Dec 1, 2009

அர்ச்சகர் தேவநாதனுக்கு வெளக்கமாத்து அடி

நிஜாம் கான் @ 7:01 PM

கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் இருக்கும் மச்சேஸ்வரர் கோயிலில் அர்ச்சகராக தேவநாதன் இருந்து வந்தார். இவர் கோயிலுக்கு வரும் பெண்களை ஆசைவார்த்தை கூறி மயக்கி கோவில் கருவறைக்குள் வைத்து கலீஜ் செய்ததற்காக காவல்துறையால் கைதுசெய்யப்பட்டார். இந்த கருமம் புடிச்ச வெவகாரம் பல நாட்களாக ஊடகங்கள் மற்றும் வலைப்பூக்களில் வலம்வந்து கொண்டிருக்கிறது. இப்படி அவர் சில்மிசம் செய்த பெண்களின் பட்டியல் நாளாக நாளாக நீண்டுகொண்டே இருக்கிறது.

என்ன செய்தார் தேவநாதன்?:

அர்ச்சனைக்கு வரும் பெண்களிடம் கருவறைக்குள் உல்லாசமாக இருந்தால் கடைசிவரை இளமையாக இருக்கலாம் என ஆசைவார்த்தை கூறி அந்தப்பெண்களை கோவில் கருவறைக்குள் வைத்து கலீஜ் செய்திருக்கிறார் இந்த நவீன அர்ச்சகர். இந்த கருமத்தை இத்தோடு விட்டுத்தொலைக்காமல் அந்த காட்சிகளை தன்னுடைய கைபேசியில் படம்பிடித்தும் வைத்திருக்கிறார். அந்த வீடியோ கோப்புகள் பிற்காலத்தில் தனக்கு ஆப்புகளாக மாறும் என்று அவர் நினைத்திருக்க மாட்டார்.

சொந்த செலவில் சூனியம்:

அந்த பலான காட்சிகளைப் படம்பிடித்து படம்பிடித்து இனிமேல் முடியாது என அடம்பிடித்து தற்காலிகமாக மூச்சை நிறுத்திக்கொண்டது அவரது கேமிரா கைத்தொலைபேசி. அதிலே சேகரித்து வைக்கப்பட்டிருந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க படங்கள் இத்தோடு அழிந்துவிடக்கூடாது என நினைத்த தேவநாதன் அதை ரிப்பேர் செய்வதற்காக அருகிலே இருக்கும் மொபைல் ரிப்பேர் கடையில் கொடுத்திருக்கிறார். அவரது மொபைலை ரிப்பேர் செய்த அந்தக் கடையின் ஊழியர், சரி, சாமியின் செல்போனில் சாமிப்படங்கள் ஏதாவது இருந்தால் அதைக்காப்பி செய்து கொள்ளலாம் என அவைகளை திறந்த போது அங்கே கருவறைக் காட்சிகள் ஓட அதிர்ச்சியில் உறைந்த அந்த ஊழியர் அது அனைத்தையும் சிந்தாமல் சிதறாமல் குறுந்தகடாக்கி வினியோகம் செய்து விட்டார். இந்த குறுந்தகடு விசயம் தேவநாதனுக்குத் தெரிந்து அவர் எஸ்கேப். சில நாட்கள் கழித்து நீதிமன்றத்தில் சரணடைந்த அவருக்கு 15 நாட்கள் உள்ளே வைக்க உத்தரவிட்டது நீதிமன்றம். வழக்கை விசாரித்தது ஒரு பெண் நீதிபதி.

வெளக்கமாத்து அடி:

இந்த நிலையில் 15 நாள் காவல் முடிந்து அவரை ஆஜர்படுத்த காஞ்சிபுரம் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தது காவல்துறை. தேவநாதன் ஆஜர்படுத்தப்படும் செய்தி கேட்டு அங்கு திரண்ட மகளிர் அமைப்பினர் கையில் செருப்பு, விளக்குமாறு மற்றும் மாட்டுச்சாணம் ஆகியவற்றுடன் காத்திருந்தனர். இவர்கள் மேற்படி மேட்டருக்காக காத்திருக்கும் செய்தி அங்கிருக்கும் காவல்துறையினருக்குத் தெரியவர அவர்களும் உசாரானார்கள். இந்த நிலையில் தேவநாதனை ஏற்றிவந்த ஜீப் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததும் அவரவரர்கள் கைகளில் இருந்த செருப்பு மற்றும் விளக்கமாற்றால் அந்த ஜீப்பை சூழ்ந்து தாக்க ஆரம்பித்தனர். இதனால் தேவநாதன் கீழே இறக்கப்படவில்லை.

ஆனாலும் அசராத பெண்கள் தொடர்ந்து தாக்கினார்கள். அனைத்து வெளக்கமாறு மற்றும் செருப்படிகளும் பாவம் அங்கிருந்த காவல்துறையினர் மீது சரமாரியாக‌ விழுந்தது. ஆத்திரமடைந்த காவலர்கள் அந்தப் பெண்களைத் திருப்பித்தாக்கினார்கள். காவலர்களின் எதிர்த்தாக்குதலைப் பொருட்படுத்தாத பெண்கள் வீறுகொண்டு அந்த வாகனத்தின் மீது சாணத்தை எறிந்தார்கள். இந்த களேபரங்களால் கதிகலங்கிய தேவநாதன் அழுக ஆரம்பித்தார். ஸ்பிரிங் கேட் வழியாக விமானத்திற்குள் ஏறும் பயணியைப் போல ஜீப்பை நீதிமன்ற வாசலில் நிறுத்தி தேவநாதனை ஒரே மூச்சில் உள்ளே கொண்டு சென்றது காவல்துறை.

ஒரு குச்சிகூட தேவநாதன் மீது படாமல் பாதுகாத்துவிட்டது காவல்துறை. ஆனால் நேற்று பல தொலைக்காட்சி செய்திகளில் அர்ச்சகர் தேவநாதனுக்கு விளக்குமாற்று அர்ச்சனை என செய்திகள் வெளியாயின.

உழைக்கும் மக்கள் தீட்டு:

இந்த செயலால் மகளிர் அணியினர் அனைவரும் கைது செய்யப்பட்டு வேனில் அழைத்துச் செல்லப்பட்டனர். வேனில் இருந்த பெண் ஆய்வாளர் இந்தப்பெண்களின் செயலைப் பாராட்டிய படி வாகனம் அங்கிருந்து கிளம்பியது. இந்தப் பெண்கள் நேற்று பொங்கியெழுந்த இந்த நிகழ்ச்சி உண்மையிலே அவர்களின் சமூக அக்கறையைப் பறைசாற்றியது. இந்த நிகழ்ச்சியை தலைமை ஏற்று நடத்திய அணியின் தலைவி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கும் போது அவர் சொல்லிய ஒரேயொரு செய்தி சிந்திக்க வைத்தது.

அதாவது ,"உழைக்கும் மக்கள் கோவிலுக்குள் நுழைந்தால் தீட்டுன்னு சொல்ற இவனுக்கு, கருவறைக்குள் செய்த இந்த செயல் தீட்டாகத் தெரியவில்லையா"? என்று கேட்டு அதிர வைத்தார்.

கால்நடை உலவிடும் வீதியில் எங்களின் கால்களை அபகரித்தீர், வௌவ்வால் நுழைந்திடும் கோவிலில் எங்களின் வாசலை அடைத்துவிட்டீர் என்ற பெரியார் திரைப்படத்தின் பாடல்வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.

already seen this

29 Response to "அர்ச்சகர் தேவநாதனுக்கு வெளக்கமாத்து அடி"

  1. கிரி said...

    //அந்த பலான காட்சிகளைப் படம்பிடித்து படம்பிடித்து இனிமேல் முடியாது என அடம்பிடித்து தற்காலிகமாக மூச்சை நிறுத்திக்கொண்டது அவரது கேமிரா கைத்தொலைபேசி.//

    ஹா ஹா ஹா செம காமெடி :-)))))))

    நிஜாம் ஒரு பத்திரிக்கையாளருக்குரிய நடையுடன் அருமையாக எழுதுகிறீர்கள்.. வாழ்த்துக்கள்

  2. நிஜாம் கான் said...

    தங்களின் மேலான கருத்துக்கு நன்றி கிரிசார்! தொடர்ந்து இணைந்திருங்கள்.

  3. vasu balaji said...

    நச் நிஜாம். இவனுக்கு இது போதாது. அப்படியே சி.டி. போட்டவனையும் சாத்தணும். இவன மாதிரியே அவனும் கேவலமானவன்.

  4. நிஜாம் கான் said...

    வானம்பாடிகள் அண்ணே! சிடி போட்ட அந்தக் கம்மனாட்டி அதை 100 ரூபாய்க்கு விற்றிருக்கிறான். அதுமட்டுமின்றி இப்போது அந்த சிடி 500 ரூபாய் வரை விலைபோகிறதாம். இவனுக ஓக்கே! ஆனா அந்த அப்பாவி பெண்கள் பாவம்.

  5. thamizhparavai said...

    //ஆனா அந்த அப்பாவி பெண்கள்//

    அப்பாவி பெண்கள்...??????!!!!!

  6. நிஜாம் கான் said...

    //தமிழ்ப்பறவை said...
    //ஆனா அந்த அப்பாவி பெண்கள்//

    அப்பாவி பெண்கள்...??????!!!!!///



    பெண்கள் என்ன செய்வார்கள்? வலைவிரித்தது இவன். பூசாரி சொன்னால் சாமியே சொன்னது மாதிரி என விழுந்துவிட்டார்கள். மற்றபடி யாரும் வேண்டுமென்றே செல்லவில்லை,

  7. அ.மு.செய்யது said...

    //,"உழைக்கும் மக்கள் கோவிலுக்குள் நுழைந்தால் தீட்டுன்னு சொல்ற இவனுக்கு, கருவறைக்குள் செய்த இந்த செயல் தீட்டாகத் தெரியவில்லையா"? //

    செம்ம பஞ்ச் !!!

  8. அ.மு.செய்யது said...

    //நிஜாம் ஒரு பத்திரிக்கையாளருக்குரிய நடையுடன் அருமையாக எழுதுகிறீர்கள்.. வாழ்த்துக்கள்

    //

    நானும் சொல்ல வந்தேன்.கிரி முந்தி விட்டார்

  9. goma said...

    இந்த நிகழ்ச்சியைக் கருவாகக் கொண்டு ’நான் அவன்தான்’ என்ற பெயரில் படம் எடுத்து விடக் கூடாது.அதையாவது நிறுத்து கடவுளே!

  10. goma said...

    நச் நிஜாம். இவனுக்கு இது போதாது. அப்படியே சி.டி. போட்டவனையும் சாத்தணும். இவன மாதிரியே அவனும் கேவலமானவன்.
    அவன ஏன் சாத்தணும்?
    சிடி போட்டதால்தானே குருக்கள் லீலை வெளி உலகுக்குத் தெரிய வந்தது...அவர்பாணியில் அவர் ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்

  11. அன்புடன் மலிக்கா said...

    எதிரொலின்னு தலைப்பு வச்சதே சூப்பர்.
    கலக்குறீங்க..
    அப்படி இங்குவந்து விருதினை பெற்றுக்கொள்ளங்கள்

    http://kalaisaral.blogspot.com/2009/12/blog-post.html.

  12. அகல்விளக்கு said...

    //அர்ச்சனைக்கு வரும் பெண்களிடம் கருவறைக்குள் உல்லாசமாக இருந்தால் கடைசிவரை இளமையாக இருக்கலாம் என ஆசைவார்த்தை கூறி அந்தப்பெண்களை கோவில் கருவறைக்குள் வைத்து கலீஜ் செய்திருக்கிறார் இந்த நவீன அர்ச்சகர்.//

    அவனுக்கு இந்த அடி பத்தாது....

  13. இளங்கோ said...

    ராமகோபாலன் ஆவேச அறிக்கை எதுவும் விட்டதாக தெரியவில்லை

  14. S.A. நவாஸுதீன் said...

    //"உழைக்கும் மக்கள் கோவிலுக்குள் நுழைந்தால் தீட்டுன்னு சொல்ற இவனுக்கு, கருவறைக்குள் செய்த இந்த செயல் தீட்டாகத் தெரியவில்லையா"? என்று கேட்டு அதிர வைத்தார்.//

    //கால்நடை உலவிடும் வீதியில் எங்களின் கால்களை அபகரித்தீர், வௌவ்வால் நுழைந்திடும் கோவிலில் எங்களின் வாசலை அடைத்துவிட்டீர்//

    சும்மா “நச்”சுன்னு இருக்கு. திரு. கிரி அவர்கள் சொன்னதையே நானும் சொல்கிறேன். நல்ல எழுத்து நடை நிஜாம்.

  15. Anonymous said...

    உங்களுக்கு இதில் என்ன இத்தனை அக்கறை.ஒரு சாதியின் மீதான உங்கள் காழ்ப்பு நன்றாகத் தெரிகிறது.
    ஊழல் பேர்வழிகள், விபச்சார புரோக்கர்கள் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படும் போது இந்த மகளிர் சங்கங்கள் இப்படியா நடந்து கொண்டன. தேவநாதனைச் சட்டப்படி தண்டிக்கட்டும். அதை வைத்து முஸ்லீம்கள், தேச விரோத கம்யுனிஸ்ட்களும் இங்கே கும்மியடிக்க வேண்டாம்.
    உங்களுக்கெல்லாம் பிடிக்காத
    இந்து மதமும், இந்தியாவும்
    நீங்கள் எவ்வளவு முயன்றாலும் அழியாது.

  16. நிஜாம் கான் said...

    //உங்களுக்கு இதில் என்ன இத்தனை அக்கறை.ஒரு சாதியின் மீதான உங்கள் காழ்ப்பு நன்றாகத் தெரிகிறது. ஊழல் பேர்வழிகள், விபச்சார புரோக்கர்கள் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படும் போது இந்த மகளிர் சங்கங்கள் இப்படியா நடந்து கொண்டன. தேவநாதனைச் சட்டப்படி தண்டிக்கட்டும். அதை வைத்து முஸ்லீம்கள், தேச விரோத கம்யுனிஸ்ட்களும் இங்கே கும்மியடிக்க வேண்டாம். உங்களுக்கெல்லாம் பிடிக்காத இந்து மதமும், இந்தியாவும் நீங்கள் எவ்வளவு முயன்றாலும் அழியாது.//
    அன்புள்ள அனானி அண்ணே!!

    //உங்களுக்கு இதில் என்ன இத்தனை அக்கறை.//
    சமூகத்தில் உள்ள அனைவருக்கும் இதன் மீது அக்கறை வேண்டும்.

    // ஒரு சாதியின் மீதான உங்கள் காழ்ப்பு நன்றாகத் தெரிகிறது//
    அவரை எந்த இடத்திலும் இன்ன சாதி என நான் குறிப்பிடவில்லையே! அப்பறம் என்ன காழ்ப்பு அவர்மீது?

    //ஊழல் பேர்வழிகள், விபச்சார புரோக்கர்கள்//
    இவர்கள் தொழில் அதுவே! அதிலே ஆச்சரியப்பட யாதுமில்லை. ஆனால் ஆச்சாரமாய் இருக்க வேண்டியர் இப்படி மாறியதால் கேள்வி கேட்கப்படுகிறார்.

    //அதை வைத்து முஸ்லீம்கள், தேச விரோத கம்யுனிஸ்ட்களும் இங்கே கும்மியடிக்க வேண்டாம்.//
    தீவிரவாத முஸ்லீம்கள் என்ற வார்த்தையை விட்டுவிட்டீர்கள். இங்கே கருத்து சொன்ன அண்ணன்கள் கிரி,வானம்பாடிகள், தமிழ்பறவை,கோமா,அகல்விளக்கு இவர்களில் யாரும் கம்னியூஸ்டுகளோ, நாத்தீகர்களோ இல்லையே.

    //உங்களுக்கெல்லாம் பிடிக்காத இந்து மதமும், இந்தியாவும் நீங்கள் எவ்வளவு முயன்றாலும் அழியாது// இதையே உங்கள் பிள்ளைகளுக்கும் பாடமெடுத்து அவர்களையும் மதவெறித்தீயில் தள்ளிவிடாதீர்கள். நண்பரே! போய் அவர்களையாவது படிக்கவையுங்கள்.

  17. நிஜாம் கான் said...

    //அ.மு.செய்யது said...
    //நிஜாம் ஒரு பத்திரிக்கையாளருக்குரிய நடையுடன் அருமையாக எழுதுகிறீர்கள்.. வாழ்த்துக்கள்

    //

    நானும் சொல்ல வந்தேன்.கிரி முந்தி விட்டார்//

    நன்றி செய்யத்! உங்கள் ஆதரவுக்கும் கருத்துக்கும் வருகைக்கும். தொடர்ந்து இணைந்திருங்கள்.

  18. நிஜாம் கான் said...

    //goma said...
    இந்த நிகழ்ச்சியைக் கருவாகக் கொண்டு ’நான் அவன்தான்’ என்ற பெயரில் படம் எடுத்து விடக் கூடாது.அதையாவது நிறுத்து கடவுளே!//

    ஏங்க இது படமா வேற வரனுமா?

  19. நிஜாம் கான் said...

    //சிடி போட்டதால்தானே குருக்கள் லீலை வெளி உலகுக்குத் தெரிய வந்தது...அவர்பாணியில் அவர் ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்//

    இருந்தாலும் அதை காவல்துறையிடம் மட்டும் கொடுத்திருக்கலாம். இப்படி வியாபாரம் செய்திருக்க வேண்டாம்.

  20. நிஜாம் கான் said...

    //அன்புடன் மலிக்கா said...
    எதிரொலின்னு தலைப்பு வச்சதே சூப்பர்.
    கலக்குறீங்க..
    அப்படி இங்குவந்து விருதினை பெற்றுக்கொள்ளங்கள்//

    நன்றி மலிக்கா! பெற்றுக்கொண்டேன். 100 ஐத் தாண்டியதற்கு வாழ்த்துக்கள்.

  21. நிஜாம் கான் said...

    // அகல்விளக்கு said...
    //அர்ச்சனைக்கு வரும் பெண்களிடம் கருவறைக்குள் உல்லாசமாக இருந்தால் கடைசிவரை இளமையாக இருக்கலாம் என ஆசைவார்த்தை கூறி அந்தப்பெண்களை கோவில் கருவறைக்குள் வைத்து கலீஜ் செய்திருக்கிறார் இந்த நவீன அர்ச்சகர்.//

    அவனுக்கு இந்த அடி பத்தாது....//

    சபலம் இடமறியாது என்பதற்கு இந்த குருக்கள் ஒரு உதாரணம். கருவறைக்குள் போய் இந்த வேலையை.ச்சீ.

  22. நிஜாம் கான் said...

    //இளங்கோ said...
    ராமகோபாலன் ஆவேச அறிக்கை எதுவும் விட்டதாக தெரியவில்லை//

    இதுக்கு ராமகோபாலன ஏன் இழுக்கிறீங்க. அவர் சொல்லியா இவர் செய்தார். இந்த ஒப்பீடு வேண்டாமே!

  23. நிஜாம் கான் said...

    //S.A. நவாஸுதீன் said...
    //"உழைக்கும் மக்கள் கோவிலுக்குள் நுழைந்தால் தீட்டுன்னு சொல்ற இவனுக்கு, கருவறைக்குள் செய்த இந்த செயல் தீட்டாகத் தெரியவில்லையா"? என்று கேட்டு அதிர வைத்தார்.//

    //கால்நடை உலவிடும் வீதியில் எங்களின் கால்களை அபகரித்தீர், வௌவ்வால் நுழைந்திடும் கோவிலில் எங்களின் வாசலை அடைத்துவிட்டீர்//

    சும்மா “நச்”சுன்னு இருக்கு. திரு. கிரி அவர்கள் சொன்னதையே நானும் சொல்கிறேன். நல்ல எழுத்து நடை நிஜாம்..//

    நன்றி நவாஸ். இவ்ளோ புடிச்சி புடிச்சி எழுதுறதுக்கே உங்கள் கருத்துக்கு கீழே பாருங்க. ஒரு அணானி அண்ணன!

  24. KASBABY said...

    இவ்வளவுக்கும் பிறகு எவ்வளவு தெனாவட்டா முன் ஜாமீன்-கு அப்பளை பண்ணிருக்கான்.

    என்ன ஒரு வில்ல தனம்........

    சாதாரண மனிதன் கர்ப்ப கிரகத்தில் சென்றால் தீட்டு,என அலறும் ப்ராமின்-களே ஏன் இதற்கு ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்க வில்லை.............விசித்திரமா இருக்கே.......

  25. venkat said...

    //"உழைக்கும் மக்கள் கோவிலுக்குள் நுழைந்தால் தீட்டுன்னு சொல்ற இவனுக்கு, கருவறைக்குள் செய்த இந்த செயல் தீட்டாகத் தெரியவில்லையா"?\\

    நச்

  26. நிஜாம் கான் said...

    //kasbaby //
    //venkat//

    தங்களின் மேலான கருத்துக்கும் வருகைக்கும் நன்றி. தொடர்ந்து இணைந்திருங்கள்.

  27. புரட்சி தமிழன் said...

    ஆசை வாத்தைக்கு மயங்குகிறவர்களும் குற்றவாளிகள் தானே, தவறு செய்துவிட்ட பெண்கள் அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட கூடாது என்பதற்க்காக. அவர்களையும் தண்டிக்க வேண்டாம் பட்டியலாவது இட்டிருக்கலாம், அப்போதுதான் தப்பு செய்ய முனையும் அனைவருக்கும் இனிமேல் தப்புசெய்து மாட்டிகொன்டால் நாம் காப்பாற்றப் பட முடியாது என்ற பயத்தில் யாரும் தப்பு செய்ய துனியமாட்டர்கள்.

    இதன் விளைவாக காஞ்சீபுரத்தில் உள்ள எனது நன்பன் திருமணத்திற்க்கு பெண் பாத்துக்கொண்டிருந்த அவன் இந்த குறுந்தகட்டை மரைமுகமாக வாங்கி ஒரு தடவைக்கு நான்கு தடவையாக பார்துக்கொன்டிருக்கிறன். ஏன் என்று கேட்டாள் ஒரு வேலை நாம் பர்க்கும் பெண்களில் இவளும் ஒருவளாக இருந்தால் என்ன செய்வது என்று கேட்க்கிறான். என்னத்த சொல்லறது.

  28. புரட்சி தமிழன் said...

    கோவில் என்பதே ஊடகமற்ற காலத்தில் காமத்தை கற்ப்பிக்க பயன்படுத்திய கலைவடிவிலான ஊடகம்தான் கோவில் காலப்போக்கில் பலர் அவர்களின் சுய லாபத்திற்க்காகவும் சங்கோஜ மற்றும் சந்தேக புத்தியினால் அதனை வழிபாட்டுத்தளங்களக மற்றிவிட்டனர்.

    கோவிலில் பொறிக்கப்பட்டுள்ள கலைவடிவிலான சிற்ப்பங்களைக் கண்டு காமத்தை கற்றுக்கொள்ளவே திருமணம் முடிந்தவுடன் புது மணத்தம்பதிகள் கோவிலுக்கு அனுப்பப் பட்டார்கள். உண்ண உறங்க உறைவிடமாக சிலர் பறம்பறையாக கோவில்களை பயன்படுத்திக் கொன்டனர். காமத்தை கற்றுக்கொடுக்கும் இடத்தில் ஊழல் செய்து அதை ஒத்திகை செய்து பார்த்திருக்கிறான் தேவ நாதன்.

  29. Anonymous said...

    //பெண்கள் என்ன செய்வார்கள்? வலைவிரித்தது இவன். பூசாரி சொன்னால் சாமியே சொன்னது மாதிரி என விழுந்துவிட்டார்கள்//

    என்ன கொடும சார் இது, வலையை விரித்தால் மாட்டுவதற்கு அவங்க என்ன ஆறு அறிவில்லாத மீனா?

    //மற்றபடி யாரும் **வேண்டுமென்றே**
    செல்லவில்லை//
    ஹா ஹா ஹா..

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,