Aug 19, 2010

இஸ்லாமியர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்

நிஜாம் கான் @ 3:40 PM
அன்பு சகோதரர்களே!

நம் அனைவரின் மீதும் அமைதி நிலவட்டுமாக. நாம் இப்போது புனிதம் மிக்க ரமலான் மாதத்திலே பயணம் செய்து கொண்டு இருக்கிறோம். இந்த மாதத்தில் அதிக அதிகமாக இறைவணக்கத்தில் ஈடுபடுவதும், இல்லாத ஏழை எளிய மக்களுக்கு நம்மாள் எவ்வளவு முடியுமோ அதற்கும் மேலாக அள்ளிக்கொடுத்தும் இந்த மாதத்தின் கண்ணியத்தை நாம் நிலை நாட்ட வேண்டும். இந்த ரமலான் முழுக்க முழுக்க எனக்கே உரியது என்றும் அதற்கான கூலியை நானே தருகிறேன் என்றும் இறைவன் தன் திருமறையிலே தெரிவிக்கிறான். ஆகவே இந்த நேரத்தில் நாம் பொருமையை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்தவோ, யாரையும் சண்டைக்கு இழுக்கவோ கூடாது. மற்ற நேரங்களில் உங்களுடன் சண்டைக்கு வந்தால் நீங்கள் திருப்பி சண்டை செய்ய அனுமதி உண்டு. ஆனால் இந்த மாதத்தில் அவ்வாறு யாராவது சண்டைக்கு வந்தால் நான் நோன்பாளி என்று சொல்லி ஒதுங்கிக்கொள் என திருத்தூதர் முகமது நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மீண்டும் கிளப்பப்படும் வெறி:

பதிவுலகில் கொஞ்ச நாள் தணிந்திருந்த மதவெறியை தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத வழக்கமான கும்பல் மீண்டும் துவக்கிவிட்டது. இவர்கள் தங்களை நாத்தீகவாதிகள் போல சித்தரித்துக் கொண்டாலும் இவர்கள் யாருமே நாத்தீகவாதிகள் கிடையாது. இவ்வாறு நான் சொல்லக் காரணம் அவர்கள் நாத்தீகவாதிகளாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் எழுதும் பதிவுகளில் எல்லா மத கடவுள்களும் குறிப்பாக அதிகஅதிகமாக அவர்களின் பிறப்பு மதம் சார்ந்த கடவுள்கள் தாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் முழுக்க முழுக்க தாக்கப்படுவது இஸ்லாமும், இஸ்லாமிய கடவுளும், இஸ்லாமிய தூதரும் மட்டும் தான். ஆக நாத்தீகன் என்பது ஒரு பச்சை வேசம் என தெரிந்து விட்டது. இவர்கள் உண்மையான ஹிந்துக்களும் கிடையாது. அப்படியென்றால் இவர்கள் என்ன வகை? 



தாங்கள் கடவுளாக வணங்கும் சிலைகளின் மீது செருப்புமாலையைப் போட்டு  விட்டுஅதை அடுத்த நாள் கலவரமாக்கி முஸ்லீம்களின் மீது போர் தொடுத்த கோவை காவித்தொண்டர் சுப்பிரமணியத்தின் வழித்தோன்றல்கள். நான் இங்கே கோவையை மட்டும் குறிப்பிட முக்கிய காரணம் அந்த சம்பவம் தான் கொஞ்ச சமீபத்தில் நடந்தது. இவர்கள் ஹிந்துக்கள் இல்லை என நான் சொல்லியதற்கு காரணம், ஹிந்துக்கள் யாரும் தாங்கள் தெய்வமாக வணங்குபவற்றை இழிவுபடுத்த மாட்டார்கள். ஆக இவர்களின் முழுமையான நோக்கம் இஸ்லாமியர்களிடத்திலே வெறியைத்தூண்டி அவர்களை கலவரக்காரர்களாக தீவிரவாதிகளாக சித்தரிப்பதுமட்டுமே. மாலேகான் பெண் சாமியார் பிரக்யா சிங் போன்றவர்கள் பெரிய அளவில் செய்யும் வேலைகளை இவர்கள் இங்கே சிறிய அளவில் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

எல்லாமே அறைகுறை தான்:

சம்பந்தப்பட்ட பதிவுகளில் எழுதுபவர்களின் எழுத்துக்களைப் படிக்கும் போது இவர்களை பெரிய அறிஞர்கள் என நீங்கள் நினைத்துக் கொண்டால் உங்களைப் போன்ற முட்டாள்கள் இந்த உலகத்திலேயே இல்லை. அனைத்துமே அறைகுறைகள் தான். நான் குரானைப் படித்துவிட்டேன், பைபிளைப் படித்துவிட்டேன், கீதையை படித்துவிட்டேன் என சும்மா சொல்வார்கள். ஆனால் இவர்கள் குரானையும் பார்த்திருக்க மாட்டார்கள், பைபிளையும் பார்த்திருக்க மாட்டார்கள். தங்களுக்கு தேவைப்படும் போது ஏதாவது ஒரு பகுதியில் இருந்து பாதியைப் படித்துவிட்டு அதற்கு தங்களுக்கு தோன்றும் வியாக்கியானத்தைக் கொடுத்து விட்டு அதை வைத்து ஒரு ஆட்டம் ஆடி மகிழ்பவர்கள். கீழிறங்கி பச்சையாக சொல்லப்போனால் குடிசைகளுக்கு நெருப்பு வைத்து விட்டு அங்கே உயிர்பிழைக்க ஓடிக்கொண்டிருப்பவர்களை, தங்கள் வீட்டு மாடியின் மீது அமர்ந்து ரசிக்கும் வக்கிரம் பிடித்தவர்கள். அடுத்த நாள் செய்தித்தாள்களிலும் மீடியாக்களிலும் வரும் செய்திகளைப் பார்த்து விட்டு இதுபோல ஏதாவது சூடான செய்தி டெய்லி வந்தாதான் சுவாரஸ்யமாக இருக்கிறது என சொல்லிக்கொள்பவர்கள். பலி 10 பேர் தானா? நான் ஒரு 50 பேராவது எதிர்பார்த்தேன் என அதிலும் கணக்கு போடுபவர்கள்.

கோவை கலவரம்:

கோவை குண்டுவெடிப்பு எல்லாருக்கும் தெரியும். இஸ்லாமிய தீவிரவாதிகள் செய்தது. ஆனால் அதற்கு முந்தைய கோவை கலவரம் எத்தனை பேருக்குத் தெரியும்? அதை செய்த தேசியவாதிகள் யார்? கோவை குண்டுவெடிப்பு ஏன் நடந்தது? அதற்கான புள்ளி எங்கே வைக்கப்பட்டது? என அடுக்கடுக்கான‌ கேள்விகளுக்கு எத்தனை பேருக்கு விடை தெரியும்? கோவையில் நடந்த குண்டு வெடிப்பு எவ்வாறு காட்டுமிராண்டித் தனமானதோ அதேயளவு கண்டித்தக்கது தான் முந்தையதும். கோவை முந்தைய கலவரத்தை முன்னின்று நடத்திய தேசியவாதிகளால்கொல்லப்பட்டவர்களில் இஸ்லாமியர்களும் இருந்தார்கள், ஹிந்துக்களும் இருந்தார்கள். ஆக அவர்களின் நோக்கம் உயிர்பலி தானேயன்றி மதமல்ல. இந்த சம்பவத்தால் தூண்டப்பட்ட வெறியால் தான் கோவை குண்டுவெடிப்பு நடந்தது என்பது அனைவருமே அறிந்ததே! கொலை செய்பவனை விட அதைத் தூண்டுபவனுக்குத் தான் தண்டனை அதிகம் என இந்திய சட்டம் சொல்கிறது. அந்த தூண்டும் வகையைச் சார்ந்த சிலரின் எழுத்துக்களுக்கு பதில் சொல்கிறேன் என நினைத்து அந்த சதியிலே நம் சகோதரர்கள் சிக்கிக் கொள்ள வேண்டாம் என வேண்டுகோள் வைக்கிறேன்.

டாக்டர் அப்துல்லாஹ்:

ஒருமணி நேரம் பேசுவதற்கு 1 லட்ச ரூபாய் வாங்கிய‌ ஒரு சிறந்த பேச்சாளர். ஒரு சிறந்த மனோதத்துவ நிபுணர். ஒரு ஆராய்ச்சியாளர். அவரின் பத்து வருட ஆராய்ச்சியின் முடிவு அவரை இஸ்லாத்தின் பால் இணைத்து விட்டது. நண்பர்களே! பெரியார்தாசன் போன்ற அறிஞர்கள் அல்லது பேச்சாளர்கள் எல்லா மத நூல்களையும் முழுமையாக படிப்பவர்கள். அதனோடு இதை ஒப்பிடுபவர்கள். அவர்களைப் போன்ற பேச்சாளர்கள் ஆராய்ச்சியாளர்கள் எல்லாவற்றையும் முழுமையாக படித்து குரானிலே தவறு இருக்கிறது, ஹதீஸ் இப்படி கூறுகிறது, முகமது இறக்கும் தருவாயில் தன் மனைவியுடன் மௌத் கிஸ் அடித்தார் (நவூதுபில்லாஹ்) என எழுதினாலோ அல்லது பேசினாலோ அவர்களைப் போன்ற அறிவாளிகளிடத்திலே உங்களின் வாதங்களைப் புரியுங்கள். உங்கள் வாதங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களை அதை ஏற்றுக்கொள்வார்கள் அத்தோடு மாற்றிக்கொள்வார்கள். அதை விடுத்து எதுவுமே தெரியாத அறைகுறை மாக்களிடம் உங்களின் அறிவுமிகுந்த வாதங்களை எடுத்துவைத்து அதை தொடர் விவாதமாக்கி உங்களின் பொன்னான நேரத்தை வீணடிக்காதீர்கள்.

அதாவது மூன்று பேர்களிடம் வாதம் செய்யமுடியாது. 1) அரசன் 2) அடிமுட்டாள் 3) பைத்தியக்காரன். நீங்கள் வேலை மெனக்கெட்டு வாதம் செய்பவர்களில் யாருமே அரசன் இல்லை. அப்படியானால் என்ன வகை என்று தெரிந்துமா அவர்களிடம் உங்களின் நேரத்தை வீணடிக்கிறீர்கள்?

பொருமையை கடைபிடிப்போம்:

அவர்கள் தொடர்ந்து எதை வேண்டுமானாலும் எழுதட்டும். யாரைப்பற்றி வேண்டுமானாலும் எழுதட்டும். இனி யாருக்கும் கோபம் வரக்கூடாது. இரத்தம் கொதிக்கக்கூடாது. அவர்கள் எழுதுவதால் அவர்களைச் சார்ந்தவர்களில் சிலர் மட்டுமே அதனால் மகிழ்ச்சியடைவார்கள்.இறைவனின் ஏகத்துவ ஒளியை தங்களின் வாய்களால் ஊதி அணைக்க நினைக்கிறார்களா என இவர்களைப் பற்றிய வசனம் ஏற்கனவே இருக்கிறது. இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுப்பதற்காக தங்களின் பொருளாதாரங்களை கொட்டி செலவு செய்யும் அமெரிக்கா,ஐரோப்பா, பிரிட்டன் போன்ற நாடுகளில் அரசால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இஸ்லாத்தின் வளர்ச்சி இருப்பதைக் கண்டு அந்த நாடுகள் விழிபிதுங்குகின்றன. அந்த உலகலாவிய வளர்ச்சியை ஒரு கீ போர்ட்டில் டைப் செய்து தடுத்துவிடப்போகிறார்களா இவர்கள்? அதேநேரம் அவர்கள் நேரடியாக மக்கள் மன்றத்தில் வைத்து விவாதிக்க தயாராக இருந்தால் அந்த நல்ல சந்தர்ப்பத்தை விட்டுவிட வேண்டாம். அப்படி யாராவது தயாராய் இருந்தால் உடனடியாக என்னை தொடர்பு கொள்ளலாம்.

முகமது நபியவர்கள் ஒரு காமவெறியர் என்று , முகமதுவைக் கொல்லத் துடித்த அபுஜஹீலிடம் சென்று யாராவது சொன்னால் சொன்னவனைப்பைத்தியக்காரன் என்பானாம் அபூஜஹீல். அன்று முதல் இன்று வரை முகமது நபியவர்களை
இழிவுபடுத்த வேண்டும் என துடிதுடித்து ஆய்வில் இறங்கியவர்கள்கடைசியில் இஸ்லாத்திடம் சரணடைந்த நிகழ்வுகள் நம் கண்முன்னால் நடந்தவை. "தி ஹன்ட்ரட்" (உலகின் 100 சிறந்த மனிதர்கள்) என்ற நூலை எழுதிய ஒரு கிருத்தவ எழுத்தாளர் அதிலே முதலிடத்தில் முகமது நபியை வைத்து விட்டு அவர் கடவுளாக வணங்கும் இயேசுவை மூன்றாவது இடத்திலே வைக்கிறார். இதை விடவா சிறந்த உதாரணம் வேண்டும்?

பொதுக்கழிப்பிடம்:

இவர்கள் நேரடியாக இறைவனிடம் போர் புரியத்துடிக்கிறார்கள். அவர்களுடன் அவனே போர் செய்யட்டும். அதனால் தயவுசெய்து இஸ்லாமிய நண்பர்கள் அவர்களுடன் வாததில் ஈடுபடவேண்டாம் என அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறேன். காரணம் நம் இறைவசனங்களும், தூதரின் நடைமுறையையும் அங்கே சென்று நாம் பதிவது ஏதோ பொதுக்கழிப்பிடத்தில் அடுப்புக்கரியால் எழுதும் வாசகங்களைப் போல அறுவருப்பாய் தோன்றுகிறது. அதாவது பொதுக்கழிப்பிடத்தில் நீங்கள் திருக்குரான் வசனத்தை எழுதிவைக்க வேண்டாம் என சொல்கிறேன். அது பொதுகழிப்பிடம். அங்கே இருப்பவர்கள் அந்த வாசனையில் சோறு சாப்பிடக்கூடிய்வர்கள். அவர்களிடம் நீங்கள் வாதத்திற்கு போனால் அவர்கள் அங்கே கிடப்பதை எடுத்துத் தான் உங்கள் மீது வீசுவார்கள். அப்போது அந்த வாடை உங்கள் மீதும் வீசும். வெளியே இருந்து பார்ப்பவர்கள் இரண்டிலும் அதே வாடைதான் வீசுகிறது என உங்களையும் வெறுப்பார்கள்.

அம்மா..அக்கா..மனைவி:

அவர்கள் உங்களின் மீது ஏற்றிவிடும் வெறியை நீங்கள் தணித்துக்கொள்ள தேடுவது அவர்களின் தாய், சகோதரி, மனைவியை. உங்களை ஒரேயொரு ஜோடியில் இருந்து படைத்தேன் என இறைவன் சொல்கிறான். அப்படியானால் நாம் அவர்களின் தாயையும், மனைவியையும் பழிப்பது நம் தாயையும் மனைவியையும் பழித்தது போலத்தான். அவர்கள் நம்முடைய சகோதரர்கள். அவர்களின் அம்மா நமக்கும் அம்மா. அவர்களின் மனைவி நமக்கு சகோதரி. உங்கள் சகோதரியைப் பற்றி நீங்கள் எதை எழுதமாட்டீர்களோ, அதேபோல அவர்களின் குடும்பப் பெண்களைப் பற்றியும் எதுவும் எழுதாதீர்கள். காரணம் நாளையே அவர்களை உங்களை விட சிறந்த சமுதாயமாக இறைவன் மாற்றிவிடுவான். எனவே நண்பர்களே! அவர்களின் நோக்கம் நன்கு தெளிந்த நீரோடையாக இருக்கிறது. அவர்கள் என்ன வேண்டுமானாலும் எழுதிவிட்டுப் போகட்டும். நாம் பொருமையை மேற்கொள்வோம். இறைவன் பொருமையாளர்களுடன் இருக்கிறான்.

முக்கிய குறிப்பு: இந்தப் பதிவில் நான் யாருடைய பின்னூட்டத்தையும் வெளியிடப்போவதில்லை. யாருக்கும் பதில் சொல்லப்போவதில்லை. அதேபோல எதிர்பதிவு போட்டாலும் அதையும் கண்டுகொள்ளப்போவதில்லை. கருத்து சொல்ல விரும்பினால் என் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளவும்.
already seen this

No Response to "இஸ்லாமியர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்"

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,