Sep 24, 2010

சிந்துசமவெளி சீரழிவின் வழி

நிஜாம் கான் @ 11:36 AM
உலகலாவிய தமிழ்ச்சமூகத்தின் மாபெரும் ஆதரவோடு சிந்துசமவெளி திரைப்படம் வெற்றி விழா காணப்போகிறது. மாற்றம் ஒன்று தான் மாறாத ஒன்று, அதைத்தவிர எல்லாவற்றையும் மாற்றிவிடலாம் என்ற குறுக்குபுத்திக்காரர்களின் சிந்தனையில் உறவுகளின் மீது தாக்குதல் தொடுக்க களம் கண்டிருக்கும் முதல் கணைதான் சிந்துசமவெளி. பாவத்தின் சம்பளம் மரணம்  தான் என்ற கருத்தை வலியுறுத்த கடைசி கால் மணி நேரத்தை எடுத்துக் கொண்டு மக்களுக்கு அருமையான மெசேஜை சொல்லியிருக்கிறார் வக்கிர இயக்குனர் சாமி. ஆனால் முந்தைய 2மணி நேரமும் எடுத்துக் காட்டியிருக்கும் கேவலமான விசயத்தின் மீது கடைசியாக பூசப்பட்டிருக்கும் முலாம் தான் கடைசி கால் மணி நேரம்.  இந்தப் படத்தின் மூலம் தன் சொந்த வாழ்க்கையில் நடந்த ஒரு விசயத்தை இவ்வளவு அழகாக மக்களுக்கு படம்பிடித்துக் காட்டியிப்பதைப் போலத்தான் தெரிகிறது.




உயிர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்ச்சமூகம் இரண்டாவது தாயாக கருதும் அண்ணியின் உறவை குத்திக்குதறி சிதைத்த இதே சாமி, இப்போது கையில் எடுத்திருக்கும் அடுத்த ஆயுதம் தான் சிந்துசமவெளி. தகப்பன் முறையில் இருக்கும் ஒரு பாத்திரம் தன் மருமகளை தவறான கண்ணோட்டத்தில் காணவைத்த ஒரு மாபெரும் காவியம் தான் இது. ஐம்பெருங்காப்பியங்களுக்கு பிறகு ஆறாவது காப்பியமாக சாமி படைத்திருக்கும் கீழ்த்தரமான இந்த திரைப்படம் வெளியான பிறகு கொஞ்சமாய் தெரிந்தும் தெரியாமாலும் சில இடங்களில் மூடமாக கசிந்து கொண்டிருக்கும் காமப்புகை இனி பற்றி எரியலாம். நான் என்ன நடக்காத விசயத்தையா காட்டிவிட்டேன் என இன்னமும் தன் நெஞ்சை நிமிர்த்தி சொல்லிக்கொள்ளும்சாமியிடம் சென்று, இது போன்ற விசயம் உங்கள் குடும்பத்தில் நடந்தால் ஒப்புக்கொள்வீர்களா? அல்லது உங்கள் அப்பா உங்களின் மனைவியை இந்தக் கண்ணோட்டத்தில் தான் பார்த்தாரா அல்லது உங்கள் மகனின் மனைவியை நீங்களும் சந்தர்பவசத்தால் இப்படித்தான் பார்ப்பீர்களா? என நாம் ஒருவேளை கேட்டால் அடுத்த நிமிடம் நம் மீது விழும் முதல் அடி அவருடையதாகத் தான் இருக்கும். தனக்கு வந்தால் மட்டும் வேதனை, அடுத்தவர்களுக்கு வந்தால் அது வேடிக்கை.



உறவுகளைப் பேணும் ஒரு சராசரி மனிதனின் கோபத்தைக் கிளற இதை விட கடுமையான வார்த்தைப் பிரயோகம் தேவையில்லை என நினைக்கிறேன். ஒரு விசயம் நல்லாதா கெட்டதா? அது எங்கு வரை சென்று சேர்கிறது, அதனால் பாதிப்புக்குள்ளாவது யார் என்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் தன் சுயலாபத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சிந்தனை தீவிரவாதிகளுடையது மட்டுமே! அந்த வகையில் இந்த கீழ்த்தர வக்கிர புத்திக்காரன் சாமி, உறவுகளைச் சிதைக்கும் ஒரு தீவிரவாதி எனலாம். நடக்கும் விசயம் தானே என சாதாரணமாக சொல்லி விட்டுச் சென்று விடலாம். ஆனால் எங்கோ,யாரோ சில மில்லி மைக்ரோவில் நடக்கும் ஒரு கேவலத்தை இவ்வளவு கண்ணியமாக அறங்கேற்றி அதை நியாயப்படுத்தும் பாங்கினை என்னவென்று சொல்வதாம்?




வழக்கமான திரைப்படங்களைப் பார்த்து போர் அடிக்கிறது, எனவே தான் இது போன்ற வித்தியாசமான திரைப்படங்களைக் கொடுக்கிறேன் என சாமி சொல்கிறார். அப்படியானால் அவரின் அடுத்த வித்தியாசமான படமாக தாய் மற்றும் மகனுக்கு இடையேயான தவறான உறவை படம்பிடித்து வெளிப்படுத்துவாரா? உயிர் வெற்றியடைந்த‌தால் மிருகம் எடுத்தேன், மிருகம் வெற்றியடைந்ததால் சிந்துசமவெளி கொடுத்தேன். இதுவும் வெற்றியடைந்தால் இதை விட ஒரு அற்புதமான விசயத்தைக் கெடுப்பேன் (எழுத்துப் பிழையல்ல) என இன்னமும் தைரியமாக செவ்வியளிக்கும் சாமியைப் பார்த்து அவர் மீது இருக்கும் கோபம் இன்னமும் அதிகமாகிறது. ஐரோப்பிய கலாச்சாரமாகிய யார் வேண்டுமானாலும், யாருடன் வேண்டுமானாலும் என்ற உயரிய விதையை உறவுகளால் பின்னிப்பிணைந்து கிடக்கும் தமிழ்ச்சமூகத்தின் மீது பூச்சி மருந்து கலந்து தூவும் மாமா வேலையை செய்திருக்கும் சாமியை இதற்கு மேல் பாராட்ட வார்த்தையில்லை.
 


சந்தர்பமும் சூழ்நிலையும் தான் ஒரு மனிதனை இது போல மாற்றிவிடுகிறது என ரொம்பவும் கூலாக சொல்லும் சாமி, இதே போன்ற சந்தர்பமும் சூழ்நிலையும் ஒன்றினைந்து தனித்து இருக்கும் தாய் மகன் அல்லது அப்பா மகளுக்கும் இது போல நேரலாம் என தனது அடுத்த படத்தில் காட்ட திட்டம் வைத்திருப்பாரோ என்னவோ தெரியவில்லை. எந்த சூழ்நிலை வந்தாலும் உறவுகள் தவறாது. மகன் கண்ணுக்கு தாய் தாயாகத் தான்  தெரியும், மகள் கண்ணுக்கு அப்பா தந்தையாகத்தான் தெரியும். ஒருவேளை சாமியின் வீட்டில் இதெல்லாம் சகஜமாக இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு தமிழனுடைய வீட்டிலும் இன்னமும் உறவுகள் சிதைந்து போய்விடவில்லை. இனியொரு வித்தியாச கதைக்களம் என்று தந்தை மகள் உறவை கொச்சைப்படுத்தி எவனாவ‌து அல்லது சாமியே திரைப்படமாக எடுக்க முனைந்தால் என்னவாகும்? அதைப்பார்க்கும் ஒரு மகளின் நிலை என்ன? அதைப்பார்க்கும் ஒரு தந்தையின் நிலை என்ன? இதுபோன்ற இழி செயல்களுக்கு காரணமே சாமி போன்ற யாராவது விதைக்கும் தவறான விதை தான் என்றால் அதை வெளிப்படுத்தும் சினிமாவும் கூட விபச்சாரத்தின் தூதுவனே. சில வருடங்களுக்கு முன்பு வேலுபிரபாகரன் பத்திரிகைகளுக்கு அளித்திருந்த செவ்வியில் பெண்களின் மார்பகம் எனபது ஒரு அதிகப்படியான ஜீன்களின் வளர்ச்சி தான், எனவே அதை வெளிப்படுத்துவதில் தவறில்லை என சொல்லியிருந்தார். அதேயிடத்தில் கேள்வியைத் திருப்பிய பத்திரிகையாளர்கள்,"உங்கள் வீட்டுப்பெண்களுக்கும் இதை அமுல்படுத்தி வெளியே அழைத்து வருவீர்களா? எனக் கேட்டபோது வேலுவின் முகத்தில் யாரோ செருப்பால் அறைந்தது போன்ற தொய்வு ஏற்பட்டது. அதற்கு அவர் பதிலே சொல்லவில்லை.


நான் சத்தியஜித்ரே போல பெரிய இயக்குனராக ஆகவேண்டும் என்ற ஆசையில் தான் படமெடுக்க வந்தேன், ஆனால் இங்கே இருக்கும் சினிமா களம் தான் என்னை இவ்வாறு மாற்றிவிட்டது என வாய்க்கூசாமல் சொல்லும் சாமி ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளவேண்டும். சதை வியாபாரத்தையே குறிக்கோளாகக் கொண்டு இதுவரை வெளிவந்திருக்கும் மளையாள சினிமாக்களில் மட்டும் தான் இது போன்ற தவறான உறவுகள் சித்தரிக்கப்படும். ஆனால் அந்தப்படத்தில் கூட இதுபோன்ற தவறான காட்சியமைப்புகள் இருக்காது. உதாரணமாக நீங்கள் சொல்லியிருக்கும் இதே கதைக்களம் மளையாள அட்டு சினிமாவில் காட்டப்பட்டு இருந்தால் அந்த மருமகள் தன் மாமனாரை அப்போதே அல்லது முடிவிலே நிச்சயம் கொலை செய்து இருப்பாள். அல்லது கணவுக்காட்சியாக மட்டுமே விரியும். ஆனால் இந்தப் படத்தில் ஒரு தமிழ்ப்பெண் இவ்வளவு கேவலமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறாள். தந்தையாக கருதவேண்டியவனை தன் இச்சை தீர்க்கும் மருந்தாகப் பயன்படுத்தியிருக்கிறாள். மீண்டும் மீண்டும் ஆசைப்பட்டு அவனோடு ஒட்டிக்கொள்கிறாள். மாமனாரோடு குடும்பமே நடத்துகிறாள். அதற்கு நீங்கள் சொல்லும் சிம்பிளான காரணம் சந்தர்ப்பம் சூழ்நிலை. என்னடா சந்தப்பமும் சூழ்நிலையும்? நீங்கள் எடுத்த இந்தப் படத்தை உங்கள் மனைவியும் உங்கள் அப்பாவும் ஒன்றாக இணைந்து பார்த்துவிட்டால், நீங்கள் உன் மனைவியை அவருடைய பாதுகாப்பிலே விட்டு விட்டு வெளியூர்களுக்கு படப்பிடிப்புக்கு செல்வீர்களா? படுபாவி!  புனிதமான மனித உறவுகளின் மீது மலத்தை அள்ளித்தெளித்து விட்டாயே!

தாய்மாமனின் உறவைச் சொல்லும் கிழக்குச்சீமையிலே, தகப்பனின் பொருப்பைச் சொல்லும் ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற காவியங்களுக்கு மத்தியிலே இதுபோன்ற நாற்றமெடுத்த படங்களையும் மக்கள் சகித்துக் கொள்ள வேண்டியது இருக்கிறதே!  நீங்கள்  சொல்லும் இதே வார்த்தையை தங்கர்பச்சானும் சொல்லியிருந்தால் ஒரு அழகியும், சொல்லமறந்த கதையும், பள்ளிக்கூடமும், ஒன்பது ரூபாய் நோட்டும் கிடைத்திருக்குமா?தமிழச்சியை இதுவரை யாரும் இவ்வளவு கேவலமாக கொச்சைப்படுத்தியதில்லை. சாமி போன்ற சாத்தான்களுக்கு அனைத்து ஊடகங்களும் சிவப்பக்கம்பளம் விரிக்கின்றன. இதை விடக்கொடுமை வேறென்ன இருக்கமுடியும்?

 "வாடா என் மாப்பிள்ள வாழ்ந்து பாரு கேப்பில"

"ஊரு என்ன சொன்னா என்ன வேல வெட்டி இல்லா பய"

"யார் இங்கு நல்லவர்கள் யார் இங்கு கெட்டவர்கள்"

"தப்புத் தண்டா செய்யாதவன் இருந்தா என்ன செத்தா என்ன"

என்பன போன்ற பாடல் வரிகள் நீங்க சொல்லும் வக்கிர கதைக்கு மேலும் வலுசேர்க்கிறது. உறவு குறித்த குஷ்புவின் வார்த்தைகளுக்கு பொங்கியெழுந்த தமிழ்ச்சமூகம் இந்தப் படம் குறித்து அவ்வளவாக அலட்டிக்கொள்ளாதது கவலையைத் தான் தருகிறது. இதுபோன்ற வக்கிர படங்களுக்கு இன்னமும் விளம்பரங்கள் குறைந்தபாடில்லை. தமிழ்ச்சமுதாயத்தின் சிந்திக்கும் திறன் சில நேரங்களில் மக்கிப்போய் விடும். அடிபட்ட பிறகு தான் விழித்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தும். ஆனால் அதனால் யாருக்கு நன்மை?

உறவுச்சங்கிலிகளுக்கு பெயர் போன கிராமத்து மக்களின் மண்வாசனையின் மீது மண்ணைத்தூவும் சாமி போன்ற இயக்குனர்கள் இனி தேர்ந்தெடுக்கப்போகும் அடுத்த களம் என்னவாக இருக்கும்? மருமகன் மாமியார்,அக்கா தம்பி,அண்ணன் தங்கை,அப்பா மகள், அம்மா மகன் என கொஞ்சம் கொஞ்சமாக  இந்த பிணைப்புகளையும் உடைத்து மிருகங்களின் சாராசரி வாழ்க்கையை மனிதருக்கும் பழக்கிட விபச்சார சினிமாவை ஆயுதமாக ஏந்திருக்கும் புரோக்கர் மாமா சாமியை உலகலாவிய இந்தத் தமிழ்ச்சமூகம் என்ன செய்தால் தகும்???
already seen this

7 Response to "சிந்துசமவெளி சீரழிவின் வழி"

  1. Unknown said...

    உறவுகளே சிதைத்து அதில் கல்லாக்கட்டும் சாமி மாதிரியான இயக்குனர்களை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும்
    அருமை நண்பரே .

  2. ஹுஸைனம்மா said...

    /அப்பா மகளுக்கும் இது போல நேரலாம் என தனது அடுத்த படத்தில் காட்ட திட்டம் வைத்திருப்பாரோ //

    செஞ்சாலும் செய்வார்; அதுக்கு இப்போ நடக்கிற அம்மாதிரியான ஒன்றிரண்டு அவலங்களையும் காரணமாக் காட்டுவார்..

  3. அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

    வக்கிர மனம், புத்தி கொண்டவர் இந்த (ஆ)சாமி என்பதை கட்டுரையில் அழுத்தமாக, நாகரீகமாக எடுத்து
    விளக்கினீர்கள், நிஜாம்.

  4. நிஜாம் கான் said...

    //வாழ்க்கை வாழ்வதற்கே said...
    உறவுகளே சிதைத்து அதில் கல்லாக்கட்டும் சாமி மாதிரியான இயக்குனர்களை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும்//

    நன்றி நண்பரே! தொடர்ந்து இணைந்திருங்கள்

  5. நிஜாம் கான் said...

    //ஹுஸைனம்மா said...
    /அப்பா மகளுக்கும் இது போல நேரலாம் என தனது அடுத்த படத்தில் காட்ட திட்டம் வைத்திருப்பாரோ //

    செஞ்சாலும் செய்வார்; அதுக்கு இப்போ நடக்கிற அம்மாதிரியான ஒன்றிரண்டு அவலங்களையும் காரணமாக் காட்டுவார்..
    September 26, 2010 1:00 ப்ம் //

    நன்றி ஹூசைனம்மா! சமூக அக்கறை உள்ளவர்களுக்கு புரிவது சாமி போன்ற சுய நலவாதிகளுக்குப் புரியவில்லை என்று தான் தோன்றுகிறது.

  6. நிஜாம் கான் said...

    //NIZAMUDEEN said...
    வக்கிர மனம், புத்தி கொண்டவர் இந்த (ஆ)சாமி என்பதை கட்டுரையில் அழுத்தமாக, நாகரீகமாக எடுத்து
    விளக்கினீர்கள், நிஜாம்//


    நன்றி நன்றி நிஜாம் பாய்! சமூக அக்கறை உள்ளவர்களுக்கு புரிவது சாமி போன்ற சுய நலவாதிகளுக்குப் புரியவில்லை என்று தான் தோன்றுகிறது.

  7. kadaroli said...

    yes nizam. ithu unmai kathai thanaaam... avar eppavume sontha anubavathai mattum than padam eduparam....

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,