Nov 9, 2009

"தண்ணி"யில் மிதப்பதில் முதலிடத்தில் சென்னை

நிஜாம் கான் @ 6:18 PM

Past Tense:

போன தீபாவளிக்கு முந்தைய தீபாவளிக்கு சில‌ நாட்களுக்கு முன்பு ஒரு ஞாயிற்றுக்கிழமை. கடந்த 3 நாட்களாக வானம் விடாது அழுது தீர்த்தது. இன்னும் நிறுத்தியபாடில்லை. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் நமக்குப் பொழுது விடிவதென்பது 12 மணிக்குத்தான். அதுவும் மழைத்தூக்கம் சொல்லவே வேண்டாம். அருமையான சத்தம் கொடுக்கும் மழையுடன் அதன் மெல்லிய சாரலும் சேர்ந்து தூக்கத்தை சுகப்படுத்தியது. காலை 10 மணியிருக்கும், என் நண்பனிடம் இருந்து போன். பாதியளவு கண்களைத் திறந்து வெறுப்புடன் அட்டன் பண்ணி என்னடா என்றேன். மறந்திட்டியா இன்னிக்கு எனக்கு டிரெஸ் பர்சேஸ் பண்ணனும்னு சொல்லியிருந்தேன்ல, கரெக்டா 5 மணிக்கு ரெடியா இரு. நான் வந்து உன்னைய பிக்கெப் பண்ணிக்கிறேன்'னு சொல்லிட்டு போன கட் பண்ணிட்டான். அடப்பாவி மழ இன்னிக்கு இந்த‌ப் போடு போடுது, ப‌ர்சேசாவ‌து ஒன்னாவ‌து. இன்னிக்கு பூரா தூக்க‌ம் தான் என‌ நினைத்த‌வாறே மறுப‌டியும் இர‌ண்டாம் ர‌வுண்டை ஆர‌ம்பித்தேன்.

நான் நெனச்சது ஒன்னு நடந்தது ஒன்னு. சரியா 4 மணிக்கெல்லாம் வானம் லேசா வெளுக்க ஆரம்பித்தது. கரெக்டா 4.30க்கு வந்து காலிங் பெல்லை அடிச்சான் அந்தப் படுபாவி. சரின்னு அவன திட்டிக்கிட்டே ரெடியாகி அவனோடு அவன் வண்டியிலே டி.நகர் நோக்கி பயணமானேன். தாழ்வு நிலை நகர்ந்து விட்டதாக சத்தியம் செய்து சொன்ன‌ தலைவர் ரமணன் அவர்களின் வானிலை அறிக்கையை நம்பி மழைக்கோட், குடை கூட எடுக்காமல் டி.நகரை அடைந்து ஜெயச்சந்திரனுக்குள் புகுந்தோம். ரவுண்டு கட்டி பர்ச்சேஸ் பண்ணினான். அப்பறம் அங்கிருந்து சென்னை சில்க்கில் புகுந்து அங்கேயும் கொஞ்சம் அள்ளி முடித்து வெளிய வந்து பார்த்தால் அடிச்சிப் பேஞ்சிக்கிட்டு இருக்கு அடைமழை. ஆகா மாட்னோமுடா என மணியப் பார்க்க 9 ஆகியிருந்தது. அருகேயிருந்த ஸ்டாலில் சூடா ரெண்டு சமோசாவ‌ வாங்கி சாப்பிட்டு ஒரு மசாலா டீயும் குடிச்சி முடிச்சி கொஞ்ச நேரம் வெயிட் பண்ண பிறகு மணி இப்ப 10.

லேசா மழை விட்டிருந்தது.சரின்னு கெளம்பினோம். வரும்போது நான் வண்டிய ஓட்டிக்கிட்டு வந்ததால போகும் போது அவன் கோட்டா. நான் பின்னாடி உக்கார்ந்து வரனும். நான் முன்னையே யோசிக்காம‌ வ‌ந்தத‌‌ன் ப‌ல‌ன் இப்ப‌ என் ஒவ்வொரு கையிலும் கிட்ட‌த்த‌ட்ட‌ 10 கிலோ வெயிட் பைக‌ள். அதிலும் அவ‌ன் ஜீன்ஸ் பேண்ட் ம‌ட்டும் 4 எடுத்திருந்தான். நான் பின்னாடி உக்கார பய‌ணம் துவ‌ங்கிய‌து. அவ‌ன் செனாய் ந‌க‌ர் என்ப‌தால் முத‌லில் அவ‌ன் வீட்டுக்குப் போய் துணிபைக‌ளை வைத்துவிட்டு பின்ன‌ர் என்னை டிராப் செய்வ‌தாய் சொன்னான். மௌண்ட் ரோடு வ‌ழியா போய் ஜெமினிக்கு கீழே ஒரு U போட்டு வ‌ர‌லாம் அப்டின்னு நான் சொன்னேன். சே! அது ரொம்ப‌ சுத்து இப்டியே GN செட்டி வ‌ழியா போய் வ‌ள்ளுவ‌ர் கோட்ட‌த்த‌ புடிச்சி அதுக்குள்ள‌ போயிட‌லாமுன்னு அவ‌ன் சொன்னான். ச‌ரி எப்ப‌டியோ போய்த்தொல‌. ஆனா 12 ம‌ணிக்குள்ள‌ என்ன‌ய‌ வீட்ல‌ டிராப் ப‌ண்ணிட‌னும்.

GN செட்டிக்குள் நுழைந்தவுடனேயே தண்ணீர் அங்கே முழங்கால் அளவு வெள்ளம் போல வந்து கொண்டிருந்தது. "கண்ணா வண்டிய நிறுத்தாம போயிடு, கொஞ்சம் ஸ்லோ பண்ணினாலும் சைலன்சர்குள்ள தண்ணி போயிடும். அப்பறம் நாம ரெண்டு பேருக்கும் நைட்டு இங்க தான் அப்டின்னு சொல்லி வாய் மூடல, முன்னாடி தன் ஸ்கூட்டிய தள்ளிக்கிட்டு போன ஒரு அழகான தேவதை எதிர்நீச்சல் போட முடியாமல் வண்டியோடு தொப்பென்று விழ, அதைப் பார்த்த இவன் சட்டென எங்கள் வண்டியை ஸ்லோ பண்ண விசுக்.,விசுக் என ரெண்டு வெட்டு வெட்டி எங்கள் வண்டியும் உயிரைவிட்டது. ஒரு நிமிசம் மச்சான்.., இதோ வந்திடுறேன் என்று சொல்லி என்னைத் திரும்பிப் பார்க்காமலேயே வேகமாக வண்டியை விட்டு இறங்கி அந்த தேவதைக்கு உதவி செய்ய ஆரம்பித்தான். அந்த ஸ்கூட்டியைத் தூக்கி நிறுத்தி அதைத் தள்ளிக்கொண்டு அந்த தேவதையுடன் கடலையை வறுத்தவாறே கொஞ்சதூரத்தில் உள்ள கடைகளின் பிளாட்பாராத்தில் ஏற்றுவதற்காக வண்டியோடு சேர்த்து அந்த தேவதையையும் அழைத்துச் சென்றான்..

அடப்பாவி பிகரப் பாத்ததும் பிரன்ட்சிப்ப கட்பண்றது இது தானா என நினைத்து அந்த மழையிலும் எனக்கு சூடு ஏறியது. தண்ணீர் வரத்து அதிகமாகியதால் எங்கள் வண்டியும் தொப்பென சாய்ந்தது. என் இரண்டு கைகளிலும் துணிப்பைகள். வண்டியும் சாய்ந்துவிட்டது. இடுப்பளவு ஓடும் தண்ணீரில் பை நனைந்து விடாமல் இருக்க லேசாக கையைத்தூக்கியபடி நிற்க, கை வலித்தது. வண்டி தண்ணீரில் முழுசாக மூழ்கிவிட்டது. அடையாளத்திற்கு அதன் மீது ஒரு காலை வைத்துக்கொண்டு நடுரோட்டில் நின்றேன். அங்கே பார்த்தால் அந்தப் படுபாவி அந்த ஸ்கூட்டியின் பிளக்கைக் கழற்றி அதை துடைத்து ஊதி ஸ்டார்ட் பண்ண முயன்று கொண்டிருந்தான். முடியாமல் மறுபடியும் அந்த மழைதேவதை தன் வண்டியை தள்ளிக்கொண்டு செல்ல ஆரம்பித்தது. இவன் ஏமாற்றமாக என்னிடம் திரும்பி வந்து கேட்டான்.

எங்கடா வண்டி? , எனக்கு கோபம் புசுபுசுவென வந்தது. நல்லாத் தேடு இங்கினதான் விழுந்திச்சி. டேய்! நான் அப்பவே சொன்னேன்ல நிறுத்தாம போடான்னு, இப்ப வண்டிய மட்டுமில்ல என்னையும் சேத்து நடுரோட்டில நிறுத்திட்டியேடா! வண்டியத் தேடி எடுத்து தள்ளிக்கிட்டு வா, நான் அந்தக் கடையில வெயிட் பண்றேன், சொல்லிவிட்டு அவன் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் அந்தக் கடை நோக்கி நடக்க ஆரம்பித்தேன் அல்லது நீந்த ஆரம்பித்தேன்.

Present Tense:

கடந்த 3 நாட்கள் பெய்த கனமழையால் வெள்ளக்காடாகியது சென்னை. நம்முடைய கேள்வி. வருசா வருசம் இதே பிரச்சனை தான் வருது. இதுக்கு என்ன தீர்வுன்னு ஏன் எந்த மாநகராட்சி அதிகாரிகளும் சிந்திப்பதேயில்லை. எந்த இடத்தில் தண்ணீர் தேங்கும் என்பது மாநகராட்சி அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் நன்கு தெரிந்தும் ஏன் வெள்ளம் வரும் முன்பே அதற்கு வடிகால் அமைப்பதில்லை. மழைநீர் பாதாள‌சாக்கடை குழாய்களில் சென்று வெளியேறிவிடும் என்று பார்த்தால் மழைநீரோடு சேர்ந்து சாக்கடையும் கலந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகிறதே! அதற்கு என்ன காரணம்? தேர்தல் நேரத்தில் தெருத்தெருவாக, வீடாவீடாக புகுந்து ஓட்டுக்கேக்கும் அந்தந்த வார்டு உறுப்பினர்களுக்கு, வார்டு கவுன்ஸ்களுக்குத் தெரியாதா எங்கே தண்ணீர் தேங்கும் என்று. ஓட்டு வாங்கியவர்கள், மழைகாலத்தில் அவர்கள் மட்டும் சேப்டியாக வீடுகளுக்குள் பதுங்கிக்கொள்கின்றனர். ஓட்டுப்போட்டவர்கள் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து அவர்கள் தெருவில் நிற்கின்றனர். பிரச்சனை நன்கு தெரிந்தும் அதற்குத் தீர்வு காணாதது யார் குற்றம்? 3 நாள் மழைக்கே இப்டின்னா? ஒரு வேள தொடர்ந்து ஒரு வாரம் பெய்தால்?

Future Tense :

குடியிருப்பவர்: அண்ணே! மழைக்காலம் வந்தா இந்த வீட்டுல இருக்கமுடியலைண்ணே! தண்ணி ஒழுகுது. வாடக மட்டும் கரெக்டா வாங்குறீக. ஆனா இந்தக் கூரைய மாத்தச்சொல்லி பலவருசமா சொல்லிக்கிட்டு இருக்கேன்.

உரிமையாளர்: சரி..,சரி.,,மழைக்காலம் முடியட்டும் கூரைய மாத்திடலாம்.

மழைக்காலம் முடிந்த பிறகு

குடியிருப்பவர்: அண்ணே! மழைக்காலம் முடிந்த பிறகு கூரைய மாத்தலாமுன்னு சொன்னீகளே!

உரிமையாளர்: அதான் மழைக்காலம் முடிச்சிடுச்சே! இனிமே தான் தண்ணீர் ஒழுகாதே! அப்பறம் ஏன் கூரைய மாத்தனும்?

கவிஞர் கிளாசுதாசன்:

தீபாவளிக்கு சென்னை மக்கள் "தண்ணி"யில மிதந்தாங்க.,

இப்ப சென்னை மாநகரமே தண்ணியில மெதக்குது...

அந்த தண்ணி அடிச்சதால‌ ஏறினிச்சி போத..,

இந்தத் தண்ணி நெறஞ்சதால தெரியலையே பாத...

கொடிச்செய்திகள்:

பச்சைக்கொடி: நாம் முன்பே சொன்னது போல‌, இத்தனை நாளும் காங்கிரசில் சிக்னல் கிடைக்காமல் நின்ற திருநாவுக்கரசர் எக்ஸ்பிரசுக்கு இன்றைக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டது. இத்தோடு காங்கிரஸ் கதையை முடித்துவிடுவேன் என்ற சபதத்தோடு அவரும் ஜோதியில் ஐக்கியமாகிவிட்டார்.

கருப்புக்கொடி: இன்றைக்கு இராமேஸ்வரம் வந்த ராஜபக்சேவின் தங்கை நிருபமாவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்ததால் அவருக்கு நாம் தமிழர் இயக்கத்தினர் கருப்புக்கொடி காட்டினார்கள். மிகக்கொடிய சமூக குற்றத்தில் ஈடுபட்டதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

already seen this

8 Response to ""தண்ணி"யில் மிதப்பதில் முதலிடத்தில் சென்னை"

  1. vasu balaji said...

    / இத்தோடு காங்கிரஸ் கதையை முடித்துவிடுவேன் என்ற சபதத்தோடு அவரும் ஜோதியில் ஐக்கியமாகிவிட்டார். /

    நெஜமா காங்கிரஸ் காணாம பூடுமாண்ணே.=)).

    /மிகக்கொடிய சமூக குற்றத்தில் ஈடுபட்டதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்./

    தமிழீனக் காவலர் வேற என்னா பண்ணுவாரு.

  2. மணிஜி said...

    ம்ம்ம்..ஏர்போர்ட் ரோடே மோசமாயிடுச்சு..

  3. வடுவூர் குமார் said...

    இதே பிரச்சனை தான் வருது. இதுக்கு என்ன தீர்வுன்னு ஏன் எந்த மாநகராட்சி அதிகாரிகளும் சிந்திப்பதேயில்லை
    சற்று முன் தான் ஒரு பதிவு போட்டேன் இதைப்பற்றி.
    இந்த பிரச்சனையின் வேர் மிக ஆழமாக இருக்கு,தோண்டியெல்லாம் பார்க்க முடியாது.
    இன்றைக்கு ஒரு நண்பர் கூப்பிட்டு இதே மாதிரி கூரை ஒழுகலை காட்டிய போது நிஜமாகவே காளான் மாதிரி கட்டுமானம் செய்பவர்கள் மேல் கோபம் கோபமாக வருது அதே சமயத்தில் நல்ல கட்டுமானம் செய்பவர்கள் வீடுகளின் விலையை நடுத்தரமக்கள் நெருங்கமுடிவதில்லை என்பதும் நிஜம்.இப்போதைக்கு OMR சாலை பக்கம் வீடு வாங்குவதே உத்தமம்.

  4. ரோஸ்விக் said...

    நம்ம கருப்பு சிவப்பு ஆட்சிதான் நடக்குது....என்ன உள்குத்தா?
    சினிமால துணி இல்லாம காட்டுனா விட்டுடுறாங்க. ஆனா, தமிழன் கறுப்புத் துணி காட்டுனா ஏன் கைது செயிராங்கப்ப??

    கலைஞரு உடல் நிலை மாதிரியே ஆட்சியும் நாளுக்கு நாள் மோசமாகிகிட்டே போகுது. ரெண்டுமே வருத்தமா இருக்கு.

  5. நிஜாம் கான் said...

    //நெஜமா காங்கிரஸ் காணாம பூடுமாண்ணே.=)).//

    அண்ணே! இருந்தாலும் உங்களுக்கு இவ்வள‌வு பேராசை கூடாது. இப்பதானே சேர்ந்திருக்கார். அவர் ஒரு கோஷ்டி ஃபாம் பண்ணி..,கொஞ்சம் பொருமையா இருங்க..

  6. நிஜாம் கான் said...

    // தண்டோரா ...... said...
    ம்ம்ம்..ஏர்போர்ட் ரோடே மோசமாயிடுச்சு..//

    தண்டோரா அண்ணே! அடப்போங்கண்ணே! நகரமே மெதக்குது. ஏர்போர்ட் ரோடு மெதந்தா என்ன..

  7. நிஜாம் கான் said...

    //இப்போதைக்கு OMR சாலை பக்கம் வீடு வாங்குவதே உத்தமம்//

    உங்க பதிவையும் படிச்சேன். நல்ல கருத்துக்கள். ஆனால் அன்றாடங்காச்சிகள் OMR
    பக்கம் வீடு வாங்க முடியாதேண்ணே!

  8. நிஜாம் கான் said...

    ரோஸ்விக்

    //சினிமால துணி இல்லாம காட்டுனா விட்டுடுறாங்க. ஆனா, தமிழன் கறுப்புத் துணி காட்டுனா ஏன் கைது செயிராங்கப்ப??//

    நல்ல டின்ச்..,

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,