Nov 26, 2009

குடும்பத்தை கெடுக்கும் மாதர் சங்கங்கள்

நிஜாம் கான் @ 6:08 PM

பெண்கள் மீதான வன்கொடுமை:

நேற்று 25 நவம்பர் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு தினமாம். பெண்களுக்கு வன்கொடுமை அதிகபட்சமாக சொல்லப்படுவது பாலியல் வல்லுறவு. ஆனால் இன்றைய வளர்ந்த நாகரீக சூழ்நிலையில் வல்லுறவுகள் அனைத்தும் நல்லுறவுகளாக மாறிவிட்டதால் கற்பழிப்பு வழக்குகள் முன்போல வருவதில்லை. இந்த பாலியல் வல்லுறவுக்கு அடுத்ததாக இடம்பெறுவது மாமியார் கொடுமை. ஆனால் நவீன மருமகள்கள் ஆதிக்கத்தால் இன்றைக்கு எல்லா மாமியார்களும் அடக்கி ஒடுக்கப்பட்டு விட்டனர். சிலிண்டர் வெடித்துச் சாவுகள் இப்போதெல்லாம் முன்போல நடப்பதில்லை.

மகுடி ஊதிய பாம்பாக:

இப்போதெல்லாம் வரதட்சனை கொடுமைகள் குறித்து அதிகமாக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. கணவனுக்கு மனைவி பயந்த காலம் மாறி இன்றைக்கு மனைவி சொல்லே மந்திரம் என மகுடி ஊதிய பாம்பாக கணவன்மார்கள் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். பூரிக்கட்டை அடிகளும், தோசைக்கரண்டி வீச்சுகலும் வெளியே மறைக்கப்பட்டு அப்பாவியாய் சின்னப்புள்ளத் தனமாக வெளியே நடமாடும் கணவன்மார்களுக்கு பாதுகாப்பாக என்ன சட்டம் இருக்கிறது?

வாழ்க்கைச் சூழல்:

முன்னர் ஆட்டுக்கல்லில் மாவு அரைக்கும் போது குழ‌வி மட்டும் சுற்றிவரும், கல் அப்படியே இருக்கும். ஆனால் இன்றைக்கு கிரைண்டரில் கல்லும் குழ‌வியும் சேர்ந்து சுற்றுகிறது. அதாவது இன்றைய பொருளாதாரத்தைச் சமாளிக்க கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிவிட்டனர். வேலைக்கு அனுப்ப விருப்பமில்லாமல் ஆனால் குடும்பச் சூழ்நிலையால் அரை மனதோடு மனைவியை வேலைக்கு அனுப்பி வைப்பவர்கள் எத்தனை பேர்? அலுவலகத்தில் வேலைக்குச் செல்லும் மனைவியில் கைத்தொலைபேசியை தினசரி சோதனை செய்யும் கணவன்மார்கள் எத்தனை பேர்? இப்படி மனைவி மீது எழும் சந்தேகத்தின் காரணமாக ஒரு சிறந்த குடும்பத்திற்குள் விரிசல் ஆரம்பமாகிறது. கணவனுக்கு சமமாக தாங்களும் வேலைக்குச் செல்வதால் தங்களும் ஒரு குடும்பத்தலைவர் தான் என்ற எண்ணம் பெண்களுக்கும் எழுந்து விடுகிறது. சமஉரிமை வேண்டும் என்ற பெயரில் நீயும் துணி துவை, நீயும் சமயல் செய், நீயும் வீட்டை சுத்தம் செய் என்ற ஈகோ பெண்களுக்கு உருவாகி இருவருக்குள்ளும் எழும் பிரச்சனை தினசரி சண்டைகளாக மாறுகிறது.

கவுன்சிலிங்:

இப்படித்தான் பிரச்சனைகள் ஆரம்பமாகி ஒரு கட்டத்தில் கணவன் கையை ஓங்கினால் போதும் இவர்களுக்கென சந்துக்கு சந்து மாதர் சங்கங்கள் இயங்கிவருகின்றன. அந்த சங்கத்தில் பொருப்பில் இருக்கும் சீனியர் பெண்கள் அனைவரும் கணவனோடு சண்டையிட்டுப் பிரிந்து அல்லது சில மோசமான ஆண்களால் வஞ்சிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். அவர்களிடத்திலே இந்தக் குடும்பப்பெண் கவுன்சிலிங் போகும் போது அவர்கள் கொடுக்கும் முதல் அட்வைஸ் என்ன தெரியுமா? அவன் பேசினால் நீயும் பேசு அவன் அடித்தால் நீயும் திருப்பி அடி என அவர்களுக்கு சாவியை போட்டுவிடுவார்கள். அதற்கு மேல் போனால் எங்கள் சங்கமே தலையிட்டு இலவசமாக விவாகரத்து வாங்கித் த‌ந்துவிடும் என பெருமையாகச் சொல்லி பல குடும்பங்களுக்கு குண்டு வைத்து வருகிறார்கள் இந்த மாதர் சங்கத்தினர். அவர்கள் சிலர் ஆண்களால் வஞ்சிக்கப்பட்டார்க என்பதற்காக மற்றவர்களின் சாதாரண பிரச்சனையையும் இவர்கள் தலையிட்டு ஊதி பெருசாக்கிவிடுகிறார்கள். யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என நீள்கிறது இவர்களின் சேவை.

அடிதடி பேச்சுவார்த்தை மேட்டர்‌ சரி வரவில்லை எனில் இவர்கள் கொடுக்கும் அடுத்த யோசனை மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று வரதட்சனை புகார் கொடுக்கச் சொல்வதாகும்.

மகளிர் காவல் நிலையம்:

சினிமாக்களில் எமலோகத்தைப் பார்த்திருப்போம். அங்கே கொம்பு வைத்து பெரிய கோரைப்பற்கள் வெளியே தெரிய‌ பெண் கிங்கரர்கள் இருப்பார்களே அவர்களுக்கும் தமிழக மகளிர் காவல் நிலையத்தில் உள்ள பெண் காவலர்களுக்கும் அதிகபட்சம் பெரிய வித்தியாசமில்லை. இந்த வழக்கு அவர்களில் பார்வைக்கு வந்ததும் அந்தக் கணவன் டாக்டராக இருந்தாலும் அவனை நடுரோட்டில் நிற்க வைத்து அவமானப்படுத்தி அந்த வீட்டில் இருக்கும் பெரிசு சின்னது என எல்லாரையும் ஜீப்பில் அள்ளிப் போட்டுக்கொண்டு ஸ்டேசனுக்கு கொண்டு வந்து காதுகளால் கேட்க முடியாத அர்ச்சனையை ஆரம்பிக்கும் மகளிர் காவல்துறை. ங்கோ..., என ஆரம்பித்து அவனின் அம்மா, அக்கா மூனு தலைமுறைக்கு முன்னாடி செத்துப்போன கிளவி முதற்கொண்டு அனைவரையும் நாறடித்து பின்னர் அவனிடம் மீட்டர் கறக்கும் வேலையில் இறங்குவார்கள் இந்தக் கட்டப்பஞ்சாய‌த்து கம்பெனியினர்..

மீட்டர் கறப்பதற்கென‌ சிறப்பாக பயிற்சி பெற்ற பெண் போலீஸ் அவனிடம் நைசாக பேச்சுக்கொடுக்கும். சார், "அம்மா கொஞ்சம் கோவக்காரங்க தான், ஆனா மற்றபடி நல்லவங்க", என ஆரம்பித்து அவனிடம் பெரிய தொகையை அழுத்திவிடுவார்கள். அதுமட்டுமின்றி அன்றைக்கு அனைவருக்கும் பிரியாணியும் அவன் செலவிலே வாங்கிக்கொள்வார்கள். தமிழக மகளிர் காவல் நிலையங்களில் தினசரி பிரியாணி வாசனை தான். எப்படியும் தினமும் ஒரு கேஸ் கிடைத்துவிடும். ஆனால் காசு கொடுக்க மறுக்கும் அல்லது ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு வரதட்சனை கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுவிடும். அத்தோடு அவன் வாழ்க்கை காலி. தமிழக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வரதட்சனை கொடுமை வழக்குகளில் 70% இவ்வாறு புணையப்பட்ட வழக்குகள் என வஞ்சிக்கப்பட்ட ஆண்கள் சங்கம் என்ற ஒரு அமைப்பு தெரிவித்துள்ளது.

இது போல அவமானப்பட்டு அவர்களின் வற்புறுத்தலால் அவளை வேண்டாவெறுப்பாக சேர்த்துவாழும் கணவன்கள் பல நேரங்களில் அவர்களின் தொந்தரவு தாங்காமல் அவளை கொலை செய்துவிடுவதும் செய்திகளாக நாம் பார்க்கிறோம். காவல்துறையில் இருக்கும் இதுபோன்ற சில காவலர்களால் வாழ்க்கையை இழந்தவர்கள் எத்தனை பேர். வன்கொடுமை சட்டம் பெண்களுக்கு மட்டும் தானா? ஆண்களுக்கு இல்லையா என விடைதெரியாத பலகேள்விகள் இன்றுவரை கேள்விகளாகவே இருக்கின்றன.

மாரியம்மாள் கொலை வழக்கு:

சில வருடங்களுக்கு முன்பு மதுரை மாவட்டத்தை உலுக்கிய மாரியம்மாள் வழக்கு மிக சுவாரஸ்யமானது. அதாவது கணவனிடம் கோபித்துக்கொண்டு சென்றுவிட்டாள் மாரியம்மாள் என்ற‌ மனைவி . சில நாட்களில் மாரியம்மாளை அவளது கணவன் கொலை செய்துவிட்டான் என அவனை கைது செய்து பல நாட்கள் அந்த வழக்கு நடந்தது. ஒரு கட்டத்தில் அவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி. இந்த தீர்ப்பைக் கேள்விப்பட்ட மாரியம்மாள் மனம் மாறி வந்து தான் உயிரோடு இருப்பதாகவும், தன் கணவரை விடுதலை செய்யுமாறு அதே நீதிமன்றத்தில் முறையிட வழக்கிலே பரபரப்பு தொற்றிக்கொண்டது. தண்டனை விதிக்கப்பட்ட மாரியம்மாளின் கணவன் அதே நிதிபதியின் முன் நேர் நிறுத்தப்பட்டான். நீதிபதி அவனிடம் கேட்டார்

"அப்பறம் ஏன்யா நீ உன் மனைவிய கொல பண்ணுனதா ஒப்புக்கிட்ட?"

"அடப்போங்க அய்யா! போலீஸ்காரங்க என்னய அடிச்சது மாதிரி உங்களையும் அடிச்சிருந்தா மாரியம்மாள கொல பண்ணுனது நான் தான்னு நீங்களே ஒத்துக்கிட்டு இருப்பீங்க‌"

already seen this

5 Response to "குடும்பத்தை கெடுக்கும் மாதர் சங்கங்கள்"

  1. vasu balaji said...

    /"அடப்போங்க அய்யா! போலீஸ்காரங்க என்னய அடிச்சது மாதிரி உங்களையும் அடிச்சிருந்தா மாரியம்மாள கொல பண்ணுனது நான் தான்னு நீங்களே ஒத்துக்கிட்டு இருப்பீங்க‌"/

    =))

    மகளிர் காவல் நிலையத்துக்கு போய்ட்டா அப்புறம் நாங்க சமாதானமா போய்ட்டோம்.விட்றுங்கன்னா அதுக்கும் மீட்டர் போடுவாங்களாம்ல.

  2. ரோஸ்விக் said...

    ஆத்தாடி....உஷாரா இருக்கணும் போல....:-)

  3. அன்புடன் மலிக்கா said...

    என்னத்தச்சொல்லி என்ன பண்ண. எல்லாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்,,,,, இதுக்குமேல சொல்லத்தெரியல நிஜாம்..

  4. ஹுஸைனம்மா said...

    மாதர் சங்கங்கள் மற்றும் மகளிர் காவல் நிலையங்களால் சாதகங்களும் உண்டு; ஆனால் பாதகங்கள் கூடிப்போனதுதான் நிஜம்.

  5. நிஜாம் கான் said...

    //வானம்பாடிகள்//
    //ரோஸ்விக் //
    //அன்புடன் மலிக்கா //
    //ஹுஸைனம்மா//

    கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,