அன்றைய தூர்தர்ஷனின் 5வது அலைவரிசையில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கென்றே தவமிருந்ததெல்லாம் இன்றைக்கு தலைகீழாக மாறிவிட்டது. தீபாவளிக்கென்றே முழுக்க முழுக்க தீபாவளி சார்ந்த நகைச்சுவை நாடகம் கண்டிப்பாக இடம்பெறும். அநேகமாக காத்தாடி ராமமூர்த்தி,டைபிஸ்ட் கோபு,பாண்டு,ஒய்.ஜி மகேந்திரன் போன்றவர்களின் குழுவினர் தரும் காமெடி நாடகங்கள். கொண்டாட்டங்களோடு அதையும் பார்க்கும் பொழுது அந்த பண்டிகையின் முழு திருப்தியும் அதிலே கிடைத்துவிடும். அதற்கு பிறகு யாருமே அதுவரை பார்த்திராத ஒரு புத்தம் புதிய அட்டுத் திரைப்படம். பின்னர் அன்றைய இரவில் ஒவ்வொரு ஊர்களிலும் எவ்வாறு தீபாவளி கொண்டாடுகிறார்கள் என படம்பிடித்த போனவருடத்து வீடியோவை மிக அற்புதமாக ஈரோடு தமிழன்பன் அவர்களின் சிம்மக்குரலில் வீதிஉலா என அன்றைய தீபாவளி களைகட்டியது

தனியார் தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் துவங்கிய பிறகு முழுக்க முழுக்க சினிமாவுக்குள்ளே மூழ்கிப்போய் விட்டது தொலைக்காட்சிகள். ஒரு நாளைக்கு 17 படம்,24 மணி நேரமும் பாட்டுக்கள்,காமெடிகள் என உலகமே மாறிவிட்டது. இதிலே தீபாவளி சிறப்பு நிகழ்சிகள் எனப் பார்க்கும் போது முழுக்க முழுக்க சினிமாவைச் சார்ந்த நிகழ்ச்சிகள்,புத்தம் புதிய திரைப்படங்கள்,சினிமா நட்சத்திரங்களின் பேட்டிகள் என தீபாவளியை சினிமாவளியாக ஆக்கிவிடுகிறார்கள். அதிலும் இந்த திரை நட்சத்திரங்களின் பேட்டிகள் மிகவும் கொடுமை. எந்த சேனலைத் திறந்தாலும் யாரவது ஒரு நடிகர்/நடிகை தன்னுடைய சாதனைகளைப் பட்டியலிட்டுக் கொண்டிருப்பார். இது முடிந்த பிறகு அடுத்த சேனலைத் திருப்பினால் அங்கேயும் அதே நடிகர் வேறு உடையில் அதே மாவை மாற்று மிசினில் வைத்து அரைத்துக் கொண்டிப்பார்.
சினிமாக்காரர்கள் அரைத்த மாவையே அரைத்து புளித்துப் போன தோசைகளைச் சுட்டுப்போடும் மற்ற தொலைக்காட்சிகளை விட மக்கள் தொலைக்காட்சி தீபாவளிக்கு மிகமிக கவனம் செலுத்தி நிகழ்சிகளை அறுசுவையோடு விருந்து படைத்தனர். போனவருடத்தை விட இந்த வருடம் கொஞ்சம் தூக்கல். அந்த நிகழ்ச்சிகளைப் படைத்தவர்கள் மற்றும் அதனோடு பணியாற்றியவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தீபாவளிக்கு சரவெடி கொளுத்திய மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி மத்தாப்புகள் பற்றிய விவரங்கள் இதோ..,
வெள்ளிக்கிழமை:
சின்னச் சின்ன ஆசை: சனிக்கிழமை தீபாவளியாதலால் வெள்ளிக்கிழமையே நிகழ்ச்சிகள் களைகட்டத் தொடங்கிவிட்டன மக்களில். அன்றைக்கு இரவு ஒளிபரப்பான சின்னச் சின்ன ஆசை நிகழ்ச்சி நெஞ்சை நெகிழ வைத்தது. குழந்தைகளுக்குக் கூட புதுத்துணியெடுக்காமல் தீபாவளி கொண்டாடும் ஒரு கிராமத்தில் இருந்து 4 சிறுமிகளை அழைத்துச்சென்று புதுத்துணி,இனிப்பு மற்றும் பட்டாசுகள் வாங்கிக்கொடுத்து அவர்களுக்கு எண்ணெய் வைத்துக் குளிப்பாட்டி அந்த இரவிலேயே தீபாவளியை அமர்க்களப்படுத்தி அந்தக் குழந்தைகளை மட்டுமின்றி அந்த கிராமத்து மக்களையும் குதுகலப்படுத்தி விட்டனர் சிசிஆ குழுவினர். ஆனால் அனைத்துக் குழந்தைகளுக்குமே அந்த மகிழ்சியைத் தர இயலவில்லை என வருத்தப் பட்டார்கள்.

நாற்காலிக் கனவுகள்: ஒரு படம் ஓடிவிட்டாலே முதலமைச்சர் கனவோடு கட்சி ஆரம்பித்து அக்கப்போரு செய்யும் அனைத்து நடிகர்களையும் ஒரு பிடிபிடித்தது காதோடு காது டீம். நிகழ்ச்சி முழுக்க முழுக்க நகைச்சுவை சரவெடிகள்.இவ்வாறு சிரித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. அதிலும் விஜயகாந்த் வடிவேலு லடாய், சரத்குமார், கார்த்திக்,பாக்யராஜ் போன்றவர்கள் கட்சி ஆரம்பித்த காமெடிகள் ஆகியவை மிகச்சிறப்பாக சிரிப்பாக இருந்தது.அனைவரும் மேடை டூப் நடிகர்கள்.அனைவருமே ஓரளவிற்கு பொருந்தி வந்தனர். விஜயகாந்த்,பாக்யராஜ், டி.ஆர் கனகச்சிதம். சாவு வீட்டிற்குப் போனாலும் அங்கேயும் சிம்புவின் பெருமையைப் பேசும் டி.ஆர்ஐ மிக அருமையாக சாடியது மிகஅருமை.
சரவெடி சம்பந்தி: தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வரும் புது மாப்பிள்ளையும் அவரது அப்பாவும் கொடுக்கும் இம்சைகளை மிக்க நகைச்சுவையோடு அளித்திருந்தது மிகுந்த நகைச்சுவை.வழக்கம் போல இதிலும் அதே காதோடு காது டீம்.
தெருக்கூத்து: விடிய விடிய விடாது மழை என சொல்லி நரகாசூரன் கதையை தெருக்கூத்தாக நடத்தினார்கள். என்ன, இந்த கலைஇரவு நிகழ்ச்சிகளில் கலைஞர்கள் பாடுவதைக் கேட்க முடியவில்லை. ஒலியமைப்பை சரி செய்திருந்தால் நிகழ்ச்சி நன்றாக இருந்திருக்கும்..
சனிக்கிழமை:
பட்டிமன்றம்: திரு.அறிவொளி தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றம் பரவாயில்லை ரகம்.மற்ற தொலைக்காட்சிகளிலும் பட்டிமன்றங்கள் கியூகட்டியதால் இந்த மன்றம் கொஞ்சம் மந்தமாகத் தான் இருந்தது. அடுத்து வந்த புஷ்பவனம் குப்புசாமி கருனாஸ் பங்கேற்ற நாட்டுப்புற பாட்டு நிகழ்ச்சியும் பரவாயில்லை ரகம்.
நகைச்சுவைக் கவியரங்கம்: இதைப் பார்ப்பவர்களுக்கு ஏதோ வேலையற்றவர்கள் உக்கார்ந்து மொக்கை போடுவது போல இருந்தாலும் உண்மையில் அது தான் உண்மை. மொக்கைகளை காமெடிக் கவிதைகளோடு கலந்து சிரிப்புச் சரவெடி தொகுத்த அந்தக் குழுவினரின் மொக்கைகள் அனைத்துமே மீதமாய் இனிக்கும் கரும்புச்சக்கைகள்.
பாலம்: இதுவரை யாருமே எடுத்திடாத சிறந்த முயற்சியாக இந்தப் பாலம் நிகழ்ச்சி தொடர்ந்து வருகிறது. வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாகச் சென்றிருப்பவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை நேரடியாக தொலக்காட்சி வழி பார்த்து நேரலையில் பேசும் நிகழ்ச்சி. இதிலே திருப்தியடைவது ஒரு தனிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் தான் என்றாலும் அவர்கள் அடையும் மகிழ்ச்சியை பார்த்து நமக்கும் ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி.
புதிய கோணங்கிகள்: சொல்லவே வேண்டாம் கோணங்கிகளின் கோணங்கித் தனத்தை. இவர்கள் செய்யும் அனைத்து கோணங்கி வேலைகளும் சமூகத்தின் அக்கறைச் சிந்தனைகள். புதுகை பூபாளம் குழுவினருக்கும் அண்ணன் ஜெகதீஸூக்கும் நமது பாராட்டுக்கள்.வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 12.30 க்கு இவர்களின் நிகழ்ச்சி இடம்பெறுகிறது. வளைகுடா நேயர்களுக்காக துபாய் நேரம் இரவு 10 மணிக்கும், சவூதி நேரம் இரவு 9 மணிக்கும் மீள் ஒளிபரப்பு இடம்பெறுகிறது.காணத்தவறாதீர்கள்

விடாது சிரிப்பு: வழக்கமாக திசைகள் நிகழ்ச்சியில் அள்ளிவிடும் அண்ணன் விடாது கருப்பனின் அக்கப்போர் அணிவகுப்புகள் அனைத்துமே விடாது வெடித்த தௌசண்ட் வாலா பட்டாசுகள்.
கணியான் கூத்து: வழக்கம் போல சனிக்கிழமை இரவை கலை இரவாக மாற்றியது இந்த கணியான் கூத்து. இது போன்ற தமிழ்நாட்டின் பழம்பெறும் கலைகள் அழிந்துவிடக்கூடாது எனபதற்காக மக்கள் தொலைக்காட்சி எடுத்துவரும் முயற்சிகளில் ஒன்றுதான் இந்த கணியான் கூத்து. வித்தியாச விரும்பிகளுக்கு இது சிறந்த நிகழ்ச்சி. என்ன, ஒன்று வழக்கம் போல இதிலும் ஆடியோ பிரச்சனைதான். ஒலியமைப்பைச் சரி செய்தால் இந்நிகழ்ச்சி களைகட்டும்.

தங்கமழை: நிகழ்ச்சிகள் முடிய முடிய உடனடியாக யாழினி நேரலையில் வந்து நிகழ்ச்சிகள் குறித்த கேள்விகளைக் கேட்டு தங்ககாசு வழங்கியதும் மிகவும் நன்றாக இருந்தது. கேட்கப்பட்ட கேள்விகள் இந்த நிகழ்ச்சியை மீண்டும் மீண்டும் எதிர்பார்க்க வைத்தது. மிக அருமை.
தீபாவளி நிகழ்ச்சிகளில் சில மீள் ஒளிபரப்பாக இருந்தாலும் கூட அந்த நிகழ்ச்சிகளின் சுவை கெடாமல் கொடுத்த மக்கள் தொலைக்காட்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அண்ணன் சிவகுமார் அவர்களுக்கு நம் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும். தொடரட்டும் உங்களின் தமிழ்ப் பணி.

குஜால் தகவல்: இந்த தீபாவளியன்று ஒரு நாள் மட்டும் தமிழகத்தின் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மொத்த கலெக்சன் 250 கோடியாம். இதிலே விற்பனையில் முதல் பரிசு பெற்ற கடை கலைவாணர் அரங்கம் எதிரே இருக்கும் அந்தக் கடைதானாம். அங்கு மட்டும் ஒரே நாளில் கலெக்சன் ஐந்தேமுக்கால் லட்சமாம். கலெக்சனைக் காட்டியதும் அந்தக் கடையின் ஊழியர்களுக்கும், மேற்பார்வையாளர்களுக்கும் பாராட்டுப் பத்திரமும், பொற்கிழியும் வழங்கி கவுரவித்திருக்கிறது டாஸ்மாக் நிர்வாகம். வெளங்கிரும்.


மப்புல கப்பு தெரியாம மறைக்கறது தானே ஆட்சிக்கு அழகு.
நம்பளூம் டாஸ்மாக்லயே வேலைக்கு போயிருகலாமோ.
அரசு கல்லா கட்ட வில்லைனா நாம எல்லாம் கடை தொறந்து கல்லா கட்டி இருப்போம்.
குடிக்காதனு சொன்ன கேட்பமா?
என்னவோ கருணாநிதி தன் வீட்டுக்கு இந்த பணம் எடுத்து போறது மாறி சொல்றிங்க?
மக்கள் தொலைக்காட்சியை பாராட்டி போடப் பட்ட முதல் இடுகை (எந்த வலைப்பூவில் படித்த ஞாபகம் இல்லை), நன்றாக எழுதியிருக்கின்றீர்கள். வாழ்த்துகள்.
டாஸ்மாக் - குடி குடியைக் கெடுக்கும் என்று சொல்லி, அரசே அதிக விற்பனைக்கு பாராட்டுப் பத்திரம் கொடுக்கும் முரண் நம் நாட்டில் - வாழ்க தமிழகம்.
//வெளங்கிரும்.//
உங்க வாழ்த்து பலிச்சிரும்.
மக்கள் தொலைக்காட்சி மேன்மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்.
திரைப்படங்களை நம்பாமல் தனித்து செயல்படும் மக்கள் தொலைக்காட்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
//வானம்பாடிகள் said...
மப்புல கப்பு தெரியாம மறைக்கறது தானே ஆட்சிக்கு அழகு.//
ஆட்சியைக் குறை சொல்லி என்ன பண்றதண்ணே! நம் குடிமகன்கள் தானாய் திருந்தினால் தான் உண்டு. நன்றிண்ணே! கருத்துக்கும் வருகைக்கும்.
// ஷாகுல் said...
நம்பளூம் டாஸ்மாக்லயே வேலைக்கு போயிருகலாமோ.//
முயற்சி செய்யுங்கள் ஷாகுல். இன்றைய நிலையில் நல்லா(கெட்ட) பணம் புரளும் துறை டாஸ்தான். கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
//நாளும் நலமே விளையட்டும் said...
அரசு கல்லா கட்ட வில்லைனா நாம எல்லாம் கடை தொறந்து கல்லா கட்டி இருப்போம்.
குடிக்காதனு சொன்ன கேட்பமா?//
உண்மையான கருத்து. நன்றி. தொடர்ந்து இணைந்திருங்கள்.
// இராகவன் நைஜிரியா said...
மக்கள் தொலைக்காட்சியை பாராட்டி போடப் பட்ட முதல் இடுகை (எந்த வலைப்பூவில் படித்த ஞாபகம் இல்லை), நன்றாக எழுதியிருக்கின்றீர்கள். வாழ்த்துகள்.//
ரொம்ப நன்றிண்ணே! உண்மையில் இந்தப் பாராட்டு மக்கள் தொலைக்காட்சிகுத் தான் சென்று சேர வேண்டும்.
// NIZAMUDEEN said...
//வெளங்கிரும்.//
உங்க வாழ்த்து பலிச்சிரும்.//
நன்றி நிஜாம். கருத்துக்கும் வருகைக்கும்.
// சீ.பிரபாகரன் said...
மக்கள் தொலைக்காட்சி மேன்மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்.
திரைப்படங்களை நம்பாமல் தனித்து செயல்படும் மக்கள் தொலைக்காட்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.//
நிச்சயம் உண்மையண்ணே! தொடர்ந்து இணைந்திருங்கள்.
தமிழ்மணம்,தமிழிஷ் மற்றும் தமிழ்10 ல் வாக்களித்து ஆதரவு தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!!
மக்கள் தொலைகாட்சி போல உங்க வர்ணனையும் சுவாராசியமாக இருந்தது
நன்றி கிரி சார். தொடர்ந்த உங்களின் ஆதரவுக்கு நன்றி!