ஒரு நாளு மரத்தடில தூங்கிகிட்டு இருக்கும் போது அந்த ஆத்தங்கரை ஓரத்துல ஒரு தவள வந்து, இந்த எலிகிட்ட, “நாம ரெண்டு பேரும் பிரண்டா இருக்கலாம் வர்ரீயான்னு” கேட்டிச்சாம், அதக்கேட்டு யோசிச்ச எலி,அது எப்புடி? நீ தண்ணியிலயும் இருக்கலாம்,தரையிலயும் இருக்கலாம்.ஆனா நான் தரையில் மட்டும் தான் இருக்க முடியும். தண்ணிக்கு வந்தா என் நிலம பனால் ஆயிடுமேன்னு சொன்னிச்சாம் அந்த எலி. அதுக்கு அந்த தவள அதப் பத்தியெல்லாம் நீ கவலப்படாத, நீ என் நண்பனா ஆயிட்டா என் உயிர்கொடுத்து உன்னயக் காப்பாத்துவேன், நீ உன் இஷ்டம் போல என் மேல ஏறி உக்காந்துகினு சவாரி செய்யலாம், அந்த வகையில நான் சிறந்த வாகனம் அப்டின்னு சொன்னிச்சாம்.
உடனே நம்ம எலி "சரிப்பா, நான் வர்றேன், ஆனா சவாரி செய்யும் போது நான் தவறி விழுந்துடாம இருக்க என் வாலால உன் பாடிய கவர்பண்ணி கட்டிக்குவேன், சரியா?” அப்டின்னு கேட்டிச்சாம். அதுக்கு தவளையும் ஓக்கே சொல்ல இரண்டு பேருக்குள்ளும் கூட்டணி ஒப்பந்தம் ஆயிடிச்சாம். அதாவது தரையில ஏதாவது பிரச்சனை வந்தா எலியார் சண்டை போட்டு காப்பாத்தனும், அதே மாதிரி தண்ணியில ஏதாவது பிரச்சனை வந்தா தவளையார் காப்பாத்தனும்னு கூட்டணி உடன்பாடு ஏற்பட்டு பயணம் துவங்கிச்சாம். எலி ரொம்ப உசாரா தன்னோட வாலால தவளையை கவர் பண்ணி கட்டிக்கிட்டு தவளையார் முதுகில குந்திகினு சவாரி ஆரம்பிச்சதாம்.
ஆற்றின் நடுப்பகுதியில பயணம் போய்க்கிட்டு இருக்கும் போது அந்தப் பக்கமா யாரையாவது என்கவுண்டர்ல போட்டுத் தள்ளலாம்கிற நோக்கத்துல மேல வட்டம் அடிச்சிக்கிட்டு இருந்த கழுகுராசா, தவள முதுகுல எலி சவாரி செய்யற இந்த காட்சியப் பாத்து ஆனந்தப்பட்டு எலி இல்லாட்டி தவள,இவுக ரெண்டு பேருல யாரையாவது இன்னிக்கி போட்டுறனும் என்ற முடிவோட அந்த ஏரியாவ ரவுண்டு கட்ட ஆரம்பிச்சாராம். இதப் பாத்து பீதியடைந்த நம்ம எலியாரு தவளகிட்ட,"யப்பா,மேல கழுகுராசா வட்டம் போடுதுய்யா,ஏதாவது செஞ்சி என்னய காப்பாத்துய்யா" அப்டின்னு கத்த, கலவரமான தவளையார் "அய்யய்யோ, என்னது..? கழுகுராசாவா? ஆத்தாடி நீ எப்டியாவது எஸ்கேப் ஆயிக்க, என்னய உட்டுரு சாமி"ன்னு சொல்லி மேலோட்டமா நீந்திகிட்டு இருந்த தவளையார் இப்ப சர்ருன்னு அடி ஆழத்துக்கு பாஞ்சி வேகமா நீந்த ஆரம்பிச்சாராம். நெல தடுமாறிப்போன எலியாரு தவளையாரின் வேகத்துக்கு ஈடுகுடுக்க முடியாம தண்ணிக்குள்ள தவளையாரு இழுத்த இழுப்புக்கெல்லாம் போயி, பிடிமானம் இல்லாம முங்கி, வகுறு முட்ட தண்ணீய குடிக்க ஆரம்பிச்சிட்டாராம். ஆனாலும் நம்ம தவளையார் தன் பலம் கொண்ட மட்டும் வேகமா நீந்தி தண்ணீரின் அடிப்பகுதிக்குப் போய் ஒரு கல்லுக்குள்ள பதுங்கிக்கிட்டாராம். மேல என்கவுண்டர் பெயிலியர் ஆனதால கடுப்பாகிப்போன கழுகுராசா வேற என்ன செய்யலாம்னு யோசனை பண்ணிக்கிட்டேயிருக்கும் போது, தண்ணி அதிகமா குடிச்சதால ஒடம்பு பெருச்சாலி மாதிரி ஊதிப்போயி சொய்ங்…கினு மேல வந்து மெதக்க ஆரம்பிச்சாராம் நம்ம எலியாரு..
தானா செத்தவனை நிக்கவச்சி மறுபடியும் சுட்டுப்புட்டு என்கவுண்டர் போட்டுட்டோமுன்னு சொல்லி சந்தோசப் படுற நம்ம காவல்துற மாதிரி , என்கவுண்டர்ல தப்பிச்ச எலியார் எசகுபிசகா மெதக்குறதப் பாத்துட்டு சந்தோசமான நம்ம கழுகாரு சர்ருன்னு வட்டம் போட்டு லேண்டிங் பொசிசன்ல போயி எலியாரத் தூக்க, குங்குமம் வாங்குனவனுக்கு இலவச இணைப்பா குரங்குத் தைலம் கெடச்சது போல எலியாரை தூக்குனா அவர் வாலுல கட்டி இருந்த தவளையாரும் திருதிரு துருதுருன்னு முழிச்சிக்கிட்டே மேல வர, கள்ள லாட்டரியில கட்டுப்பணம் கெடச்சமாதிரி நம்ம கழுகாருக்கு குஷி தாங்க முடியலயாம். அப்பறம் என்ன? மெயின் ஃபுட்டா எலியாரும், சைட்டிஷ்ஷா தவளையாரும் அன்னிக்கு லஞ்ச் ஆகிப்போனாங்கலாம் கழுகாருக்கு.
ஆக இந்தக் கதையின் நீதி என்னன்னா??? நாம என்ன இன்னமும் சின்னப்புள்ளையா? அதெல்லாம் உங்களுக்கே புரிஞ்சியிருக்கும்.
தானா செத்தவனை நிக்கவச்சி மறுபடியும் சுட்டுப்புட்டு என்கவுண்டர் போட்டுட்டோமுன்னு சொல்லி சந்தோசப் படுற நம்ம காவல்துற மாதிரி , என்கவுண்டர்ல தப்பிச்ச எலியார் எசகுபிசகா மெதக்குறதப் பாத்துட்டு சந்தோசமான நம்ம கழுகாரு சர்ருன்னு வட்டம் போட்டு லேண்டிங் பொசிசன்ல போயி எலியாரத் தூக்க, குங்குமம் வாங்குனவனுக்கு இலவச இணைப்பா குரங்குத் தைலம் கெடச்சது போல எலியாரை தூக்குனா அவர் வாலுல கட்டி இருந்த தவளையாரும் திருதிரு துருதுருன்னு முழிச்சிக்கிட்டே மேல வர, கள்ள லாட்டரியில கட்டுப்பணம் கெடச்சமாதிரி நம்ம கழுகாருக்கு குஷி தாங்க முடியலயாம். அப்பறம் என்ன? மெயின் ஃபுட்டா எலியாரும், சைட்டிஷ்ஷா தவளையாரும் அன்னிக்கு லஞ்ச் ஆகிப்போனாங்கலாம் கழுகாருக்கு.
ஆக இந்தக் கதையின் நீதி என்னன்னா??? நாம என்ன இன்னமும் சின்னப்புள்ளையா? அதெல்லாம் உங்களுக்கே புரிஞ்சியிருக்கும்.
already seen this



அதெப்புடிங்க பொருத்தமா படம் கிடைச்சது. அசத்தல்.
ரைட்டு! ஆட்டோ வர வாழ்த்துக்கள்!!
// வானம்பாடிகள் said...
அதெப்புடிங்க பொருத்தமா படம் கிடைச்சது. அசத்தல்.//
எல்லாம் நம்ம கூகிள்ல தேடி புடிச்சது தான் சார். ஆனா கடைசி படம் நான் போட்டது (வசனம்).
// கலையரசன் said...
ரைட்டு! ஆட்டோ வர வாழ்த்துக்கள்!!//
கலையண்ணே! இதுக்கு கூடவா ஆட்டோ வரும்???
கடைசியில் அரசியலோடு முடிப்பீர்கள் என நான் நினக்கவே இல்லை :))
கதை சொன்ன விதம் நகைச்சுவையாக இருந்தது வாழ்த்துக்கள் நண்பரே :))
//நிகழ்காலத்தில்... said...
கடைசியில் அரசியலோடு முடிப்பீர்கள் என நான் நினக்கவே இல்லை :))
கதை சொன்ன விதம் நகைச்சுவையாக இருந்தது வாழ்த்துக்கள் நண்பரே :))//
கருத்துக்கும் வருக்கைக்கும் நன்றி நண்பரே! தொடர்ந்து இணைந்திருங்கள்
ஆஹா...பத்த வச்சிட்டீங்களே பரட்ட..!!!
எலி தவளை கதை ராயப்பேட்டை அலுவலகம் வரை போவும் போலருக்கே !!
ஹை... கதை ரொம்ப நல்லா
இருக்கு!
(எழுத்துக்கள் சின்னதா இருக்கு.)
http://nizamroja01.blogspot.com/2009/05/blog-post_05.html
//லஞ்சம் said...
லஞ்சம் மற்றும் ஊழல் பேர்வழிகளின் முகத்திரையை கிழிக்கும் பதிவு.//
லஞ்சம்கிறத நீங்க மொதல்ல மாத்துங்க.
//அ.மு.செய்யது said...
ஆஹா...பத்த வச்சிட்டீங்களே பரட்ட..!!!
எலி தவளை கதை ராயப்பேட்டை அலுவலகம் வரை போவும் போலருக்கே !!//
அவ்வை சண்முகத்துக்கு தெரிந்தால் நமக்கும் பெருமை தானே செய்யத்.
//NIZAMUDEEN said...
ஹை... கதை ரொம்ப நல்லா
இருக்கு!
(எழுத்துக்கள் சின்னதா இருக்கு.)//
எழுத்துக்கள் சுமால் சைஸ் தான் கொடுத்தேன். அதற்கு மேல் கொடுத்தால் ரொம்ப பெரிசாக ஆகிவிட்டது.
//raja vamsam said...
http://nizamroja01.blogspot.com/2009/05/blog-post_05.html//
Nijam another one????
கதை ரொம்ப நல்ல இருந்தது.
ஆனா கீழே படத்தைபார்த்தும்ம்ம்ம்ம்ம்ம்ம்....
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜலிலா அக்கா!
SUPERRRR... கதை ரொம்ப நல்ல இருந்தது அதெப்புடிங்க பொருத்தமா படம் கிடைச்சது. Ha Ha Haaa...