நம் தாய்நாட்டைத் தற்காலிகமாகத் துறந்து, சொந்தபந்தங்களை மறந்து எதிர்கால வாழ்க்கையின் தேவைக்காக 9 மாத கடும் வெயிலையும், 3 மாத கடும் குளிரையும் பாலைப்புழுதிப் புயலையும் சமாளிக்கும் வளைகுடா வாழ் நண்பர்களுக்கு ஒரு அறிவிப்பு. தற்காலிகமாக சொந்த நாட்டைப் பிரிந்து இருந்தாலும் அந்தக் குறையை அறவே போக்குவது நமது சொந்த மண்ணின் தொலைக்காட்சிகள் தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
நாலாயிரம் கிலோமீட்டர் தூரத்திலிருந்தாலும் அன்றைய செய்திகளை உடனுக்குடன் அனைத்துத் தொலைக்காட்சி சேனல்களின் சேவைகள் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது.கட்டணமின்றி வரும் இந்தத் தொலைக்காட்சி சேவைகளில் தேவையில்லாத நிறைய நிகழ்ச்சிகளைப் புறந்தள்ளிவிட்டு சமூக,அரசியல் நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்களே அதிகம். அந்த வகையில் முழுக்க முழுக்க சமூக,அரசியல் பிரச்சனைகளை அலசும் வின் தொலைக்காட்சியின் சில நிகழ்ச்சி நேரத்தின் மாறுதல்களை நாம் அறிந்துகொண்டால் அது உதவியாக இருக்கும் என்பதால் தான் இந்தப் பதிவு.
நீண்ட நாட்களாக தன் முன்னேற்றத்தில் பாடுபட்டு முயன்று வரும் வின்டிவி கடந்த காலங்களில் கடந்துவந்த பாதைகள் மிகவும் கடுமையானவை. மற்ற தொலைக்காட்சிகள் நமது தமிழகவாழ் தமிழ் மக்களைத் திருப்தி படுத்தினால் போதும் என நிகழ்ச்சிகளைப் படைத்துக்கொண்டிருக்கும் வேளையில் வின் டிவி மட்டும் வளைகுடா தமிழ்மக்களுக்கும் நிகழ்ச்சிகள் சென்று சேரவேண்டும் என்ற ரீதியில் தற்போது நிகழ்ச்சிகளை மாற்றியமைத்துள்ளது. இந்த மாற்றத்தில் எனக்கும் ஒரு சிறுபங்கு இருக்கிறது. இப்போது வின்டிவியில் குறிப்பிடத்தக்க சில நிகழ்ச்சிகளை பார்க்கலாம்.

நீதியின் குரல்:
வின்டிவி துவங்கப்பட்ட காலத்தில் இருந்து இன்றுவரை இந்த நீதியின் குரல் நேரலை நிகழ்ச்சி மிகப்பிரபலம். திரு.பாஸ்கரன் அவர்கள் வழங்கும் இந்த நிகழ்ச்சியில் அன்றாட சமூக அவலங்கள் தோலுரித்துக் காட்டப்படுகின்றன. ஒவ்வொரு நிகழ்வின் சாதக பாதகங்கள் சரியான நபர்களைக் கொண்டு விவாதிக்கப்படுகின்றது.. அதுமட்டுமின்றி சம்பந்தப்பட்ட அந்த துறைகளின் அதிகாரிகள், அமைச்சர்களைத் தொடர்புகொண்டு இதுகுறித்த விசயங்களை உடனுக்குடன் கருத்தும் கேட்கப்படுகிறது. பார்வையாளர்களும் கலந்துகொண்டு கருத்து சொல்லலாம். இது அனைத்துமே நேரலையில் நடப்பதால் நிகழ்ச்சி மிக சுவாரஸ்யமாகிறது. திங்கள்,புதன்,வெள்ளி ஆகிய மூன்று நாட்களும் இந்திய நேரம் காலை 11 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். முன்னர் இரவு 9 மணிக்கு மறுஒளிபரப்புச் செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி இப்போது இரவு 10.30 க்கு மறுஒளிபரப்பாகிறது. சவூதி,குவைத் நேரம் இரவு 8 முதல் 9 வரையும், துபாய் நேரம் இரவு 9 முதல் 10 வரையும் கண்டு பயன்பெறலாம்.

நீதிக்காக:
செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மேற்படி அதே நேரத்தில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி நீதிக்காக.. இந்த நிகழ்ச்சிக்கும் மேற்கண்ட நீதியின் குரலுக்கும் யாதொரு வித்தியாசமும் இல்லை.
வளைகுடா செய்திகள்:
உலக நடப்புகளை சிறப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி வளைகுடா செய்திகள். முழுக்க முழுக்க வெளிநாட்டு செய்திகளை விரும்பும் நபர்களுக்கென தினசரி இந்திய நேரம் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. சவூதி,குவைத் இரவு 7.30 க்கும், துபாய் நேரம் இரவு 8.30க்கும் ஒளிபரப்பாகும். உலகின் அன்றாட நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இது ஒரு பயனுள்ள நிகழ்ச்சியாகும்.
செய்திகளும் நிஜங்களும்:
ஒரு சேனலின் எந்த ஒரு நிகழ்ச்சியையும் காப்பியடித்து அதை ஒரிஜினல் நிகழ்ச்சியை விட பிரபலமாக்கிவிடுவதை நாம் காண்கிறோம். ஆனால் ஒரு நிகழ்ச்சியை இதுவரை யாராலும் காப்பிசெய்ய முடியவில்லை என்றால் இது இந்த செய்திகளும் நிஜங்களும் நிகழ்ச்சிதான். காரணம் அதை இன்றுவரை வழங்கிவரும் அரசியல் விமர்சகர் திரு டி.எஸ்.எஸ் மணி போல சுவாரஸ்யமாகக் கொடுப்பதற்கு மற்றவர்களால் முடியுமா என்பது நமக்குத்தெரியவில்லை. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இவரோடு சேர்ந்து திரு.ராஜா அவர்கள் நிகழ்ச்சியை வழங்கிக் கொண்டிருந்தார். பின்னர் எஸ்.எம் பாக்கர் இணைந்து வழங்கினார். இப்போது நீதியின் குரல் பாஸ்கரன் இணைந்து வழங்குகிறார். இவ்வளவு மாற்றங்கள் கண்டும் இந்நிகழ்ச்சி இதுவரை சுவாரஸ்யம் குறையாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்திய நேரம் காலை 8 மணிக்கும், மறுஒளிபரப்பு மதியம் 12.30க்கும் வந்துகொண்டிருக்கிறது.

அதாவது தமிழகத்தில் வெளியாகும் அனைத்துப் பத்திரிகைகளும் ஒவ்வொரு செய்திகளையும் எவ்வாறு வெளியிட்டிருக்கிறார்கள் என்பது பற்றியும் அந்த செய்திகளின் உண்மை நிலை பற்றியும் தெளிவாக விளக்கப்படுகின்றது. இதன்மூலம் நாம் அனைத்துப் பத்திரிகைகளின் சாராம்ச செய்திகள் மற்றும் முக்கியச்செய்திகளை அறிந்து கொள்ள இதுஒரு நல்ல வாய்ப்பாக இருக்கின்றது. இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி இலங்கையிலிருந்து ஒளிபரப்பாகும் டான் தமிழ்ஒளியில் ஒளிபரப்பாகிறது. அவர்கள் அங்கிருந்து வெளியாகும் வீரகேசரி,தினகரன் போன்ற தமிழ்பத்திரிகைகளிலும், சிங்கள பத்திரிகைகளில் இருந்தும் அரசஜால்ரா செய்திகளை மட்டும் அச்சுப்பிசகாமல் அலசுகின்றனர்.
வின்டிவியின் செய்திகளும் நிகழ்ச்சியை நான் ஆரம்பத்திலிருந்தே கண்டுவருகிறேன். ஆனால் வளைகுடா நேயர்களுக்கு இந்த நிகழ்ச்சியினை கானும் வாய்ப்பு சுத்தமாக இருக்காது. காரணம் வளைகுடா நாடுகளில் காலை 8 மணிக்கே அலுவலகம் துவங்கிவிடுவதால் இதை விடுமுறை நாளான வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே கானும் வாய்ப்பு இருந்தது.
என்னுடைய முயற்சி:
பல நண்பர்களும் இந்த நிகழ்ச்சியின் ரசிகர்களாக இருப்பது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அதனால் இதை வளைகுடா நேயர்களுக்கும் கொண்டு செல்ல முயற்சி எடுத்து வின்டிவியின் நிர்வாக இயக்குனர் திரு. தேவநாதன் அவர்களை தொடர்பு கொண்டு இந்த நிகழ்ச்சி குறித்து விளக்கினேன். இந்நிகழ்ச்சியை மீள்ஒளிபரப்பு செய்வதால் வளைகுடா நேயர்கள் பயன்பெறுவார்கள் என்றும் சொன்னேன். என்ன ஆச்சரியம், நான் பேசிய அதேநேரத்தில் அவரும் சில நிகழ்ச்சிகளை வளைகுடா நேரத்திற்கு மாற்றங்களைச் செய்ய இருப்பதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி உங்களுக்கு எந்த நேரத்தில் மேற்படி நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டும் எனவும் என்னிடம் கேட்டுக்கொண்டார்.
பிரைம் டயத்தை இப்போது இரவு 11.30 வரை நீட்டித்து விட்டதாலும் அதற்குப் பிறகு மீடியாவேல்ட் வழங்கும் இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சியும் நள்ளிரவு 12.30 க்கு செய்திகளும் ஒளிபரப்பாவதால் அதைத்தொடர்ந்து மேற்படி நிகழ்ச்சியை ஒளிபரப்பலாம் என்றும் ஆனாலும் அதற்கு முன்னதாக ஒளிபரப்பினால் நலம் என்றும் தெரிவித்தேன். பரிசீலிப்பதாகக் கூறியிருந்தார். நான் கூறியகருத்துக்களை மிகவும் பொருமையாக, தெளிவாக செவிமடித்தார். மிக்க நன்றி திரு. தேவநாதன்.
அதன்படி நேற்றுமுதல் நள்ளிரவு 1 மணிக்கு செய்திகளும் நிஜங்களும் மீள் ஒளிபரப்பாகிறது. இது ஒரு நல்ல நிகழ்ச்சி என்பதால் தான் இந்த இடுகையேயன்றி தனிப்பட்ட விளம்பரம் அல்ல. சவூதி மற்றும் குவைத் நண்பர்கள் இரவு 10.30 க்கும், துபாய் நண்பர்கள் இரவு 11.30க்கும் இந்நிகழ்ச்சியைக் காணலாம். வின்டிவியின் அலைவீச்சி இல்லாத மற்றைய நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் கவலை கொள்ளவேண்டாம். காரணம் வின்டிவியின் அனைத்து நிகழ்ச்சிகளும் உடனுக்குடன் வின்டிவி இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
நம் கோரிக்கையை பரிசீலித்து ஏற்றுக்கொண்ட வின்டிவி நிர்வாக இயக்குனர் திரு.திருவே தேவநாதன் அவர்களுக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


உண்மையை உரக்கச் சொல்லுங்க ...
தி இஸ் டூ மச்...
என்னை மாதிரி வேறு கண்டத்தில் இருப்பவர்கள் என்ன செய்வது...
இங்கு எங்களுக்கு, ஜெயா டிவியும், TBO மட்டும் தான் தெரியும்..
மற்றவங்களுக்கு உலகெங்குமுள்ள தமிழர்களில் நாங்க சேர்த்தி இல்ல போலிருக்கு..
என்ஞாய்..
http://blogintamil.blogspot.com/2009/11/blog-post_18.html
இன்று நீங்களும் இருக்கிறீர்கள்....பாருங்கள் !!!
பகிர்வுக்கு நன்றி நிஜாம்
நன்று!
மிக நல்ல பதிவு
நானும் வின் டிவியின் நீதியின் குரலை நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பேன்.
மேலும் நண்பர் நிஜாம்
விட்ஜெட்டில் குறள் வெளியிடுகிறீர்கள் மெத்த மகிழ்சி
அது குறலின் குரலாக உள்ளது
அதை குறளின் குரலாக மாற்றினால் நன்றாக இருக்கும்
நன்றி
இடத்
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
உண்மையை உரக்கச் சொல்லுங்க ...//
நன்றி ஸ்டார்ஜன். வருகைக்கும் கருத்துக்கும்.
தொடர்ந்து இணைந்திருங்கள்
//இராகவன் நைஜிரியா said...
தி இஸ் டூ மச்...
என்னை மாதிரி வேறு கண்டத்தில் இருப்பவர்கள் என்ன செய்வது...
இங்கு எங்களுக்கு, ஜெயா டிவியும், TBO மட்டும் தான் தெரியும்..
மற்றவங்களுக்கு உலகெங்குமுள்ள தமிழர்களில் நாங்க சேர்த்தி இல்ல போலிருக்கு..
என்ஞாய்..//
அண்ணே! இப்ப எல்லா டிவிக்களுக்கும் இணைய தளத்தில் நேரலையில் வருதே! அப்பறம் என்ன சின்னப்புள்ள மாதிரி அடம்புடிக்கிறீங்க. நீங்க அதிகமா ஜெயாடிவி பாத்து கெட்டுப்போயிட்டீங்க. அதுல அதிகமா மைனாரிட்டிங்கிற வார்த்தையத் தான் யூஸ் பண்ணுவாங்க. வின் டிவி லிங்க் கொடுத்திருக்கேன். பாருங்க.
//
அ.மு.செய்யது said...
http://blogintamil.blogspot.com/2009/11/blog-post_18.ஹ்ட்ம்ல்//
கண்டேன் செய்யத். பதிவுகள் அருமை. நம்மை நினைவு கூர்ந்ததற்கும் நன்றி
// S.A. நவாஸுதீன் said...
பகிர்வுக்கு நன்றி நிஜாம்//
வருகைக்கு நன்றி நவாஸ். தொடர்ந்து இணைந்திருங்கள்.
// வானம்பாடிகள் said...
நன்று!//
வருகைக்கு நன்றி அண்ணே. தொடர்ந்து இணைந்திருங்கள்.
// தங்கராசு நாகேந்திரன் said...
மிக நல்ல பதிவு
நானும் வின் டிவியின் நீதியின் குரலை நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பேன்.//
நல்லது நண்பரே! வருகைக்கு நன்றி.
//மேலும் நண்பர் நிஜாம்
விட்ஜெட்டில் குறள் வெளியிடுகிறீர்கள் மெத்த மகிழ்சி
அது குறலின் குரலாக உள்ளது
அதை குறளின் குரலாக மாற்றினால் நன்றாக இருக்கும்
நன்றி//
மாற்றினால் நன்றாக இருக்கும் என்பதை விட மாற்றியே ஆகவேண்டும் என்று சொல்லுங்கள். இந்தப்பிழை இவ்வளவு நாள் கவனிக்கப்படாதது கண்டு வருந்துகிறேன். நன்றி நண்பரே!
வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.