Nov 23, 2009

ஹாரிபாட்டரும் விஜய T. ராஜேந்தரும்

— நிஜாம் கான் @ 1:44 AM

ஸ்வீட்***காரம்***காபி***23/11/2009

ஆனந்தம்:

தமிழகத்திலே வாழும் புலம்பெயர் இலங்கை தமிழ்மாணவர்களுக்கு அஞ்சல் வழியில் மட்டும் இலவசக் கல்வி என சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதே அறிவிப்பை அனைத்துப் பல்கலைக்கழகங்களும் வெளியிட்டால் நல்லாயிருக்குமே! ஆனால் இந்த வாய்ப்பை எந்த அளவில் அந்த மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. அய்யா ஊடகவியலாளர்களே! தயவுசெய்து "அகதி" என்ற சொல்லை மாற்றுங்களய்யா.

சோகம்:

தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு வரும் தமிழக மீனவர்கள் கடந்த21ம் தேதி மீனவர் தினத்தை கருப்புதினமாக அனுசரித்தார்கள். 21ம் தேதி யாரும் கடலுக்குச் செல்லக்கூடாது எனவும் சொல்லியிருந்தனர். ஆனால் அதையும் மீறி21ம் தேதி கடலுக்குச் சென்ற இராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களுக்கு "மீனவர் தின சிறப்பு தாக்குதலை" நடத்தி அனுப்பியிருக்கிறது இலங்கை ராணுவம்.

ஆர்ப்பாட்டம்:

தொடர்ந்து ஆர்ப்பாட்ட அசைன்மெண்ட்களை ரத்தத்தின் ரத்தங்களுக்கு அள்ளித்தெளிக்கும் அம்மா மழை காரணமாக ஹோம் ஒர்க் எதுவுமே கொடுக்காததால் அனைவரும் நிம்மதியாக ஓய்வெடுத்து வருகிறார்கள். அடுத்த ஆர்ப்பாட்டம் எப்போ என காத்திருக்கும் ஜால்ராக்கள் பேனர் வாசகங்களை இப்போதே தயார் செய்து வருகிறார்களாம். நம்மைக் கவர்ந்த பழைய பேனர் வாசகம் ஒன்று. "மைனாரிட்டி இல்லா கருணாநிதியே உனக்கு மெச்சூரிட்டியும் இல்லையா" இதைக் கேட்டு தலைவரே சிரித்தாராம்.

அதிர்ச்சி:

தீவிரவாதி டேவிட் ஹெட்லி விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க புலனாய்வுத்துறை தகவல் கொடுக்கும் அளவுக்கு இந்திய "ரா" லாலிபாப் சாப்பிட்டுக் கொண்டிருந்ததா எனத் தெரியவில்லை. இந்த நிலையில் மும்பை தாக்குதலுக்கு உதவி செய்த இரண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் இத்தாலியில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் துருவினால் மும்பை தாக்குதலின் போது கொல்லப்பட்ட உயரதிகாரி ஹேமந்த் கார்கரே மரணம் குறித்தும் தெளிவுகிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் குண்டு துளைக்காத ஆடை அணிந்திருந்த ஹேமந்தை எப்படி குண்டு துளைத்தது என சந்தேகமடைந்த அவரது மனைவி, அவர் இறந்த போது அணிந்திருந்த சேப்டி உடையை பார்க்க வேன்டும் என தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேட்க,அதற்கு அந்த மருத்துவமனை நிர்வாகம் அந்த உடை தொலைந்து போய் விட்டது, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் என மிகக் கூலாக ஒரு பதிலைக் கொடுத்திருக்கிறது.

விவகாரம்:

சீனாவுக்கு வந்த நவீன நாரதர் ஒபாமா இந்திய**பாக் பிரச்சனை குறித்து பேச கடுப்பான இந்தியா உங்க வேலய மட்டும் பாருங்கடா என்க, டர்ரான இரண்டு பேரும் சரி சரின்னு ஒப்புக்கு ஓக்கே சொல்ல, இப்ப ஒபாமா கொளுத்திப்போட்ட திரியால கஷ்மீர் (பிரிவினை) ஹூரியத் தலைவருக்கு அழைப்பு விடுத்துள்ளது சீனா. இதே ஹூரியத் தலைவரை கொஞ்ச நாட்களுக்கு முன்பு நம்ம உள்தொற அமைச்சர் ரகசியமா மீட் பண்ணுனதா ஒரு தகவலும் லீக் ஆயிருக்கு.இளிச்சிக்கிட்டு நின்னானாம் சின்னப்புள்ள ஏறி மிதிச்சானாம் தவசிப்புள்ள.

கண்டனம்:

வெந்த புண்ணில் வெடியை வைத்த கதையாக ஏற்கனவே அடிஉதை வாங்கும் மீனவர்களுக்கு போனசாக‌, இனிமேல் 12 கடல்மைலைத் தாண்டி மீன்பிடிக்கச் சென்றால் 9 லட்ச ரூவாய் (ரொம்ப கம்மி) அபராதமும், தவறினால் 3 வருட சிறையும் 40 கசையடியும் கொடுக்கப்பட்டு சிறப்பிக்கப்படுவார்கள் என மத்திய அரசு இயற்றியுள்ள‌ புதிய சட்டம் எல்லாருக்கும் பெருமகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. இதை எதிர்த்து தமிழக அரசும்,பல அமைப்புகளும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளன. அவன் ஏன்டா அடிக்கிறான்னு கேட்டா, நீ ஏன்டா அடிவாங்குறேன்னு திருப்பிக் கேக்குற மாதிரி இருக்கு இது. பாரத சமுதாயம் வாழ்கவே!

பூரி(ஆ)ப்பு :

திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய தொகுதிகளில் அஇஅதிமுக (மட்டும்)போட்டியிடும் என அன்பு சகோதரி, தன் உடன்பிறவா சகோதரர் வைகோவுக்கு SMSஅனுப்ப, இது போதாதா என பூரிப்படைந்த புயல்தலைவர் தங்கள் தொண்டர்கள்,வரும் இடைத்தேர்தலில் இடையறாது பாடுபடுவார்கள் என இடியாய் முழங்கிவிட்டார். ஏர் ஓட்டுறவன் இளிச்சவாயனா இருந்தா மாடு மச்சான்னு கூப்பிடுமாம்.

நகைச்சுவை:

ராஜினாமா செய்த உனக்கு அரசு வீடு ஒரு கேடா, மரியாதையா வர்ற ஞாயிற்றுக்கிழமைக்குள்ள காலி பண்ணிடு இல்லைன்னா உன்னய காலி பண்ணிடுவோம் என பொன்சேகாவுக்கு மஹிந்தா ஓலை அனுப்ப, அவசர அவசரமாக வீடு தேடினார் பொன்சேகா. அவனுக்கு எவனாவது வீடு குடுத்தீங்கன்னா உங்கள இந்த ஊர விட்டு 14 வருசம் தள்ளிவச்சிடுவோம் என நாட்டாமை விடுத்த அறைகூவலால் டரியலான சிங்களவர்கள், வீடுகேட்டு வரும் பொன்சேகாவிடம் எங்க வீட்ல தண்ணி வராது, லைட்டு எரியாது,வாஸ்த்துப்பிரகாரம் பாத்ரூமே கிடையாது என ஆளாளுக்கு நொண்டிச் சாக்கு சொல்ல வேறு வழியில்லாமல் நடுத்தெருவில் நிற்கிறார் பொன்சேகா. தமிழர்கள் அடைபட்டிருக்கும் முள்வேலி முகாம்களில் ஏதாவது கூடாரம் காலியா கெடக்குதா எனத் தேடிவருகிறாராம். தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு.

இங்க பார்ரா:

இந்த ஒரு மாதத்தில் மட்டும் 1,065 ரூபாய் ஏற்றம் கண்டுள்ளது தங்கம் விலை. வழக்கமாக பழைய தங்கத்தை விற்றுவிட்டு புதிய தங்கம் வாங்குவார்கள். ஆனால் தங்கம் விலை ஏறிக்கொண்டே இருப்பதால் யாரும் இப்போது பழைய தங்கத்தை விற்பதில்லை. புதிய தங்கம் மட்டுமே விற்பனையாவதால் டிமாண்டு அதிகமாகிஇன்னும் விலை ஏறும் என விற்பனையாளர்கள் அறிவித்துள்ளனர். அநேகமாக 8கிராம் தங்கம் 25 ஆயிரம் வரை எட்ட வாய்ப்பு இருக்கிறதாம். நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ள இந்த விலை ஏற்ற விவகாரம், இந்திய விவசாயிகளுக்கு மட்டும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. காரணம் அவர்களின் நகைகள் எல்லாம் வங்கிகளில் அடகு வைக்கப்பட்டிருப்பதால் இனி அதிக காசு கிடைக்கும் என்ற நப்பாசை தான். மாடு சாகுதே என அதன் உரிமையாளர் அழுக,தோல் கிடைக்கப் போகுதே என மேளக்காரன் சிரிச்சானாம்.

என்னக்க் கொடும சார் இது?:

ஆந்திர மாநிலம் சித்தூரில் ஒரு ரேசன்கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்த ஒருவரின் ரேசன்கார்டை சோதித்த போது அது காந்தி பெயரில் காந்தி படத்தோடு இருந்ததாம். விட்டா காந்திக்கு பாஸ்போர்ட்டே எடுத்துருவாய்ங்கே!

சினிமா சினிமா:

சக்கரக்கட்டி இனிக்காமல் போனதால் தன்மகன் சாந்தனுவை எப்படியாவது மேலே ஏத்திவிட வேண்டும் என அப்பா பாக்யராஜ் வேட்டிய மடிச்சிக் கட்டிக்கொண்டு,தனது பழைய படமான சுவரில்லாத சித்திரங்களை தூசிதட்டி ரீமேக் ‍செய்யப் போகிறாராம். ஆயிரம் விளக்கு படத்திற்கு பிறகு இந்தப் படத்தில் நடிக்கப் போகிறாராம் சாந்தனு. ஏற்கனவே பாரிஜாதம் படத்துல செஞ்ச மிஸ்டேக்க இதுல வராம பாத்துக்கப் போறாராம் திரைக்கதை ஜாம்பவான்.

கிசுகிசு கார்னர்:

தாடிக்கார இயக்குனருடன் செட்டிலாகிவிட்ட நடிகை இனி யாருடனும் நெருங்கி நடிக்க மாட்டேன் என தாடிக்காரருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம். இப்போது வட்டாரம் நடிகருடன் சோடி போட்டு வரும் இந்த தாயி அப்படி நடிக்கமாட்டேன், இப்படி நடிக்கமாட்டேன் என ஏக கண்டிசன்களை அள்ளிப்போடுதாம். இதனால கடுப்பான யூனிட் ஆளுங்க, இது இனிமே தேராத கேசு. அடிமாட்டுக்கு கேரளாக்கு ஏத்திட வேண்டியது தான் அப்டின்னு பேசிக்கிறாங்களாம். இந்த விசயத்த கேள்விப்பட்ட குருவி நடிக, எதுக்கு வேணுமினால் நான் ரெடி, எப்படி வேணுமினாலும் நான் ரெடி, வாங்க சார், புக் பண்ணுங்க சார், பத்து ரூவா தான் என வாசல்ல நின்னு கத்தாத குறையா தூது அனுப்பி வருதாம். அண்ணன் எப்ப சாவான் திண்ண எப்ப காலியாகும்னு தவம் கெடந்தானாம் எவனோ ஒருத்தன்.

காரணமாகு பெயர்:

வெண்ணிற ஆடை படத்தில் நடித்ததால் வெண்ணிற ஆடை மூர்த்தியும்,வெண்ணிற ஆடை நிர்மலாவும் அந்தப் பெயருடனே இன்று வரை அழைக்கப்படுகிறார்கள். ஆனால் இன்றைக்கும் வெ.ஆ.மூர்த்திக்கு இரட்டை அர்த்த வசனங்களை யார் எழுதித் தொலைக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

கானொலி கார்னர்:

ஹாரிபாட்டர் படத்தில் நம்ம அண்ணன் விஜய டி ராஜேந்தரும், புரட்சிக்கலைஞரும் நடிச்சிருந்தாங்கன்னா எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும்.

தத்துவம் தங்கராசு:
அவசரத்துக்குப் பாத்தா அட்டுப்பிகர் கூட ஐஸ்வர்யாராயி தான்,
அதக் கரெக்ட் பண்ண பிறகு ஐஸ்வர்யாராயி கூட அட்டுப்பிகர் தான்.
“குறலும் வெளக்கமும்” பகுதி சில நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நிறுத்தப்பட்டது..
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா..,
already seen this

7 Response to "ஹாரிபாட்டரும் விஜய T. ராஜேந்தரும்"

  1. ஹுஸைனம்மா said...

    நான்கு பழமொழிகள் தெரிந்து கொண்டேன். நன்றி.

  2. S.A. நவாஸுதீன் said...

    செம இண்ட்ரெஸ்டிங்கா எழுதி இருக்கீங்க நிஜாம்

  3. கிரி said...

    நிஜாம் ரொம்ப நல்லா எழுதறீங்க! படிக்க சுவாராசியமா இருக்கு. பாராட்டுக்கள்.

  4. நிஜாம் கான் said...

    //ஹுஸைனம்மா said...
    நான்கு பழமொழிகள் தெரிந்து கொண்டேன். நன்றி.//


    நன்றி ஹூசைனம்மா! கற்றுக்கொண்டதோடு கற்றும் கொடுங்கள்.

  5. நிஜாம் கான் said...

    // S.A. நவாஸுதீன் said...
    செம இண்ட்ரெஸ்டிங்கா எழுதி இருக்கீங்க நிஜாம்//

    நன்றி நவாஸ். தொடர்ந்து வாங்க.

  6. நிஜாம் கான் said...

    // கிரி said...
    நிஜாம் ரொம்ப நல்லா எழுதறீங்க! படிக்க சுவாராசியமா இருக்கு. பாராட்டுக்கள்.//

    நன்றி கிரி சார். வருகைக்கும் கருத்துக்கும். தொடர்ந்து இணைந்திருங்கள்.

  7. புலிப்படை said...

    WWW.Tamilaruvy.com wach tamil dvd hq movies 1 on net visit now www.tamilaruvy.com or www.aruvymovies.com

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,