Sep 8, 2010

நோன்பு பெருநாள் குறித்த சில சந்தேகங்கள்!!!

— நிஜாம் கான் @ 9:21 PM
பிறை பார்த்து நோன்பு பெருநாள் கொண்டாடுவது ஏன்?

இஸ்லாம் 5 தூண்களின் மீது நிறுவப்பட்டுள்ளது. அதிலே முக்கியமானதும் அனைத்து தரப்பினராலும் விரும்பப்படுவதும் ரமலான் மாதம் ஆகும். யார் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என இறைவன் கட்டளையிடுகிறான். அதே போல பிறை பார்த்து நோன்பு வையுங்கள் பிறை பார்த்து நோன்பை விடுங்கள் என இறைவனின் திருத்தூதர் முகமது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த இரண்டு செய்திகளிலும் ஏதோ பிற்போக்குத்தனம் இருப்பதாக தெரியலாம். ஆனால் இதிலே பொதிந்திருக்கும் விசயத்தை சிந்தித்தால் அதிலே இருக்கும் விஞ்ஞானத்தை விளங்கிக் கொள்ளலாம். தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவரும் பூமியின் ஒருபகுதி சூரியனை நோக்கும் போது பகலாகவும் அதன் மறுபகுதி இரவாகவும் இருக்கிறது. அதேபோல சந்திரனும் ஒரு பாதையில் பூமியைச் சுற்றி வருகிறது. ஆக இவ்வாறு சுழற்சியில் இருக்கும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பகுதிக்கு ஒரே நேரத்தில் காணக்கிடைக்காது. அமெரிக்காவில் இரவாகவும் இந்தியாவில் பகலாகவும் இருக்கும் போது எப்படி ஒரே நேரத்தில் பெருநாள் கொண்டாட முடியும்? எனவே தான் பிறைபார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பு வையுங்கள் என இஸ்லாம் கட்டளையிடுகிறது.




ஜக்காத் என்பது என்ன?


இஸ்லாமியர்களின் இரண்டு பண்டிகைகள் மட்டுமே ஆதாரப்பூர்வமானதாக‌இருக்கின்றன. ஒன்று ஈதுல் பித்ர் என்னும் ஈகைத்திருநாள். அடுத்து இப்ராஹீம் நபியின் நினைவாக இறைவன் தந்த ஈதுல்அல்ஹா எனும் தியாகத்திருநாள். இப்ராஹீம் நபிக்கு தள்ளாத கிழ வயதில் இறைவன் குழந்தையை அருளுகிறான். அவரை சோதிக்க எண்ணி அவரின் பச்சிளம் பிள்ளையான இஸ்மாயீலை தனக்கு பலியிட வேண்டும் என அவருக்கு கட்டளையிட அதை எந்த மறுப்பும் இல்லாமல் நிறைவேற்ற எண்ணிய அந்த தியாகத்தை கொண்டாடவே தியாகத்திருநாள். அடுத்து, நோன்புப்பெருநாள் என்பதுமாதம் முழுவதும் சூரிய உதயம் முதல் மறையும் வரை உண்ணாமல், பருகாமல், தீய காரியங்களில் ஈடுபடாமல் இருப்பதே நோன்பு எனப்படுவது ஆகும். இந்த நோன்பு என்பது ஒரு மனிதனுக்கும் இறைவனுக்கும் மட்டுமே இடையே உள்ள ரகசியமான விசயமாகும். எனவே தான் இதற்கான கூலியை தானே வழங்குவதாக  இறைவன் தெரிவிக்கிறான். இறைவனுக்காக நோன்பிருந்து கொண்டாடும்பண்டிகை தான்நோன்புப் பெருநாள் ஆகும்.நோன்புப் பெருநாளினை முன்னிட்டு இறைவன் தனக்கு நேரடியாக சம்பந்தமே இல்லாத ஒரு கடமையை மக்களின் மீது செலுத்துகிறான்.

அதாவதுதொழுகை, நோன்பு, ஹஜ் போன்றவை இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காக‌ மனிதன் செய்யும் நேரடியாக விசயங்கள் ஆகும். ஆனால் இறைவன் தனக்கு நேரடி சம்பந்தம் இல்லாத ஜக்காத் என்பதை மக்களுக்கு கடமையாக்கினான். அதாவது மக்கள் வருடம் முழுவதும் தாங்கள் ஈட்டும் பொருளுக்கும் சொத்துக்கும் வாழ்நாளின் ஒருமுறை வரிசெலுத்துவது தான் ஜக்காத் ஆகும். இது முழுக்க முழுக்க ஏழைகளுக்கு மட்டுமே சென்று சேரவேண்டும். தங்களிடம் இருக்கும் பொருளின் மதிப்பில் இரண்டரை சதவிகிதம் ஏழைவரியாக வழங்க வேண்டும். உதாரணமாக‌ ஒரு நபரிடம் இந்த வருடம் 10 ஆடுகள் இருக்கின்றன.  அதன் மதிப்பில் கணக்கிட்டு ஏழை வரியை வழங்க வேண்டும். அடுத்த வருடம் அந்த ஆடுகள் 5 குட்டிகளை ஈனுகின்றன. இப்போது அந்த 5 குட்டிகளுக்கு மட்டும் வரி செலுத்தினால் போதுமானது. அதேபோல அந்த 10 ஆடுகளையும் தான் வாங்கிய விலையை விட அதிகவிலைக்கு அவர் விற்றால் அந்த அதிகபட்ச தொகைக்கு மட்டும் வரியை வழங்கினால் போதும். அதேபோல அந்த நபர் அந்த ஆடுகளை ஒருவருக்கு தானமாக கொடுத்தால் அதை பெற்றுக்கொண்டவர் அதன் மதிப்பில் கணக்கிட்டு வரியை வழங்கிவிட வேண்டும்.
பித்ரா என்றால் என்ன?

என்ன தான் ஜகாத்தை வழங்குவது கடமையாய் இருந்தாலும் அது அவருடைய முந்தைய சம்பாத்தியத்திற்கு செலுத்தும் வரியாகும். ஆனால் தாங்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் பெருநாளை மற்ற ஏழை எளியவர்களும் இவர்களைப் போலவே மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்ற கருத்தில் இறைவன் வகுத்த அடுத்த விசயம் தான் பித்ரா. பித்ரா என்பது ஒரு நபர் தான் உண்ணும் அரிசி அல்லது கோதுமையின் மதிப்பில் இரண்டரை கிலோ அளவிற்கு பொருளாகவோ அல்லது பணமாகவோ ஏழை எளிய மக்களுக்குவழங்கிட வேண்டும். ஒரு வீட்டில் இருக்கும் குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் இது பொருந்தும். உதாரணமாக இன்றைய சென்னை நகரின் மதிப்புப் படி நபர் ஒருவருக்கு ரூ 75 முதல் 80 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜ‌க்காத்தையும், பித்ராவையும் பெற்றுக்கொள்வதற்கு யார் தகுதியானவர் என்றால், அதை வழங்குபவரின் ஏழைச் சொந்தங்களே முன்னுரிமை பெற்றவர்கள் ஆவார்கள். இப்போதெல்லாம் பல அமைப்புகள் அந்தப் பகுதி மக்களிடம் பித்ரா தொகையை கணக்கிட்டு வசூல் செய்கிறார்கள். அதிலே சரியான அமைப்புகளிடமும் நாம் செலுத்திவிடலாம். அவர்கள் அதை பணமாக விணியோகிப்பது இல்லை. அடுத்த நாளைக்கு பெருநாள் கொண்டாடத் தேவையான பொருட்களை யார் தகுதியானவரோ அவரிடம் வழங்கி விடுவார்கள். பித்ரா என்பது பெருநாளைக்கு முன்பே வழங்கிவிட வேண்டும். அதுவே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காட்டித்தந்த சிறப்பான வழிமுறையாகும்.






திடலில் தான் பெருநாள் தொழுகை:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகை நடத்துவதற்கு திடலைத்தான் தேர்ந்தெடுத்தார்கள். காரணம் அன்றைய தினத்தில் அனைவரும் சந்தித்துக் கொள்ள வேண்டும். தங்கள் அன்பையும் நட்பையும் பரிமாறிக்கொள்வதற்கு இது பேரூதவியாக இருக்கும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு செல்லும் போது ஒரு வழியாகவும், திரும்பும் போது ஒருவழியாகவும் செல்வார்கள் என ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. காரணம் அப்படி மாறி வந்தால் பலரையும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதாகவும் இருக்கலாம். அதேபோல திடல் தொழுகைக்கு பெண்களும் அவசியம் வர வேண்டும் அவர்களுக்கு மாதவிலக்காக இருந்தாலும் சரியே என அதிகமாக வலியுறுத்தினார்கள். மாதவிலக்குடைய பெண்கள் தொழுகையில் கலந்து கொள்ளாமல் ஓரமாய் இருந்து பின்னர் தொழுகை முடிந்த பின் தன் சக தோழியரை சந்தித்து தன் அன்பைப் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இந்த திடல் தொழுகை ஏற்பாட்டையே நபிகள் நாயகம் செய்தார்கள் என நாம் இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

வெள்ளிக்கிழமை பெருநாள் வந்தால்:

வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தினத்தில் பெருநாள் வந்துவிட்டால் பெருநாள் தொழுகை தொழுதவர் ஜூம்மாவை தொழாமல் இருக்கலாம். அதற்கான சலுகையை கீழ்க்கண்ட ஹதீஸின் மூலம் அறியலாம்

இன்றைய தினம் உங்களுக்கு இரண்டு பெருநாட்கள் வந்துள்ளன. யார் இந்த பெருநாள் தொழுகையை தொழுகிறாரோ அவர் ஜூம்ஆ தொழாமல் இருக்கலாம்.ஆனால் நாம் ஜூம்ஆ தொழுகையை நடத்துவோம் என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி)
நூல் : அபூதாவூத் 907

ஆக ஜூம்ஆ தினத்தில் பெருநாள் வந்து விட்டால் ஜூம்ஆ தொழுகையை விட்டு விட சலுகை இருக்கிறது. ஆனால் இதைத் தவறாகப் புரிந்து கொள்ளும் சிலர் மொத்தமாக அடுத்த தொழுகை அஸர் தான் என நினைத்து விடுகிறார்கள். இந்த ஹதீஸின் உள்ளார்ந்த அர்த்தம் ஜூம்ஆவைத் தவிர்க்க மட்டுமே சலுகை உள்ளதே தவிர லுஹரை நிறைவேற்றிட வேண்டும் என பல மார்க்க அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்.
  
ஆக நண்பர்களே! இந்த ஈகைத் திருநாளின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு நாம் அதிக அதிகமாக தான தர்மங்களை ஏழைகளுக்கு வழங்கிடவும், அத்தோடு நம் போலவே ஏழை மக்களும் இந்த பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடிடவும் இறைவன் நமக்கு கட்டளையிட்டுள்ளதை சரியாக செய்து அனைவரும் இந்த பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாட உதவிசெய்வோம். அத்தோடு மட்டுமின்றி இந்த பெருநாளை நாம் மத நல்லிணக்க நாளாகவும் கொண்டாடுவது அவசியமாகும். எனவே அருகாமை வீடுகளில் வசிக்கும் நம் மாற்றுமதச் சொந்தங்களையும், நம் நண்பர்களுகளையும் அழைத்து நாம் அவர்களுக்கு சிறப்பான விருந்தினை அளித்து அவர்களை கௌரவப்படுத்துவதும் இந்த ஈகைத்திருநாளின் நோக்கமாக நாம் கருதிட வேண்டும். இந்த ஈகைத்திருநாளில் இறைவன் நமக்கு எல்லா நலன்களையும் தந்து இந்த பெருநாளைச் சிறப்பாக கொண்டாட மற்றும் கொண்டாட வைக்கக் கூடிய நன்மக்களாக ஆக்கித்தருவானாக...
already seen this

6 Response to "நோன்பு பெருநாள் குறித்த சில சந்தேகங்கள்!!!"

  1. அப்துல்மாலிக் said...

    EiD Mubaraq to all

  2. vasu balaji said...

    பெருநாள் வாழ்த்துகள்.

  3. அந்நியன் 2 said...

    முப்பது நோன்பை தவராதுக் கடை பிடித்து, இறைவனை பய பக்த்தியோட தொழுதுற்ற அனைத்து நெஞ்சங்களையும்,நீங்கள் நோயில்லாமலும் ,எந்த ஒருக் கஷ்ட்டம் இல்லாமலேயும்,நீடூழி வாழ "துஆ"செய்தவன்னமாக பெருநாளைக் கொண்டாடுகிறேன்.

  4. நிஜாம் கான் said...

    //அப்துல்மாலிக் said...
    September 9, 2010 12:38 AM
    EiD Mubaraq to all
    //

    நன்றி மாலிக் . தொடர்ந்து இணைந்திருங்கள்

  5. நிஜாம் கான் said...

    //வானம்பாடிகள் said...
    September 9, 2010 10:14 AM
    பெருநாள் வாழ்த்துகள்.//

    மிக்க நன்றியண்ணே!

  6. நிஜாம் கான் said...

    //Mohamed Ayoub K said...
    September 9, 2010 4:09 PM
    முப்பது நோன்பை தவராதுக் கடை பிடித்து, இறைவனை பய பக்த்தியோட தொழுதுற்ற அனைத்து நெஞ்சங்களையும்,நீங்கள் நோயில்லாமலும் ,எந்த ஒருக் கஷ்ட்டம் இல்லாமலேயும்,நீடூழி வாழ "துஆ"செய்தவன்னமாக பெருநாளைக் கொண்டாடுகிறேன்.//

    நன்றி அய்யூப்..

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,