Dec 30, 2009

புத்தாண்டு இரவில் ஒரு கழுகுப்பார்வை பயணம்

நிஜாம் கான் @ 3:00 PM

இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களை விரட்டிவிட்டாலும் அவர்களின் பழக்க வழக்கங்கள் இன்னமும் நம்முடனேயே பிரிக்கமுடியாமல் முடங்கிவிட்டன. உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பது வெள்ளையன் நமக்கு கற்றுத்தந்ததாகும். அதேபோல அவனுடைய ஆங்கில மாதங்களை நம்மீது திணித்து அதையே உலகமயமாக்கிவிட்டதும் ஆச்சரியம் தான்.

இன்றைய பள்ளிகளில் தமிழ்மாதங்கள் என்ற ஒரு பாடத்தையையே எடுத்துவிட்டார்கள். அன்றைக்கு தந்தை பெரியார் முதல் இன்றைக்கு தலைவர் கலைஞர் வரை தை முதல் நாளை புத்தாண்டாக அறிவித்தாலும் பிரயோசனம் இல்லை. புதுவருடம் என்றாலே அது ஜனவரி 1 என ஆகிவிட்டது. சரி பரவாயில்லை. புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் நடக்கும் அனாசாரங்களும் ஆடம்பரங்களும் விபச்சாரங்களும் யார் கற்றுக்கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. இதிலே விபசாரத்திற்கு புத்தாண்டு சிறப்புத்தள்ளுபடி எல்லாம் அறிவித்து தூள் கிளப்புகிறார்கள் பெரிய ஹோட்டல் நிர்வாகிகள்.

சென்றவருடம் என் பத்திரிகை நண்பருடன் புத்தாண்டு மெரீனாபீச் சூட் எடுக்க இரவு ஒன்பது மணிக்கே சென்றுவிட்டோம். அங்கே இரவு ஒன்பது மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை கண்டகாட்சிகள் உண்மையிலேயே நாம் தமிழகத்தில் தான் வாழ்கிறோமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டது. புத்தாண்டு கொண்டாட்டங்களைப் பார்ப்பதற்காக அண்ணா சதுக்கம் தொடங்கி காந்தி பீச் வரை ஒரு நீண்ட நெடும்பயணத்தினை மேற்கொண்டோம். கூட்டமாகச் சென்றால் காரியம் கெட்டுவிடும் என்பதால் நாங்கள் இருவர் மட்டும் யாரிடமும் சொல்லாமல் கிளம்பிவிட்டோம் கையில் கேமிரா சகிதமாக‌.

சாதாரணமாகவே கொளுத்தும் வெயிலிலும் கொஞ்சிவிளையாடும் காதல் ஜோடிகள் (கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்கள் உட்பட) அந்த ரம்யமான இரவிலே தங்களின் பணிகளைத் தொடர்ந்து கொண்டு இருந்தார்கள். இந்தப் பெண்களை அவர்கள் வீட்டில் தேடமாட்டார்களா என நான் கேட்ட போது இவர்களில் சிலர் வெளியூர்களில் இருந்து வந்து விடுதிகளில் தங்கி படிக்கும் அல்லது வேலைபார்க்கும் பெண்கள், மீதியுள்ளது உள்ளூரிலேயே இருந்தும் கண்டிக்க ஆளில்லாத வகையைச் சார்ந்தது என்றான்..

நல்ல இதமான காற்றுடன் லேசான குளிரும் சேர்ந்து கொள்ள மெதுவாக நடக்க ஆரம்பித்தோம். ஒரு இடத்தில் ஒரு பெண் தலை நிறைய மல்லிப்பூவை வைத்துக்கொண்டு கையிலே வானிடி பேக் சகிதம் தனியாக‌ நின்று கொண்டிருந்தாள்.என் நண்பன் அவன் கேமிராவை தன் பைக்குள் வைத்து மறைத்துக்கொண்டான். அவள் அருகிலே சென்றோம். எங்களை ஏற இறங்கப்பார்த்தவள், சட்டென‌ ஹேப்பி நீயு இயர் சார் எனச்சொல்லி கைகொடுத்தாள். நாங்களும் கைகொடுத்தோம். நீயு இயர‌ நீங்க என்னோட செலிபிரேட் பண்ணலாம், ஜஸ்ட் தௌஸன்ட் ருபீஸ் தான், ரூம் எல்லாம் இருக்கு, அப்டின்னு சொன்னாள். நாங்கள் உசாராகி அங்கிருந்து நகர்ந்துவிட்டோம்.

அப்படியே பார்வையை சுழற்றினால் ஆங்காங்கே இது போன்ற மல்லிப்பூ அழகிகள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளுக்காக காத்து நிற்கும் ஆட்டோக்களைப் போல நின்று கொண்டிருந்தார்கள். அப்படியே சாலை அருகே வந்து ஒரு டீயைப் போட்டோம். அந்த சாலைக்கு அருகில் நிறைய இளம் பெண்கள் தங்கள் செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார்கள். சீக்கிரம் வாடா, வெயிட்பண்றேன் என சில வசனங்கள் லேசாகக் கேட்டது. டேய் மாமா! நீயும் நானும் மட்டுந்தான் இப்படி சுத்திக்கிட்டு இருக்கோம் என்று சொல்லி எங்களது பயணம் தொடர்ந்தது.

கொஞ்சதூரம் நகர்ந்தோம். அங்கே சில குடும்பங்கள் பெரிய துண்டு விரித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அருகிலே அமர்ந்தோம். அனேகமாக அவர்கள் கொஞ்சம் வசதியான குடும்பம் போலத் தெரிந்தது. குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அங்கே வெளிச்சம் கொஞ்சம் குறைவாகவே பட்டது. இந்த நாள்ல இப்படி குடும்பமா வரனுமாக்கும் என நினைப்பதற்குள் அவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் புறப்படத்தயாரானார்கள்.

என் நண்பன் தன்னுடைய கேமிராவைச் சுழற்றி படங்களை எடுக்க ஆரம்பித்தான். கொஞ்சதூரம் நடந்து சென்று ஓரிடத்தில் அமர்ந்தோம். எங்களுக்கு முன்னால் ஒரு ஜோடி யாரைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் அவர்கள் தங்கள் பணிகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள். சாலைகளில் வாகனங்கள் அணிவகுக்கத் தொடங்கியிருந்தன. இரு சக்கர வாகனங்களும், கார்களும் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டு அதில் வந்தவர்கள் அதிலேயே அமர்ந்து கொண்டார்கள். கடற்கரையை நோக்கி சிறப்புப் பேரூந்துகள் குவிந்து கொண்டிருந்தன. கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அப்படியே சென்று காந்திபீச் நிலையைப் பார்க்கலாம் என கிளம்பினோம்.

காந்தி பீச்சைப் பொருத்தவரை இது போன்ற கல்லீஜ் விசயங்கள் அங்கே குறைவு. கொஞ்சம் டீசண்டான அதிகபட்சம் பேமிலிகள் கூடுமிடம். இங்கிருந்து காந்தி பீச் எப்படியும் 500 மீட்டர் தூரம். இந்த 500 மீட்டர் இடைவெளி மிகவும் ஆபத்தான பகுதியாகும். இங்குதான் அனாச்சாரங்களின் உச்சமே அரங்கேறும். படகு மறைவுகள் இந்தப் பகுதியில் அதிகம்.சாதாரண நாட்களிலேயே இப்படியென்றால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சொல்லவே வேண்டாம்.

கொஞ்ச தூரம் நடந்ததும் அங்கே சில பெண்கள் எங்களை நோக்கி வந்தார்கள். அருகே வந்ததும் தான் தெரிந்தது அவர்கள் பெண்கள் அல்ல. டேய்! அதுவா நீயி என்ற ரீதியில் சிந்திக்கும் போது, வாங்க மாமா உக்காருங்க என்ற அவரிடம் எவ்வளவு என்றான் என் நண்பன், 50 ரூபாய் என்றது அந்த திருநங்கை. வேண்டாம் என நாங்கள் கிளம்ப அது கையைப் பிடித்து இழுத்தது. கையை உதறிவிட்டு காந்தி பீச் நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

காந்தி பீச்சில் அதிகபட்சம் குடும்பங்கள் அமர்ந்திருந்தன. குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன.அங்கே அவ்வளவாக ஆர்ப்பாட்டம் இல்லை. அதையும் தன் கேமிராவில் சுட்டுக்கொண்டான் நண்பன். அப்படியே சாலைப்பக்கம் ஏறி நடக்க ஆரம்பித்தோம். அந்த சுவர் ஓரங்களில் அப்போது தான் பயன்படுத்தப்பட்ட அடையாளத்துடன் ஆங்காங்கே டாஸ்மாக் பாட்டில்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. அங்கிருந்த கார்களில் கலர்கலராக ஜோடிகள் அமர்ந்திருந்தார்கள் (யாரோடு யாரோ யாரறிவாரோ?). அங்கேயிருந்து பழைய இடத்திற்கே வந்து குட்டிச்சுவரில் அமர்ந்து கொண்டோம். பேரூந்துகளில் அதிகபட்சம் மண்ணின் மைந்தர்கள் தொற்றிக்கொண்டு வந்தார்கள். அவர்கள் கீழே இறங்கி கத்திக்கொண்டும் ஆடிக்கொண்டும் வந்தார்கள்.

அவர்கள் கைகளில் பீர் பாட்டில்கள். மணி இப்போது 11.50. இன்னும் பத்து நிமிடங்களே இருக்கின்றன. கடற்கரையின் உட்புறச் சாலையில் மண்ணின் மைந்தர்களின் அட்டகாசங்கள் ஆரம்பமாயின. 12 மணியாகியதும் ஒரு பக்கத்தில் வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. நாங்கள் சுவரின் மீது ஏறி நின்று கொண்டோம். சாலையில் தன் நிலை மறந்து நின்ற இளைஞர்களும் மண்ணின் மைந்தர்களும் பீர்பாட்டிலை பீச்சியடிக்க ஆரம்பித்தார்கள். முடிந்தபிறகு அந்தக் காலி பாட்டிலை அருகேயிருந்த கல்லில் வீசி உடைத்தார்கள். எங்கு நோக்கினும் ஹேப்பி நியூ இயர் கோசங்கள். அப்போது தான் அந்த அசம்பாவிதம் நடந்தது.

அந்தப் பக்கமிருந்து ஸ்கூட்டியில் வந்த இரண்டு இளம்பெண்கள் இவர்களின் அருகிலே நிறுத்தி ஹேப்பி நியூ இயர் எனக் கத்திக் கையை நீட்ட அங்கே சுற்றி இருந்த பட்டாளம், தேன்கூட்டைத் தாக்கியவனை மொய்க்கும் தேனீக்கள் போல அந்தப் பெண்களை சுற்றி வளைத்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார்கள். அந்த நெருக்கடியில் யாராலும் எதுவுமே செய்ய இயலவில்லை. அந்தப் பெண்கள் கத்த ஆரம்பிக்க இதைப் பார்த்து அருகேயிருந்த காவலர்கள் ஓடிவர அப்போதும் கூட அவர்கள் விலகவில்லை. ஒரு வழியாக அவர்களை விலக்கி விட்டு அந்தப் பெண்களை மீட்டார்கள் அந்தக் காவலர்கள்.

உடை கசங்கி முகம் கசங்கி கோரமாய் நின்ற பெண்கள் இருவரும் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்கள். பூக்கடையில் அலங்காரமாய்த் தொங்கிக்கொண்டிருந்த ரோஜா மாலையைப் போல வந்த அந்தப்பெண்கள் சாவு ஊர்வலத்தில் வீசப்பட்டு மிதிபட்ட நாராய் திரும்பினார்கள். அப்போது அந்த வழியாக மாருதி1000 ல் வந்த ஒரு நபர் தலையை ஜன்னல் வழியே நீட்டி கையை அசைத்தபடி ஹேப்பி நியூ இயர் என கத்திக்கொண்டே வந்து கொண்டிருந்தார். காவல்துறையின் செய்கையால் கடுப்பாகிப்போய் நின்ற அந்த மன்ணின் மைந்தர்கள் பட்டாளம் அந்த காரை வழிமறித்து அவர்களும் கைகொடுக்க திடீரென்று ஒரு மண்ணின் மைந்தன் அருகே கிடந்த பெரிய பாறாங்கல்லைத் தூக்கி அந்தக் காரின் கண்ணாடி மீது போட்டு ஹேப்பி நியூ இயர் என கத்த, சில்லாய்ச் சிதறிப்போனது கண்ணாடி.

அந்த காரில் வந்த நபர் செய்வதறியாது வண்டியை நகர்த்திக்கொண்டு அந்த இடத்தைவிட்டுச் சென்றுவிட்டார். இதையெல்லாம் தன் கேமிராவில் விடாமல் எடுத்துக்கொண்டிருந்தான் என் நண்பன். இந்த சம்பவங்களையெல்லாம் நினைத்து அழுவதா சிரிப்பதா எனத் தெரியாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டோம்.

புத்தாண்டு கொண்டாட்டங்கள் இவ்வளவு கேவலமாக பொதுசொத்துக்களுக்கு சேதம் விளைவித்தும், பொதுமக்களை இடைஞ்சல் செய்தும் தான் கொண்டாடப் படுகிறது என்று தான் தீர்மானிக்கமுடிகிறது. புத்தாண்டு பிறக்கும் அந்த நேரத்தில் போதையுடனும் பேதையுடனும் இருந்தால் அந்த வருசம் பூரா வெளங்குமா என்று சம்மந்தப்பட்டவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

already seen this

6 Response to "புத்தாண்டு இரவில் ஒரு கழுகுப்பார்வை பயணம்"

  1. vasu balaji said...

    இந்தக் கேடு கெட்ட கலாச்சாரம் ஒரு புறம்னா இத எதிர்க்கிறோம்னு இன்னோரு கூட்டம் பண்ற அராஜகம் மறுபுறம். இந்த எழவெடுத்த கலாச்சாரத்தைக் கட்டிக் காக்க சட்டம் ஒழுங்கு காவல் துறை, போக்கு வரத்துத் துறைன்னு மக்கள் பணம் எவ்வளவு விரயம். அரசு அன்றைக்கு இரவு 11 முதல் 5 மணி வரை தடையுத்தரவு போட்டாலும் தப்பில்லை. மயிலே மயிலேன்னா இறகு போடாது.

  2. S.A. நவாஸுதீன் said...

    பாலா சார் சொன்னதை முழுமையா ஆமோதிக்கிறேன். பார்ட்டி என்ற பெயரில் கலாச்சார சீரழிவு மட்டுமல்ல கண்ணியத்தையும் இழக்கிறார்கள்.

  3. வால்பையன் said...

    வள்ளுவரு, கிறிஸ்டின்னு சொல்றாரு ஒரு அனானி என் பதிவில், அதை கொழுத்தி போட்டதும் பிரிட்டிஷ் ஆட்சியில தான்!

    பதிவை பற்றி என் கருத்து!

    சந்தோசமா இருக்குறது தப்பில்ல
    அடுத்தவங்களை சங்கட படுத்துறது தான் தப்பு!

    அத நீ சொல்றியாக்கும்னு வானம்பாடிகள் அய்யா சொல்றது கேக்குது!

  4. நிஜாம் கான் said...

    //வானம்பாடிகள் said...
    இந்தக் கேடு கெட்ட கலாச்சாரம் ஒரு புறம்னா இத எதிர்க்கிறோம்னு இன்னோரு கூட்டம் பண்ற அராஜகம் மறுபுறம். இந்த எழவெடுத்த கலாச்சாரத்தைக் கட்டிக் காக்க சட்டம் ஒழுங்கு காவல் துறை, போக்கு வரத்துத் துறைன்னு மக்கள் பணம் எவ்வளவு விரயம். அரசு அன்றைக்கு இரவு 11 முதல் 5 மணி வரை தடையுத்தரவு போட்டாலும் தப்பில்லை. மயிலே மயிலேன்னா இறகு போடாது.//

    ஆமாண்ணே! பொதுமக்களுக்கு இடைஞ்சல் செய்வதிலே இவர்களுக்கு தனிப்பிரியம்

  5. நிஜாம் கான் said...

    //S.A. நவாஸுதீன் said...
    பாலா சார் சொன்னதை முழுமையா ஆமோதிக்கிறேன். பார்ட்டி என்ற பெயரில் கலாச்சார சீரழிவு மட்டுமல்ல கண்ணியத்தையும் இழக்கிறார்கள்.//

    உண்மை நவாஸ். முற்றிலும் உண்மை

  6. நிஜாம் கான் said...

    //வால்பையன் said...
    வள்ளுவரு, கிறிஸ்டின்னு சொல்றாரு ஒரு அனானி என் பதிவில், அதை கொழுத்தி போட்டதும் பிரிட்டிஷ் ஆட்சியில தான்!

    பதிவை பற்றி என் கருத்து!

    சந்தோசமா இருக்குறது தப்பில்ல
    அடுத்தவங்களை சங்கட படுத்துறது தான் தப்பு!

    அத நீ சொல்றியாக்கும்னு வானம்பாடிகள் அய்யா சொல்றது கேக்குது!//

    வாலண்ணே! உங்க கருத்து உண்மையண்ணே! ஆனா வள்ளுவரு கிருஸ்டியன் கிடையாது. காரணம் அன்னையும் பிதாவும் குறலே உ.ம்.

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,