அன்றைக்கு அந்த நாள் வந்திருக்கவே கூடாது என்று இன்றும் நினைக்கின்றேன். ஒரு இருள் சூழ்ந்த கருப்பு ஞாயிற்றுக்கிழமை அது. நாங்கள் வேலை நிமித்தமாக நகரத்தின் அந்தப் பகுதியில் கடந்த 6 மாதங்களாகத் தங்கியிருந்தோம். தரைத்தளத்தில் இரண்டு வீடுகள், முதல் மாடியில் இரண்டு, இரண்டாவது மாடியில் இரண்டு என மொத்தம் 6 வீடுகள். நகரத்தின் நெருக்கடி நிலையால் தரைத்தள வீடுகளில் வெண்டிலேசன் சுத்தமாகக் கிடையாது. அதனால் சமையல் செய்யமுடியாது என்பதால் அதை பேச்சுலர்களுக்கு வாடகைக்கு விட்டிருந்தார்கள். முதல் மாடியிலும் இரண்டாம் மாடியிலும் குடும்பம் தங்கியிருந்தது. அவர்களுக்கு தனிப்பாதை, எங்களுக்குத் தனிப்பாதை. ஆனாலும் மேலிருந்து எங்கள் தளம் வழியாகவும் ஒரு பாதை இருந்தது. அதை ஆண்களும் குழந்தைகளும் பயன்படுத்தினார்கள். நகரத்திலே பேச்சுலர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பது என்பது குதிரைக்கொம்பு. அதனால் எங்கள் வீட்டில் தங்கியிருந்த 5 பேரும் யாரையும் கண்டுகொள்ளாமல் வேலைமுடிந்தால் வீடு என உள்ளேயே இருந்துகொள்வோம். மேலே குடியிருப்பவர்களின் முகங்கள் கூட எங்களுக்கு சரியாகத் தெரியாது.

எங்கள் பக்கத்து வீட்டிலும் பேச்சுலர் தான். அவர்களும் எங்களைப்போல யாருடனும் ஏன் எங்களுடனுமே பேச்சி வைத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் அனைவரும் அருகேயிருந்த ஒரு பிரபல கல்லூரியில் படிப்பதாக என் நண்பன் சொன்னான். மற்றபடி அவர்களுடன் நாங்கள் நட்புவைத்துக் கொள்ளவில்லை.அவர்கள் அனைவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள். மற்றபடி அவர்களைப் பற்றிய விபரம் தெரியவில்லை.
ஒரு நாள் காலை எங்கள் வீட்டின் கதவு தட்டப்படும் சப்தம் கேட்டு கதவைத்திறந்தால் அங்கே ஜொலிக்கும் உடையில் ஒரு குட்டி தேவதை, கையிலே சாக்லேட் தட்டு. "அங்கிள், இன்னிக்கு என் பர்த்டே, சாக்லேட் எடுத்துக்கோங்க" என தட்டை நீட்டினாள். நான் தினமும் வெளியே கிளம்பும் போது தான் அந்த சுட்டியும் தன் அப்பாவோடு ஸ்கூலுக்குக் கிளம்புவாள். பெரிய வாயாடியாய் தன் அப்பாவுடன் சண்டை போடுவாள். ஹேப்பி பர்த்டே சொல்லி நாங்கள் அனைவரும் சாக்லெட் எடுத்துக்கொண்டோம். உன் பேர் என்னமா? என நான் அப்போது தான் கேட்டேன்.

அந்த ஞாயிற்றுக்கிழமை நல்ல தூக்கத்தில் இருந்த போது வாசலில் ஒரு பெரிய அலறல் சப்தம்,அழுகுரல், கூச்சல். என்ன என்று பார்க்க வெளியே வந்தால் அந்த இடம் முழுவதும் துளித்துளியாய் ரத்தம் சிதறிக்கிடந்தது. யாரையோ தூக்கிக் கொண்டு ஆட்டோவில் ஓடினார்கள். எங்கள் பக்கத்து வீட்டின் கதவு பூட்டப் பட்டிருந்தது. அதை காலால் உதைத்து கத்திக்கொண்டிருந்தார்கள் சிலர். எங்களால் யூகிக்க முடியவில்லை. வெளியே வந்து எங்கள் வீட்டின் அருகேயிருந்த டீக்கடையில் விசாரித்தோம். "தம்பி உங்க பக்கத்து வீட்டுல இருந்தானுங்கல்ல அதுல ஒரு தே*******பயல் அந்த சின்னப் பொண்ண நாசம் பண்ணிட்டான். காத்தால கடைக்கு போன அந்தப்புள்ளய சாக்லேட் கொடுத்து உள்ளே கூட்டிப்போய்..,,
அதற்கு மேல் கேட்க முடியவில்லை. அந்த கொடூரமிருகம் தன் பலத்தை அந்தப் பிஞ்சியிடம் காட்டியிக்கிறது. அவனைப் பார்த்தால் அவனைக் கொலை செய்யக்கூட ஆத்திரம் வந்தது. ஆனால் என்ன செய்யமுடியும்? அங்கே கூடிநின்ற சிலர் எங்கள் மீதும் வசைமாறியை ஆரம்பித்தார்கள். அந்த வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் வீட்டைப்பூட்டி விட்டு ஓடிவிட்டதால் அவர்கள் மீது விழவேண்டிய வார்த்தைகள் எங்கள் மீதும் பொதுவாக பேச்சுலர்கள் மீதும் பொங்கின.

அந்தக் இளம்பூவைக் கசக்கி முகர்ந்த அந்தக் காமுகன் எங்கே போனான்? மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்தக் குழந்தை என்ன ஆனது? காவல்துறையில் ஏன் அவர்கள் புகார் செய்யவில்லை என பலகேள்விகள் எங்களுக்குள் தோன்றினாலும் அதற்கு விடை கிடைப்பதற்குள் அடுத்த இரண்டாவது நாள் வீட்டு ஓனரிடம் இருந்து ஒரு ஓலை வந்தது. இன்னும் ஒரு வாரத்திற்குள் வீட்டை காலி செய்துவிட வேண்டும் என்று. நாங்கள் ஏன் காலி செய்யவேண்டும் என்று கேட்க எங்களால் முடியாமல் போயிற்று. வேறு வழியில்லாமல் அவசர அவசரமாக ஒரு மேன்சனில் குடியேறினோம்.
இன்றைக்கு நவம்பர் 19. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்பு தினம். என் நினைவில் இருந்து நீங்க மறுக்கும் அந்த சம்பவத்திற்கு வடிகால் தேட வேண்டியே இந்தப் பதிவு.
குழந்தைகள் என்றால் பெண் குழந்தைகள் மட்டுமல்ல, ஆண் குழந்தைகள் மீதும் பாலியல் வன்முறை வெறியாட்டம் நடத்தப்படுகிறது. எத்தனையோ பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் என்ற போர்வையில் பல மிருகங்கள் செய்திகளில் உலா வருவதைப் பார்க்கிறோம். அவர்களுடைய தங்கையும்,மகளும்,மருமகளும் குழந்தைகளாக இருக்கும் போது அவர்களிடம் ஏற்படாத ஒரு கிளர்ச்சி மற்றக் குழந்தைகளிடம் இவர்களுக்கு எப்படி ஏற்படுகிறது. நமது சட்டத்தில் உள்ள ஆயிரத்து ஐநூறு ஓட்டைகளில் ஏதாவது ஒன்றில் தப்பித்து இது போன்ற மிருகங்கள் இன்னமும் நடமாடுவதை நம்மாள் காணமுடிகிறது. யாரைச் சொல்லி நோக. மோகத்துக்கு வடிகால் தேட ஆயிரம் வழிகள் இருக்கும் போது இந்தப் பிஞ்சிகளின் வாழ்க்கையைச் சீரழிக்கும் கயவர்களைச் நடுரோட்டில் வைத்து சுட்டுக்கொன்றாலும் தகும்.


நண்பர்கள் கவனத்திற்கு
HOME Tamil SEO Submit
Video Search Top Blogs Trends Blog Video Images India News
கண்கலங்கி விட்டேன்.
மனம் கொதிக்கிறது அந்த நாயை நினைத்து...ச்சீ...த்தூ...
Migavum vethanaiyana sethi. madras ketta varthaigal anaithum antha kamuganuku sontham.
நண்பர்கள் கவனத்திற்கு
HOME Tamil SEO Submit
Video Search Top Blogs Trends Blog Video Images India News
முட்டாள். எங்கெ வந்து விளம்பரம் போடனும்னு தெரியாதா
இன்று சிறுவர்கள் பல்வேறுபட்ட வழிகளிலே பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை காப்பாற்றவேண்டியது எம் ஒவ்வொருவரது கடமையுமே.
நல்ல இடுகை. இந்த இடுகைக்காக மீண்டும், மீண்டும் எனது நன்றிகள்.
ச்சே இந்த மாதிரி சம்பவம் எவ்ளோ தான் நடக்கும்னு தெரியேல,,,,தண்டனைகள் கடுமை ஆகனும்
//ரோஸ்விக் said...
கண்கலங்கி விட்டேன்.
மனம் கொதிக்கிறது அந்த நாயை நினைத்து...ச்சீ...த்தூ...//
என்ன செய்வது திரு.ரோஸ்விக், இப்படியும் சிலர் சமுதாயத்தில்
//krishna said...
Migavum vethanaiyana sethi. madras ketta varthaigal anaithum antha kamuganuku sontham.//
நன்றி திரு கிருஷ்னா. வருகைக்கும் கருத்துக்கும்.
// Anonymous said...
நண்பர்கள் கவனத்திற்கு
HOME Tamil SEO Submit
Video Search Top Blogs Trends Blog Video Images India News
முட்டாள். எங்கெ வந்து விளம்பரம் போடனும்னு தெரியாதா//
கோபக்கார அணானி யாருங்க?
// சந்ரு said...
இன்று சிறுவர்கள் பல்வேறுபட்ட வழிகளிலே பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை காப்பாற்றவேண்டியது எம் ஒவ்வொருவரது கடமையுமே.
நல்ல இடுகை. இந்த இடுகைக்காக மீண்டும், மீண்டும் எனது நன்றிகள்.//
அந்த பொருப்பு நமக்கு இருக்கிறது திரு.சந்ரு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
// BONIFACE said...
ச்சே இந்த மாதிரி சம்பவம் எவ்ளோ தான் நடக்கும்னு தெரியேல,,,,தண்டனைகள் கடுமை ஆகனும்//
நிச்சயம் சார். தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும். நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.
வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் ஆயிரம்.
பெண் குழந்தைகளின் மீதான பாலியல் கொடுமைகள் தடுக்கப்பட வேண்டிய ஒன்று.
avana nikka vechu angaya suttu tallanum avan irukaratha vida sagarataa mel
எங்கள் ரோஜா ஒன்று
தீயிடப்பட்டு விட்டது...
அந்தப்பிஞ்சு இன்னும் பிறக்கவேயில்லையே
எப்படி சிதைந்து போனது...???
அவளுக்கு முலைகளுமில்லை
யோனியுமில்லை..
ஏன் எல்லோரும் கற்பழிக்கப்பட்டுவிட்டாள்
என்கிறார்கள்..?
அந்தக்காமுகன்
தனது சகோதரியின் நிர்வாணத்தையும்
ஒளிந்திருந்து ரசித்திருப்பான்..
அவள் தூங்கிக்கொண்டிருந்தபோது
அவளது அந்தரங்களை தீண்டியுமிருப்பான்...
ச்சீ கேடு கெட்டவன்..
எனக்கு இன்னுமொரு சந்தேகம்..
இவன் வீட்டுத்தெருநாயைக்கூட
இவன் விட்டு வைத்திருக்க மாட்டான்
அன்னையின் மென் முத்தமே
எங்கள் குழந்தைக்கு வலித்திருக்கும்..
அப்படியிருக்க
கதறக்கதற..
எப்படித்தாங்கியிருக்கும்
அந்தச்சின்னஞ்சிறு மொட்டு...
களங்கமற்ற வெண்ணிலவு அவள்...
விந்துக்கறைகள் அவளுடம்பில்
என்கையில்
என் கண்களில் நீர்வீழ்ச்சி...
தேடிப்பிடியுங்கள் அவனை...
மார்ச்சுவரியில் அடையாளம் காணப்பபடாத
இறந்து போன பெண் சடலங்களை
இரண்டு வாரம் கொடுத்து வெறி தீர்க்கச்சொல்லுங்கள்
அதைக்கூட அவன் விட்டு வைக்கமாட்டான்..
பிறகு அவன் ஆணுறுப்பை
துப்பாக்கிகளால் சல்லடையாக்குங்கள்..
இன்னும் கத்தி கோடரி
குறுவாள் அரிவாள்
எல்லாம் கொண்டு வெட்டித்தீருங்கள்...
இரத்த வெள்ளத்தில் நீந்திக்கிடக்கும்
அவன் ஆணுறுப்பை நாய்களுக்கும்
தின்னக்கொடுக்காதீர்கள்...
அவனைத்தண்டித்தாயிற்று
என்று திருப்திப்படுகிறீர்களா...????
சரி
அப்படியாயின்
எங்கள் ரோஜா... ????
--நிந்தவூர் ஷிப்லி --
(இலங்கை அங்குறெஸ்ஸ எனும் சிங்கள கிராமம் ஒன்றில் 5 வயது நிரம்பிய குழந்தையை முச்சக்கர வண்டி சாரதி ஒருவன் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதை எதிர்த்து என்னால் முடிந்த கண்டனக்கவிதை....)
//கோ. சௌ. பத்மநாபன் said...
பெண் குழந்தைகளின் மீதான பாலியல் கொடுமைகள் தடுக்கப்பட வேண்டிய ஒன்று.//
நன்றி திரு பத்மநாபன் தொடர்ந்து இணைந்திருங்கள்
// Anonymous said...
avana nikka vechu angaya suttu tallanum avan irukaratha vida sagarataa mel//
நன்றி அநானி தொடர்ந்து இணைந்திருங்கள்
// நிந்தவூர் ஷிப்லி saiட்...//
// எங்கள் ரோஜா ஒன்று //
கரைய வைக்கும் கவிதை நேற்று முன்தினம் இதை நீங்கள் பதிவிட்டிருந்தால் லிங்க் கொடுத்திருக்கலாம்.
நிந்தவூர் ஷிப்லின் கவிதை நன்றாக இருந்தது. காமுகர்களின் வல்லுறவுக்கு ஷிப்லின் கவிதையில் கூறப்பட்டதுபோல் தண்டனைகள் வழங்கபடுதல் வேண்டும்.