இலங்கையில் தமிழர் பகுதியில் நிலவிய அந்தக் கலவர மேகம் இப்போது காற்றின் திசைமாறி கொழும்பு பகுதியில் மையம் கொண்டுள்ளது. எந்த நேரமும் கலவரம் வெடிக்கலாம் என்ற பீதியில் சிங்களவர்கள் உறைந்து போய் உள்ளார்கள் தமிழர்களைக் கொத்துக்கொத்தாய் அழித்து அதைக் கொண்டாடி மகிழ்ந்த அதே சிங்களவர்கள் இன்றைக்கு தங்களுக்கு மத்தியில் சூழ்ந்திருக்கும் அபாயத்தை எண்ணி வேதனையடைந்துள்ளார்கள். பேனா முனை ஒடிக்கப்பட்டுள்ள இலங்கையில் அரசசெய்திகளைத் தவிர மற்ற செய்திகளை வெளியிட முடியாததால் இந்த அபாயச் செய்திகளை மென்று விழுங்கிக் கொண்டிருக்கின்றன அங்கிருக்கும் மீடியாக்கள்.
என்ன நடக்கிறது இலங்கையில்?
இன அழிப்பை கூட்டணியாக நின்று மிகச்சரியாக செய்து முடித்த இலங்கையின் பேரரசர்கள் இப்போது அந்த வெற்றிக்குக் காரணம் யார் என தங்களுக்குள் போட்டி போட்டதன் விளைவு இன்றைக்கு இரு அணிகளாகப் பிரிந்து நிற்கின்றனர். ஒரு அணிக்கு மகிந்தா மற்றும் கோத்தபயவும், மற்றொரு அணிக்கு சரத் பொன்சேகாவும் சண்டைக் கோழிகளாக மாறி வரும் தேர்தலிலே மல்லுக்கட்டப் போகிறார்கள்.

மக்கள் மத்தியிலே அதிபர் மஹிந்தாவிற்கு இருக்கும் அதே செல்வாக்கு பொன்சேகாவுக்கும் இருப்பதாக சில ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை ராணுவத்திலே சிங்கபாகு மற்றும் கசபாகு என்ற இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. இதிலே சிங்கபாகு குழுவினர் முழுக்க முழுக்க தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் தங்களது உயிரையும் பணயம் வைத்து களத்திலே நின்று போராடியவர்கள். இந்த சிங்கபாகு படையின் தலைவர் பொன்சேகா. அடுத்துள்ள கசபாகு குழுவினர் உள்நாட்டுப் பாதுகாப்பிலே மட்டும் ஈடுபடுத்தப் பட்டனர். சிங்கபாகுவை ஒப்பிடும் போது இந்த கசபாகு குழுவினர் வீரத்தில் வேகத்தில் மந்தமானவர்கள். இவர்களின் தலைவர் கோத்தபய ராஜபக்சே. கசபாகு அணியினரை விட சிங்கபாகு அணி எண்ணிக்கையில் அதிகம்.

அதாவது தங்கள் தளபதியின் கட்டளைக்காக எந்நேரமும் தயார் நிலையில் நிற்கின்றனர். மஹிந்தாவால் துரோகி என அறிவிக்கப்பட்ட பொன்சேகா எவ்வித அவசரமும் காட்டாமல் மிக சாதுர்யமாக காய்களை நகர்த்தி வருகிறார்.
தனது குழுவினரின் குடும்பத்தினரின் வாக்கு முழுமையாக தனக்கு கிடைக்கும் என்ற கணக்கிலே பொன்சேகாவும், எலும்புத்துண்டுகளுக்கு வாலை ஆட்டும் தமிழ்தேசிய கட்சிகளை கரெக்ட் செய்து தமிழர்களின் ஓட்டுக்களை வாங்கி வெற்றிபெற்று விடலாம் என மஹிந்தாவும் கணக்குப்போட இப்பவே தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது.
மஹிந்தாவிற்கு சிங்கள மக்கள் மத்தியில் 50% நிலையான வாக்குவங்கி இருகிறது. ஆனால் வெற்றியடைவதற்கு இது போதாது என்பதால் தமிழ் கட்சிகளை வளைத்துப்போட்டு தமிழர்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்தில் வெற்றிபெற்று விடலாம் அதன் பின்னர் முன்னுரிமை வாக்குகள் மூலம் அதிபராகி விடலாம் என ஒரு பக்கம் மஹிந்தாவும், சிங்களர்களின் வாக்குவங்கியை மட்டுமே முழுமையாக நம்பி நின்று, அதிபராகிவிட்டால் தனக்கு எதிரான நாடாளுமன்றம் அமைந்தாலும் அதைக் கலைத்து விட்டு பாகிஸ்தான் பானியில் அதிபர் ஆட்சியை கொண்டுவந்து விடலாம் என பொன்சேகாவும் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் உலவுகின்றன.

இதுபோன்ற சூழ்நிலையில் தேர்தலுக்கு முன்னதாக இலங்கையில் ஒரு பெரிய கலவரம் வெடிக்கப் போவதாக சிங்களவர்கள் மத்தியிலே சமீபகாலமாக ஒரு செய்தி உலவிக் கொண்டிருன்றது. அதன் மூலம் ராணுவப்புரட்சி செய்து ஆட்சியைப் பிடிக்க பொன்சேகா திட்டமிடுவதாக வதந்தி தீயாக பரவிக்கொண்டிருக்கிறது. ஒருவேளை கலவரம் வெடித்தால் அதிலே முழுக்க முழுக்க சிங்கபாகு அணியினர் தான் ஈடுபடுவார்கள் என்றும் அவர்களின் குறி முழுக்க முழுக்க மஹிந்தாவின் ஆதரவாளர்கள் என்றும் வதந்தி பரப்பப்படுகின்றது. ஆனால் இந்த செய்தி பொன்சேகாவின் ஆதரவைக் குலைக்க மஹிந்தாவின் சதி என்றும்,கலவர அபாயம் தற்போதைக்கு இல்லை எனவும் சில செய்திகள் உலவுகின்றன. ஆக அனைத்துமே உறுதிசெய்யப் படாத யூக செய்திகள்.
இந்த நிலையில் சரத் பொன்சேகா ராணுவப்புரட்சி செய்ய ஆயத்தமாகிவிட்டார் என இலங்கையின் ராணுவமையத்திலிருந்து ரகசியத் தகவலைக் கசிய பீதியாகிய மஹிந்தா இந்தியாவிற்கு போனை போட்டு 24 மணி நேர கட்டப்பஞ்சாயத்து சர்வீஸை உதவிக்கு அழைக்க டிக்கெட் கூட எடுக்காமல் ஓடிவந்தார் பிரணாப் . ஏற்கனவே கைலியும் முண்டா பணியனுமாக இளநீர் வியாபாரிகளைப் போல இலங்கையில் சுற்றிக்கொண்டிருக்கும் "ரா" பணியாளர்களை சந்தித்து விளக்கம் கேட்க இது வெறும் புரளி என்றும் இப்போதைக்கு புரட்சி செய்வதற்கு பொன்சேகாவிடம் எந்தவித திட்டமும் இல்லை என்றும் அறிவித்ததைத் தொடர்ந்து மஹிந்தாவை நிம்மதியாக தூங்கச் சொல்லிவிட்டு ஊருக்கு வந்து சேர்ந்தார் பிரணாப்.

ஆனால் இலங்கை சென்று திரும்பிய பிரணாப்பிடம் எந்த நேரத்திலும் எங்களுக்கு இந்திய ராணுவத்தின் உதவி தேவைப்படலாம் என்றும் எனவே தங்கள் ராணுவத்தை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளாராம் மஹிந்தா. அதைக்கேட்டு பூம்பூம் மாடாய் தலையாட்டிய பிரணாப் இலங்கை கடற்படையால் தினசரி தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கொஞ்ச நாளைக்கு நிப்பாட்டி வைக்கக் கூடாதா என தான் சொல்ல இருந்த விசயத்தை தனது ஞாபகமறதி காரணமாக மறந்துவிட்டாராம். மறந்துவிடக்கூடாது என்பதற்காக சட்டையில் முடிச்செல்லாம் போட்டுக்கொண்டு தான் சென்றாராம். ஆனால் மஹிந்தாவுடன் பேசிக்கொண்டிருக்க்ம் போது அந்த முடிச்சு எதற்காகப் போட்டோம் என யோசிப்பதற்குள்ளாக அவரை விமானத்தில் ஏற்றி அனுப்பிவிட்டாராம் மஹிந்தா. ஊருக்கு வரும் வரை யோசித்துக் கொண்டே வந்தாராம். ஞாபகம் வரவேயில்லையாம். பிரதமரை சந்திக்கும் போது பிரதமர் கேட்டாரம்,
"என்னங்க மீனவர் பிரச்சினையப் பத்தி பேசுனீங்களா?"
"ஆகா அதமட்டும் தாங்க மறந்துட்டேன்"
"சரி விடுங்க அடுத்த வாட்டி பாத்துக்கலாம், தாக்கப்படுவது தமிழக மீனவர்கள் தானே!"


வரணும். வலி தெரியணும். நாறப் பன்னாடைங்க. இந்த ப்ராணாக்கு ஆப்பு வராதா:((
//"என்னங்க மீனவர் பிரச்சினையப் பத்தி பேசுனீங்களா?"
"ஆகா அதமட்டும் தாங்க மறந்துட்டேன்"
"சரி விடுங்க அடுத்த வாட்டி பாத்துக்கலாம், தாக்கப்படுவது தமிழக மீனவர்கள் தானே!"//
நச்...!!!!
Www.TamilaruvY.Com wach tamil DVD HQ MOVIES WACH 1 ON NET VISIT NOW WWW.TAMILARUVY.COM OR WWW.ARUVYMOVIES.COM
//வானம்பாடிகள் said...
வரணும். வலி தெரியணும். நாறப் பன்னாடைங்க. இந்த ப்ராணாக்கு ஆப்பு வராதா:((//
கொதிப்புக்கு நன்றிண்ணே! தொடர்ந்து இணைந்திருங்கள்.
// Maayavan saiட்...//
நன்றி மாயவன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
//TAMILEELAM said...
Www.TamilaruvY.Com wach tamil DVD HQ MOVIES WACH 1 ON NET VISIT NOW WWW.TAMILARUVY.COM OR WWW.ARUVYMOVIES.COM//
தமிழீழம் பெயரில் விளம்பரமா?
இந்த இடுகைக்கு வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்.
சிறப்பு இடுகையாக இதைத் தேர்ந்தெடுத்த தமிழ்10 க்கு மிக்க நன்றி