சமீபத்தில் ஒரு இஸ்லாமிய அமைப்பு நடத்திய மாநாட்டில் முஸ்லீம்கள் வந்தேமாதரம் பாடலைப்பாட தடைவிதிக்கப்பட்டது. உடனே வீறுகொண்டெழுந்த இந்தியாவின் தேசபகதர்கள் என்ற போர்வையில் உலவும் பிரிவினைக்கூட்டம் கடும் கண்டனங்களைத் தெரிவித்தது. வந்தேமாதரம் பாடாதவர்கள் தேசவிரோத சக்திகள் என அறிவித்தது. வலைப்பூக்களில் அதிகபட்சமாக இதைப்பற்றிய விவாதம் நடைபெறவில்லை. இஸ்லாமியர்களை தேசவிரோதிகளாக மீண்டும் மீண்டும் சித்தரிக்க மனது வரவில்லையோ என்னவோ பலபதிவர்களும் இதைக்கண்டு கொள்ளவில்லை. ஆனால் காலங்காலமாக இஸ்லாமின் மீதும் இஸ்லாமியர்களின் மீதும் சேற்றை வாரி இறைத்து மகிழ்ச்சியடையும் இட்லிவடை மட்டும் மிக அழகாக ஒரு தலைப்பைப் போட்டு இஸ்லாமியர்களின் மீதுள்ள வெறியைத் தீர்த்துக்கொண்டார் அந்த முகமூடி பதிவர்.

வந்தேமாதரமும் தீவிர(வி)வாதமும் என மிக அழகாக தலைப்பைக் கொடுத்து மீண்டும் முஸ்லீம்கள் தீவிரவாதிகள் என நிறுபித்து மகிழ்ச்சியடைந்துள்ளார். காலங்காலமாக இஸ்லாத்தைப் பற்றி கொச்சைப்படுத்தி எழுதிவரும் இந்த இட்லிவடை இந்திய வகுப்புவாத வெறியர்களான காவிக்குழுமத்தைச் சேர்ந்தவர் என்பதிலே எந்தவொரு ஐயமும் இல்லை. இவருக்கு இஸ்லாம் மீது காட்டம் என்பது இயற்கையே! ஆனால் இலங்கையில் செத்துமடியும் அந்த ஈனப்பிறவிகள் மீது அப்படியென்ன காட்டம் இட்லிவடைக்கு? ரசாயண குண்டுகளை வீசி கொத்துக்கொத்தாக தமிழர்களை கொலை என செய்தி வந்ததபோது அதற்கு மாற்றமாக பிரபாகரனால் கொலை செய்யப்பட்டவர்களின் பட்டியல் என ஒரு பட்டியலை வெளியிட்டு மகிழ்ச்சியடைந்தது இட்லிவடை. இதற்கு என்ன காரணம்? இலங்கைத் தமிழர்களும் வந்தேமாதரம் பாடமாட்டோம் என்று சொன்னார்களா?
வந்தேமாதரம் தேசபக்திப் தேசபக்திப் பாடலா? ஆனால் அது பாடப்பட்ட அன்றைய காலத்திலேயே எதிர்ப்பைச் சம்பாதித்து இருக்கிறது. அன்றைக்கு சுதந்திர போராட்டத்தில் காங்கிரஸ் ஈடுபட்டிருந்த போது வந்தேமாதரம் பாடப்பட்டது. ஆனால் இதன் வரிகள் இஸ்லாமிய கொள்கைக்கு எதிராக இருப்பதாக அன்றைய முஸ்லீம்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனவே இதற்கு மாற்றாக அன்றைய கவிஞர் இக்பால் அவர்கள் "ஜாரே ஜகாசே அச்சா, இந்துஸ்தான் ஹமாரா" என்ற பாடலை எழுதினார். இது எந்த மதத்தையும் சாராமல் இந்திய தேசத்தை உயர்த்திப் பிடிப்பதாக இருந்ததால் இதை அனைவருமே ஏற்றுக்கொண்டனர். ஆனால் அன்றைக்கே துவங்கிவிட்ட வகுப்புவாதிகளின் ஆதிக்கம் வந்தேமாதரத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

பின்னர் இந்த வழக்கு நீதிமன்றத்தை அடைந்தது. இந்திய மண்ணை காளியாக, துர்க்கையாக வணங்க வேண்டும் என வந்தேமாதரம் பொருள் தருகிற இந்தப் பாடலை இஸ்லாமியர்கள் தரப்பில் பாடமாட்டோம் என வைக்கப்பட்ட வாதத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்த நீதிமன்றம் இந்தப்பாடலை பாடுமாறு யாரையும் வற்புறுத்த இயலாது என தீர்ப்பளித்ததது. அதன் பின்னரே வங்காளக் கவிஞர் தாகூர் அவர்கள் எழுதிய ஜன கன மன தேசியகீதமாக்கப்பட்டது. அன்றைக்கு இந்த வந்தேமாதரத்தை எவ்வளவோ முயற்சித்தும் கூட தேசியகீதமாக்க முடியவில்லை. அத்தோடு அந்தப் பிரச்சினை கிடப்பில் போடப்பட்டது.ஆனால் வகுப்புவாதிகள் அதை விடுவதாக இல்லை. இப்போது அதுமீண்டும் கிளரப்பட்டு இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக்க மறுமுயற்சி நடைபெறுகிறது.
சில வருடங்களுக்கு முன்பு ஏ.ஆர் ரகுமானால் வந்தேமாதரம் ஆல்பமாக வெளியிடப்பட்டு பிரபலமடைந்தது. ஆனால் ரகுமான் செய்கிறார் என்பதற்காக ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் செய்யமுடியாது. காரணம் ரகுமான் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் பிரதிநிதி அல்ல. இஸ்லாமியர்கள் இறைவன் ஒருவனே என்ற கொள்கையில் இருப்பவர்கள். இறைவனை மட்டுமே வணங்குபவர்கள். நபிகள் நாயகத்தைக்கூட ஒரு வழிகாட்டியாக மட்டுமே வைத்திருக்கிறோமே தவிர அவரை வணங்கவில்லை. மக்காவில் இருக்கும் புனித ஆலயம் காபாவைச் சுற்றிவந்து இறைவனைத் துதிக்கிறார்களே தவிர அந்த காபா ஆலயத்திற்கு வேறு எந்த அந்தஸ்தும் இல்லை.

ஆக இஸ்லாமியர்கள் தங்களின் தாயை மதிக்கிறார்கள்.ஆனால் தாயை வணங்கவில்லை. அதே போலத்தான் தாய்மண்ணையும் மதிக்கிறோம். ஆனால் வணங்கமாட்டோம். தேசபக்தி பற்றி இட்லிவடை போன்றவர்கள் எங்களுக்கு பாடமெடுக்கத் தேவையில்லை.


1.வந்தே மாதரம் : எட்டப்பர்களின் தேச பக்தி பஜனை!
2."வந்தே மாதரமா' ?? "வந்தே ஏமாத்துறோமா' ???
3.`வந்தே மாதரம்' பாடலுக்கு முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு -பா.ஜனதா கடும் கண்டனம்
CLICK AND READ THE LINK BELOW
வந்தே மாதரம் : எட்டப்பர்களின் தேச பக்தி பஜனை!
***************************
பாட்டு பாடிட்டா தேச பக்தி பொங்கி வழிஞ்சிடும் இவனுங்களுக்கு. கத்துறவன கூப்பிட்டு, எங்க முழுசா பாடுன்னா முழிப்பான். ஏதோ ஒரு சண்டை இழுத்து விட்டுகிட்டே இருக்கணும்.
அட இவனுங்களுக்கு இத விட்டா வேற பொழப்பு கிடையாதுங்க.....அதப் பாடனும் இதப் பாடனும்னே பொழப்ப ஓடறவங்க அவங்கல்லாம். vote போடாச்சு நண்பா.
இந்த பாடலை எழுதிய பங்கிம் சந்திர சாட்டர்ஜி ஆங்கிலேயருக்கு சிங்கி அடித்தை எப்படி மறந்தனர். அவர்கள் பாஷையில் அடுத்தவனுக்கு சிங்கி அடிப்பது தான் தேசபக்தியா?
அடிமை படுத்திய ஆங்கிலேயனுக்கு உதவி செய்யுங்கள் என கூறி அவனின் காலை நக்கிய இவர்கள் நமக்கு தேச பக்தியை சொல்லி கொடுக்கிறார்கள். பேடிகள்.
வந்தே மாதரம் பாடினால் மட்டும் தேசபக்தி வந்துவிட போகிறதா என்ன? இஸ்லாமிய திவிரவாதிகள் பயங்கரவாத செயல்கள் ( அப்பாவி மக்களை கொலை செய்தல் என படிக்கவும்) செய்யும் முன் கூட இன்ஷா அல்லா என்று கூறுகிறார்கள்,அதனால் என்ன அவர்கள் மனித நேயம் பெற்று திருந்தி விடுகிறார்களா? சப்ப மேட்டர் தல. - பயபுள்ள.
//வந்தே மாதரம் பாடினால் மட்டும் தேசபக்தி வந்துவிட போகிறதா என்ன?//
ஆமா தல. மாலேகான்ல மட்டும் எக்குத்தப்பா மாட்டிக்கிட்டீங்க. மற்றவையெல்லாம் சக்சஸ். தொடருங்கள். இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாகவே இருந்துவிட்டுப் போகட்டும். நீங்கள் நமது நாட்டு ரானுவ ரகசியங்களை விற்க டென்டர் விடுங்கள்.
//இஸ்லாமிய திவிரவாதிகள் பயங்கரவாத செயல்கள் ( அப்பாவி மக்களை கொலை செய்தல் என படிக்கவும்) செய்யும் முன் கூட இன்ஷா அல்லா என்று கூறுகிறார்கள்,அதனால் என்ன அவர்கள் மனித நேயம் பெற்று திருந்தி விடுகிறார்களா? சப்ப மேட்டர் தல. - பயபுள்ள.//
இன்ஷா அல்லாஹ் சொல்வதைக் கூடவே இருந்து பார்த்தது போல சொல்கிறீர்களே நண்பரே! இன்ஷாஅல்லாஹ் சொல்ல மாட்டார்கள். வண்டியில் குண்டை வைத்துவிட்டு அதிலே அல்லாஹு அக்பர் என்ற ஸ்டிக்கரை ஒட்டி வெடிக்கச் செய்வார்கள். ஏன் நீங்கள் அனானியாக வருகிறீர்கள்? உங்கள் பிளாக் பெயரிலே வரலாமே! இங்கே உங்களைப் போல மதவாதம் இல்லை. மனித நேயம் தான் இருக்கிறது. தைரியமா வாங்க தல.
வந்தே மாதரம் முழு வரலாற்றையும் அறிய இங்கே கிளிக்குங்கள்
http://meiyeluthu.blogspot.com/2009/11/blog-post.html
வந்தே மதரம் பாட நிர்பந்திப்பதில் எனக்கும் உடன்பாடில்லை. ஆனால் பிரச்னைகள் ஏதும் இல்லாத இச்சமயத்தில், சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த கதையாக, ஏன் அந்த அமைப்பு இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றியது என்பது குறித்து எதுவும் தகவல் உண்டா நிஜாம்?
//தேசபக்தி பற்றி இட்லிவடை போன்றவர்கள் எங்களுக்கு பாடமெடுக்கத் தேவையில்லை.
//
எத்தனை முறை நாம் சொன்னாலும் இதெல்லாம் அவர்கள் காதுகளில் ஏறாது. காரணம் அவர்கள் காது,அறிவு இரண்டும் அற்றவர்கள்.
ரஹ்மான் கூட பாடலை முழுமையாக பாடவில்லை. முதல் சில வரிகளை மட்டும் பாடியதாக நினைவு, காரணம் சிக்கல் எல்லாம் பின்னால் வரும் வரிகளில்தான் உள்ளது.
//வானம்பாடிகள் said...
பாட்டு பாடிட்டா தேச பக்தி பொங்கி வழிஞ்சிடும் இவனுங்களுக்கு. கத்துறவன கூப்பிட்டு, எங்க முழுசா பாடுன்னா முழிப்பான். ஏதோ ஒரு சண்டை இழுத்து விட்டுகிட்டே இருக்கணும்.//
அண்ணே! சரியான கருத்துண்ணே! உங்களைப்போலவே எல்லாரும் புரிந்துணர்வா இருந்துட்டா நம்ம தேசம் இன்னேரம் ஒரு நல்ல நிலையை அடைந்திருக்கும். உங்கள் ஆதரவுக்கரத்திற்கு நன்றிண்ணே!
//லெமூரியன் said...
அட இவனுங்களுக்கு இத விட்டா வேற பொழப்பு கிடையாதுங்க.....அதப் பாடனும் இதப் பாடனும்னே பொழப்ப ஓடறவங்க அவங்கல்லாம். vote போடாச்சு நண்பா.//
சரியாகச் சொன்னீர்கள் நண்பரே! கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி! தொடர்ந்து இணைந்திருங்கள்.
//ஷாகுல் said...
இந்த பாடலை எழுதிய பங்கிம் சந்திர சாட்டர்ஜி ஆங்கிலேயருக்கு சிங்கி அடித்தை எப்படி மறந்தனர். அவர்கள் பாஷையில் அடுத்தவனுக்கு சிங்கி அடிப்பது தான் தேசபக்தியா?
அடிமை படுத்திய ஆங்கிலேயனுக்கு உதவி செய்யுங்கள் என கூறி அவனின் காலை நக்கிய இவர்கள் நமக்கு தேச பக்தியை சொல்லி கொடுக்கிறார்கள். பேடிகள்.//
இதை நாம சொன்னால் நம்மை தீவிரவாதி என்பார்கள் இந்த தேசபக்தர்கள்.
//வந்தே மதரம் பாட நிர்பந்திப்பதில் எனக்கும் உடன்பாடில்லை. ஆனால் பிரச்னைகள் ஏதும் இல்லாத இச்சமயத்தில், சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த கதையாக, ஏன் அந்த அமைப்பு இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றியது என்பது குறித்து எதுவும் தகவல் உண்டா நிஜாம்?//
அதாவது இன்னமும் அர்த்தம் புரியாமல் இந்த வகுப்புவாதத் திணிப்பு வந்தேமாதரத்தை முஸ்லீம்கள் பாடிக்கொண்டிருந்தனர். குறிப்பாக தமிழ்முஸ்லீம்கள் கூட ஓரளவு திருந்திவிட்ட நிலையில் உருதுமுஸ்லீம்கள் இதைப் பாடாவிட்டால் நம்மைத் தீவிரவாதி பட்டியலில் சேர்த்துவிடுவார்கள் என பயந்து இதைப் பாடிக்கொண்டிருந்தார்கள். எனவே தான் அனைவருக்கும் உணர்த்தும் வகையில் இந்த அமைப்பு இதை தீர்மானமாகப் போட்டது. இதுவே டூ லேட்..,
//எம்.எம்.அப்துல்லா said...
//தேசபக்தி பற்றி இட்லிவடை போன்றவர்கள் எங்களுக்கு பாடமெடுக்கத் தேவையில்லை.
//
எத்தனை முறை நாம் சொன்னாலும் இதெல்லாம் அவர்கள் காதுகளில் ஏறாது. காரணம் அவர்கள் காது,அறிவு இரண்டும் அற்றவர்கள்.//
அழகான தழைவாழை இலையில் இட்லிவடையைப் வைத்து அதற்கு மலத்தை தொட்டுத் திண்பது தான் இட்லிவடை வலைப்பூவை எழுதுபவரின் குணம். ஆதரவுக்கு நன்றி அப்துல்லாண்ணே!
சரியான லிங்'குகளையும் கருத்துக்களையும் சொன்ன அனானி பின்னூட்ட நண்பர்களுக்கு மிக்க நன்றி
இது சர்ச்சைக்குரிய இடுகையைப் போல தோற்றமளித்தாலும், அல்லது சர்ச்சைக்குரிய இடுகையாகவே இருந்தாலும் இதற்கு அனைத்து திரட்டிகளும் வாக்களித்து நம் கருத்துக்கு பிரம்மாண்ட ஆதரவு அளித்த அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
//வலைப்பூக்களில் அதிகபட்சமாக இதைப்பற்றிய விவாதம் நடைபெறவில்லை.//
நண்பரே,
இது குறித்த பதிவு:
http://poar-parai.blogspot.com/2009/11/blog-post_04.html
அருமையான நெத்தியடி பதிவு
//prognostic said...
//வலைப்பூக்களில் அதிகபட்சமாக இதைப்பற்றிய விவாதம் நடைபெறவில்லை.//
நண்பரே,
இது குறித்த பதிவு:
மிகவும் அருமையான அவசியமான பதிவு நண்பரே! தொடரட்டும் உங்கள் அறிவுத்தாக்குதல்.
// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமையான நெத்தியடி பதிவு//
நல்லது நண்பரே! உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி!