இராவணன் தன் தம்பி கும்பகர்ணன் இறந்த செய்திகேட்டு கடன்பட்டார் நெஞ்சம் போல துடித்து அழுதான் என்றும் அதுமட்டுமின்றி நிலமே அம்மியாக தானே குழவியாக தரையிலே உருண்டு புரண்டான் என்பதும் கம்பராமயணத்திலே நாம் படித்த செய்திகள் தான். அதுபோன்ற ஒரு கடன்செய்தியை சினிமா பக்கமே தலைவைத்திராத மக்கள் தொலைக்காட்சி நேற்று தலைப்புச் செய்தியாக போடு போடு எனப் போட்டுத் தாளித்து விட்டது. என்னடா செய்தி என்று அலசும் போது சில தகவல்கள் கிடைத்தன.
தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினி:
இதுவரை தன்னை கிராபிக்ஸ் டிசைனராக வெளிப்படுத்தியிருந்த ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினி சுல்தான் தி வாரியார் என்ற கிராபிக்ஸ் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக மாறுகிறார். ஆனால் அவர் ஒரு தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கிறார் என்பது நம்மில் சிலருக்கு தெரியாத செய்தி. சென்னை 28 மற்றும் சரோஜா படங்களை இயக்கிய வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் கோவா என்ற படத்தை சௌந்தர்யாவின் ஆக்கர் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு மதுரை,தேனி மற்றும் மலேசியாவின் முக்கிய சுற்றுலா தலமான லங்காவி தீவுகளில் படமாக்கப்பட்டு படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்துவருகின்றன.

ஆக்கருக்கே ஆக்கர் வைத்த வருண்:
இந்த நிலையில் நேற்றைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நந்தனத்தைச் சேர்ந்த பைனான்சியர் வருண் என்பவர், சௌந்தர்யா ரஜினிக்கு கடந்த 2007 ஆம் ஆண்டு ரூபாய் 1 கோடியே 60 லட்ச ரூபாயை இந்த கோவா படம் தயாரிக்க கடனாகக் கொடுத்ததாகவும் அதற்கு இன்றுவரை அசலோ வட்டியோ செலுத்தவில்லை எனவும், அதனால் ஆக்கர் ஸ்டூடியோ இயக்குனரான லதா ரஜினிகாந்திற்கு கடிதம் அனுப்பியதாகவும், அவர்கள் நவம்பர் 30க்குள் கடனை செலுத்திவிடுவதாகவும் ஆனால் அந்த தேதியில் தனக்கு அல்வா கொடுத்துவிட்டதால் கோவா படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டுமெனவும் மனுச்செய்துள்ளார்.
வட்டியே 80 லட்சம் ரூபாய்:
தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு படம் நடிப்பதற்கு 20 கோடி வரை வாங்குவதாக கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இந்த ஒரு கோடி என்பதெல்லாம் ரஜினிக்கு செருப்பு வாங்கும் காசு என நாம் நினைத்திருக்கும் போது எப்படி இந்த கடன்மேட்டர் என விசாரித்தால் வேறுவிதமாக தகவல் கிடைக்கிறது. அதாவது தன் தந்தையின் உதவியில்லாமல் தானே முழுக்க முழுக்க கடன்பணத்தில் இந்த படத்தை தயாரிக்கிறாராம் சௌந். அடுத்தவனிடம் கடன்வாங்கி அதற்கு வட்டி கட்டுவதை விட தந்தையிடம் காசுவாங்குவதை கௌரவ குறைச்சலாக எண்ணிவிட்டார் போலும். அந்த மேற்படி பைனான்சியர் வருடத்திற்கு 24% வட்டி என்று தன்வீட்டு கால்குலேட்டரில் விடிய விடிய கணக்குப் போட்டு பார்த்த வகையில் வட்டியே 80 லட்ச ரூபாய் வரை வந்து நிற்குதாம். இதப்பத்தி நமக்கு என்ன அக்கறை? ஆனால் நவம்பர் 30க்குள் திருப்பி செலுத்திவிடுவதாக வாக்குக்கொடுத்த லதாவின் சொல் இன்றைக்கு ரஜினிகாந்தின் மானத்தை இப்படி மக்கள் தொலைக்காட்சியில் வருமளவுக்கு நீதிமன்றத்தில் நிறுத்தியிருக்கிறது.

இரண்டாவது செய்தி:
நேற்று முன்தினம் காலையில் கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலைக்குச் செல்பவர்கள், இன்டர்வியூவிற்குச் செல்பவர்கள், விமானத்திற்குச் செல்பவர்கள் என அனைவரும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டனர். போக்குவரத்து அப்படியே ஸ்தம்பித்தது. என்ன காரணமெனில் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் ரஜினியின் எந்திரன் பட சூட்டிங் நடந்து கொண்டிருக்கின்றது. சென்னையைப் பொருத்தவரை பீக்ஹவர் என்பது காலை 7 முதல் 10 வரை. வேலைக்குச் செல்பவர்களும்,பள்ளிககுச் செல்லும் மாணவர்களும்,பார்க்கிலே படுத்து தூங்க இடம்பிடிக்கச் செல்பவர்களும், காலைக்காட்சிக்கு செல்பவர்களும், கட் அடித்துவிட்டு கடலை போடச் செல்பவர்களும் இந்த நேரத்தில் தான் கிளம்புவார்கள். இந்த நேரத்தில் இவர்கள் கொடுத்த சூட்டிங் இம்சை அந்தப் பகுதி மக்களை வெறுப்புக்குள்ளாக்கியது.

பிரைவேட் செக்யூரிட்டிகள்:
இந்த பீக் அவர் நேரத்தில் அவர்களுக்கு சூட்டிங் நடத்த எப்படி அனுமதி கொடுத்ததார்கள் என்பது பலரது கேள்வி. ஆனால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அனுமதி நள்ளிரவு 2.30 மணி முதல் காலை 7 மணிவரை மட்டும் தான் என அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2.30 மணிக்கே சூட்டிங் துவங்கிவிட்டாலும் ரஜினிகாந்த் 4 மணிக்குத்தான் வந்திருக்கிறார். இதனால் தாமதமாக, அனுமதியை நீட்டி முற்பகல் 12.30 வரை இழுத்துவிட்டார்களாம். இதைவிடக் கொடுமை என்னவெனில் அங்கே பாதுகாப்புக்கு நின்ற பிரைவேட் செக்யூரிட்டிகள் ஏதோ தங்களை போலீஸ் ரேஞ்சுக்கு நினைத்துக்கொண்டு அங்கே வேடிக்கை பார்த்த பொதுமக்களை விரட்டியிருக்கிறார்கள். அத்தோடு இந்த டிராபிக்கை படம்பிடிக்கச் சென்ற பத்திரிகையாளர்களை ஏதோ அவர்கள் சூட்டிங் ஸ்பாட்டைத் தான் படம்பிடிக்கிறார்கள் எனக் கருதி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர் அந்த செக்யூரிட்டிகள்.
ஆக பொதுமக்களுக்கு இடைஞ்சல் செய்வதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தன் இஷ்டம் போல செயல்பட்ட இயக்குனர் ஷங்கர் தனது பழைய படமான முதல்வனில் வரும் டிராபிக் ஜாம் காட்சிகளை ஒருமுறை திருப்பிப் பார்த்தால் நன்றாக இருக்கும். திரைப்படத்தில் மட்டும் தான் மெசேஜ் சொல்வோம், ஆனால் நிஜத்தில் எங்கள் இஷ்டம் போலத்தான் செய்வோம் என சொல்லித்திரியும் இவர்களை என்ன செய்வது?

ஆக இந்த இரண்டு செய்திகளிலும் ரஜினிகாந்த் நேரடியாக சம்மந்தப்படா விட்டாலும் இந்த இரண்டு சம்பவத்தையும் வைத்து கடந்த இரண்டு நாட்களாக ரஜினியை கிழி கிழி என கிழித்து விட்டார்கள்.


கண்ணு எதிரொலி இந்த லிங்க பாரு சும்மா
மனம்போன போக்கிலே எழுதாதே
http://hereisarun.blogspot.com/
அருமையான கற்பனை. தலைவரே! இந்த சம்பவம் நான் கேட்டு எழுதவில்லை.கண்டு எழுதியது. அதுக்கென்ன செய்ய உங்களைப்போன்ற ரசிகர்கள் இருக்கும் வரை சூப்பர் ஸ்டாரை யாராலும் அசைக்க இயலாது.
enna panna publicity venumunna rajiniya suththi thaan kummi adikkanum. ithula pathirikkaikku indhaalu petti kudukrathu illa athunaala namma ishtathukku pottalum onnum nadaakthunnu thaan indha pathirikkai ulagamum ada indha pathivulagammam ithula kooda otha vari newsla kood arajini pera thalaippa vaichi hit thedikuura cheapaana technique thaana.
enna panna publicity venumunna rajiniya suththi thaan kummi adikkanum. ithula pathirikkaikku indhaalu petti kudukrathu illa athunaala namma ishtathukku pottalum onnum nadaakthunnu thaan indha pathirikkai ulagamum ada indha pathivulagammam ithula kooda otha vari newsla kood arajini pera thalaippa vaichi hit thedikuura cheapaana technique thaana.
http://www.thenaali.com/thenaali.aspx?N=4391
தலைவா இந்த லிங்கை பாருங்க..,
திரு அணானி! இதிலே சீப்பான டெக்னிக் எதுவுமேயில்லை. நடந்த தவறை ஒப்புக்கொள்ள ஏன் இவ்வளவு மழுப்பல்கள். இதிலே ரஜினியை யாரும் குத்தம் சொல்லவில்லை, அந்த படப்பிடிப்பு குழுவினரை பற்றித்தான் எழுதப்பட்டுள்ளது. முழுசா படிச்சி பாருங்க அய்யா!
/ஆக இந்த இரண்டு செய்திகளிலும் ரஜினிகாந்த் நேரடியாக சம்மந்தப்படா விட்டாலும் இந்த இரண்டு சம்பவத்தையும் வைத்து கடந்த இரண்டு நாட்களாக ரஜினியை கிழி கிழி என கிழித்து விட்டார்கள்./
இதை விட நடு நிலைமையாக எப்படி எழுத முடியும். நல்ல இடுகை நிஜாம்.
கத்திப்பாரா Junction-ல் படப்பிடிப்பு நடத்த என்ன ஒரு திமிர் வேண்டும்? என்ன ஒரு அராஜகம்! இவர்களுக்கு யார் அந்த துணிவை கொடுத்தது? படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்தது பெரிய முட்டாள்தனம். இதில் ரஜினியின் பங்கு எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
ஒரு அநியாயத்தை எதிர்த்து கேள்வி கேட்டார் என்பதால் எல்லா அநியாயங்களையும் எதிர்க்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு என்று நினைக்கிறேன்.
--அன்வர்ஷா
/ஆக இந்த இரண்டு செய்திகளிலும் ரஜினிகாந்த் நேரடியாக சம்மந்தப்படா விட்டாலும் இந்த இரண்டு சம்பவத்தையும் வைத்து கடந்த இரண்டு நாட்களாக ரஜினியை கிழி கிழி என கிழித்து விட்டார்கள்./
இதை விட நடு நிலைமையாக எப்படி எழுத முடியும். நல்ல இடுகை நிஜாம்.
வானம்பாடிகள் பாலா சார் சொன்னதை ஆமோதிக்கிறேன்.
Please check the following link.
http://onlysuperstar.com/?p=5375
There was no trafic jam till 12.30.
regards
anand
Hai, that Day is SUNDAY. Then, how the school,college pupil affected?
mo
NO cinema shooting @ PUBLIC places !
கருத்து சொன்ன அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி
[B]NZBsRus.com[/B]
Dismiss Sluggish Downloads Using NZB Files You Can Quickly Find HD Movies, PC Games, MP3s, Applications and Download Them @ Blazing Rates
[URL=http://www.nzbsrus.com][B]NZB[/B][/URL]