ஸ்வீட்***காரம்***காபி***21/12/2009
கசாப் அடித்த அந்தர் பல்டி:
மும்பைத் தாக்குதலில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி கசாப் அடித்துள்ள அந்தர்பல்டி தான் சென்றவாரத்தின் ஹைலைட். சென்றவருடம் நவம்பர் மாதம் சினிமாவில் நடிக்கும் ஆசையால் மும்பைக்கு வந்ததாகவும், நவம்பர் 21ம் தேதி தியேட்டரில் படம்பார்த்துக் கொண்டிருந்த தன்னை மும்பை காவல்துறை கைது செய்ததாகவும் நவம்பர் 26 தான் மும்பைத் தாக்குதல் நடைபெற்றதாகவும் தெரிவித்து இருக்கிறான். அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதி ஹெட்லி அமெரிக்காவின் FBI அதிகாரிகளுடன் வந்து தன்னை விசாரித்ததாகவும் தெரிவித்திருக்கிறான்.

அதைவிட பெரிய காமெடி தனக்கு ஏ.கே 47 ரக துப்பாக்கியை கையாளத்தெரியாது எனவும் சொல்லியிருக்கிறான். நல்லவேள அந்தப்படத்தில் இருப்பது நான் இல்லை என சொல்லாமல் இருந்தானே! அஜ்மல் கசாப் வெறும் அம்புதான். அவனை எய்தவர்கள் யார் என்பது தான் இப்போது கேள்விக்குறியே. ஆக மும்பைத்தாக்குதல் சம்பவத்தில் இந்தியாவில் ஒளிந்திருக்கும் கிளைகளும், வெளிநாட்டின் முக்கிய வேரும், உயரதிகாரி ஹேமந்த் கார்கரேயின் சந்தேக மரணமும் இனி கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும் போலிருக்கிறது. அதற்குப்பிறகு கசாப்பை கசாப்புக்கு அனுப்பிவிட வேண்டியது தான்.
சாது மிரண்டா தடையாச்சி மிரிண்டா:
மக்களின் உடல்நலத்திற்கு வேட்டு வைத்துக்கொண்டிருக்கும் பெப்ஸி, கோக் கம்பெனியின் பூச்சிமருந்து குளிர்பானங்களில் ஒன்றான மிரிண்டாவுக்கு ஆப்பு வைத்து விட்டார் சென்னை வழக்கறிஞர் சித்திரவேல். அவர் காஞ்சிபுரம் நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் தான் வாங்கிய அரைலிட்டர் மிரிண்டாவில் கரப்பான் பூச்சியுடன் கருப்புத்துகள்கள் கிடந்ததாகவும் அதை முன்னிட்டு அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் தகுந்த பதில் அளிக்கவில்லை எனவும் தெரிவித்தார். இதையடுத்து மாமண்டூரில் இயங்கிவரும் பெப்ஸி தொழில்சாலையில் இருந்து வெளிவரும் மிரிண்டா குளிர்பான தயாரிப்பிற்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி தீர்ப்பளித்திருக்கிறார். விவசாயத்திற்கு தெளிக்கும் டெமக்ரான் விலை 90 ரூபாய், ஆனா மிரிண்டா விலை வெறும் 40 ரூபாய் தான். விவசாயிகள் சிந்திக்கட்டும்.

ஹவாலாவுக்கு அல்வா கொடுத்த காவலர்கள்:
சென்னையிலிருந்து தனியார் மற்றும் அரசு விரைவுப்பேருந்துகளில் இனிபயணம் செய்வது கொஞ்சம் பீதி தான். சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு ஹவாலா பணங்கள் கைமாறுவது குறித்து தகவல் தெரிந்த கொள்ளையர்கள் அதைக் குறிவைத்துக் கொள்ளையடிக்கத் தொடங்கிவிட்டனர். சில நாட்களுக்கும் முன்பு அரியலூர் அருகே விரைவுப்பேருந்தில் பயணிகள் போல் ஏறிய சிலர் கொஞ்ச தூரத்தில் பயணிகளிடம் கத்தியைக் காட்டி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையிலிருந்து புதுக்கோட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த ஒரு தனியார் சொகுசுப் பேருந்தை கீரனூர் அருகே வழிமறித்த காவல்துறையினர் பஸ்ஸுக்குள் ஏறி ஓட்டுனரின் சீட்டுக்குக் கீழ் இருந்த 40 லட்ச ரூபாய் பணக்கட்டை எடுத்துக்கொண்டு ஸ்டேசனுக்கு வா என சொல்லிவிட்டு ஜீப்பில் ஏறிச்சென்றுவிட்டனர். இவர்களும் வண்டியைத்திருப்பிக் கொண்டு ஸ்டேசனுக்கு போனால் அங்கேயிருந்த காவலர்கள் கும்பகர்ணனுக்கு போட்டியாக தூக்கத்தில் இருக்க, அரும்பாடுபட்டு அவர்களைக் கிளப்பி விசயத்தைக் கேட்டால் திருதிரு என விழித்திருக்கிறார்கள் காவலர்கள். அப்பறம் தான் காவலர் வேடத்தில் வந்தவர்கள் வழிப்பறி கொள்ளையர்கள் என தெரிந்திருக்கிறது. என்ன செய்ய இவர்கள் இரவுப்பணி செய்யாததால் அவர்கள் செய்துவிட்டார்கள்.
கைகொடுத்த மஹிந்தாவும் பொன்சேகாவும்:
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் அரக்கர்கள் மஹிந்தாவும், பொன்சேகாவும் மனுத்தாக்கல் செய்ய வந்த போது நேருக்கு நேராய் சந்தித்து கைகுலுக்கி தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். என்ன தான் சண்டை வந்தாலும் தமிழனைப் போட்டுத்தள்ளுவதில் இருக்கும் பங்காளி உறவு எப்போதும் பாதிக்காது என்பதைப் போல் இருந்தது அவர்களின் சந்திப்பு. இந்த நிலையில் அதிபர் தேர்தலில் இருந்து விலகிக்கொள்வதாக சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார். அதே போல பொன்சேகாவுக்கு ஆதரவு என முன்னாள் அதிபர் சந்திரிகாவும் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வுகள் மஹிந்தாவின் வெற்றிவாய்ப்புக்கு வெடிவைத்துவிடும் என பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

யார் இந்த விக்ரமபாகு?
இலங்கை அதிபர் தேர்தலில் இரத்த வெறிபிடித்த அரக்கர்கள் இரண்டு பக்கமும் அணிவகுத்து நிற்க இப்போது புதிதாக மூன்றாவது நபர் ஒருவரும் வேட்புமணு தாக்கல் செய்துள்ளார். அவர் தான் விக்ரமபாகு.இவரைப் பற்றி விசாரிக்கும் போது வித்தியாசமான தகவல் கிடைக்கிறது. இலங்கையில் முழுமையான தமிழின அழிப்பு நடைபெற்ற சமயத்தில் அதை எதிர்த்து உலக நாடுகளின் மத்தியில் பிரச்சாரம் செய்தவர் என்றும் கூறப்படுகிறது. அதாவது சிங்களவர்களில் நல்லவர். ஆனால் இவர் முழுவெற்றியடைய வாய்ப்புக்கள் மிகக்குறைவாம். நம்ம ஊர் விசயகாந்து மாதிரி ஓட்டுப்பிரிக்கப் போகிறார். இவர் பிரிக்கும் ஓட்டுக்கள் அதிகபட்சமாக மஹிந்தாவின் ஓட்டுகளாக இருக்கும் என தேர்தல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

துவாரகா படம் வெளியான மர்மம்:
சமீபத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவின் படம் எனக்கூறி ஒரு படத்தை வெளியிட்டது சிங்கள அரசு. ஆனால் அது துவாரகாவின் படம் இல்லை என்றும் ஈழத்தில் இசைக்குழு நடத்தி புரட்சிகரப்பாடல்களை பாடி உணர்வூட்டிய இசைப்பிரியாவின் உடல் என்றும் தெரிவிக்கிறார்கள் சில ஊடகவியலாளர்கள். போர் முடிந்து இவ்வளவு நாள் வெளியிடாமல் இப்போது இதை வெளியிட்ட காரணமே தேர்தலில் வாக்குகளை அள்ள ராஜபக்சே சகோதரர்கள் செய்யும் தந்திரம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

கோபன்ஹேகனுக்கு கோயிந்தா:
நம்ம ஊர்ல வெத்துபேப்பர்ல மிரட்டி கையெழுத்து வாங்குற மாதிரி டென்மார்க்கில் நடந்த புவிவெப்ப மயமாதல் மாநாட்டுக்குச் சென்ற வளரும் நாடுகளிடம் என்னமோ டைப் செய்த பேப்பர்களில் கையெழுத்துப் போடச்சொல்ல பிடிவாதமாக முடியாது என்று மறுத்த நம்ம ஊர் பிரதமர், நம்ம சட்டசபையில் தம் போடறதுக்காக வெளிநடப்பு காரணம் சொல்லிட்டு வெளியே வர்ர சமஉ’க்கள் மாதிரி இவரும் வெளிநடப்பு செய்ய அவரைத் தொடர்ந்து சீனப்பிரதமரும் வந்துட்டாராம். இலங்கைப் போருக்குப் பிறகு ரெண்டு நாட்டு உறவிலும் நல்ல முன்னேற்றம் போலிருக்கு.

நயன்தாராவை மிஞ்சிய பிரியாமணி :
எதுக்கும் தயார், எவ்வளவு வேணுமினாலும் குறைச்சிக்கலாம்(சம்பளத்த இல்ல) அப்டின்னும் பிட் நோட்டீஸ் அடிச்சி வினியோகிக்காத குறையா கதறிப்பாத்தும் எந்த கதவுகளும் திறக்காததால ஆந்திரா பக்கம் போயிப்பாரு தாயின்னு யாரோ குடுத்த அட்வைஸ கேட்டு ஆந்திராவுக்கு போயி வெளம்பரம் குடுத்திச்சி அம்மணி. கடைசியில துரோணா அப்டிங்கிற படத்தில சான்ஸ் கெடச்சி பிரம்மாண்டமா ஒத்துழைப்புக் கொடுத்து நடிச்சதாம். அந்தப் படத்த பார்த்துட்டு அசந்தவங்க அத இப்ப தமிழ்ல டப் பண்ணப்போறாங்களாம். தன்னோட பில்லா சாதனையை இந்தப் படத்துல பிரியாமணி முறியடிச்சதால காண்டு ஆயிப்போயிருக்குதாம் நயன்தாரா. குடுக்குறத குடுத்த குழந்தையா கூட நடிக்க பிரியாமணி ரெடியாம்.

சிரஞ்சீவி தியேட்டர் திரை கிழிப்பு:
தெலுங்கானா பிரச்சனையில் பிரஜா ராஜ்யம் கட்சித்தலைவரும் சமஉ’வுமான சிரஞ்சீவி இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதனால் கொதித்தெழுந்த தெலுங்கானா வாசிகள் தங்கள் பகுதியில் சிரஞ்சீவி, மோகன்பாபு ஆகியோரின் படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்களைக் அடித்து நொருக்கி திரைகளைக் கிழித்து துவம்சம் பண்ணிவிட்டார்கள். இத்தோடு அவர்களின் ஆத்திரம் அடங்காமல் வாசலில் ஒட்டியிருந்த போஸ்டர்களையும் கிழித்து அதைக்கீழே போட்டு மிதித்தும் நெருப்புவைத்துக் கொழுத்தி விட்டார்கள். ஆந்திராவில் தற்போதைய பிரச்சனையில் தெலுகு திரையுலகிற்கு 115 கோடி நஷ்டமாம். நல்லவேள என்.டி ராமராவ் காரு இன்னிக்கு உயிரோட இல்ல.

பெயர் காரணம்:
ஜெமினி கணேசன் திரு S*S* வாசன் அவர்களின் ஜெமினி நிறுவனத்தில் வேலை பார்த்ததால் கணேசன் என்ற தன் பெயரை ஜெமினி கணேசன் என வைத்துக் கொண்டாராம். ஆனால் அவருக்கு சாம்பார் என பெயர் வந்ததற்கான காரணம் தெரியவில்லை.

ஒன்றே சொல்:
நரி உபதேசம் சொல்லத் தொடங்கிவிட்டது.., உன் கோழியை கவனி
நகைச்சுவை நறுக்கு:
ரமா: மாமியாருக்கும் சாமியாருக்கும் என்ன வித்தியாசம்?
உமா: தெரியலையே?
ரமா : மாமியாருகிட்ட மாட்டி ஒரு பொண்ணு அவஸ்தப்படும், ஆனா சாமியாருகிட்ட மாட்டி பல பொண்ணுங்க அல்லோலப்படும்
உமா: ?!?!?!?!?!?!
கானொளி கார்னர்:
அறிவிப்பு: மேற்கண்ட வீடியோவின் தயாரிப்புக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்..,


:))
இந்த விஷயம் கேப்டனுக்குத் தெரியுமா??
கார்த்திகேயன்
http://kaaranam1000.blogspot.com
விக்ரமபாகு கருணாரத்ன ஒரு தீவிர இடதுசாரி சிங்கள,தமிழ் வேறுபாடின்றி இலங்கையில் ஏதேனும் ஒரு நாட்டிற்கு வால் பிடித்து நவகாலனித்துவத்தை வலுப்படுத்தும் முதலாளித்துவ அரசுகளைஎதிர்த்து தன்னால் முடிந்த எதிர்ப்பினைக் காட்டுபவர்.
ஆனால் சிங்களவர்கள் இவரை வர்க்க உணர்வு கொண்டவராக அன்றி ஏதோ பிரபாகரனிடம் காசு வாங்கியவராக பார்க்கின்றனர். தமிழர்களிடம் இருப்பது இவனும் சிங்களவன்தானே என்ற பார்வை. ஒருமுறை தொலைக்காட்சி விவாதமொன்றில் JVP எனும் பிரிதொரு இடதுசாரி அல்லது அப்படி சொல்லிக்கொள்ளும் கட்சியின் பிரதிநிதி " சிங்களவரின் தீர்வுக்கு பிரபாகரன் ஒத்துகொண்டாலும் தோழர் விக்ரமபாகு ஒத்துக்கொள்ளமாட்டார் போலும்" எனக் கூறிய போது அதை ஆமோதித்த அவர் இத்தனை உயிர்களை பலிக் கொடுத்து ஏன் ஒன்றுமில்லாத தீர்வை பெற வேண்டுமெனக்கூறினார்.
பார்ட்டிக்கு கொஞ்சம் லேட்டா வர்றேன் நிஜாம் பாய். கொஞ்சம் ஸ்வீட் காரம் தனியா எடுத்து வைங்க
துவாரகா படம் பற்றிய தகவல் புதுசு. வழக்கம் போல் எஸ்.கே.ஸி. அசத்தல்.
//காரணம் ஆயிரம்™ said...
:))
இந்த விஷயம் கேப்டனுக்குத் தெரியுமா??
கார்த்திகேயன்//
வாங்க கார்த்தி. வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாங்க
மிக்க நன்றி தோழர் தர்ஷன். விக்ரமபாகு குறித்து முழுமையான அருமையான தகவல் கொடுத்ததற்கு. மீண்டும் நன்றி
//S.A. நவாஸுதீன் said...
பார்ட்டிக்கு கொஞ்சம் லேட்டா வர்றேன் நிஜாம் பாய். கொஞ்சம் ஸ்வீட் காரம் தனியா எடுத்து வைங்க//
உங்களுக்கு இல்லாததா எப்போவுமே உண்டு
// வானம்பாடிகள் said...
துவாரகா படம் பற்றிய தகவல் புதுசு. வழக்கம் போல் எஸ்.கே.ஸி. அசத்தல்.//
நன்றிண்ணே! தொடந்து வாங்க
sari makka,
dhuvaraha engae?
where is dhuvaraha now?
where is dhuvaraga now?