Dec 25, 2009

ரத்தம் சொட்டச் சொட்ட வெட்டிக் கொண்டு ஊர்வலம்

நிஜாம் கான் @ 7:09 PM

இஸ்லாமிய மாதங்களில் இந்த முகரம் மாதம் தான் முதல் மாதம். இந்த மாதம் வந்துவிட்டால் நமது சென்னையின் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதியில் வசிக்கும் தங்களை முஸ்லீம்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் செய்யும் செயல்கள் மிக மிக வெறுக்கத் தக்கதாகும். சென்னையைப் பொருத்தவரை இந்த இரண்டு பகுதிகள் ஆனால் இந்தியா முழுக்க ஏன் உலகம் முழுக்க இந்தக் கூட்டம் இந்த வேலையை முகரம் மாதம் பத்தாம் நாள் செய்து கொண்டுதான் இருக்கிறது.

முகரம் மாதம் :

முகரம் மாதம் வந்துவிட்டாலே உருவ வழிபாடு தடுக்கப்பட்ட இஸ்லாம் மார்க்கத்தைச் சேர்ந்த இவர்கள் திருவல்லிக்கேணி ராயப்பேட்டை சுற்றுவட்டாரம் முழுவதும் சிறியசிறிய கொட்டகைகளை அமைத்து அதிலே பலவிதமான உருவங்களை வைத்து அதற்கு பூஜை செய்வார்கள். தினந்தோறும் அதைப் பார்வையிட்டு ஆசி பெற ஆண்களும் பெண்களும் படை எடுத்து வருவார்கள். சாம்புராணி சந்தனவாசனைகள் அந்தப் பகுதியில் மூக்கைத்துளைக்கும்.

தீ மிதி திருவிழா:

ஒன்பதாவது நாள் தான் முக்கியமான விசேசமே. அன்று இரவு பூஜை செய்த அந்த பொம்மைகளை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு ஒருவர் வீதம் ஒவ்வொரு பொருளைச் சுமந்து கொண்டு பைத்தியம் பிடித்ததைப் போல ஓடி ஆடிச்சென்று திருவல்லிக்கேணி பெரிய பள்ளியில் கூடுவார்கள். தெருக்களில் ஆங்காங்கே விறகுகள் குவிக்கப்பட்டிருக்கும். முக்கியமாக திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் பிரம்மாண்ட தீமிதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அங்கே குடும்பத்தோடு செல்லும் பெண்கள் ஆண்கள் உட்பட அனைவரும் ஓ என கத்தியபடி நள்ளிரவில் தீ மிதிப்பார்கள். அங்குமிங்கும் ஓடுவார்கள். திருவல்லிக்கேணி முதல் ராயப்பேட்டை வரை எங்கு நோக்கிலும் தெருக்களில் விறகுகள் எரிந்து கொண்டிருக்கும்.

கருப்பு ஊர்வலம்:

அடுத்த நாள் முகரம் பத்து. குழந்தைகள் முதல் இளைஞர்கள் பெரியவர்கள் என அனைவரும் தங்கள் உடலை கத்தியால், பிளேடால் கிழித்துக்கொண்டு மிக பிரம்மாண்ட கருப்பு ஊர்வலம் நடத்துவார்கள். ஆங்காங்கே கத்தியால் வெட்டிக்கொள்வார்கள்.. குழந்தைகளின் உடலை கீறி ரத்தம் வடிய வடிய கொண்டு செல்வார்கள். ஏற்கனவே கீறிய காயத்தில் சங்கிலியால் கட்டப்பட்ட இரும்பு குண்டுகளை வைத்து அடித்துக்கொள்வார்கள். இந்த வேலையைச் செய்யும் இளைஞர்கள் அனைவருமே நன்கு படித்தவர்கள் என்பது தான் மானக்கேடான விசயமே. அனைவருமே முகம் சுழிக்கும் இந்த விழா எப்படி வந்தது?

நபிகளின் பேரன் ஹூசைன் கொல்லப்பட்டார்:

இந்த இரத்த ஊர்வலத்திற்கு அவர்கள் சொல்லும் காரணம் முகமது நபி(ஸல்) அவர்களின் பேரன் ஹூசைன் அவர்கள் போர்கலத்தில் இதே தினத்தில் கொடூரமாக கொல்லப்பட்டார். அந்த துக்கத்தை தான் நாங்கள் அனுசரிக்கிறோம் எனக் கூறும் இந்த கற்கால காட்டுமிராண்டிகள் மற்ற யார் சொல்வதையும் கேட்பதில்லை. முகரம் பத்தாம் நாளில் கர்பலா என்ற போரில் ஹூசைன் அவர்கள் கொல்லப்பட்டது உண்மை தான். ஆனால் அது முடிந்து போன ஒரு போர் சம்பவம் மட்டுமே. காரண‌ம் இஸ்லாத்தில் துக்கம் அனுசரிப்பது என்பது வெறும் 3 நாட்கள் மட்டும் தான் அனுமதி. அதன்பின்னர் அவரவர்கள் தங்களின் வழமையான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆனால் இந்த முட்டாள்கள் இன்னமும் அந்த சம்பவத்தைப் பிடித்துக் கொண்டு தங்களை அடித்துக்கொள்கிறார்கள், பிளேடால் கிழித்துக் கொள்கிறார்கள்.

அதேபோல முகமது நபி அவர்களின் இறப்பிற்குப் பிறகு இறைச்செய்திகளின் வரத்து முடிந்து விட்டது.முகமது நபியவர்கள் இறப்பதற்கு முன்னர் ஆற்றிய பேருரையில் நான் இறைவனின் மார்க்கத்தைப் பூர்த்தி செய்துவிட்டேன் என்றும் இனிமேல் இறைச்செய்திகள் வராது என்றும்,எனக்குப் பின்னால் உருவாக்கப்படும் ஒழுங்குகள், சட்டஙகள் மார்க்கத்திற்கு சம்மந்தமில்லாதது என்றும் மிகத்தெளிவாக அறிவித்து விட்டார்கள்.

ஒரு துன்பம் நிகழும் போது தன் சட்டையைக் கிழித்துக்கொள்பவனும், தன் கன்னத்தில் அறைந்து கொள்பவனும், முட்டாள்த்தனமாக உளறுபவனும் என்னைச் சார்ந்தவன் அல்ல என நபிகள் நாயகம் தெளிவாக அறிவிக்கிறார்கள். அப்படி இருக்கும் போது இது போன்ற இழிசெயல்கள் புரியும் இவர்களை எப்படி இஸ்லாமியர்கள் என ஏற்றுக்கொள்ள இயலும்.

அதுமட்டுமின்றி இஸ்லாத்தின் மூச்சான‌ ஒரே கடவுள் கொள்கையை காற்றிலே பறக்கவிட்டுவிட்டார்கள். மேலே உள்ள படத்தில் இருக்கும் "கை"யின் பெயர் பஞ்சா. பஞ்சா என்றால் ஹிந்தி மொழி பாஞ்ச்(5)ல் இருந்து திரிந்ததாகும். அதாவது இறைத்தூதர் முகமது(ஸல்),அவரது மருமகன் அலீ, அவரது பேரர்கள் ஹசன், ஹூசைன், அவரது மகள் பாத்திமா ஆகிய ஐவரும் சேர்த்து தான் பஞ்சா ஆகியது. அவர்களுடைய நினைவு சிலை தான் மேற்கண்ட கை ஆகும். இந்த ஐந்து பேரும் இறைவனிடம் இருந்து தங்களைக் காப்பாற்றுவார்கள் என இவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். ஆக இஸ்லாத்தின் கொள்கைகளைக் கெடுக்க வந்த இவர்களை இஸ்லாமியர்கள் என எவ்வாறு அழைப்பது??

முகரம் பத்தாம் நாள்:

ஆக மேற்கண்ட மாரடிக்கும் விசயத்திற்கும் இஸ்லாத்திற்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை. ஆனால் இந்த முகரம் பத்தாம் நாளுக்கும் முஸ்லீம்களுக்கும் சம்மந்தம் இருக்கிறது. நபிகள் நாயகம் அவர்கள் மெக்காவில் வாழ்ந்த போது இந்த முகரம் பத்தாம் நாள் அன்று நோன்பு நோற்று வந்தார்கள். பின்னர் மதீனாவிற்கு பெயர்ந்து வந்த போது அங்கிருக்கும் யூதர்களும் இதே முகரம் பத்தாம் நாள் அன்று நோன்பு நோற்பதைக் கண்டு அவர்களிடம் இது குறித்துக் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் எங்கள் நபியான மோசே என்கிற மூசாவை பிரவுன் என்கிற கொடிய மன்னனிடம் இருந்து கடலைப் பிளந்து காப்பாற்றி, பிரவுனை அதே கடலில் மூழ்கடித்த எங்கள் இறைவனுக்கு நன்றி சொல்லவே நாங்கள் இந்த நோன்பை நோற்கிறோம் என அவர்கள் சொன்னார்கள்.

இதைக் கேட்ட முகமதவர்கள்,"உங்களை விட மூசாவின் மீதும் அவரின் இறைவனின் மீதும் எங்களுக்கு அதிக‌ உரிமை இருக்கிறது, எனவே நான் இனி அடுத்தவருடம் தொடக்கம் முகரம் மாதம் ஒன்பதாம் நாளும் பத்தாம் நாளும் நோன்பிருப்பேன் எனச் சொன்னார்கள். ஆனால் அடுத்த வருடம் முகமது நபியவர்கள் மரணித்து விட்டார்கள். எனவே அவர்கள் சொன்ன அந்த இரண்டு நோன்புகளை முகரம் 9,10 ஆகிய இரண்டு நாட்களில் நோற்பது மட்டுமே முஸ்லீம்களின் கடமையாகும். அதை விடுத்து தீ மிதிப்பதும், பிளேடால் கிழித்துக்கொள்வதும் மூளையற்ற மூடர்களின் செயல்பாடுகளேயன்றி முஸ்லீம்களின் செயல்பாடுகள் அல்ல.

தத்துவஞானி பெர்னாட்ஷா சொன்ன கீழ்க்கண்ட வாசகம் இன்றைக்கும் பொருந்தும்

Islam is a Best Religion-But

Muslims are worst followers..,

already seen this

27 Response to "ரத்தம் சொட்டச் சொட்ட வெட்டிக் கொண்டு ஊர்வலம்"

  1. Muhammad said...

    தேவையான நேரத்தில் வந்த தெளிவான-சரியான பதிவு. நன்றி. இஸ்லாத்தை பின்பற்றாத இவர்கள் முஸ்லிம்களே இல்லை. ஆனாலும், அரசும் சங் பரிவாரங்களும், அட..! நாத்திகர்களும், கம்யூனிஸ்டுகளும் இந்த காட்டுமிராண்டிகளுக்கு பலத்த ஆதரவு. இதுபோன்ற கூத்துக்களில் ஈடுபடுபவர்களின் மீது 'தற்கொலை முயற்சி' கேஸ் போட்டு 'உள்ளே' தூக்கி போடவேண்டிய அரசு என்ன செய்யும் என்றால், இந்த கொடூரத்துக்கு சிறப்பு பாதுகாப்பு கொடுக்கும். காவி மீடியா 'இதுதான் இஸ்லாம்' என்று 'லைவ் ரிலே' பண்ணும். இதை எதிர்க்கும் நம்மை போன்ற பகுத்தறிவுவாதிகளை, பயங்கரவாதிகள் என்று மேற்படி அரசும், சங் பரிவாரும், கம்யூனிஸ்டும் நாத்திகர்களும் தூற்றுவார்கள். என்ன செய்ய! ஒவ்வொரு வருஷமும் நாமும் கத்திக்கொண்டேதான் இருக்கிறோம். எதிரிக்கு எதிரி நண்பர்கள். அவர்கள் கோமாளிகள்.

  2. இராகவன் நைஜிரியா said...

    இங்கு ஒரு விஷயத்தைப் பதிவு செய்ய விரும்புகின்றேன். ரொம்ப நாள் எனக்கு இந்த விஷயம் தெரியாது. சென்னையில் எனக்கு கீழ் பணி புரிந்த அன்பரை சாதாரணமாக விளையாட்டுக்கு முதுகில் ஒரு ஷொட்டு கொடுத்தேன். அவர் அலறினார். ஏன் என்றுக் கேட்டபோது, நீங்க சொன்ன விஷயத்தை கூறினார். அப்போது அவரிடம் சாரி மட்டும் கேட்டுக் கொண்டேன். இப்போதுதான் புரிகின்றது அவர் செய்தது தவறு என்று. கொடுமை என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.

  3. ராஜவம்சம் said...

    காட்டுமிராண்டிகள் எல்லா இனத்திலும் இருப்பார்கள் அதுபோல் தான் இவர்களும்
    இஸ்லாமியன் பெயர் தாங்கிய காட்டுமிராண்டிகள்

  4. vasu balaji said...

    எந்த விடயம் எடுத்துக் கொண்டாலும் நடு நிலையில் எழுதுகிறீர்களே! அதற்கு எவ்வளவு பாராட்டினாலும் தகும். பெர்னார்ட்ஷா சொன்னதுக்கும் மேல் சொல்ல என்ன இருக்கிறது.

  5. நட்புடன் ஜமால் said...

    தன்னைத்தானே துன்புறுத்தி கொ(ள்ள)ல்ல அனுமதி இல்லை மனித சமுதாயத்திற்கு - இஸ்லாம்.

    இன்னும் இன்னும் இஸ்லாம் பற்றிய தவறான பார்வைகளை நாமும் விளங்கி அடுத்தவறுக்கு விளக்க வேண்டும்

    நல்ல முயற்சி.

  6. துளசி கோபால் said...

    இப்படித் தன்னைத்தானே வதைச்சுக்கிட்டு வழிபாடு செய்பவர்கள் இந்துமதத்திலும் இருக்காங்க.

    எந்த சாமியும் 'வதைச்சுக்கோ, எனக்காக ரத்தம் சிந்து'ன்னு சொல்லலை.

    என்னென்னமோ சொல்லத் தோணுது...... வேணாம்.

    என்னமோ போங்க(-:

  7. S.A. நவாஸுதீன் said...

    நல்ல அருமையான இடுகை நிஜாம் பாய்.

    இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை இஸ்லாம் என்று கூறி, அவர்களும் வழி தவறி மற்றவர்களுக்கும் தவறான எண்ணத்தை ஏறபடுத்தும் இந்த மாதிரி செயல்கள் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

    இப்படித்தான் தர்காக்களும்.

    தர்காவில் நடக்கும் சிர்க்குகளைப் பற்றியும் எழுதுங்கள்.

  8. ஷாகுல் said...

    நல்ல பதிவு.

  9. Anonymous said...

    பெர்னார்ட் ஷா கூறியது உண்மையென்று நம்மில் பலர் நிரூபித்துக்கொண்டிருக்கிறோம்.

    அல்லாஹ் எல்லா மக்களுக்கும் ஹிதாயத் அருளுவானாக‌

  10. இர்ஷாத் ஜத்தி said...

    /இன்னும் இன்னும் இஸ்லாம் பற்றிய தவறான பார்வைகளை நாமும் விளங்கி அடுத்தவறுக்கு விளக்க வேண்டும்/

    தேவையான நேரத்தில் வந்த தெளிவான-சரியான பதிவு.
    தொடரட்டும் உங்கள் பணி

  11. மாசிலன் said...

    நடு நிலமையுடன் எழுதியிருக்கும் மிக நல்லதொரு விழிப்புணர்வூட்டும் பதிவு.

    நன்றி

  12. நிஜாம் கான் said...

    //Muhammad said...
    தேவையான நேரத்தில் வந்த தெளிவான-சரியான பதிவு. நன்றி. இஸ்லாத்தை பின்பற்றாத இவர்கள் முஸ்லிம்களே இல்லை. ஆனாலும், அரசும் சங் பரிவாரங்களும், அட..! நாத்திகர்களும், கம்யூனிஸ்டுகளும் இந்த காட்டுமிராண்டிகளுக்கு பலத்த ஆதரவு. இதுபோன்ற கூத்துக்களில் ஈடுபடுபவர்களின் மீது 'தற்கொலை முயற்சி' கேஸ் போட்டு 'உள்ளே' தூக்கி போடவேண்டிய அரசு என்ன செய்யும் என்றால், இந்த கொடூரத்துக்கு சிறப்பு பாதுகாப்பு கொடுக்கும். காவி மீடியா 'இதுதான் இஸ்லாம்' என்று 'லைவ் ரிலே' பண்ணும். இதை எதிர்க்கும் நம்மை போன்ற பகுத்தறிவுவாதிகளை, பயங்கரவாதிகள் என்று மேற்படி அரசும், சங் பரிவாரும், கம்யூனிஸ்டும் நாத்திகர்களும் தூற்றுவார்கள். என்ன செய்ய! ஒவ்வொரு வருஷமும் நாமும் கத்திக்கொண்டேதான் இருக்கிறோம். எதிரிக்கு எதிரி நண்பர்கள். //

    கருத்துக்கு நன்றி முகம்மத். தொடர்ந்து இணைந்திருங்கள்

  13. நிஜாம் கான் said...

    //இராகவன் நைஜிரியா said...
    இங்கு ஒரு விஷயத்தைப் பதிவு செய்ய விரும்புகின்றேன். ரொம்ப நாள் எனக்கு இந்த விஷயம் தெரியாது. சென்னையில் எனக்கு கீழ் பணி புரிந்த அன்பரை சாதாரணமாக விளையாட்டுக்கு முதுகில் ஒரு ஷொட்டு கொடுத்தேன். அவர் அலறினார். ஏன் என்றுக் கேட்டபோது, நீங்க சொன்ன விஷயத்தை கூறினார். அப்போது அவரிடம் சாரி மட்டும் கேட்டுக் கொண்டேன். இப்போதுதான் புரிகின்றது அவர் செய்தது தவறு என்று. கொடுமை என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.//

    உண்மைதாண்ணே! எந்த மதமும் தங்களை துன்புறுத்திக்கொண்டு கடவுளை மகிழ்ச்சிப்படுத்து என சொல்லவில்லையண்ணே! நன்றி கருத்துக்கு,.

  14. நிஜாம் கான் said...

    //ராஜவம்சம் said...
    காட்டுமிராண்டிகள் எல்லா இனத்திலும் இருப்பார்கள் அதுபோல் தான் இவர்களும்
    இஸ்லாமியன் பெயர் தாங்கிய காட்டுமிராண்டிகள்//

    நிச்சயமாக நண்பரே! அதைவிட கடும்வார்த்தை இருந்தாலும் உபயோகப்படுத்தலாம்

  15. நிஜாம் கான் said...

    //வானம்பாடிகள் said...
    எந்த விடயம் எடுத்துக் கொண்டாலும் நடு நிலையில் எழுதுகிறீர்களே! அதற்கு எவ்வளவு பாராட்டினாலும் தகும். பெர்னார்ட்ஷா சொன்னதுக்கும் மேல் சொல்ல என்ன இருக்கிறது.//

    நன்றிண்ணே! தவறுன்னு தெரிந்த பிறகு யாராக இருந்தாலும் தண்டனை பெற அல்லது திருத்திக்கொள்ள வேண்டுமண்ணே!

  16. நிஜாம் கான் said...

    // நட்புடன் ஜமால் said...
    தன்னைத்தானே துன்புறுத்தி கொ(ள்ள)ல்ல அனுமதி இல்லை மனித சமுதாயத்திற்கு - இஸ்லாம்.

    இன்னும் இன்னும் இஸ்லாம் பற்றிய தவறான பார்வைகளை நாமும் விளங்கி அடுத்தவறுக்கு விளக்க வேண்டும்

    நல்ல முயற்சி.//

    நன்றி ஜமால். முயற்சி தொடர தொடர்ந்து கை கொடுங்கள்

  17. நிஜாம் கான் said...

    //துளசி கோபால் said...
    இப்படித் தன்னைத்தானே வதைச்சுக்கிட்டு வழிபாடு செய்பவர்கள் இந்துமதத்திலும் இருக்காங்க.

    எந்த சாமியும் 'வதைச்சுக்கோ, எனக்காக ரத்தம் சிந்து'ன்னு சொல்லலை.

    என்னென்னமோ சொல்லத் தோணுது...... வேணாம்.

    என்னமோ போங்க(‍://

    கரெக்டுங்க அண்ணே! இத நாம சொன்னா நம்மை முட்டாள் என்கிறார்கள். கருத்துக்கு நன்றீங்கண்ணா

  18. நிஜாம் கான் said...

    //S.A. நவாஸுதீன் said...
    நல்ல அருமையான இடுகை நிஜாம் பாய்.

    இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை இஸ்லாம் என்று கூறி, அவர்களும் வழி தவறி மற்றவர்களுக்கும் தவறான எண்ணத்தை ஏறபடுத்தும் இந்த மாதிரி செயல்கள் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

    இப்படித்தான் தர்காக்களும்.

    தர்காவில் நடக்கும் சிர்க்குகளைப் பற்றியும் எழுதுங்கள்.//

    நிச்சயமாக நவாஸ். அதையும் போட்டுத்தாளிக்க வேண்டியது தான். உங்களின் தொடர்ந்த ஆதரவு தேவை. இனி நிஜாம் பாய் வேண்டாம். நிஜாமுன்னே கூப்பிடுங்க.

  19. நிஜாம் கான் said...

    // ஷாகுல் said...
    நல்ல பதிவு.//

    நன்றி சாகுல் தொடர்ந்து இணைந்திருங்கள்

  20. நிஜாம் கான் said...

    //நாஸியா said...
    பெர்னார்ட் ஷா கூறியது உண்மையென்று நம்மில் பலர் நிரூபித்துக்கொண்டிருக்கிறோம்.

    அல்லாஹ் எல்லா மக்களுக்கும் ஹிதாயத் அருளுவானாக//

    நிச்சயம் நாஸியா வருகைக்கு நன்றீ

  21. நிஜாம் கான் said...

    IRSHAD JEDDY said...
    /இன்னும் இன்னும் இஸ்லாம் பற்றிய தவறான பார்வைகளை நாமும் விளங்கி அடுத்தவறுக்கு விளக்க வேண்டும்/

    தேவையான நேரத்தில் வந்த தெளிவான-சரியான பதிவு.
    தொடரட்டும் உங்கள் பணி//

    நன்றி இர்ஸாத். தொடர்ந்து வாங்க‌

  22. நிஜாம் கான் said...

    // மாசிலன் said...
    நடு நிலமையுடன் எழுதியிருக்கும் மிக நல்லதொரு விழிப்புணர்வூட்டும் பதிவு.

    நன்றி//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு மாசிலன். தொடர்ந்து இணைந்திருங்கள்

  23. Anonymous said...

    bad , but as long as it is not some one else's back.

  24. அ.மு.செய்யது said...

    சூப்பர் நிஜாம் !!!

    அடிச்சி தூள் கெளப்புறீங்க..!!!

    இதே பகுதியை நான் எழுத வேண்டும் என்று வெகுநாட்களாக நினைத்து கொண்டிருந்தேன்.இனி கவலைப் பட தேவையில்லை.

    இது போன்ற மூடநம்பிக்கைகள் குறித்து,இஸ்லாத்தின் நிலைப்பாட்டை ஆணித்தரமாக எடுத்துரைத்திருக்கிறீர்கள்.

    இன்னும் இது போல பதிவுகள் தொடர்ந்து எழுதுங்கள்.

  25. நிஜாம் கான் said...

    // அ.மு.செய்யது said...
    சூப்பர் நிஜாம் !!!

    அடிச்சி தூள் கெளப்புறீங்க..!!!//

    வருகைக்கு நன்றி செய்யத். தொடர்ந்து எழுதுவோம் உங்கள் ஆதரவோடு. தொடர்ந்து இணைந்திருங்கள்.

  26. மின்னுது மின்னல் said...

    /துளசி கோபால் said...
    இப்படித் தன்னைத்தானே வதைச்சுக்கிட்டு வழிபாடு செய்பவர்கள் இந்துமதத்திலும் இருக்காங்க.

    எந்த சாமியும் 'வதைச்சுக்கோ, எனக்காக ரத்தம் சிந்து'ன்னு சொல்லலை.

    என்னென்னமோ சொல்லத் தோணுது...... வேணாம்.

    என்னமோ போங்க(‍://

    கரெக்டுங்க அண்ணே! இத நாம சொன்னா நம்மை முட்டாள் என்கிறார்கள். கருத்துக்கு நன்றீங்கண்ணா

    //

    துளசிகோபால் ஆண் அல்ல பெண் !!!
    நியுசிலாந்தில் வசிக்கிறார் அன்போடு டீச்சர்னு சொல்வோம் :)

  27. THE UFO said...

    GOOD ONE

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,