Dec 17, 2009

மருத்துவர் ராமதாஸுக்கு ஒரு பகிரங்க‌ கடிதம்

நிஜாம் கான் @ 9:02 PM

அனுப்புனர்,பெறுனர்,பொருள் எல்லாம் தேவையில்லை. காரணம் இந்த சூழ் நிலையில் உங்களுக்கு ஒருவன் கடிதம் எழுதுவதாக இருந்தால் அது நிச்சயம் இரண்டு பிரச்சனைகளைச் சார்ந்து தான் இருக்கும். ஒன்று திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி இடைத்தேர்தல் சம்மந்தப்பட்டது. இன்னொன்று தமிழகப் பிரிவினை சம்மந்தப்பட்டது. இதிலே முதல்செய்தியான இடைத்தேர்தல் குறித்து உங்களது கருத்துக்களை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காரணம் அய்யா அவர்கள் தேர்தல் காலங்களில் எப்படி மாறுவீர்கள் எப்படி பேசுவீர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். நடைபெற இருக்கும் இந்தத் தேர்தலில் கூட பாமகவினர் 49 ஓ வைப் பின்பற்றவேண்டும் என முதலில் கூறியிருந்தீர்கள். அப்படி பாமகவினர் ஓ போட்டால் உங்களது வாக்குவங்கி ரகசியம் வெளியாகிவிடும் என தெரிந்து இப்போது இடைத்தேர்தலையே ரத்து செய்ய வேண்டும் என்கிறீர்கள். ஆனால் இந்த விசயத்தில் உங்கள் கருத்தை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். காரணம் இப்போதெல்லாம் வாக்காளர்களே ஒரு ஓட்டுக்கு இவ்வளவு என பேரம் பேசி பணம் வாங்கிக் கொள்கிறார்கள்.

எனவே இந்தக் கடிதம் இரண்டாம் செய்தியைப் பற்றியது.

தமிழக அரசியல் தலைவர்களில் இதுவரை நீங்கள் மட்டும் தான் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை காலங்காலமாக முன்வைத்து வருகிறீர்கள். இதிலே உங்களுக்கு என்ன லாபம் என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். நீங்கள் சொல்லும் ஒரு காரணம் நிர்வாக வசதி. அதாவது உயர்நீதிமன்றம், தொழில்நுட்ப பூங்கா மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீடுகள் வடமாவட்டங்களில் மட்டுமே முடங்கி விடுவதாகவும், தென்மாவட்டங்களுக்கு அவைகள் சென்றடைவதில்லை என்பதும் தான் உங்கள் கருத்து. அதற்கு உதாரணமாக நீங்கள் இன்றைய பரபரப்பு பிரச்சனையான தெலுங்கானாவை முன்வைக்கிறீர்கள்.தெலுங்கானா பிரிவினைக்கு முக்கிய காரணம் அவர்கள் நிர்வாக வசதி கருதியெல்லாம் என்பது இல்லை. தெலுங்கானா என்பது முழுக்க முழுக்க விவசாய பூமி. அங்கிருக்கும் மக்களுக்கு எதிலுமே சரியான அளவில் முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்பது தான் அவர்களின் பிரிவினை கோரிக்கைக்கு காரணம்.

முக்கியமாக ஆந்திர மைந்தர்கள் தங்கள் உயிருக்கு மேலாக மதிக்கும் சினிமாவில் கூட தெலுங்கானாவாசிகளால் கதாநாயகனாக நடிக்க முடியவில்லையாம். காமெடியனாக அல்லது குணசித்ர நடிகர்களாக மட்டுமே நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கிறதாம். அதனால் தெலுங்கானா பிரச்சனை ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது. இங்கே நமது தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கோலோச்சியுள்ள அரசியல் புள்ளிகள், சினிமா புள்ளிகள் மற்றும் தொழிலதிபர்கள் என அனைவருமே தென்மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் தானே! உண்மையான சென்னைவாசிகள் இன்னமும் கூவக்கரை குடிசைகளை காலிசெய்யவில்லையே! வந்தாரை வாழவைக்கும் தமிழகம் தமிழர்களை மட்டுமா வாழவைக்கிறது? சென்னையிலே வாழும் பலருக்கு இன்னமும் தமிழ் தெரியவில்லையே. மார்வாடிகளும், மளையாளிகளும் காலூன்றிய அளவிற்கு தமிழர்கள் இன்னமும் காலூன்றவில்லையே! இந்த நிலையில் தமிழகத்தினை இரண்டு கூறாக பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கை முட்டாள் தனமானது என்பதை அய்யா அவர்கள் ஏன் உணரவில்லை?

சென்னை முதல் குமரிவரை வாழும் தமிழர்களுக்குள் இதுவரை பிரிவினை என்பது வந்ததேயில்லை. நீங்கள் சொல்வதைப் போல தமிழகத்தைப் பிரித்தால் இன்றைக்கு ஆந்திராவுடன் இருக்கும் கிருஷ்னா, கர்நாடகாவுடன் காவேரி, கேரளாவுடன் முல்லைப்பெரியாறு என்ற பிரச்சனைகளைப் போல தமிழர்களும் தங்களுக்குள்ளே முட்டிக்கொள்ள வேண்டும் என்பது தான் உங்கள் ஆசையா?

சிங்கப்பூர், மலேசியா, பர்மா, இலங்கை, மொரீசியஸ், மாலத்தீவு மற்றும் ஆஸ்திரேலிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்களுக்கென்று மிச்சமிருப்பது தமிழகம் மட்டும் தான். அதிலும் வெளிமாநிலத்தவர்கள் கனிசமான தமிழ்பூமியை சொந்தமாக்கி விட்டார்கள். கஷ்மீரில் இருக்கும் நில வரம்புச் சட்டம் (மற்றவர்கள் நிலம் வாங்க முடியாது)தமிழகத்தில் குறிப்பாகச் சென்னையில் கொண்டுவரா விட்டால் தமிழகத்தை நீங்கள் பிரிக்க வேண்டாம். ஒரு குறிப்பிட்ட இனத்தவர்களே பிரித்துவிடுவார்கள். சென்னையைப் பொருத்தவரை தீபாவளியை விட சங்கராந்தி தான் மிகச்சிறப்பாக, விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது என்பது ஒரு கொசுருசெய்தி.

எனவே அய்யா! நல்ல தமிழில் ஒரு நாளேடு தமிழோசையும், நல்ல தமிழில் ஒரு தொலைக்காட்சி மக்கள் தொலைக்காட்சியையும் வைத்துக்கொண்டு தமிழ்மொழி வாழியவே என வாழ்த்தினால் மட்டும் தமிழ் வளராது, வாழாது. இழந்ததை மீட்க இருப்பதைக் காக்க இனியாவது ஒன்றினைந்தால் தான் நம்மாள் தமிழகத்தையும் தமிழையும் காப்பாற்ற முடியும்.தமிழ் இனி மெல்லச் சாகும் என்று சொன்ன அறிஞனின் வாக்கு பொய்க்க நாம் பேண வேண்டியது ஒற்றுமை மட்டுமே. இனியாவது உங்கள் பிரிவினை வாதத்தை குப்பையிலே போடுங்கள்....

நன்றி.

அன்புடன்..,

தமிழ்மகன்

already seen this

11 Response to "மருத்துவர் ராமதாஸுக்கு ஒரு பகிரங்க‌ கடிதம்"

  1. Anonymous said...

    மருத்துவருக்கு முதல்வர் பதவிமேல் ஆசை. தமிழகத்தை இரண்டாக பிரித்தால் ஒன்றில் முதல்வர் ஆக்கிவிடலாம் என்று பகல்கனவு காண்கிறார் நாம் தான் உஷாராக இருக்க வேண்டும்.
    நன்றி
    எம்.செய்யது
    அபுதாபி
    யு.எ.இ

  2. vasu balaji said...

    சரியான கருத்துகள் நிஜாம்.
    /நல்ல தமிழில் ஒரு நாளேடு தமிழோசையும், நல்ல தமிழில் ஒரு தொலைக்காட்சி மக்கள் தொலைக்காட்சியையும் வைத்துக்கொண்டு தமிழ்மொழி வாழியவே என வாழ்த்தினால் மட்டும் தமிழ் வளராது, வாழாது./

    நச்

  3. இராகவன் நைஜிரியா said...

    அப்படியாவது தன் கட்சி ஆட்சிக்கு வராதா... முதல்வர் ஆக மாட்டோமா என்ற நப்பாசைத்தான்.

    தமிழகத்தை நாலாக பிரித்தாலும் அவர் தனித்து நின்றால் வெற்றிப் பெற முடியாது...

    குதிரை சவாரி செய்யத்தான் லாயக்கு.

  4. ரோஸ்விக் said...

    ம்ம்... அய்யாவுக்கு நல்ல சொல்லீருக்கீங்க. விளையாட்டுக்குக்கூட தமிழகத்தை இரண்டாகப் பிரிக்கச்சொல்லக்கூடாது.

  5. ஷாகுல் said...

    //மருத்துவருக்கு முதல்வர் பதவிமேல் ஆசை. தமிழகத்தை இரண்டாக பிரித்தால் ஒன்றில் முதல்வர் ஆக்கிவிடலாம் என்று பகல்கனவு காண்கிறார் //

    அதே அதே

  6. thendral said...

    விஜயகாந்தை ஏற்க முடியாது
    ஜெயலலிதாவை வெற்றிபெற விட கூடாது
    நம் பலத்தை கட்டவேண்டும் ,காடட்வேண்டும
    எனவே தி மு க விக்கு வோட

  7. தமிழ்ப்பரதேசி said...

    இந்த சேட்டுகள் மற்றும் மலையாளிகளிடமிருந்து தமிழகத்தின் தலைநகரைக் காப்பாற்ற அதனை தமிழ் வளர்த்த ‘மதுரை’க்கு மாற்றவேண்டும்.... அப்போதுதான் தமிழன் வளர்வான்

  8. THANGA MANI said...

    நன்று.நன்றி.
    வாழ்க வளமுடன்.

  9. S.A. நவாஸுதீன் said...

    அவர் சேனல் தவிற மத்த சேனல்லையும் அவரைக் காமிக்கனும்னா இந்தமாதிரி எதாவது சொன்னதான் நடக்கும். விடுங்க பாவம் அவர். நல்ல மருத்துவரிடம் காட்டினால் எல்லாம் சரியாகும்.

  10. நிஜாம் கான் said...

    கருத்து சொன்ன அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி! தொடர்ந்து இணைந்திருங்கள்.

  11. Anonymous said...

    வட மாவட்ட மக்கள் ரியல் எஸ்டேட் உலகத்தரதிருக்கு கொண்டு சென்றதே ,தெற்கு மாவட்ட அரசியல் பினாமிகள் .ஆகவே இரேண்டாக பிரித்தால் மக்கள் இலகுவாக உழலை கண்டு கொள்ளலாம் .அடிமட்டமக்கள் மற்றும் சிறுபான்மை மக்களின் அரசியல் முக்கியத்துவம் பெரும் .அதிகாரிகளின் பணிகள் கண்காணிக்கப்படுவதால்
    முறையட்ட்ற கருப்பு பண புழக்கம் பாதிக்கு பாதி குறையும் ,மக்களாட்சி சிறிதேனும் செம்மைப்படும் .

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,