வேதனை தரும் டிசம்பர் 6:
வருடா வருடம் டிசம்பர் 6 வந்துவிட்டால் போதும் இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் காவல்துறையினர் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலையைக் கையாளத்துவங்கி விடுவார்கள். பேரூந்துகளிலும், ரயிலிலும் செல்லும் பயணிகளை சோதனை என்ற பெயரில் கசக்கிப் பிழிந்து விடுவார்கள். அதுமட்டுமின்றி அனைத்துக் கோவில்கள், ரயில்நிலையங்கள், பேரூந்து நிலையங்கள் என அனைத்திலும் கடும் பாதுகாப்பு. முன்னதாக ஊடங்களில் அறிவிப்பு. முன்னெச்சரிக்கை கைதுகள். திசம்பர் 6 ஏன்டா வருகிறது என அனைத்து தரப்பு மக்களும் வேதனையடையும் நிகழ்வுகள் கடந்த 17 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது.
அந்த நாளை பயந்து பயந்து கடக்க வேண்டிய கட்டாயத்தில் மக்கள் தள்ளப்பட்டு விட்டார்கள். முஸ்லீம் தீவிரவாதிகள் குண்டுவைத்து விடுவார்கள் என்று தொடர்ந்து பரப்பப்பட்ட செய்திகள் மக்களின் அடிமனதில் ஆழமாய்ப் பதிந்துவிட்டன.
மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் நடந்த கலவரங்களில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டனர். நல்லிணக்கமாக வாழ்ந்த இந்திய மக்களிடையே பிரிவினையைத் தூண்ட இந்த மசூதி இடிப்பு பெரிய காரணமாக இருந்தது.சகோதரர்களாய் வாழ்ந்தவர்கள் எதிரிகளைப் போலே மாற்றப்பட்டார்கள். இதெற்கெல்லாம் காரணமான அந்த பாபர் மசூதியைப் பற்றிய வரலாற்றினைத் தெரிந்து கொண்டால் இதற்குள் எவ்வளவு பெரிய பிரித்தாளும் சூழ்ச்சி ஒழிந்துள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

திட்டமிட்டு இடிக்கப்பட்டது மசூதி:
1992 ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி அன்றைய உ.பி அரசின் முதல்வர் கல்யாண்சிங் இல்லத்தில் நடைபெற்ற இரகசிய கூட்டத்தில் மறுநாள், 450 ஆண்டு பழமைவாய்ந்த அந்த மசூதியை தரைமட்டத்திற்கு ஆக்கிவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அன்றைய பிரதமர் நரசிம்மராவிடம் முழு ஒப்புதல் பெறப்படுகிறது. கடுமையான இரண்டு எதிர்கட்சிகள் உலக வரலாற்றில் முதன்முறையாக ஒன்றிணைந்தது இந்த விசயத்திற்காக மட்டும் தான். மறுநாள் டிசம்பர் 6. அன்றைய பாரதபிரதமர் நரசிம்மராவ் அவர்கள் கொடுத்த வாக்கின் படி காவல்துறை மற்றும் ரானுவத்தின் முழுபாதுகாப்போடு அந்த மசூதி இடித்து தரை மட்டமாக்கப்படுகிறது.
ராமர் கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதா?
இந்தியாவை ஆட்சி செய்த முகலாய மன்னன் பாபர் கட்டிய அந்த மசூதி ஏற்கனவே அங்கிருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டு கட்டப்பட்டது என்ற பிரசாரத்தோடு வெறியூட்டப்பட்டு அந்தப்பணி இனிதே நிறைவடைந்தது. வெள்ளையர்கள் நம் நாட்டை சுரண்டுகிறார்கள், நம்மை அடிமைகளாக்கி விட்டார்கள் என உணர்ந்த இந்திய தேசியவாதிகள் கிளர்தெழுந்து கடைசிவரை போராடி பீரங்கிகளையும், வெடிகுண்டுகளையும் எதிர்கொண்டு சுதந்திரம் பெற்றனர் என தெரிவிக்கும் வரலாறு, முகலாயர்களுக்கு எதிராக யாரும் போராட்டம் நடத்தியதாக தெரிவிக்கவில்லை.
இந்தியாவிலே இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதாக இன்றுவரை பிரிவினைவாதிகளால் சொல்லப்பட்டு வரும் அந்த மன்னர்களுக்கு எதிராக எவரும் போராட்டம் நடத்தியதாக சான்று இல்லை. அன்றைக்கு இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் ஊர் தோறும் கோயில்கள் கட்டுவதற்காக அன்பளிப்புகளை அள்ளி வழங்கினார்கள் என முகலாயர்களின் நல்லிணக்கம் பற்றி வரலாறு கூறுகிறது.

பாபர் எழுதிவைத்த பட்டயம்:
மிகமுக்கியமாக ராமர்கோவிலை இடித்து தரைமட்டமாக்கிவிட்டு அங்கே மசூதியை எழுப்பியதாகக் கூறப்படும் பாபர் தன் மகன் ஹூமாயினுக்கு எழுதியிருக்கும் ஓர் பட்டயம் இன்றுவரை இந்திய அரசின் தொல்லியல் துறையால் பாதுகாக்கப் படுகிறது. அதிலே கூறப்பட்டுள்ள வரிகளில் குறிப்பாக ஒருவரி "மகனே! நாம் ஆட்சி புரியும் இந்த நாடு பெறும்பான்மை இந்து மக்கள் வாழும் நாடு. அவர்கள் பசுவை தெய்வமாக வழிபடுகிறார்கள். எனவே நீ (பக்ரீத் அன்று) குர்பானி கொடுக்கும் போது பசுமாட்டை அறுப்பதைத் தவிர்த்துக் கொள்!" என அவர் எழுதிய அந்த பட்டயத்தின் வரிகள் சிலவருடங்களுக்கு முன்பு தினத்தந்தியில் தொடராக வெளியான வரலாற்றுச் சுவடுகள் பகுதியில் தெளிவாக இடம்பெற்றிருந்தது . இவ்வாறு நல்லிணக்கம் விரும்பும் ஒரு மன்னன் எவ்வாறு கோவிலை இடித்து அதன் மீது மசூதியை எழுப்பியிருப்பான் என்பதை நாம் சிந்தித்துப் பார்த்தாலே புரிந்து விடும். அப்படியே செய்திருந்தாலும் அன்றைக்கு இருந்த மக்கள் அவனை எதிர்த்து போராட்டங்கள் நடத்தியிருப்பார்கள். அது வரலாற்றிலே பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆக இந்த பிரசாரங்கள் முழுக்க முழுக்க சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வரும் மக்களிடம் மதவெறியைத் தூண்டி அதன் மூலம் தங்களை வளர்த்துக்கொள்ள விரும்பும் ஒரு கூட்டத்தின் செயல்பாடு.

முகலாய மன்னர்கள் மதவெறியர்களா?
இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் யாரும் முழுமையாக இஸ்லாமிய கொள்கைகளை கடைபிடிக்கவில்லை என அவர்களின் செயல்பாடுகள் குறிப்பிடுகின்றன. முகலாய சாம்ராஜ்ய மன்னர்களில் ஒருவர் கூட புனித ஹஜ் பயணம் மேற்கொண்டவர்கள் இல்லை என தெளிவான சான்றுகள் குறிப்பிடுகின்றன. பிறகு எப்படி அவர்கள் முழுமையான இஸ்லாமிய கொள்கைவாதிகளாக இருக்கமுடியும்? அதிலும் அவ்வழி வந்த அக்பர் ஒரு புதிய மதத்தையே தோற்றுவித்தார். இஸ்லாம் அறவே தடைசெய்த சமாதி கட்டுவதை ஷாஜகான் என்பவன் தன் செத்துப்போன காதலிக்காக அன்றைக்கே பலகோடியை வீண்விரயம் செய்து இழைத்து இழைத்து தாஜ்மஹால் என்னும் கல்லறைக் கட்டிடத்தை கட்டினான். ஆக இந்தியாவின் வளத்தை கொள்ளை அடிக்க எல்லோரையும் போல நுழைந்த முகலாயர்கள் தங்கள் உல்லாச வாழ்க்கையை தொடர விரும்பினார்களே தவிர அவர்களில் யாரும் மதத்தைப் பரப்புரை செய்யவில்லை. இந்தியாவை நீண்டகாலம் ஆட்சி செய்தவர்கள் முகலாயர்கள். அதுமட்டுமின்றி அகன்ற பாரதத்தை அமைத்து அனைத்தையும் அளந்து சர்வே செய்தவர்கள் முகலாயர்கள். அவர்கள் போட்டுவைத்த அந்த அளவை மேப் தான் இன்றைக்கும் இந்திய அரசால் பயன்படுத்தப்படுகிறது.
தூண்டப்படும் பிரிவினை:
ஆக நமக்குள்ளே எந்த பிரிவினையும் இல்லை. பிரிவினைகள் திட்டமிட்டு தூண்டப்படுகின்றன. அந்த நெருப்பிலே குளிர்காய்ந்து தங்கள் இயக்கங்களை இன்றுவரை வளர்த்து வரும் அந்த பிரிவினை பாசிஸ்டுகளின் இடிப்புப் பட்டியலில் பாபர் மசூதிமட்டும் இல்லை. காசி, மதுரா, துவாரகா, தொடங்கி குமரிவரை இருக்கும் 1800 க்கும் மேற்பட்ட மசூதிகளின் இடிப்புப் பட்டியல் அவர்களிடம் தயார் நிலையில் உள்ளது. இதற்கும் அதே காரணம் தான் வைத்திருக்கிறார்கள். 1949 வரை தொழுகை நடத்தப்பட்டு வந்த பாபர் மசூதியில் இரவோடு இரவாக சிலைகள் வைக்கப்பட்டது. மறுநாள் அந்த மசூதியின் நிர்வாகிகள் சார்பில் அருகில் இருந்த காவல்நிலையத்தில் அந்த வழக்கிலே சம்மந்தப்பட்ட ராமகிருஷ்ன பரஹம்சர் என்னும் சாமியார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவர் இப்போது உயிரோடு இல்லை.
இடத்தை விட்டுக் கொடுக்க முஸ்லீம்கள் எதிர்ப்பா?
பாபர் மசூதியின் இடத்தை விட்டுக் கொடுத்துவிட்டால் இந்திய முஸ்லீம்களுக்கு கௌரவம் போய்விடும், அதனால் தான் அந்த இடத்தை கொடுக்க மறுக்கிறார்கள் என நினைக்கலாம். இஸ்லாம் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் மட்டுமே போதிக்கிறது. எங்களுக்கு அந்த இடத்தை விட்டுக்கொடுப்பதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால் இதை ஒரு சோதனை ஓட்டமாக செய்துவிட்டு அடுத்த குறியுடன் காத்திருக்கும் பிரிவினை வாதிகளிடமிருந்து அவர்கள் பட்டியலிட்டுள்ள 1800க்கும் மேற்பட்ட மசூதிகளை காப்பாற்றுவது யார்? அதற்கு என்ன உத்தரவாதம்? அதுமட்டுமின்றி அவர்கள் பரப்பும் செய்திகளும் உண்மை என்று ஆகிவிடாதா? இந்தியா முழுவதிலும் உள்ள மசூதிகள் தூள் தூளாக நொறுக்கப்படாதா? அடுத்த மதத்தவரின் வழிபாட்டிலும் வழிபாட்டுத் தளத்திலும் தளத்திலும் யாருக்கும் எந்த உரிமையும் இல்லை என்ற இந்திய இறையாண்மை குழிதோண்டி புதைக்கப்பட்டு விடாதா?
நீதிமன்றத் தீர்ப்பை ஏற்பதே சிறந்தது:
ஆக நல்லதோ கெட்டதோ, சகோதரர்களிடையே சொத்து தகராறு என வந்துவிட்டது. இரண்டு சகோதரகளும் இருவருக்கும் பொதுவாக நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அந்த நீதி மன்றம் என்ன தீர்ப்பு கொடுத்தாலும் யாருக்கு ஆதரவாகத் தீர்ப்புக் கொடுத்தாலும் மனதார ஏற்றுக்கொள்வதே சிறந்தது. இதனால் யார் கௌரவமும் பாதித்துவிடாது. நாளைக்கு நம்ம வீட்டுல எதாவது நல்லது கெட்டதுன்னு வந்தா உங்கள விட்டுட்டு நாங்க செய்யப் போறது இல்ல. அது மாதிரி நீங்களும் எங்கள் விட்டுட்டு செய்யப்போறது இல்ல. அடுத்த வீட்டுல தீப்பிடித்தால் ஓடிவந்து அனைப்பவன் தான் மனிதன். ஒருவர் விபத்துக்குள்ளாகும் போது அவர் என்ன ஜாதி என்ன மதம் என்பதை யாருமே அந்த நிலையில் சிந்திக்காமல் உதவிசெய்ய ஓடிவரும் அந்த மனிதநேயம் அனைத்திலுமே வளர அனைவருமே முயற்சிப்போம். மதவாத சக்திகளின் பிரிவினைத் திட்டங்களை முறியடிப்போம்.


ஆணையமே 17 வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் அறிக்கை வந்திருக்கிறது.
இனி எப்போ விசாரனை ஆரம்பிச்சி எப்போ அவங்களுக்கு தண்டை வாங்கி கொடுக்க. ராமர் கோவில் கட்டுவத்ற்காக அத்வானியிடம் கொடுக்கப் பட்ட தங்க செங்கற்கள் எல்லாம் ஆபரணங்களாகிவிட்டன.
இவர்களின் நோக்கம் கோவில் கட்டுவதல்ல வேறு.
நடுநிலையான இடுகை நிஜாம் பாய்.
நேர்மையான, பக்க சார்பற்ற கருத்துக்கள். நானே நினைப்பதுண்டு. இனி வரும் நாட்காட்டிகளில் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினம் என்று போட்டுவிடுவார்களோ என்று.
// ஷாகுல் said...
ஆணையமே 17 வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் அறிக்கை வந்திருக்கிறது.
இனி எப்போ விசாரனை ஆரம்பிச்சி எப்போ அவங்களுக்கு தண்டை வாங்கி கொடுக்க. ராமர் கோவில் கட்டுவத்ற்காக அத்வானியிடம் கொடுக்கப் பட்ட தங்க செங்கற்கள் எல்லாம் ஆபரணங்களாகிவிட்டன.
இவர்களின் நோக்கம் கோவில் கட்டுவதல்ல வேறு.//
ஷாகுல்! இனி அவர்களுக்கு தண்டனை கொடுத்து என்ன கொடுக்காவிட்டால் என்ன? காலங்கடந்த தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதிக்கு சமம். இனியும் அவர்களை நம்பி நமது ஹிந்து சகோதரர்கள் மோசம் போகாமல் இருந்தாலே போதும். நாடு வளம்பெறும்.
//S.A. நவாஸுதீன் said...
நடுநிலையான இடுகை நிஜாம் பாய்.//
நன்றி நவாஸ்! உங்கள் ஆதரவிற்கும் வாக்கிற்கும்.
//வானம்பாடிகள் said...
நேர்மையான, பக்க சார்பற்ற கருத்துக்கள். நானே நினைப்பதுண்டு. இனி வரும் நாட்காட்டிகளில் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினம் என்று போட்டுவிடுவார்களோ என்று.//
அண்ணே! உங்களைப் போன்ற நடுநிலையாளர்களுக்கு புரிவது போல அனைவருக்கும் (ஹிந்துக்கள் மட்டுமல்ல முஸ்லீம்களுக்கும் தான்) புரிந்து விட்டால் போதும் நமது தேசம் அமைதிப்பூங்கா ஆகிவிடும். அந்த சூழ்ச்சிக்காரர்கள் மூட்டைகட்டிவிட வேண்டியது தான்.
இந்த இடுகைக்கு வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு நன்றிகள்.
அருமையான அனைவருக்கும் விளங்கும் வகையில் பதிவு
ஒரு பெரிய சபாஷ்..
bhai, unkala polave ellarum irunthuitta nalla irukkum. win tvya
pakkurappo enga madha kalavaram vanduthdumonu bayamairukku.