எறும்புகள் தன் எடையைப் போல மூன்றுமடங்கு எடையை இழுத்துச் செல்லும் சக்தி கொண்டவை. அதற்கு அடுத்த படியாக நமது நர்சரி பள்ளிக்குழந்தைகள் தான். அவர்களின் எடை அதிகபட்சமாக 20 கிலோ இருக்கும். ஆனால் அவர்கள் தூக்கிச்செல்லும் புத்தகப் பையின் எடை 13 கிலோ என்றால் நம்புவீர்களா? உண்மை தான். இன்றைய நர்சரிப் பள்ளிகள் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு பச்சிளம் குழந்தைகளின் மீது புத்தகச்சுமையையும், பெற்றோர்கள் மீது பணச்சுமையையையும் ஏற்றிவிடுகிறார்கள். ஆனால் சில பள்ளிகளைத் தவிர்த்து மற்ற பள்ளிகளின் கல்வித்தரம் கொடுமையிலும் கொடுமை.

அட்மிசன் ஃபீஸ்,ஸ்பெசல் ஃபீஸ்,டியூசன் ஃபீஸ், அப்பறம் டிக்சனரி கொண்டு தேடவேண்டிய புரியாத எத்தனையோ ஃபீஸ் என கொள்ளையடிக்கிறார்கள் இந்தக் கும்பல்கள். எல்கேஜி படிக்கும் குழந்தைக்கு இருபது புத்தகங்கள், 40 நோட்டுக்கள் என அடுத்ததாக தங்களின் புத்தக வியாபாரத்தையும் ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்களிடம் தான் புத்தகம், நோட்டுக்கள் வாங்க வேண்டும் என்ற கட்டாயத்தையும் தினித்து விடுகிறார்கள். பென்சில் கூட பிடிக்கத் தெரியாத பச்சிளம் குழந்தைக்கு ஏன் இத்தனை புத்தகம் என்று கேட்டால், இப்பவே பழக்கினால் தான் அது பிற்காலத்திற்கு உதவும் என வியாக்கியானம் பேசுகிறார்கள் பள்ளி தாளாளர்கள் என்ற பசுத்தோல் போர்த்திய கல்வித்தொழிலதிபர் புலிகள்.

கொஞ்ச நாளைக்கு முன்பு ஒருநாள் நான் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த போது எங்கள் வீட்டுக் குட்டிப்பையன் என்னருகில் வந்தான். அவன் 3ம் வகுப்புத் தான் படிக்கிறான். மாமா..,மாமா.., எங்க மிஸ் ஹெர்பேரியம் தயாரிக்கச் சொன்னாங்க என்று அவன் சொன்னதைக் கேட்டு எனக்கு மயக்கமே வந்துவிட்டது. ஹெர்பேரியம் என்பது நான் 12ஆம் வகுப்பு படிக்கும் போது தாவரவியலில் வந்த செய்முறைப் பகுதி. அதாவது மூக்குத்திப்பூ,செம்பருத்தி, வாழைப்பூ என இன்னும் பெயர் தெரியாத தாவரவியல் குறுஞ்செடிகளைப் பறித்து பதப்படுத்தி அதை அட்டையில் ஒட்டி அதற்குரிய பண்புகளை எழுதவேண்டும். ஊர் ஊராக அலைந்து திரிந்து காடு மேடு சுற்றி அதை செய்து கொடுத்தால் அதற்கு 5 மதிப்பெண் கிடைக்கும். 12ம் வகுப்பில் ஓக்கே! ஒன்றாம் வகுப்புக்கு ஏன்டா ஹெர்பேரியம் எனக் கேட்டு அடுத்த நாள் அவனோடு அவன் பள்ளிக்குச் சென்றேன்.
மூன்றாம் வகுப்பு மிஸ்ஸை சந்திக்க வேண்டும் என அங்கிருந்த பதிவாளரிடம் சொல்லி அனுப்ப அவர் பிரின்சிபாலிடம் கேட்டு உள்ளே அழைத்துச் சென்றார். நான் பிரின்சிபாலிடம் இதைப்பற்றி பேசிவிட்டு மிஸ்ஸை சந்திக்க அனுமதி கேட்டேன். நீண்ட சிந்தனைக்குப் பிறகு 10 நிமிடம் மட்டும் அனுமதி கொடுத்து அந்த மிஸ்ஸிடம் அழைத்துச் செல்ல பதிவாளரிடம் சொன்னார். ஓய்வறையில் இருந்த அவரிடம் பரஸ்பரம் விசாரித்து மேற்படி மேட்டரைக் கேட்டேன். அவர் நல்ல முறையிலே பதில் கொடுத்தார். "நாங்க என்ன சார் பண்றது? சிலபஸ்ல இருக்குறத தான் செய்யச்சொல்றோம், நாங்களாவா செய்யச்சொல்றோம்?"என்ற அவரது பேச்சில் நியாயம் தெரிந்ததால் இனி இங்கு பேசி பயனில்லை என நன்றி கூறிவிட்டு விடைபெறும் போது அவரிடம் தயக்கமாக கேட்டேன்,"மிஸ், மே ஐ நோ யுவர் குவாலிஃபிகேசன்?", கொஞ்சம் என்னை முறைத்தவர் "பி.ஏ" என்றார். வெளங்கிரும் என மனசுக்குள் நினைத்தவாறே பிரின்சுக்கு ஒரு நன்றியைப் போட்டுவிட்டு ஹெர்பேரியம் தேட பக்கத்து கிராமம் நோக்கிச் செல்ல ஆரம்பித்தேன். அங்கு செடி தெரியாமல் பட்ட பாடு பெறும் பாடு.அது தனிக்கதை.

ஆக நான் 12ஆம் வகுப்பில் செய்த ஹெர்பேரியம் இன்றைக்குமூன்றாம் வகுப்பில் வந்து விட்டது. பத்தாம் வகுப்பில் மனப்பாடம் செய்ய முடியாமல் பிட்டு எழுதிச்சென்று எழுதிய ஆங்கில எஸ்ஸே (ESSAY) இன்றைக்கு மூன்றாம் வகுப்பில் இருக்கிறது. அடப்பாவிகளா! கல்வித்தரம் கல்வித்தரம் என்று சொல்லி பிஞ்சிக்குழந்தைகளை இப்படி போட்டு இம்சிக்கிறீர்களே! உங்கள் வியாபார நோக்கத்திற்காக புத்தகச்சுமைகளை இந்தப் பாலகர்கள் மீது ஏற்றிவிடுகிறீர்களே! என்ன நியாயம்?.

பலூன் மற்றும் சைக்கிள் டியூப்பில் அளவுக்கு மீறி காற்றை புகுத்தினால் அது தாங்காமல் வெடித்துவிடும். அதைப்போல விளையாடி மகிழ வேண்டிய குட்டீஸ்களின் பிஞ்சு உள்ளங்களின் அளவுக்கதிகமாக தினித்தால் அது மட்டும் தாங்குமா? எனக்கு ஒன்னே ஒன்னு புரியவில்லை. எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை செல்லும் குழந்தைகள் 12 முதல் 15 கிலோ புத்தகப்பையை தூக்கிச்செல்கின்றனர். ஆறாம் வகுப்பு முதல்12ஆம் வகுப்பு செல்லும் மாணவர்கள் 5 முதல் 8 கிலோ புத்தகப்பையை தூக்கிச்செல்கின்றனர். ஆனால் கல்லூரிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் அதிகபட்சம் ஒரே ஒரு நோட்டுப்புத்தகம் மட்டுமே எடுத்துச் செல்கின்றனர். இதுக்கு என்ன காரணம்?
நான் கல்லூரியில் படிக்கும் போது என் நண்பனிடம் கேட்டேன் ,
"ஏன்டா நீதான் எதுவுமே எழுதறது இல்லை, பின்ன ஏன்டா இந்த நோட்ட தூக்கிக்கிட்டு வர்றே?"
"பஸ்ல சீட்டுப் போடத்தான் மாப்ளே"
அம்மாவ அடிச்சிப்போட்டுட்டு அன்னையர் தினம்னு கொண்டாடுறான், பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பிட்டு முதியோர் தினம் கொண்டாடுறான்.., குழந்தைங்கள வேலைக்கு அனுப்பிட்டு குழந்தைகள் தினம் கொண்டாடுறான்.,என்னத்த சொல்லி என்னத்த பண்ண..,? குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.,
குழந்தைகள் தினம் இவங்களுக்கும் இருக்குதா?

கவிஞர் கிளாசுதாசன்:
எல்கேஜி சீட்டு வாங்க வீட்ட வித்தேன் பாரு,
மன்த்திலி ஃபீஸூ கட்ட மிச்சமிருக்கு காரு..,
எம்புள்ள படிச்சுப்புட்டு யு.எஸ் போவான் ஜோரு.,
கடைசியா நான் போகப் போற முதியோர் இல்ல நிருவாகி யாரு????


குழந்தைகள் தினத்தில் அவசியமான பதிவு. சொன்னாற்போல் சிலபஸ் ஒரு புறம், தகுதியற்ற ஆசிரியர் மறுபுறம், பிள்ளைகள்தான் பாவம்.
வானம்பாடிகள் said...
குழந்தைகள் தினத்தில் அவசியமான பதிவு. சொன்னாற்போல் சிலபஸ் ஒரு புறம், தகுதியற்ற ஆசிரியர் மறுபுறம், பிள்ளைகள்தான் பாவம்.
இதுவே என் கருத்தும்.
மிக நல்ல மற்றும் தேவையான இடுகை நவாஸ்.
படிப்பு, படிப்பு என்று சொல்லியே, இந்த காலத்தில் குழந்தைகளுக்கு தேவையான சிறு சிறு உடற்பயிற்சி கூட இல்லாமல் ஆகிவிட்டதுங்க.
கூடுதல் பாடத்திட்டங்கள், பொறுப்பற்ற ஆசிரியர்கள், நம்மக்களின் ஆங்கில மோகம் எல்லாம் சேர்ந்து இப்படி ஆகிவிட்டது.
ஒரு பக்கம் இப்படி, மறு பக்கம் குழந்தை தொழிலாளி...
ஹாட்ஸ் ஆஃப் நவாஸ்.. அண்ட் கீப் இட் அப்..
பலூன் மற்றும் சைக்கிள் டியூப்பில் அளவுக்கு மீறி காற்றை புகுத்தினால் அது தாங்காமல் வெடித்துவிடும். அதைப்போல விளையாடி மகிழ வேண்டிய குட்டீஸ்களின் பிஞ்சு உள்ளங்களின் அளவுக்கதிகமாக தினித்தால் அது மட்டும் தாங்குமா?
ஆர்.கே நாராயண் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது இந்த பிரச்சனையை எழுப்பினார் .சில நாட்களுக்கு அது செய்தியாகி ஓய்ந்தது தான் மிச்சம் .ஒரு டெர்ம் பாடங்களை ஒரே புத்தகத்தில் வைக்கும் முறையை சில இடங்களில் செயல்படுத்தியதாக கேள்வி. அது வெற்றி பெற்றதாக தெரியவில்லை .இப்போது பள்ளிகளில் வைக்க இடம் ஏற்பாடு செய்தால் இந்த பிரச்சனை தீரும் என்று சொல்கிறார்கள் .
நல்ல பதிவு . செய்தியை உரக்க சொல்லும் படங்கள்
நல்ல இடுகையாய் எதிரொலிக்கிகிறது
நிஜாம்
//கடைசியா நான் போகப் போற முதியோர் இல்ல நிருவாகி யாரு????//
அது நானில்லை
//வானம்பாடிகள் said...
குழந்தைகள் தினத்தில் அவசியமான பதிவு. சொன்னாற்போல் சிலபஸ் ஒரு புறம், தகுதியற்ற ஆசிரியர் மறுபுறம், பிள்ளைகள்தான் பாவம்.//
உண்மைதாண்ணே! யாருகிட்ட சொல்லி என்ன ஆவப்போவுது!
//S.A. நவாஸுதீன் said...
வானம்பாடிகள் said...
குழந்தைகள் தினத்தில் அவசியமான பதிவு. சொன்னாற்போல் சிலபஸ் ஒரு புறம், தகுதியற்ற ஆசிரியர் மறுபுறம், பிள்ளைகள்தான் பாவம்.
இதுவே என் கருத்தும்.//
கருத்துக்கும் வருகைக்கும் வாக்குக்கும் நன்றி நவாஸ்.
//இராகவன் நைஜிரியா said...
மிக நல்ல மற்றும் தேவையான இடுகை நவாஸ்.
படிப்பு, படிப்பு என்று சொல்லியே, இந்த காலத்தில் குழந்தைகளுக்கு தேவையான சிறு சிறு உடற்பயிற்சி கூட இல்லாமல் ஆகிவிட்டதுங்க.
கூடுதல் பாடத்திட்டங்கள், பொறுப்பற்ற ஆசிரியர்கள், நம்மக்களின் ஆங்கில மோகம் எல்லாம் சேர்ந்து இப்படி ஆகிவிட்டது.
ஒரு பக்கம் இப்படி, மறு பக்கம் குழந்தை தொழிலாளி...
ஹாட்ஸ் ஆஃப் நவாஸ்.. அண்ட் கீப் இட் அப்..//
அண்ணே! என்ன குழப்பம்? பாராட்டு எனக்கா நாவஸுக்கா? பரவாயில்ல. ஆளுக்கு பாதி எடுத்துக்கிறோம்.
//பூங்குழலி said...
ஆர்.கே நாராயண் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது இந்த பிரச்சனையை எழுப்பினார் .சில நாட்களுக்கு அது செய்தியாகி ஓய்ந்தது தான் மிச்சம் .ஒரு டெர்ம் பாடங்களை ஒரே புத்தகத்தில் வைக்கும் முறையை சில இடங்களில் செயல்படுத்தியதாக கேள்வி. அது வெற்றி பெற்றதாக தெரியவில்லை .இப்போது பள்ளிகளில் வைக்க இடம் ஏற்பாடு செய்தால் இந்த பிரச்சனை தீரும் என்று சொல்கிறார்கள் .
நல்ல பதிவு . செய்தியை உரக்க சொல்லும் படங்கள்//
அது தான் சரியான யோசனை. ஆனால் அதனால் பள்ளிகளுக்கு லாபம் கிடையாதே! மிக்க நன்றி பூங்குழலி. வருகைக்கும் கருத்துக்கும்.
//அன்புடன் மலிக்கா said...
நல்ல இடுகையாய் எதிரொலிக்கிகிறது
நிஜாம்
//கடைசியா நான் போகப் போற முதியோர் இல்ல நிருவாகி யாரு????//
அது நானில்லை//
நல்லது மலிக்கா. ஆமா நீங்க என்ன இப்ப முதியோர் இல்லமா வச்சிருக்கீங்க????ஹிஹிஹி
எங்கள் ஆசிரியர் என்னிடம் சொன்னார். "உனக்கு வரலாறு வராது. ஆங்கிலம் ஆகாது. புவியியல் புரியாது. தாய்மொழி தமிழே தடவல்" காப்பியடித்தாவது பாஸ் பண்ணிவிடுவேன். ஆனால் பாடப்புத்தகத்தின் மீது இருந்த அச்சம் என்க்கு பள்ளி எதிரியானது. இன்று என் பையனின் பாடப் புத்தகத்தை பார்த்தால் அன்று ஏற்பட்ட அதே அச்சம் ஏற்படுகிறது. ஆனாலும் நல்லா படிடா என்கிறேன்.