திருவாரூர் மாவட்டம் திருவிடைச்சேரி கிராமத்தில் நேற்று முன்தினம் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் இரண்டு உயிர்களை பலிவாங்கி விட்டது. காட்டுமிராண்டித்தனமான இந்த சம்பவம் நடந்து முடிந்ததும் மீடியாக்களும் இன்னும் சிலரும் சுன்னத் வல் ஜமாத்திற்கும் தவ்ஹீத் ஜமாத்திற்கும் இடையே கோஷ்டி மோதல் எனவும், துப்பாக்கியால் சுட்ட நபர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட பொருப்பாளர் என்றும் செய்திகளைப் பரப்ப ஆரம்பித்தன.
ஆனால் உண்மை நிலவரம் என்ன என்பதை இங்கே நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தவ்ஹீத் ஜமாத் மற்றும் சுன்னத் ஜமாத்திற்கும் இடையே எல்லா ஊர்களிலும் ஏற்படுவதைப் போல தகராறு ஏற்பட்டு அந்த பிரச்சனை ஆர்டிஓ விசாரணைக்குச் சென்றது. அப்போது இரு தரப்பினரும் தங்களுக்குள் சமாதானமாக போய்ககொள்ள வேண்டும் என்றும், அவரவர் வேலையை அவரவர் பார்த்துக் கொண்டு செல்ல வேண்டும் எனவும் பேச்சு வார்த்தை மூலம் சுமூக தீர்வு காணப்பட்டது.
இந்த நிலையில் ரமலான் மாதத்தின் இரவுத் தொழுகைக்காக தவ்ஹீத் ஜமாத்தினர் தனியாக தொழுதுகொள்ள வேண்டி அப்துர் ரஹ்மான் என்பவரின் வீட்டின் மொட்டை மாடியில் இடம் ஏற்பாடு செய்து தனியாக தொழுகை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் சுன்னத் ஜமாத்தினைச் சேர்ந்த குத்புதீன் என்பவர் அந்த தவ்ஹீத் பள்ளிக்கு தொழுகைக்காக வந்தார். இதை அப்துல் ரஹ்மான் வீட்டிற்கு எதிரில் வசிக்கும் சுன்னத் ஜமாத்தை சார்ந்த ஜபருல்லா என்பவர் பார்த்து விட்டு இவனுங்க பள்ளிக்கு ஏன் போனாய் எனக் கேட்டு குத்புதீனை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதைக் கண்ட தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள், வாருங்கள் அவர் மீது காவல்துறையில் புகார் செய்யலாம் என அழைக்க, அதற்கு குத்புதீன், வேண்டாம் இது எனக்கும் அவருக்கும் உள்ள பிரச்சனை இதை இயக்க பிரச்சனையாக மாற்ற வேண்டாம், நானே பார்த்துக் கொள்கிறேன் எனச் சொல்லிவிட்டு தனது மைத்துனரான பக்கத்து ஊரைச் சேர்ந்த ஹஜ்முகமது என்பவரிடம் முறையிட்டு இதை வந்து கேட்குமாறு அழைத்திருக்கிறார்.
இங்கே ஹஜ்முகமது பற்றிய சில விளக்கங்கள். இந்த ஹஜ் முகமது என்பவர் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகேயுள்ள குறிச்சிமலையைச் சார்ந்தவர். அந்த ஊரில் மிகுந்த செல்வாக்கு மிக்கவர் மற்றும் வசதிபடைத்தவர். இவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. மாறாக தவ்ஹீத் ஜமாத்தின் கொள்கைகளை எதிர்க்கக்கூடியவர். நடந்து முடிந்த ஜூலை 4 மாநாடு பற்றிய விளக்கக் கூட்டம் ஹஜ்முகமதுவின் ஊரில் நடந்த போது அதை கடுமையாக விமர்சித்தவர் இவர் என்பதும் அதற்கு எதிராக களமிறங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தன் மைத்துனர் தாக்கப்பட்டதை அறிந்து கொதித்த ஹஜ் முகமது இதுகுறித்து விபரம் கேட்க தனது அடியாட்களுடன் 3 கார்களில் திருவிடைச்சேரி சுன்னத் ஜமாத் பள்ளிவாசலை அடைந்து அங்கிருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதை அறிந்த திருவிடைமருதூரைச் சேர்ந்த ஜமாத் தலைவர் முகமது இஸ்மாயில் மற்றும் அந்த ஊரின் முக்கிய பிரமுகர்களான பால்ராஜ், ராம்தாஸ் மற்றும் சந்தியாகு ஆகியோர் உட்பட இன்னும் சிலர் சமாதான பேச்சில் ஈடுபட்டாலும் அவர்கள் ஜபருல்லாவிற்கு சாதகமாகவே பேசியிருகிறார்கள்.ஒரு கட்டத்தில் இவர்கள் அனைவரும் சேர்ந்து உருட்டுக் கட்டைகளுடன் ஹஜ்முகமது வகையறாவைத் தாக்க முற்படும் போது தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டி தன்னிடம் இருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட ஆரம்பித்தார்.
அதிலும் அடங்காத ஜாமாத்தார்கள் மேலும் நெருங்க, இதனால் கொலைவெறி கொண்ட ஹஜ்முகமது தன்னிடம் இருந்த துப்பாக்கியை
அதிலும் அடங்காத ஜாமாத்தார்கள் மேலும் நெருங்க, இதனால் கொலைவெறி கொண்ட ஹஜ்முகமது தன்னிடம் இருந்த துப்பாக்கியை
எடுத்து சரமாரியாக எதிரணியினர் மீது சுட ஆரம்பிக்க அதிலே முகமது இஸ்மாயில் மற்றும் அஜிஸ் முகமது ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.காஜா மைதீன் , பால்ராஜ் , ராமதாஸ் , சந்தியாகு ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். சுட்டு கொன்ற ஹஜ் முகமது தன் சகாக்களுடன் தலைமறைவாகி விட்டு பின்னர் சரணடைந்தார்.
சில இஸ்லாமிய பெயர் தாங்கிகளால் புனிதம் மிக்க ரமலான மாதத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த கொடூர சம்பவம் குறித்து மீடியாக்களும் மற்றும் சிலரும் இது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் சுன்னத் ஜமாத்திற்கும் இடையே தொழுகை நடத்துவது சம்பந்தமாக ஏற்பட்ட கலவரம் என செய்தி வெளியிட்டனர். இன்னும் சிலர் இந்த செய்தியை குறுந்தகவல் மூலம் பரப்ப ஆரம்பித்தனர். இஸ்லாத்தை முழுமையாக அறியாத ஒரு ரவுடியால் நிகத்தப்பட்ட இந்த கொடூர சம்பவத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் அரங்கேற்றியது போல ஒரு மாயை நேற்று முழுவதும் பரப்பப்பட்டது.
இஸ்லாம் கூறும் நிரந்தர நரகம் குறித்த செய்திகளில் கொடூர கொலையும் ஒன்று. அதையும் தாண்டி அந்த வேலையைச் செய்பவர்கள் வெறும் இஸ்லாமிய பெயர் தாங்கிகளாகவே இருப்பார்களேயன்றி உண்மை முஸ்லீம்களாக இருக்க மாட்டார்கள். தமிழகத்தில் தவ்ஹீத் கொள்கை பிரச்சாரம் செய்யப்பட ஆரம்பித்தது முதல் இன்று வரை சுன்னத் ஜமாத்தினர் தான் தவ்ஹீத் ஜமாத்தினரை தாக்கியிருக்கிறார்களேயன்றி இவர்கள் திருப்பித் தாக்கியதாக எந்தவிதமான செய்தியும் இன்றுவரை இல்லை. காரணம் அவர்கள் மடத்தனமாக செய்யும் வேலையை இவர்களும் திருப்பிச் செய்தால் இவர்களின் பிரச்சாரம் தொய்வடைந்து விடும் என்பதில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்.
மேலப்பாளயத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் சகோதரர் பி.ஜெயினுலாபுதீனை அருவாளால் வெட்டவந்த போதும், நாகூரிலே பெட்ரோமாக்ஸ் லைட்டைத் தூக்கி அவர் மீது அடித்த போதும், டியூப் லைட்டைக் கழற்றி அடித்த போதும், கொழும்பிலே கற்களால் தாக்கப்பட்ட போதும் அவர்களை யாரும் திருப்பித் தாக்கவில்லை. மாறாக சட்டப்படி அவர்கள் மீது புகார் மட்டுமே செய்யப்பட்டது. இந்த மரபு இன்று வரை தவ்ஹீத் ஜமாத்தினரின் அனைத்து பிரச்சாரிகளாலும்,தொண்டர்களாலும் கடைபிடிக்கப் படுகிறது.
என்றைக்குமே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வன்முறையை ஆதரிக்காது. வன்முறையாளர்களை எதிர்த்து தைரியமாக பிரச்சாரம் செய்யும். எனவே சகோதரர்களே! இந்த கொடூர கொலை சமவத்திற்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினருக்கும் எள்ளவும் சம்பந்தம் இல்லை என இதன் மூலம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதே போல நேற்று நிகழ்த்தப் பட்ட கொடூரக்கொலையைச் செய்த அந்த ரவுடிக்கும் இஸ்லாத்திற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். காரணம் புனிதம் மிக்க ரமலான் மாதத்தின் சிறப்புகளை அறிந்த ஒரு முஸ்லீம் சாதாரணமாக யாரிடமும் வாய்ச்சண்டைக்கு கூட போக மாட்டான். ரமலான் மாதத்தில் யாரேனும் உங்களிடம் சண்டைக்கு வந்தால் நான் நோன்பாளி என சொல்லி ஒதுங்கிக்கொள்ளட்டும் என ரசூலுல்லாஹ் தெரிவிக்கிறார்கள். எனவே நடந்த கொலைச் சம்பவத்தை நிகழ்த்தியவன் நிச்சமாக ஒரு முஸ்லீமாக ஏன் ஒரு மனிதனாக கூட இருக்கமுடியாது என்பதை நாம் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
already seen this



விளகத்திற்கு நன்றி
இந்த சம்பவம் மனதை புண் படுத்தியாலும்,இனிமேலாவது எல்லோரும் ஒருவருக்கொருவர் புரிந்து வாழ்வதற்கு அல்லாஹ்விடம் துஆ செய்வோமாக.
நன்றி ஜமால்..,
நன்றி அய்யூப்..,
தொடர்ந்து இணைந்திருங்கள்