பாடல் வெளியீட்டு விழா, பின்னனி இசை வெளியீட்டு விழா, ஸ்டில்ஸ் வெளியீட்டு விழா, டிரைலர் வெளியீட்டு விழா, போஸ்டர் வெளியீட்டு விழா என இன்னமும் எத்தனை விழாக்களை நடத்தப்போகிறார்களோ தெரியவில்லை எந்திரன் குழுவினர். எந்திரன் எனும் படத்தை வைத்துக் கொண்டு அவர்களுடைய தினசரி, வாரந்தரி இதழ்களில் பக்கம் பக்கமாக படம் போட்டும் அவர்களது தொலைக்காட்சிகளில் நிமிடத்திற்கு நிமிடம் விளம்பரம் செய்தும் எந்திரன் குறித்த ஒரு வெறுப்பையே உண்டாக்கி விட்டார்கள். போட்ட காசை இவர்கள் விளம்பரம் செய்து விற்பனை செய்யும் பத்திரிகைகளிலே அள்ளிவிட்டார்கள் போலும். இவ்வளவு பிரமாதமான வியாபார யுக்திகளைக் கையாண்டு இப்போது அதை ஒரு வகையாக வெற்றிப்படமாகவே ஆக்கிவிட்டார்கள்.
ஜெமினியின் தயாரிப்பிலே துவங்கிய எந்திரன் இயக்குனர் ஷங்கரின் ஏகபோக செலவினால் அதை செக்கண்ட் சேல்ஸ் செய்ய முடிவு செய்து சன் பிக்சர்ஸிடம் தள்ளிவிட்டார்கள். சாதரணமாகவே காற்றிலே வெண்ணை எடுக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் இதை எப்படி எந்தவித லாபமும் இன்றி வாங்குவார்கள் ? அவர்களது சிந்தனையின் வெற்றியை இன்றைக்கு தமிழக மக்கள் அவர்களுக்கு பரிசாக வழங்கிவிட்டார்கள் என்றால் மிகையாகாது. அந்த அளவிற்கு எந்திரனை முன்னிருத்தி அவர்கள் செய்த விளம்பரங்கள் சொல்லி மாளாது.
சாதாரண ரஜினி படங்கள் ரிலீசுக்கும் இந்த சன் பிக்சர்ஸின் எந்திரன் ரிலீசுக்கும் ஏகப்பட்ட வேற்றுமை இருப்பதை கண்கூடாக காணமுடிந்தது. ஆமாம். இதில் முழுக்க முழுக்க ரஜினியோடு சேர்த்து சன்பிக்சர்ஸையும் துதிபாடியதை கண்கூடாக காணமுடிந்தது. ஊர் ஊராய் படம்பிடித்த காட்சிகள் இதை முழுமையாக உறுதிபடுத்தியது. முன்னர் சன்பிக்சர்ஸ் வெளியிட்ட வில்லு திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய பிரபலங்கள் வாயிலிருந்து சன் பிக்சர்ஸ் என்ற பெயர் வந்ததும், கேமிரா நேராக பால்கனியை நோக்கிப் பாயும். அங்கே இருக்கும் பலர் ஓ வென சப்தமிடுவார்கள். அப்போதே தெளிவாகப் புரிந்து விட்டது, இது அவர்களே கூலிக்குப் பிடித்த கூட்டம் என்பதை. இதே வேலை எந்திரனின் ஒவ்வொரு வெளியீட்டுக்கும் செய்யப்பட்டது.ஆக சன் பிக்சர்ஸை முன்னிருத்துவதும் அவர்களின் நோக்கமாக இருக்கலாம்.
அதெல்லாம் சரி! எந்திரன் திரைப்படத்தின் வெளியீட்டு விழாவில் ரஜினியின் ரசிகர்கள் செய்த முட்டாள் தனங்களை இப்போது நினைத்தாலும் வெறுப்புடன் கூடிய சிரிப்புதான் வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை இன்னமும் ஒரு வேளை உணவு உறுதிசெய்யப்படாத எத்தனையோ மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இன்னமும் ஒரு வேளை பால் கிடைக்காமல் கார்ப்பரேசன் தண்ணீரை அல்லது டீக்கடைகளில் விற்கும் தண்ணீர் கலக்கப்பட்ட மட்டமான ஒரு கிளாஸ் பாலை மட்டுமே உணவாகக் கொண்டு வளரும் குழந்தைகள் எத்தனை எத்தனையோ! ஆனால் அதைப் பற்றியெல்லாம் துளியும் கவலைப்படாத இந்த ரசிக கண்மணிகள் எந்திரன் படம் போட்ட பிளக்ஸ் பேனர் மீது குடம் குடமாக பாலை ஊற்றிய காட்சியைப் பார்த்தோம். சூடம் ஏற்றி தீபாராதனை காட்டிய காட்சிகளும், மலைமலையாய் தேங்காய் உடைத்த காட்சிகளும் அரங்கேறிய முட்டாள் தனத்தைக் கண்டோம்.
இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் தென்மாவட்டங்களில் அலகு குத்தி, காவடி எடுத்து, பால்குடம் எடுத்து, முளைப்பாரி வைத்து கும்மியடித்த கொடுமைகளையும் கண்கூடாக கண்டோம். என்ன தீ மட்டும் தான் மிதிக்கவில்லை. அதை ஏன் மறந்தார்கள் என்பது தெரியவில்லை. முதல் நாள் முதல் ஷோ டிக்கெட்டினை அதிகபட்சமாக ரூபாய் 3000 கொடுத்து ஒரு மாவட்டத்தின் (அநேகமாக வேலூர் என நினைக்கிறேன்) ரஜினி மன்ற தலைவர் பெற்றுக்கொண்டார். இதில் என்ன எழவு பெருமை என தெரியவில்லை. இதை பின் தொடர்ந்து வந்த ரசிக கண்மணிகள் எந்திரன் வெளியாகி 10 நாள் வரையிலும் குறைந்தபட்சம் 200 முதல் அதிகபட்சம் 300 வரை கொடுத்து வாங்கி அந்த படத்தைப் பார்த்தார்கள். இதையெல்லாம் செய்தவர்கள் படிக்காத பாமரர்கள் அல்ல. எல்லாமே ஓரளவிற்கு படித்த இளைஞர்கள் தான்.
இதையெல்லாம் மிஞ்சும் விதமாக பெங்களூரில் உள்ள ஒரு ஐடி பார்க்கில் உள்ள மென்பொருள் பொறியாளர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள். ஆக இது போன்ற முட்டாள் தனமான காரியங்களை செய்தவர்கள் அனைவருமே பெரியார் கண்ட பகுத்தறிவுவாதிகள் தான். இவ்வளவு மோசமாக கீழ்த்தரமான செயலை யாருக்காகவோ செய்யும் இவர்கள் செய்த வீண் விரயச் செலவுகளை வைத்து எத்தனையோ வசதியில்லாத ஏழை மாணவர்களின் படிப்புச் செலவுக்கு உபயோகப்படுத்தி இருக்கலாம். ஒருவருக்கு கல்வி வழங்குவது அவருக்கு கண் வழங்குவது போல என்பதை ரஜினி ரசிகர்கள் அறிந்திருக்க மாட்டார்கள் போலும்.அல்லது பசியால் வாடும் எத்தனையோ ஏழைகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கியிருக்கலாம்.இதையெல்லாம் விடுத்து அந்த ஒரு நாள் கூத்துக்கு தன் சொந்த காசைப் போட்டு யாருக்கோ புகழ்பாடும் இவர்களை எங்கு கொண்டு பொய் சேர்ப்பதோ தெரியவில்லை..
எதிர்காலம் இளைஞர்கள் கையில் என்ற முதுமொழிக்கும் , இளைஞர்களை கனவு கானுங்கள் என்ற டாக்டர் அப்துல் கலாமின் வார்த்தைகளுக்கும் சிறப்பான டெமோவைக் காட்டிவிட்டார்கள் தமிழக இளைஞர்கள். பாரத சமுதாயம் வாழ்கவே!!!
already seen this







150 கோடி பணம் ஒரு வீண் செலவு
நம்ம ஊர்ல இன்னும் படிக்காத படிக்க முடியாத நிலைல இருக்க
ஒரு 1000 மாணவர்களை படிக்க வைத்து இருக்கலாம்.
சூப்பர் ஸ்டார்,சன் டிவி போன்ற பணம் இருக்கும் இடம் பணம் பெருகும்.,
அனைத்து நடிகர்களும் சூர்யாவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையை
சூர்யா - அஹரம் - விதை
http://enpakkangal-rajagopal.blogspot.com/2010/10/blog-post_3041.html
இது டமிலர் கலாச்சாரதுல ஒன்னாச்சே நிஜாம். எந்த எளவு மாறினாலும் இதுமட்டும் மாறாது.
enna oru vayitherichchal..!
இந்த மாதிரி அநாச்சாரங்களைச் செய்வதில், சிலசம்யம் படித்தவர்கள் படிக்காதவர்களை மிஞ்சி விடுகிறார்கள்.
super
U r just reflecting my mind Nijam. i propagate my friends not to watch this movie on theatre. who listens???
கருத்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் என மணமார்ந்த நன்றி
வாழ்க வாழ்க பாரத இளைஞர் சமுதாயம் வாழ்கவே!!!@@@@@
yendhiran is good...ameazing........