்பும்? யார் வளர்த்தது? எப்படி விதைக்கப்பட்டது?
//மற்ற அமைப்பினரைப் போல தாங்கள் மக்கள் கூட்டத்தைக் காட்டி சீட்டுப்பொருக்குபவர்கள் அல்ல என்றும், தங்களின் சுய தேவையைக் கூட இதை வைத்து நிறைவேற்றிக் கொள்ளமாட்டோம் எனவும் பேசினார்.//
மக்களின் இந்த நம்பிக்கை தான் இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தை கூட்டுவதற்கு சாத்தியமாயிற்று.
அஸ்ஸலாமு அழைக்கும்
அன்பின் சகோதரர் நிஜாம் அவர்களுக்கு,
அல்ஹம்துலில்லாஹ். எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே. இதுவரை சென்னை மாநகரம் காணாத மக்கள் திரள். இலட்சக்கணக்கில் கூடினாலும் சிறு அசம்பாவிதம் கூட ஏற்படுத்தாத கட்டுக்கோப்பான கூட்டம். குவாட்டருக்கோ நோட்டுகளுக்கோ கூடாமல் தம்முடைய இலட்சியத்திற்காக கூடிய மக்கள் கூட்டம். தங்களை வைத்து ஒட்டு பொறுக்காது தவ்ஹீத் ஜமாஅத் என்று நம்பி தான் அடித்தட்டு மக்களும் ஜமாத்தின் கொள்கைகளுக்கு மாற்று கருத்து உள்ளவர்களும் அணியணியாய் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். கண்டிப்பாக இந்த நம்பிக்கையை ஜமாஅத் கடைசி வரை காப்பாற்ற வேண்டும். அதற்காக இறைவனிடம் நாம் பிரார்த்திப்போம். இந்த மாநாட்டிற்காக எண்ணற்ற பலர் பலவிதமான கஷ்டங்களை அனுபவித்துள்ளனர். அவர்களையும் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவு கூறுவோம். சென்னை காவல்துறையோ இந்த மாநாட்டை சீர்குலைக்க மாநாட்டின் முதல் நாள் இரவிலிருந்தே சில சதிசெயல்களை அரங்கேற்றியது. இவை எல்லாவற்றையும் மீறி ஏக இறைவனின் அருளால் மாநாடு வெற்றிகரமாக முடிந்திருக்கின்றது. கூடிய விரைவில் மாநாட்டின் நோக்கம் நிறைவேற பிரார்த்திப்போம்.
மிக்க நன்றி
உதயம்
வ.அன்சாரி
பி.ஏ.ஷேக் தாவூத்
அல்ஹம்துலில்லாஹ்.
இடஒதுக்கீட்டுக்காக பாடுபட்ட அனைத்து சகோதர உள்ளங்களுக்கும் ஜெசாக்கல்லாஹூ ஹைரான்.
இயக்கம் சார்பாக பிரியாம்ல் ஒற்றுமையாக கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் மாஷா அல்லாஹ்!!