திரைப்படங்கள் என்னும் இருட்டு மாயையில் சிக்கித்தவிக்கும் நம் மக்கள் குரும்படங்கள் குறித்து கண்டுகொள்வதே இல்லை. குறும்படங்களும் சில நேரங்களில் பேசப்படுகிறது. ஆனால் திரைப்படங்களுக்கு உள்ள வியாபாரம் இவைகளுக்கு சுத்தமாகக் கிடையாது. குத்துப்பாட்டுக்கள், பஞ்ச் டைலாக்குகள், ஓடுகிற டிரைனுக்கு இணையாக ஓடிவந்து சண்டைபோடும் காட்சிகள் மற்றும் முகம்சுழிக்க வைக்கும் வசனங்கள் என இரண்டரைமணி நேரத்திலும் எந்த விதமான பயனும் இல்லாத சாதாரண பொழுதைபோக்கும் படங்களுக்கு மத்தியில் இந்தக் குறும்படங்களுக்கு மவுஸே கிடையாது. ஆனால் இரண்டரை மணி நேரத்திலும் சொல்லமுடியாத செய்தியை இந்தக் குறும்படங்கள் வெறும் 10 நிமிடத்தில் பறைசாற்றி விடுகின்றன கல்வெட்டுப் போல ஆழமாய். அந்த வகையில் ஒரு குறும்படத்தின் விமர்சனம் தான் இது.
நடந்த கதை:
ஒரு காலத்தில் சாதியில் இழிவு என தள்ளி வைக்கப்பட்டவர்கள் பல குறிப்பிட்ட தெருக்கள் வழியாக நடக்கக்கூடாது, செருப்பு போடக்கூடாது என பலவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அது இன்றைக்கும் சில இடங்களில் நடைமுறைப் படுத்தப்படும் இடங்களையும் நாம் பார்க்கிறோம். அவர்களுக்கு செருப்படியாய் முழுக்க முழுக்க செருப்பை மையமாக வைத்து வெளிவந்துள்ளது தான் இந்த நடந்த கதை. அந்த கிராமத்தில் வசிக்கும் சிறுவனின் தாத்தா செருப்பு தைக்கும் தொழிலாளி. ஆனால் அவர்கள் வீட்டில் மட்டுமல்ல அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள யாவரும் செருப்பு இல்லாமல் தான் இருக்கிறார்கள். ஆனால் இவனுக்கோ செருப்பு போடுவதற்கு கொள்ளை ஆசை.

ஒருநாள் தன் அப்பாவுடன் மேலத்தெரு வழியாக நடந்து செல்லும் போது அங்கே ஒரு சிறுவனும் அவனின் தந்தையும் செருப்பு அணிந்து கொண்டு செல்வதைப் பார்க்கிறான். அந்தப் பகுதியில் இருக்கும் அனைத்து வீட்டின் வாசல்களிலும் செருப்பு கிடக்கிறது. அதைக் கண்டு தன் தந்தையிடம் ," நாம மட்டும் ஏம்பா செருப்பு போடுறது இல்லை" அப்டின்னு கேட்கிறான். அதுக்கு அவன் தந்தை ," நாம் செறுப்பு போடனும்னா மேலத்தெருவில பொறந்து இருக்கனும்" என சொல்கிறார். உடனே செருப்பு தைக்கும் தன் தாத்தாவிடம் சென்று, " நாம் ஏன் தாத்தா செருப்பு போடக்கூடாது" என கேட்க, அதற்கு அவர், " நாம வாங்கிவந்த வரம் அப்படி ராசா. நாம செருப்பு தைக்கத்தான் முடியும் போட முடியாது” என சொல்கிறார்.
இந்த பதிலில் திருப்தி அடையாத அவன் மேலத்தெரு கோயில் மேடையில் அமர்ந்திருக்கும் சிலரிடம் சென்று நாங்க மட்டும் ஏன் செருப்பு போடக்கூடாது எனக் கேட்க, அவர்கள் கீழ்சாதி நாயிக்கி செருப்பு கேக்குதோ எனச்சொல்லி அவனை அடித்து விரட்டிவிடுகிறார்கள். அவன் தூங்கும் போதெல்லாம் கனவில் செருப்பு தான் வருகிறது. வளந்து பெரியவன் ஆகிறான். ஒருநாள் தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது அவன் வாழும் சேரியைச் சார்ந்த ஒருவர் ராணுவ சீறுடையில் காலில் ஷூ மாட்டிக்கொண்டு வருகிறார். அவரை ஆச்சரியமாகப் பார்க்கும் இவன் அவரிடம் விவரம் கேட்க, செருப்பு போட வேண்டும் என்பதற்காகவே ராணுவத்தில் சேருகிறான். பயிற்சி முடிந்து அவனுக்கு ஷூ வழங்கப்படுகிறது. அதை பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறான். விடுப்பில் ஊருக்கு வந்து, தான் எந்த தெரு வழியாக செருப்பு போட்டு நடக்கக்கூடாது என சொன்னார்களோ அதே தெருவில் காலில் ஷூ சத்தமிட ஓடுகிறான். அப்போது முன்னாளில் அவனைத் தாக்கிய அதே மேலத்தெருவினர் இவனைப் பார்த்து மிரண்டு போய் நிற்க அவர்களை ஏளனப் பார்வை பார்ப்பதோடு படம்முடிகிறது.

அழகிய பெரியவன் என்ற புரட்சிகர எழுத்தாளர் எழுதிய “குறடு” என்ற சிறுகதை குறும்படமாக்கப் பட்டிருக்கிறது. இதை இயக்கியிருப்பவர் பொன்.சுதா அவர்கள். மிக நேர்த்தியான திரைக்கதையமைப்பு. கேமிரா செல்போன் வைத்திருப்பவர்கள் எல்லாம் தங்களை இயக்குனர்கள் என சொல்லிக்கொள்ளும் இந்தக் காலத்தில் இன்னமும் உதவி இயக்குனராக இருக்கும் பொன்.சுதா அவர்கள் தமிழ்த்திரையுலகத்திற்கு கிடைக்கப் போகும் ஒரு சிறந்த இயக்குனர் என்று சொல்லலாம். அவ்வளவு நேர்த்தியாக செதுக்கியிருக்கிறார்.
தொய்வில்லாத காட்சிகள், சாட்டையடியான வசனங்கள் என ஒவ்வொரு வினாடியிலும் பலிச்சிடுகிறார். நாயகன் சிறுவனாக இருக்கும் போது அவனின் நினைப்பு முழுக்க செருப்பு மீதே இருப்பதும் கணவில் ஒரு ஆலமர விழுதில் கட்டித் தொங்கும் செருப்புகளை எட்டிப் பிடிக்க தாவித்தாவி முயற்சிக்கிறான். அப்படியே தாவிக்கொண்டிருக்கும் போதே அவனை பெரியவனாக மாற்றியிருப்பது இயக்குனரின் சிறந்த சிந்தனை. அதாவது பெரியவன் ஆகியும் கூட செருப்பு அவனுக்கு எட்டாக்கணியாகவே இருக்கிறது. ராணுவத்தில் சேர்ந்தவுடன் அவர்கள் கொடுத்த சீருடையைக் கீழே வைத்துவிட்டு செருப்பை மட்டும் எடுத்து கண்குளிரப் பார்த்து அதன் மீது கண்ணீர்த் துளிகளைச் சிந்தவிடுவதும் அதை கண்களில் ஒற்றிக்கொள்வதும் ஒரு இயலாதவனின் செய்கையாக காட்டியிருப்பது அத்தோடு அவனின் பின்கதையைச் சொல்வது என அனைத்து பிரேமிலும் சாதித்து சாதிக்கு சவுக்கடி கொடுத்துவிட்டார் இயக்குனர் பொன்.சுதா.

ஒளிப்பதிவாளர் இராசாமதி இந்தப் படத்தை பதிவெடுத்திருக்கிறார். சொல்லவே வேண்டாம். மிக்க சிறப்பு. இசை ஓரளவிற்கு நன்றாக வந்திருக்கிறது. இசையமைப்பாளர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. படத்தில் நாயகனுக்கு கதை சொல்லும் பின்னனிக் குரல் கவிஞர் அறிவுமதியுடையது. நன்றாக இருக்கிறது.
ஆக நடந்த கதை இன்னமும் நடந்து கொண்டிருக்கும் கதை தான்.


விமரிசனம் அருமை. சுட்டி இருந்தா போடுங்களேன் நிஜாம்.
அண்ணே! சுட்டி இல்லை. ஆனா இந்தக் குறும்படத்தைக் காண விரும்புபவர்கள் ponsudhaa@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
நல்லதொரு அருமையான விமர்சன் ..
சூப்பரோ சூப்பர்..
தூள் கிளப்புங்க..
// இப்படிக்கு நிஜாம்.., said...
அண்ணே! சுட்டி இல்லை. ஆனா இந்தக் குறும்படத்தைக் காண விரும்புபவர்கள் ponsudhaa@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் //
என்னாது சுட்டி இல்லையாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ?
நாட்டாண்மை நாங்க இத ஒத்துக்க மாட்டோம்... தீர்ப்ப மாத்தி எழுது..
// இராகவன் நைஜிரியா said...
நல்லதொரு அருமையான விமர்சன் ..
சூப்பரோ சூப்பர்..
தூள் கிளப்புங்க..//
நன்றிண்ணே!
// இராகவன் நைஜிரியா said...
// இப்படிக்கு நிஜாம்.., said...
அண்ணே! சுட்டி இல்லை. ஆனா இந்தக் குறும்படத்தைக் காண விரும்புபவர்கள் ponsudhaa@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் //
என்னாது சுட்டி இல்லையாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ?
நாட்டாண்மை நாங்க இத ஒத்துக்க மாட்டோம்... தீர்ப்ப மாத்தி எழுது..//
அண்ணே! விரைவில் சுட்டிக்கு ஏற்பாடு செய்றேன். அதுவரைக்கும் தீர்ப்ப பெண்டிங் வையுங்க.. ஆமா.
விமரிசனம் அருமை
தூள் கிளப்புங்க
ஆக நடந்த கதை இன்னமும் நடந்து கொண்டிருக்கும் கதை தான்.
அருமையான விமர்சனம் நிஜாம் பாய். சூப்பரா எழுதியிருக்கீங்க
நன்றி நண்பரே...
//நினைவுகளுடன் -நிகே- said...
விமரிசனம் அருமை
தூள் கிளப்புங்க//
வருகைக்கு நன்றி அண்ணே! தொடர்ந்து வாங்க
// negamam said...
ஆக நடந்த கதை இன்னமும் நடந்து கொண்டிருக்கும் கதை தான்.//
நிச்சயமாக.. ஆனால் தடுக்கப்பட வேண்டிய கதை
// S.A. நவாஸுதீன் said...
அருமையான விமர்சனம் நிஜாம் பாய். சூப்பரா எழுதியிருக்கீங்க//
நன்றி நவாஸ். தொடர்ந்து இணைந்திருங்கள்
//பொன் சுதா said...
நன்றி நண்பரே...//
வருகைக்கும் கருத்துகும் நன்றி இயக்குனரே! இது போன்ற சமூக கருத்துக்களுடன் உங்களை விரைவில் பெரிய திரையில் எதிர்பார்க்கிறோம்.
தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...
http://www.youtube.com/watch?v=bH9-OTbC7lw&feature=share