Dec 20, 2009

பதிவர் திருவிளையாடல்** ஒரு காமெடி கலாட்டா

நிஜாம் கான் @ 10:09 PM

இது வெறும் நகைச்சுவை கற்பனையே அன்றி யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல. யாரையும் குறிப்பிடுவதும் அல்ல.

டம்..டம்..டம்..டம்..டம்..

முரசர்: நாட்டுப்பதிவர்களுக்கோர் நற்செய்தி.. மொக்கைப்பதிவுப் போட்டு பின்னூட்டமில்லாமல் ஈ ஓட்டுபவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு. நமது மன்னர் தடியன் தாண்டவன் நடத்தும் சிறந்த மொக்கை இடுகை 2008” போட்டியில் சிறந்த முறையில் மொக்கையாக பதிவெழுதும் சிறந்த பதிவருக்கு ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும்.....

டம்..டம்..டம்..டம்..டம்..

தருமி: ஏய்யா! பரிசு எவ்வளவு?

முரசர்: ஆயிரம் ரூபாய் .

தருமி: அய்யோஅய்யோ ஆயிரம் ரூபாயாச்சே! தினம் ஒரு குவாட்டர்னா கூட 20 நாளைக்கு ஓட்டலாமே! நான் என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன் யாரைப் போயிக் கேட்பேன். ஏய்யா இந்தப் போட்டி பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா?

முரசர்: அது தெரிஞ்சா நான் ஏய்யா முரசடிக்க வர்றேன். ஆயிரம் ரூபாய வாங்கிட்டுப்போயி சரக்கடிச்சிட்டு வாந்தி எடுக்கமாட்டேனா? நல்லா கேக்குறாய்ங்கே டீடெய்லு.

தருமி: அதானே! உனக்கு தெரிஞ்சா நீ ஏன் முரசுபோடப் போற. எனக்கில்ல எனக்கில்ல. நான் என்ன செய்வேன் யாரப் போயிக்கேப்பேன்... சொக்கா..,

தருமி: அய்யோ! எனக்கில்ல எனக்கில்ல, யாரோ ஆயிரம் ரூபாயையையும் தட்டிக்கிட்டுப் போயி டாஸ்மாக்கே கெதின்னு கெடக்கப்போறான்.., இன்னிக்கின்னு பாத்து பதிவு போட‌ ஒரு மொக்க கூட வரமாட்டுதே!

மூத்தப்பதிவர்: அய்யா!

தருமி: ஹூம், எனக்கில்ல‌ எனக்கில்ல‌

மூத்தப்பதிவர்: அய்யா தருமி!

தருமி: யாரு அது. என்னா?

மூத்தப்பதிவர்: மொக்கைப்பதிவு குறித்து..,

தருமி: ஓஹோ! நம்ம ஜாதியா, தண்டோரா போட்டது உனக்கும் கேட்டிடுச்சா..

மூத்தப்பதிவர்: அய்யா பதிவரே! அந்த மொக்கைப் பதிவு உனக்கு கிடைத்துவிட்டால் அவர்கள் தரும் ஆயிரம் ரூபாயும் உனக்கே கிடைத்துவிடும் அல்லவா?

தருமி: ஆமா! ஆமா! ஆனா அதுக்கு நான் எங்கே போவேன், யாரப்போயி கேப்பேன்.

மூத்தப்பதிவர்: கவலைப்படாதே அந்தப்பதிவை உனக்கு நான் தருகிறேன்.

தருமி: ஏது நீ தர்றியா! ஏய்யா என்னப்பத்தி என்ன நெனச்சே. உன் பதிவக் கொண்டு போய் என் பதிவுன்னு சொல்லவா?

மூத்தப்பதிவர்: கடந்த பல வருடங்களாக பதிவுலகில் குப்பைகொட்டும் மொக்கை பதிவர் நான். உனக்கு சந்தேகமிருந்தால் என்னை சோதித்துப் பார்.

தருமி: ஏன்கிட்டயே..,ஏன்கிட்டயே போட்டிக்கி வர்றீயா???

மூத்தப்பதிவர்: கேள்விகளை நீ கேட்கிறாயா இல்லை நான் கேட்கட்டுமா?

தருமி: ஏது ஏது சரி நானே கேக்குறேன். எனக்கு கேக்கத்தான் தெரியும்

மூத்தப்பதிவர்: ஹூம். சரி கேள்.

தருமி: சேரக்கூடாதது என்னவோ?

மூத்தப்பதிவர்: பதிவர்களும் குழுக்களும்

தருமி: சேர்ந்தே இருப்பது

மூத்தப்பதிவர்: பதிவர்களும் கும்மிகளும்

தருமி: பார்க்கக்கூடாதது?

மூத்தப்பதிவர்: எவ்வளவு ஹிட்ஸ் கிடைக்கிறதென்பதை

தருமி:பார்த்து ரசிப்பது

மூத்தப்பதிவர்: பதிவுகளின் உட்கருத்துக்களை

தருமி: சொல்லக்கூடாதது

மூத்தப்பதிவர்: பதிவர்களிடம் ரகசியம்

தருமி: சொல்லக்கூடியது

மூத்தப்பதிவர்: பாராட்டும் பின்னூட்டமும்

தருமி: போடக்கூடாதது

மூத்தப்பதிவர்: தமிழ்மணத்தில் எதிர் ஓட்டு

தருமி: போட்டு ரசிப்பது

மூத்தப்பதிவர்: தமிழிஷில் குத்தும் அதிர்ஓட்டு

தருமி: திரட்டிகள் என்பது

மூத்தப்பதிவர்: தமிழ்மணமும் திரட்டியும்

தருமி: அதிகம் பார்க்கப்பட்ட இடுகைக்கு

மூத்தப்பதிவர்: தமிழ் வெளி

தருமி: கிரீடத்திற்கு

மூத்தப்பதிவர்: தமிழ்10

தருமி: ஓட்டுக்கு ??

மூத்தப்பதிவர்: நன்தமிழ் ( நற்றமிழ்)

தருமி: வேட்டுக்கு ??

மூத்தப்பதிவர்: N” தமிழ்

தருமி: மொக்கைப்பதிவுக்கு

மூத்தப்பதிவர்: நான்

தருமி: மொக்கை பின்னூட்டத்திற்கு

மூத்தப்பதிவர்: நீ

தருமி: அய்யா ஆளவிடுங்க, இதுக்கு மேல எனக்கு ஒன்னும் தெரியாது. நீயே சிறந்த மொக்கைப்பதிவர். அந்தப் பதிவை என்னிடம் கொடுங்கள். அதற்கு கிடைக்கும் ஆயிரம் ரூபாயையும் உம்மிடமே கொண்டுவந்து கொடுக்கிறேன். நீராகப் பார்த்து எனக்கு ஒரு கட்டிங்கோ,குவாட்டரோ வாங்கிக்கொடுங்கள்.

மூத்தப்பதிவர்: எனக்கு எதுவும் வேண்டாம், நீயே அனைத்தையும் வைத்துக்கொள்

தருமி: வேந்தே! என்னைப்பார் வேந்தே! மொக்கைப்பதிவு கொண்டு வந்திருக்கும் இந்த தருமியைப் பார் வேந்தே!

மன்னர்: எங்கே உனது மொக்கையைப் போடு பார்ப்போம்.

தருமி: நான் போட்ட பதிவு எல்லாம் வெளங்காத மொக்கடா,

கடிச்சிப்புட்டு துப்பிப்போட்ட வீனா போன சக்கடா,

மாங்கா வாங்கி ஊறப்போட்டா ஆயிப்போடும் தொக்கடா,

கடலமாவு கருவேப்பில‌ கலந்து போட்ட பக்கடா..

மன்னர்: ஆகா! அற்புதம். அருமையான மொக்கை. யார் அங்கே! அழுக்குக்குப் போட்ட என் அண்டர்வேரில் இருந்து ரூபாய் ஆயிரத்தை எடுத்து வாருங்கள்.

நடுவர்: மன்னா! ஒரு நிமிடம். அய்யா தருமி உன் மொக்கையில் பிழை இருக்கிறது.

தருமி: இருக்கட்டுமே! எவ்வளவு பிழை இருக்கிறதோ அவ்வளவு ரூபாயைக் குறைத்துக்கொண்டு ஒரு கட்டிங் போடுவதற்காவது காசு கொடுங்கள்.

நடுவர்: இந்தப் பதிவு உன்னுடையது தானா?

தருமி: என்னுடையது இல்லாமல் டாஸ்மாக் கடையில் யாராவது கொடுத்து அதை கொண்டு வந்து இங்கே பதிவிடுகிறேனா. அய்யா! பதிவெழுதி பெயர் வாங்கும் பதிவர்களும் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்து எதிர்பதிவெழுதி பெயர் வாங்கும் பதிவர்களும் இருக்கிறார்கள். நீர் இதில் எந்த வகை என்பது உனக்கே தெரியும். உன்னைப்போல ஊருக்கு ஒருவர் இருந்தால், வேண்டாம் நீ ஒருவரே போதும் பதிவுலகை காலி செய்வதற்கு..,மன்னரிடம் சொல்லுங்கள். எனக்கு பரிசு வேண்டாம்

நடுவர்: அய்யா தருமி, நில்லுமய்யா!

தருமி: நல்லவேளை ஒதைக்காமல் விட்டாய்ங்களே! அய்யோ! தொரத்தி தொரத்தி ஒதக்கிறமாதிரி இருக்கே. எனக்கு வேனும் எனக்கு வேனும். இனிமே நான் பதிவெழுதினா ஏப்பா! இது உன்னுடையது தானா அல்லது எதிலாவது காப்பி செஞ்சி போட்டியான்னு கேப்பானுங்களே! அய்யா மூத்த பதிவரே நீ எங்கய்யா இருக்க. ஹூம் அவன் வரமாட்டான்……….., வரமாட்டான்.

மூத்தப்பதிவர்: தருமியே சபையில் நடந்ததைக் கூறு

தருமி: அய்யா! சபையில உன் பதிவ மீள் பதிவுன்னு சொல்லிட்டாய்ங்கே!

மூத்தப்பதிவர்: என் பதிவை மீள்பதிவென்று சொன்னவன் எவன்?

நடுவர்: அவன் இவன் என்ற ஏக வசனம் வேண்டாம். ஒழுங்காக கேட்டால் ஒழுங்காக பதில் கிடைக்கும்.

மூத்தப்பதிவர்: சரி என் பதிவிலே என்ன குற்றம் கண்டீர்?

நடுவர்: போன வருட மொக்கைப்பதிவுப் போட்டிக்கு நீ இதே இடுகையை பரிந்துரை செய்து பரிசு வாங்கி விட்டு இந்த வருடமும் அதே இடுகையை தருமியிடம் கொடுத்து அனுப்பியது தான் தவறு என்றேன்.

மூத்தப்பதிவர்: நடுவரே! என் வலைப்பூவை ஒரு முறை நன்றாகப்பார்

நடுவர்: நீயே மொக்கைகளுக்கெல்லாம் தலைவனாக இருந்தாலும் மூத்த பதிவராக இருந்தாலும் குற்றம் குற்றமே!

சொய்ங்....................,

மன்னர்: அய்யா! மொக்கைப்பதிவரும் நீயே! அநானியாக மாறி உனக்கு நீயே பின்னூட்டமிட்டுக்கொள்பவரும் நீயே! தமிழ்மணத்தில் அதிகமாக எதிர்ஓட்டு குத்துபவரும் நீயே! ஐந்தாரு ஐடிகளை கிரியேட் செய்து தமிழிஷில் உனக்கு நீயே ஓட்டுப்போட்டுக்கொள்பவரும் நீயே! எங்கள் நடுவரை மன்னித்து அவருக்கு வாழ்வு கொடுங்கள்..

மூத்தப்பதிவர்: எழுந்திரு மன்னா! என் நீள நீள‌மான பதிவுகளைப்படித்த அதிர்ச்சியில் மயங்கிக் கிடக்கும் நடுவருக்கு ஒரு சோடா தெளித்து எழுப்புங்கள். மொக்கைப்பதிவுப் போட்டியில் சுவாரஸ்யத்தை உண்டு பண்ணவே நாம் இங்கு வந்தோம். வாழ்க திரட்டிகள். வாழ்க மொக்கைப்பதிவுகள்.

already seen this

21 Response to "பதிவர் திருவிளையாடல்** ஒரு காமெடி கலாட்டா"

  1. ப்ரியமுடன் வசந்த் said...

    கலக்கல் போஸ்ட்

    :)))))))))))))))

  2. SUREஷ்(பழனியிலிருந்து) said...

    நிறைய உள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்குத்த்த்த்த்த்துக்கள் இருப்பது போல தெரியுதே..........,

  3. இராகவன் நைஜிரியா said...

    தூள் கிளப்பிட்டீங்க. கலக்கல்

  4. தாராபுரத்தான் said...

    நலலாத்தான் இருக்குது,,,,

  5. goma said...

    வாசிப்பவர்கள் அனைவருமே வாசி வாசி என்று சிவாசியாகி ..சொற்குற்றமும் இல்லை பொருட் குற்றமும் இல்லை மூன்றாவது கண்ணைத் திறக்க இயலாமல் அசந்து போய் நிற்கிறோம்.நக்கீரன் பிழைத்தார்

  6. துளசி கோபால் said...

    ஹைய்யோ ஹைய்யோ:-)))))))))))

  7. கண்ணா.. said...

    //மன்னர்: அய்யா! மொக்கைப்பதிவரும் நீயே! அநானியாக மாறி உனக்கு நீயே பின்னூட்டமிட்டுக்கொள்பவரும் நீயே! தமிழ்மணத்தில் அதிகமாக எதிர்ஓட்டு குத்துபவரும் நீயே! ஐந்தாரு ஐடிகளை கிரியேட் செய்து தமிழிஷில் உனக்கு நீயே ஓட்டுப்போட்டுக்கொள்பவரும் நீயே! எங்கள் நடுவரை மன்னித்து அவருக்கு வாழ்வு கொடுங்கள்..//

    இது கலக்கல்... :)

  8. ஷாகுல் said...

    'தருமியே' ஒரு மூத்தபதிவர்தாங்க

    கலக்கல்

    :)))))))))))))))

  9. sathishsangkavi.blogspot.com said...

    பின்னீட்டிங்க போங்க.........

  10. S.A. நவாஸுதீன் said...

    செமையா இருக்கு நிஜாம் பாய்.

    ஆமா சுரெஷ்(பழனி) சொன்னதுக்கப்புறம் எனக்கும் சின்ன சந்தேகம் இருக்கு.

  11. நிஜாம் கான் said...

    //பிரியமுடன்...வசந்த் said...
    கலக்கல் போஸ்ட்

    :)))))))))))))))//

    நன்றிண்ணே! தொடர்ந்து வாங்க‌

  12. நிஜாம் கான் said...

    //SUREஷ் (பழனியிலிருந்து) said...
    நிறைய உள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்குத்த்த்த்த்த்துக்கள் இருப்பது போல தெரியுதே..........,//

    அண்ணே! நிச்சயமா இல்லை. எல்லாமே தமாஷ்தான்

  13. நிஜாம் கான் said...

    //இராகவன் நைஜிரியா said...
    தூள் கிளப்பிட்டீங்க. கலக்கல்//

    ரொம்ப நன்றிண்ணே!

  14. நிஜாம் கான் said...

    // அப்பன் said...
    நலலாத்தான் இருக்குது,,,,//

    நன்றி அய்யா! தொடர்ந்து வாங்க‌

  15. நிஜாம் கான் said...

    //goma said...
    வாசிப்பவர்கள் அனைவருமே வாசி வாசி என்று சிவாசியாகி ..சொற்குற்றமும் இல்லை பொருட் குற்றமும் இல்லை மூன்றாவது கண்ணைத் திறக்க இயலாமல் அசந்து போய் நிற்கிறோம்.நக்கீரன் பிழைத்தார்//

    அருமை கோமா. கருத்துக்கு நன்றி

  16. நிஜாம் கான் said...

    // துளசி கோபால் said...
    ஹைய்யோ ஹைய்யோ:-)))))))))))
    நன்றி கோபால் அய்யா தொடர்ந்துவாங்க‌

  17. நிஜாம் கான் said...

    //கண்ணா.. said...
    //மன்னர்: அய்யா! மொக்கைப்பதிவரும் நீயே! அநானியாக மாறி உனக்கு நீயே பின்னூட்டமிட்டுக்கொள்பவரும் நீயே! தமிழ்மணத்தில் அதிகமாக எதிர்ஓட்டு குத்துபவரும் நீயே! ஐந்தாரு ஐடிகளை கிரியேட் செய்து தமிழிஷில் உனக்கு நீயே ஓட்டுப்போட்டுக்கொள்பவரும் நீயே! எங்கள் நடுவரை மன்னித்து அவருக்கு வாழ்வு கொடுங்கள்..//

    இது கலக்கல்... :)//


    நன்றிங்க. தொடர்ந்து வாங்கண்ணே!

  18. நிஜாம் கான் said...

    // ஷாகுல் said...
    'தருமியே' ஒரு மூத்தபதிவர்தாங்க

    கலக்கல்

    :)))))))))))))))//

    நான் படம் தேடறதுக்காக தருமின்னு கொடுத்தேன். அப்ப அவர் பைலும் வந்தது. அதனால் தான் ரெட் டைட்டிலே

  19. நிஜாம் கான் said...

    //Sangkavi said...
    பின்னீட்டிங்க போங்க.........//

    நன்றீ அய்யா தொடர்ந்து வாங்க‌

  20. நிஜாம் கான் said...

    // S.A. நவாஸுதீன் said...
    செமையா இருக்கு நிஜாம் பாய்.

    ஆமா சுரெஷ்(பழனி) சொன்னதுக்கப்புறம் எனக்கும் சின்ன சந்தேகம் இருக்கு.//


    ஆகா நவாஸ் நீங்களுலா? எல்லாமே தமாஷ் தான்

  21. மாயாவி said...

    உள்குத்தோ, வெளிக்குத்தோ விசயம் அருமை!!

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,