Dec 9, 2009

பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்

— நிஜாம் கான் @ 4:53 PM

தற்போதைக்கு நடந்து வரும் குளிர்கால கூட்டத்தொடரில் பலவிதமான பிரச்சனைகளைகள் பற்றி விவாதிக்கப்பட்டு வருகின்றன. இதிலே முக்கியமானது இலங்கைத் தமிழர் பிரச்சனை மற்றும் தமிழக மீனவர் பிரச்சனைகள் ஆகும். இது இரண்டுமே தமிழகத்தை மட்டும் சார்ந்த பிரச்சனைகள் என்பதால் மத்திய அரசு எந்தவிதமான சுறுசுறுப்பும் இல்லாமல் கதையை முடித்துவிட்டனர் .

இலங்கை நலன் தான் முக்கியமா? :

ஆளும் காங்கிரஸ் அரசு இந்தியாவுக்கு மத்திய அரசா அல்லது இலங்கைக்கு மத்திய அரசா என்பதும் பிரதமர் மண்மோகன் அவர்களைக் கட்டுப்படுத்தும் லகான் பவர் சோனியா அன்னையாருக்கு மட்டும் தான் இருக்கிறதா அல்லது அது அமெரிக்க கையிலும் இருக்கிறதா என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. பாகிஸ்தானையும் சீனாவையும் ஊதித்தள்ளும் இந்தியா இலங்கைக்கு இப்படி ஏன் பயந்து நடுங்குகிறது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

இடதுசாரிகள் காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த போது அதை எப்படியாவது முறியடித்து அரசைக் காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்வோம் என அமெரிக்கா வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு இறங்கியது. இந்த செயலில் ஒரு நியாயம் இருக்கிறது. அதாவது அனுசக்தி அடிமை சாசணத்தில் கையெழுத்திட உலக அளவில் கிடைத்த வல்லரச‌ இளிச்சவாய நாட்டை விடுவதற்கு அமெரிக்காவுக்கு மனமில்லை. அதனால் தான் கொட்டவேண்டியதைக் கொட்டி ஆட்சியைக் காப்பாற்றியது அமெரிக்கா. அதே போன்ற ஒரு செயலை இன்றைக்கு இலங்கை விசய‌த்தில் இந்தியா எடுத்துள்ளதற்கான காரணம் தான் என்னவென்று தெரியவில்லை. அதாவது வரும் இலங்கை அதிபர் தேர்தலில் பங்காளி ராஜபக்சேயை மீண்டும் அதிபராக‌ அமரவைக்கும் திட்டம் தான் அது.

தமிழர் வாக்குபலம்:

சிங்கள வாக்குவங்கிகள் சிதறிக்கிடக்கும் நிலையில் தமிழர்களின் வாக்குகள் தான் வெற்றியை நிர்ணயிக்கும் பலமான ஆயுதமாக தற்போது கருதப்படுகிறது. அது முழுக்க தனக்கே கிடைக்கவேண்டும் என ராஜபக்சே ஆசைப்பட்டது மட்டுமல்லாது அதற்கான திட்டங்களையும் செவ்வனே நிறைவேற்றி வருகிறார். மீள்குடியேற்றம், வெளியே செல்ல அனுமதி என பலவகையான அதிரடித்திட்டங்கள் மூலம் மக்களை கவர அவர் செய்யும் முயற்சிகளுக்கு இப்போது இந்தியாவின் பக்கபலமும் அவசியம் தேவைப்படுகிறது. இந்தியா தான் நமக்குக் காவல் என இன்றைக்கும் அங்குள்ள மக்கள் மத்தியிலே ஓரளவிற்கு இருக்கும் நம்பிக்கையை வைத்து, தமிழர்களின் ஓட்டினை அறுவடை செய்யும் இயந்திரமாக இந்தியா செயலபடப்போகிறது ராஜபக்சேவுக்காக.. இந்தியா, யார் அதிபராக‌ வேண்டும் என விரும்புகிறதோ அதைத் தான் அங்கிருக்கும் தமிழ்மக்களும் விரும்புவார்கள் என கணக்குப் போட்டு காய் நகர்த்துகிறார் ராஜபக்சே.

கச்சத்தீவும் தமிழக மீனவர்களும்:

நீங்க எப்படி செத்துத் தொலைஞ்சாலும் பரவாயில்ல, எங்களுக்கு இலங்கையின் ஆதரவு வேண்டும் என காங்கிரஸ் திடமான முடிவு எடுத்துவிட்டது. அதனால் தான் கச்சத்தீவை மீட்கும் பேச்சுகே இடமில்லை என தெளிவாக அறிவித்து விட்டது. அத்தோடு மீனவர்கள் 12 கடல்மைல் தாண்டி மீன்பிடிக்கச் சென்றால் 9 லட்சம் ரூபாய் வரை அபராதம் என்ற மேலாண்மை சட்டத்தைக்க் கூட இலங்கைக்கு சாதகமாகத்தான் போட்டிருக்கிறது இந்திய அரசு. அது மட்டுமின்றி இலங்கை அரசோடு இணைந்து இந்திய இலங்கைக்கான கடல் எல்லைகளை எடுத்து விட்டு அனைவரும் எங்குவேண்டுமானாலும் மீன்பிடிக்க அனுமதி என்ற சட்டத்தை செயல்படுத்துவது பற்றி இலங்கையிடம் கேட்கலாமா என்ற ஒரு முடிவையும் வைத்துள்ளது இந்தியா. அதாவது ஐஸ்வர்யா ராயை யார் வேண்டுமானாலும் காதலிக்கலாம் என்பது போன்றது இந்த முடிவு. இந்த முடிவிற்கு இலங்கை ஒரு காலமும் ஒத்துழைக்காது என்பது நம்ம ஊர் சின்னக்குழந்தைகளுக்கே தெரியும் போது இவர்களுக்கு எப்படி தெரியாமல் போனது. அதெல்லாம நல்லாத் தெரியும். எல்லாம் ஒரு ஏமாத்து வேல தான்.

இலங்கைக்கு எம்.பிக்கள் குழு:

ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படும் போது பொங்கி எழுந்து குரல்கொடுக்கும் இந்தியா, இலங்கையிலே தமிழர்கள் தாக்கப்படும் போது ஏன் மௌனியாக இருக்கிறது என திருமாவின் கேள்விக்கும், இதே போல இலங்கை வதை முகாம்களில் வாடும் தமிழர்களின் நிலையை எடுத்துரைத்த என்.ராசா, திருச்சி சிவா மற்றும் கவிஞர் கணிமொழி ஆகியோரின் பேச்சுக்களின் தாக்கத்தால் இந்திய எம்.பிக்கள் குழுவை இலங்கைக்கு மீண்டும் அனுப்புவோம் என அறிவித்தார் கிருஷ்னா. யார் டோஸ் விட்டார்களை தெரியவில்லை அறிவித்த அடுத்த நாளிலேயே அப்படி ஒரு திட்டம் தற்போதைக்கு இல்லை என்கிறார் . ஆனால் போர் நடக்கும் போது பேசாத வடநாட்டு வாய்கள் சில இந்த கூட்டத்தொடரில் இலங்கைத் தமிழர்களுக்காக வருத்தப்பட்டிருக்கின்றன‌. இரு இனமே அழிக்கப்பட்ட போது வாயே திறக்காத அவர்கள் அனைவரும் இப்போது இலங்கை தமிழர்கள் குறித்து பேசியிருப்பது உயிரோடு இருப்பவன் தாகத்திற்கு தண்ணீர் கொடுக்காமல் அவனை கொன்றுவிட்டு அவனின் கல்லறையை அலங்கரியுங்கள் என்பது போன்று இருக்கிறது.

எவன் எக்கேடு கெட்டுப்போனாலும் வாரத்திற்கு நான்கு நாடுகளுக்குப் பயணம் என லீவ்லட்டரை அன்னையிடம் கொடுத்துவிட்டு பறந்து கொண்டிருக்கிறார் நமது பிரதமர். இலங்கை விசயத்தில் இந்தியா பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற நிலையை மாற்றிக்கொள்ள வாய்ப்பேயில்லை.

இந்தியா நல்ல நாடு தான், ஆனால் அதை ஆள்பவர்கள் தான் நல்லவர்கள் இல்லை என யாரோ சொன்ன வாசகம் தான் நினைவுக்கு வருகிறது.

already seen this

6 Response to "பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்"

  1. vasu balaji said...

    /இந்தியா நல்ல நாடு தான், ஆனால் அதை ஆள்பவர்கள் தான் நல்லவர்கள் இல்லை என யாரோ சொன்ன வாசகம் தான் நினைவுக்கு வருகிறது.//

    தேர்ந்தெடுக்கிறது நாமதானே நிஜாம்.

  2. ஷாகுல் said...

    //இந்தியா நல்ல நாடு தான், ஆனால் அதை ஆள்பவர்கள் தான் நல்லவர்கள் இல்லை என யாரோ சொன்ன வாசகம் தான் நினைவுக்கு வருகிறது//

    நிஜம் நிஜாம்

  3. அ.மு.செய்யது said...

    தினமலர்,திணமனி வெப்சைட்டெல்லாம் படிக்கவே தேவையில்லை.

    எல்லா செய்திகளும் சுடச்சுட நிஜாம் வலைதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் போல..நல்ல மொழிநடையோடு பதிவுகள் வருகின்றன.

    -------------------------
    இனிமே,வட இந்தியர்கள் ஈழத்தைப் பற்றி பேச வாயெடுத்தால் என்ன எடுக்காவிட்டால் என்ன ??

  4. நிஜாம் கான் said...

    //வானம்பாடிகள் said...
    /இந்தியா நல்ல நாடு தான், ஆனால் அதை ஆள்பவர்கள் தான் நல்லவர்கள் இல்லை என யாரோ சொன்ன வாசகம் தான் நினைவுக்கு வருகிறது.//

    தேர்ந்தெடுக்கிறது நாமதானே நிஜாம்.//

    அண்ணே! உண்மைதான் அண்ணே! கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றின்னே

  5. நிஜாம் கான் said...

    //ஷாகுல் said...
    //இந்தியா நல்ல நாடு தான், ஆனால் அதை ஆள்பவர்கள் தான் நல்லவர்கள் இல்லை என யாரோ சொன்ன வாசகம் தான் நினைவுக்கு வருகிறது//

    நிஜம் நிஜாம்//

    சாகுல்! இனி தெர்ந்தெடுக்கும் போது கவனம்! கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

  6. நிஜாம் கான் said...

    // அ.மு.செய்யது said...
    தினமலர்,திணமனி வெப்சைட்டெல்லாம் படிக்கவே தேவையில்லை.

    எல்லா செய்திகளும் சுடச்சுட நிஜாம் வலைதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் போல..நல்ல மொழிநடையோடு பதிவுகள் வருகின்றன.

    -------------------------
    இனிமே,வட இந்தியர்கள் ஈழத்தைப் பற்றி பேச வாயெடுத்தால் என்ன எடுக்காவிட்டால் என்ன ??//

    அய்ய‌ய்யோ செய்ய‌த்! தின‌மல‌ர் தின‌ம‌ணி வெப்சைட்டெல்லாம் அவ‌சிய‌ம் ப‌டிங்க‌. அங்கிருந்து தெரி ந்து கொள்ள‌ நிறைய‌ இருக்கிற‌து. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,