தமிழக மக்களை சிரிக்க வைக்கிறது
நகைச்சுவை சேனல் ஆதித்யா - ஆனால்
சிலநாட்களாய் தமிழகத்தை தவிக்க வைத்தான்
இந்த ஆதித்யா..
அரும்பாய் குறும்பாய் திரிந்து
கவலைகளின் தொடக்கத்தை தொடாமல்
குட்டியாய் சுட்டியாய் சுற்றி வந்தவன்
பெட்டிக்குள்ளே பிணமாக..
நல்லக்காதலே நாசமாகி விட்டபோது
கள்ளக்காதலால் கர்ப்பமடைந்த சதிகாரச்
சண்டாளியின் கருவறுப்புக்கு கதிராய்
அமைந்தான் இவன்..
என்ன பாவத்திற்கு தண்டனை இது என
தெரியாமல் தவியாய் தவித்து தன்னுயிரை
மாய்த்துக் கொண்டான் தன் தந்தையின்
தவறுக்காக..

பொருப்பில்லாத தந்தைக்கு தண்டனை தர
கருப்பு பையால் சுற்றி கடலிலே வீசிவிட
பாண்டி சென்றவளுக்கு தாண்டி வந்த பாதை
தவறென தெரியவில்லை..
சென்னைக்குள்ளே சுற்றி வந்த சிறுவண்டை
வண்டியேற்றி நாகைக்கு அனுப்பினாள்.முதன்
முறையாகவே முறையற்ற பயணம் மேற்கொண்டான்
சடலமாக நாகை நோக்கி..
யாருமே வராத இடத்திற்கு தனிமைப் பயணம்
மேற்கொண்டு பரிதாபமாக பஸ் நிலையத்தில்
ஆதரவின்றி..பரிதவிக்கும் பெற்றோரை பிரிந்த
அனாதையாக..
அம்மா! நான் பஸ் நிலையத்தில் கிடக்கும்
பெட்டிக்குள்ளே பிணமாக இருக்கிறேன்..வந்து
இதையாவது மீட்டுச் செல்லம்மா! என யாரிடமும்
தூது விடமுடியாமல்..
காணாத பிள்ளை கிடைத்துவிடுவான் என்ற
காவல்துறையின் ஆறுதல் ஆனந்திக்கு..
ஆனாலும் என் பிள்ளை எங்கே இருக்கிறான்
என்றே தவிப்பாய்..
சாப்பிட்டானா தூங்கினானா என நினைத்து
நினைத்து தன் தூக்கமும் சாப்பாடும் இழந்து
பரிதவித்த தாய், என்னேரமும் நல்ல செய்தி
வருமென நினைத்து..
பிள்ளையைக் கொன்று விட்டு தந்தையோடு
சேர்ந்து தானும் தேடி திரிந்து..ஒரு பக்கம்
பயம், மறுபக்கம் பழிவாங்கிய மகிழ்ச்சி
மனத்துடன் அவள்..
பார்க்கும் லட்சம் கண்களில் என் அம்மாவின்
இரண்டு கண்கள் இருக்காதா என கடைசி ஆவலாய்
பத்திரிகைகளில் இல்லங்கள் தோறும் பிணமாய்ப்
பிரவேசித்த மகன்..
ஈ எறும்பு கடிக்க விடாமல் பொத்தி
பொத்தி வளர்த்த மகன் பொட்டிக்குள்ளே
ஈக்கள் மொய்க்க மொய்க்க மடங்கி கிடந்ததை
தாளாத தாய்..
ஒரு வினாடி பிரியாமல் இருந்த மகன்
மொத்தமாக விடை கொடுத்தான்..சென்னை
வீதிகளில் மட்டும் வலம் வந்த அவன் நாகைக்கு
ஏன் சென்றான்?..
ஒரு பூவைக் கருக்கி விட்டு மன்னிப்பு தேடி
கோவில் கோவிலாக அலைந்த அவளுக்கு இனி
மன்னிப்பு என்பதே மறக்கடிக்கப் பட வேண்டும்
மற்றவர்களுக்காக……
already seen this



மனதை உருக வைத்த சம்பவத்தை
மனத்தை உருக்கும் வண்ணம்
படைத்தீர்கள், வசனக் கவிதையாய்!
அஞ்சலிக் கவிதை!
கண்ணீரை வரவழைக்கிறது உங்கள் கவிதை....மகனை இழந்த அந்த தாயின் சோகம் உங்கள் வரிகளிலும்.... ஈடு செய்யவே முடியாத இழப்பு !!
//NIZAMUDEEN said...
July 22, 2010 9:35 PM
மனதை உருக வைத்த சம்பவத்தை
மனத்தை உருக்கும் வண்ணம்
படைத்தீர்கள், வசனக் கவிதையாய்!அஞ்சலிக் கவிதை!//
நன்றி நிஜாம் பாய். தொடர்ந்து இணைந்திருங்கள்
//Kousalya said...
July 23, 2010 3:38 PM
கண்ணீரை வரவழைக்கிறது உங்கள் கவிதை....மகனை இழந்த அந்த தாயின் சோகம் உங்கள் வரிகளிலும்.... ஈடு செய்யவே முடியாத இழப்பு !!//
நன்றி சகோதரி! நிச்சயமாக ஒரு தாய்க்கு ஈடு செய்ய இயலாத பெரிய இழப்பு
:(
முள்லாய் தைக்கிறது கவிதையும் நிகழ்வும்..
நன்றி வால்பையன்..
நன்றி ராஜராஜ சோழன்