Nov 12, 2009

DAM’999 - ஒரு சிறப்புக் "கண்"ணோட்டம்

நிஜாம் கான் @ 3:17 PM
பொதுவாக 999 என்பது ஆபத்து அல்லது அவசரத்துக்கு பயன்படுத்தும் எண் என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும். மலேசியா மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகளில் 999 என்பது காவல்துறையைக் குறிக்கும். அநேகமாக 999 என்பது உலகளவில் காவல்துறை அல்லது அவசரநிலையை பிரகடணப்படுத்தப் பயன்படும் குறியீடு ஆகும். சில பேய் படங்களில் இந்த 999 ஐ நாம் கண்டிருப்போம். சாத்தான் அல்லது ஆவியின் தலையில் மூன்று ஆணிகள் அடிக்கப்பட்டிருக்கும் அதன் அருகில் 999 என எழுதப்பட்டிருக்கும். ஆக 999 என்று சொன்னாலே அது ஆபத்து அல்லது முன்னெச்சரிக்கையைத் தான் குறிக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்..

இதே 999 ஐ பயன்படுத்தி மளையாளக் கரையில் இருந்து புறப்பட்டிருக்கும் ஒரு பிரம்மாண்டமான ஹாலிவுட் திரைப்படம் தான் டேம் 999. இந்த திரைப்படத்தை இயக்கயிருப்பவர் ஸோகன் ராய் என்ற மளையாள இயக்குனர். துபாய் வாழ் கேரளத் தொழிலதிபரான இந்த சேட்டன் தன்னுடைய சேட்டைகளை டேம்999 வடிவில் தருவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு அதற்கான மாதிரி படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை வெளியிட்டு அசத்திவிட்டார். ஏற்கனவே மளையாளத்தில் இரண்டு திரைப்படங்களை இயக்கிய இவர் இப்போது ஹாலிவுட் அவதாரம் எடுத்திருக்கிறார் இந்த டேம் 999 மூலமாக. மளையாளத்தின் சிறந்த நடிகரான திலகனும் கூட இந்தப்படத்தில் இருக்கிறார் என்பது கொசுறுத்தகவல்..

என்ன கதை?

100 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட ஒரு பழைய மிக பிரம்மாண்டமான அணையை மையமாக வைத்துத் தான் கதையே.. அந்த அணை மிகவும் பழசாகிவிட்டது.இந்த அணையில் விரிசல் விழுந்திருக்கிறது. இந்த அணைக்கு முன்புபோல தற்போது நீர்மட்டத்தை தாங்கும் சக்தி இல்லை. எனவே அது விரைவில் உடைந்துவிடும். அதனால் அதை சுற்றி வசிப்பவர்களுக்கு பேராபத்து நேரிடும் என பலமுறை உளவுத்துறை மூலம் அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுகிறது. ஆனால் அதைப் பற்றி துளியும் கண்டுகொள்ளாமலிருக்கிறது அரசு. விடுக்கப்பட்ட எச்சரிக்கை ஒரு நாள் உண்மையாகிறது. அந்த அணைக்குள்ளே ஒழிந்திருக்கும் அபாயம் வெடிவைத்து தகர்த்தது போல உடைந்து அதன் தண்ணீர் மிகப்பிரம்மாண்ட ஆழிப்பேரலை வெள்ளமாக மாறி அந்த சுற்றுப்புறத்தையே அழித்து பெரிய அளவில் உயிர்சேதத்தையும் பொருட்சேதத்தையும் உண்டாக்குகிறது.

இந்தக் கதையை நாம் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குல்ல என நீங்கள் அதிகமாக யோசிக்க வேண்டாம். இது தமிழன் தலையில் மொளகாய் அரைக்கும் அதே முல்லைப்பெரியாறு அணையின் கதையைத் தான் இப்படி ஆவிபறக்க ரெடிபண்ண முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார் பிட்டு (குழாய்ப் பிட்டு) ஊரின் கோடீஸ்வர விசுவாசி..முல்லைப்பெரியாறு பிரச்சனையில் நமக்கு தண்ணி காட்டும் கேரளா நாட்டைச் சேர்ந்த ஒருவர் இப்போது தண்ணீரை வைத்து நமக்குப் படம் காட்ட இருக்கிறார்.. நம்மாள் வெறும் போராட்டம் மட்டுமே நடத்த முடியும், அது தவிர ஒன்றுமே செய்ய இயலாது என்பதையும், நாங்கதான் படிச்சி படிச்சி சொன்னோம்ல அணையில் விரிசல் இருக்கு அதனால் அது உடைந்துவிடும் எனவும், யாருடா கேட்டீங்க? இது தான் இறுதியில் நடக்கும் என்பது போலவும் அந்த திரைப்படத்தின் துவக்கவிழாவில் வெளியிடப்பட்ட வால்பேப்பர் படங்களும், கிராபிக்ஸ் செய்யப்பட்ட வீடியோ காட்சிகளும் நமக்கு திகிலை ஏற்படுத்துகின்றன.

படம் எப்படி வருமோ தெரியாது ஆனா டிரைலரை மட்டும் மிக அழகா யோசிச்சி சூப்பரா வெளியிட்டுக்கானுங்க. என்ன தான் எதிரிக்காரன் படமா இருந்தாலும் டிரைலர் மிக அருமையா வந்திருக்கிறதை நாம் சொல்லாமல் இருக்க முடியாது. 2010 ல் இந்த திரைப்படம் வெளிவருமாம். (அதற்குள்ள அணைய கட்டிருவானுங்களோ!)

9 கேரக்டர்கள்,9 ரசனைகள் என துவக்கத்தில் சொல்கிறார்கள். ஆனால் நாம் சொல்வது 9 கேரக்டர்கள், 9 ரசனைகள் ஓக்கே ஆனால் ஒரே ஆப்பு.., அது எங்களுக்குத்தான்...உங்கள் அறையின் விளக்குகளை அணைத்துவிடுங்கள். உங்களிடம் ஹெட்போன் இருக்கிறதா? வால்யூமை முழுமையாக வைத்துக கொண்டு உங்களின் முழு கவணத்தையும் இதிலே செலுத்துங்கள். இதன் பிரம்மாண்டத்தை உணர்வீர்கள்.

கவிஞர் கிளாசுதாசன்:

விரிசலாகிப் போச்சிங்கிறான் டேமு..,

அவனே வச்சி அடிச்சிடுவான் பாமு..,

என்னிக்குமே இளிச்சவாயன் நாமு..,

தமிழன் வெளங்கமாட்டான் கடைசிவர மாமு..,

already seen this

2 Response to "DAM’999 - ஒரு சிறப்புக் "கண்"ணோட்டம்"

  1. vasu balaji said...

    /சாத்தான் அல்லது ஆவியின் தலையில் மூன்று ஆணிகள் அடிக்கப்பட்டிருக்கும் அதன் அருகில் 999 என எழுதப்பட்டிருக்கும். /

    அது 666 தானே. ஓமன் படத்தில வருமே.

    கவித டாப்பு.

  2. நிஜாம் கான் said...

    //வானம்பாடிகள் said...
    /சாத்தான் அல்லது ஆவியின் தலையில் மூன்று ஆணிகள் அடிக்கப்பட்டிருக்கும் அதன் அருகில் 999 என எழுதப்பட்டிருக்கும். /

    அது 666 தானே. ஓமன் படத்தில வருமே.

    கவித டாப்பு.//

    அண்ணே! 999 ஆ 666 ன்னு சரியா ஞாபகம் இல்லணே! சுட்டிக்காட்டியதற்கு நன்றிண்ணே!

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,