Nov 6, 2009

காதல் கொலை ‍- சம்பந்தமே இல்லாத கதை

— நிஜாம் கான் @ 6:49 PM

புதன்கிழமை இரவு 12 மணி

நிசப்தமான இரவில் அந்த மொட்டை மாடியின் மீது நிலவின் வெளிச்சத்தில் இருந்த அந்த இருவரும் கலக்கமாய் அமர்ந்திருந்தார்கள்.

"டேய் இனிமே நான் உயிர்வாழ்ந்து என்னடா பிரயோஜனம், நாளைக்கு பத்மாவுக்கு கல்யாணம். என்கூட பழகுனதயெல்லாம் ஏதோ கனவு மாதிரி நெனச்சி பத்திரிகைய என் மூஞ்சில வீசி எறிஞ்சிட்டு போயிட்டாடா" ஹாப் பிராந்தி பாட்டிலின் அடிப்ப‌குதியை த‌ட்டி மூடியைத் திருகிய‌வாறு சொன்னான் சம்பத் என்கிற‌ சம்பந்தம். அருகே கலவைக்கு தண்ணீர் பாட்டில், தற்கொலைக்காக எடுத்து வந்த பூச்சிமருந்து பாட்டில், மிக்சர் மற்றும் ஊருகாய்.

"அதுக்காக நீ ஏன்டா தற்கொலை பண்ணிக்கனும் முட்டாள்.நான் தான் அப்ப‌வே சொன்னேன்ல‌ இந்த‌ப் பொம்ப‌ளைங்க‌ளே இப்ப‌டித்தான் ந‌ம்பாத‌ன்னு, கேட்டியாடா நீ, இப்ப‌ அனுப‌வி" எரிச்ச‌லாய் ப‌தில‌ளித்தான் சுரேஷ்.

"இல்ல மாமா அவள உயிருக்குயிரா லவ் பண்ணேன். அவ இல்லாம என்னால வாழ முடியாது, அதே நேரம் அவளையும் வாழவிட மாட்டேன்"

"டேய் தற்கொலை முடிவு கோழைத்தனம். அவ எப்படியோ தொலஞ்சி போறா, நீ ஏன்டா உன் வாழ்க்கைய பாழாக்கிகிற, பேசாம விட்டுத்தள்ளு".

"இல்ல‌டா நான் அவ‌ள் விடுற‌தா இல்ல‌. நாளைக்கு காலைல தான் அவ கல்யாணம்.. காலை வரைக்கும் டைம் இருக்கு. என்ன‌ செய்ய‌லாம்? அதுக்குத்தான் உன்ன‌க் கூட்டி வ‌ந்திருக்கேன் ந‌ல்ல‌ ஐடியாவா சொல்லு" கேட்ட‌வாறு க‌ல‌வை போட்ட‌ கிளாஸை சுரேஷிட‌ம் நீட்டினான்.

அதை வாங்கிய‌ சுரேஷ் ஒரே மூச்சில் காலி செய்துவிட்டு ஒருமுறை க‌ணைத்துக்கொண்டான். ப‌க்க‌த்தில் இருந்த‌ மிக்ச‌ர் பொட்ட‌ல‌த்தை உடைத்து அதை அப்ப‌டியே வாயில் கொட்டிவிட்டு, வில்ல‌த்த‌ன‌மான‌ ஒரு பார்வையுட‌ன் சம்பந்தத்தின் அருகே வ‌ந்து அவ‌ன் காத‌ருகே சொன்னான்,

"அப்படின்னா அவ‌ளைப் போட்டுத்த‌ள்ளிட‌லாம்"

"என்ன‌து கொலையா, வேண்டாம்டா, கொலை ப‌ண்ற‌ அள‌வுக்கு என‌க்கு தைரிய‌ம் கிடையாது. வேற‌ ஏதாவது சொல்லு" நடுக்கத்துடன் கையில் இருந்த சரக்கை ஒரே மூச்சில் வாயில் ஊற்றிக்கொண்டான்.

"இல்ல‌டா ஏமாத்துற‌ பொம்ப‌ளைங்க‌ளுக்கெல்லாம் ஒரே முடிவு சாவு தான். ஒருத்திக்கி பாட‌ம் குடுத்தாதான் அடுத்த‌வ‌ளும் திருந்துவா"

ஒரு சிகெரெட்டைப் பத்தவைத்தவாறு சொன்ன சுரேஷை பயத்தோடு நெருங்கிய சம்பந்தம்

"கொலை பண்ணிட்டு தப்பிக்கிறது அவ்வளவு ஈசியில்ல. எப்படியும் போலீஸில மாட்டிக்கிவோம்."

" பிளான் பெயிலியர் ஆனாத்தானே மாட்டிக்கிவோம்? நான் போடுற பிளான் நிச்சயமா பெயிலியர் ஆவாது. நாளைக்கு காலைல எத்தன மணிக்கு கல்யாணம்?"

"காலைல ஏழரை டு பத்தரை முகூர்த்தம்"

"எந்த மண்டபம்"

"சந்திரா விலாஸ்"

"நாளைக்கு காலைல 5 மணிக்கு நாம ரெண்டு பேரும் மண்டபத்துக்குள்ள நுழஞ்சிருவோம். சமயக்கட்டுக்குப் போனோம்னா அங்கே காபி தயாரா இருக்கும். எப்படியும் காலை வேலைல வேலையாட்கள் கம்மியாத்தான் இருப்பாங்க. நாம ரெண்டு பேரும் காபி தட்ட எடுத்துக்கிட்டு ஒவ்வொரு அறைக்கா கொடுக்கற மாதிரி மணமகள் அறைக்கும் போவோம். அங்கே அனேகமா எல்லாரும் தூக்கக் கலக்கத்துல தான் இருப்பாங்க.உள்ளே போனதும் மயக்க மருந்து ஸ்பிரேய அந்த ரூம் பூரா அடிச்சோமுன்னா எல்லாரும் மயக்க நெலைக்கி போயிடுவாங்க. அரைமயக்கத்தில இருக்கற பத்மாவைப் பரலோகம் அனுப்பிட்டு நாம ஒன்னுமே தெரியாத மாதிரி கெளம்பி வந்திரலாம். எப்படி என் ஐடியா?"

"சூப்பர் ஐடியா மாமே! இதக்கேட்டதும் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. நாளைக்கு எல்லா டிவிலயும் அவதான் பிளாஸ் நியூஸா ஓடப்போறா.., ஹா.., ஹா.., ஹா.., வா மாமே அடுத்த ரவுண்டு போடலாம்"

சொல்லியவாறு அடுத்த ஹாப் பிராந்தி பாட்டிலைத் திறந்து இருவர் கிளாசிலும் ஊற்றினான். அரை மயக்கம்,போதை, அரை இருட்டு என மூன்றும் சேர்ந்து கொள்ள தண்ணீர் பாட்டிலை எடுக்க கைய நீட்டியவன் தவறுதலாக அந்த பாட்டிலை எடுத்தான்.

"மாமா உண்மையிலே நீ தான்டா உயிர் நண்பன், எனக்காக அவளை கொலை செய்யவும் தயாராயிட்டியே" சொல்லியவாறு கலவையை அவனிடம் நீட்ட இருவரும் இரண்டாவது ரவுண்டை இன்பமாக ஆரம்பித்தார்கள்.

வியாழக்கிழமை காலை 6 மணி;

சந்திரவிலாஸ் கல்யாண மண்டபம்.

இரவு முழுக்க தூக்கமில்லாமல் புரண்டு படுத்து அதிகாலையில் தூங்கி இப்போது எரிச்சலோடு எழுந்தாள் பத்மப்பிரியா. பிரஸில் பேஸ்ட்டைப் பிதுக்கி வைத்துக் கொண்டு அரைத்தூக்கமாய் நின்றாள்.

"இன்னும் என்னடி பண்ற, சீக்கிரம் குளிச்சிட்டு வா, முகூர்த்தத்துக்கு நாளிகை ஆயிக்கிட்டிருக்கு"

சொல்லியவாறே ஒரு மாமி பரபரப்பாய் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தாள்.

பெட்டியைத் திறந்து டர்க்கி டவலை எடுத்தவாறு பாத்ரூம் நோக்கிச் சென்றாள். முன்னதாக கட்டிலருகே நின்று அங்கிருந்த டிவியை ஆன் செய்து சேன‌ல்க‌ளை மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

திடீரென‌ அந்த‌ நீயூஸ் சேன‌லை பார்க்க‌ அங்கே ப‌ட‌க்காட்சிக‌ளுட‌ன் செய்தி ஓடிக்கொண்டிருந்த‌து.

"மொட்டை மாடியில் இரு வாலிப‌ர்க‌ள் விச‌ம் குடித்து த‌ற்கொலை, கார‌ண‌ம் என்ன‌ போலீஸ் விசார‌னை"

இதைப் பார்த்து அதிர்ந்த‌ ப‌த்மா சேன‌லை மாற்றாம‌ல் அப்ப‌டியே நின்று கொண்டிருந்தாள்.

"ஏன்டி! நான் காட்டுக்கத்து கத்திண்டிருக்கேன்..,இப்ப‌ டிவி ஒரு கேடா, போயி சீக்கிர‌ம் குளிச்சிட்டு வாடி" அதே மாமி.

டிவியை அனைத்த‌வாறு குழப்பத்தோடு பாத்ரூம் நோககி நடந்தாள் . ஆனால் அவ‌ளுக்கு ஒன்னே ஒன்னு புரிய‌வில்லை.

"இவ‌ன் செத்தான் ஓக்கே…, அவ‌ன் ஏன் செத்தான்?"

இந்தக் கேள்வி பத்மாவின் மனதில் மாறி மாறி ஓட சிந்தனையுடன் ஹீட்டர் சுவிட்சை ஆன் செய்து 100 சதவிகித முழுமையான குளியலை முடித்தாள். குளித்து முடித்து ஹீட்டரை ஆப் செய்ய மீண்டும் சுவிட்சில் அந்த ஈரக் கையை வைக்க, பத்மா மீது திடீர் காதல் கொண்ட அந்த சுவிட்ச் அவளைப் பிடித்து வொய்ங்..,வொய்ங்..,வொய்ங் என‌ இழுக்க ஆரம்பித்தது.

"இவ‌ன் செத்தான் ஓக்கே…, அவ‌ன் ஏன் செத்தான்?"

கேள்விகள் மீண்டும் மீண்டும் எழ சுவிட்சில் இருந்து கையை எடுக்க முடியாமல் பத்மாவின் விழிகள் மேற்கூரையை நோக்கி நிலைகுத்தியது..

already seen this

8 Response to "காதல் கொலை ‍- சம்பந்தமே இல்லாத கதை"

  1. vasu balaji said...

    என்னா டெர்ரரு யப்பே. சொன்ன விதம் சூப்பரு.நல்ல ட்விஸ்ட்

  2. S.A. நவாஸுதீன் said...

    வானம்பாடிகள் said...
    என்னா டெர்ரரு யப்பே. சொன்ன விதம் சூப்பரு.நல்ல ட்விஸ்ட்

    அதே அதே

  3. நிஜாம் கான் said...

    //வானம்பாடிகள் said...
    என்னா டெர்ரரு யப்பே. சொன்ன விதம் சூப்பரு.நல்ல ட்விஸ்ட்//

    கருத்துக்கு நன்றிண்ணே.. சொல்லப்போனா இத ஒரு காதல் கதையா எழுதனும்னு தான் ஆரம்பிச்சேன். அது திரில்லரா மாறிடிச்சி.

  4. நிஜாம் கான் said...

    // S.A. நவாஸுதீன் said...
    வானம்பாடிகள் said...
    என்னா டெர்ரரு யப்பே. சொன்ன விதம் சூப்பரு.நல்ல ட்விஸ்ட்

    அதே அதே//

    நன்றி நவாஸ் தொடர்ந்து இணைந்திருங்கள்.

  5. நிஜாம் கான் said...

    தமிழிஷ்,தமிழ்10,தமிழ்மணம் என அனைத்திலும் வாக்களித்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி

  6. Anonymous said...

    short and super script

  7. Admin said...

    கதை சொன்ன விதம் அருமை

  8. நிஜாம் கான் said...

    நன்றி அனானி, நன்றி சந்துரு. தொடர்ந்து இணைந்திருங்கள்.

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,