Jun 9, 2010

செய்தி இரண்டு பார்வை ஒன்று

நிஜாம் கான் @ 7:11 PM
இரண்டு கொடூரங்கள்: 1984 டிசம்பர் மாதம் 3ஆம் தேதி போபாலில் இருந்த யூனியன் கார்பைடு எனும்அமெரிக்க நிறுவனத்திலிருந்து கசிந்த விசவாயுவால் கிட்டத்தட்ட 20 ஆயிரம்பேர் வரை படுகொலை செய்யப்பட்டார்கள்.இரண்டு இலட்சத்திற்கும்அதிகமானோர் இன்று வரை பாதிக்கப்பட்டுள்ளார்கள். அந்த வழக்கின் தீர்ப்புநேற்று முன்தினம் வெளியானது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையாக 2 வருட சிறை தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம். அதுமட்டுமின்றிஅவரவர்கள் 25000 செலுத்தி சொந்த ஜாமீனிலும் அன்றைக்கு மாலையேவெளிவரலாம் என உத்தரவிட்டது. வரலாற்றுச் சிறப்பு மிகுந்த இந்த தீர்ப்பில்அன்றைக்கு அந்த நிறுவனத்தின் தலைவராக இருந்த ஆண்டர்சன் மீது ஒரு சிறுகீறல் கூட விழாமல் தன் ஜனநாயகக் கடமையை சிறப்பாக ஆற்றி தன் எஜமானவிசுவாசத்தை வெளிப்படுத்தி விட்டது இந்திய அரசு.

அடுத்து விளக்கமாற்றாலும், செருப்பாலும் துரத்தி துரத்தி அடித்து விரட்டவேண்டிய ஒரு நபருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து தன் இரண்டாவதுவிசுவாசத்தைக் காட்டிவிட்டது இதே காங்கிரஸ் அரசு. பக்கவாதத்தால்பாதிக்கப்பட்டு நடக்கக் கூட இயலாமல் படுத்த படுக்கையாக வந்தபார்வதியம்மாளை உள்ளே விட்டால் கலவர சூழ்நிலை உண்டாகிவிடும் எனஅதே விமானத்தில் திருப்பி அனுப்பிய அதே காங்கிரஸ் அரசாங்கம், இன்றைக்குயார் தமிழர்களைக் கொத்துக் கொத்தாய் கொன்று குவித்தானோ, யார்தமிழ்க்குழந்தைகளின் உயிரைக் குடித்தானோ, யார் எந்தமிழ் செல்விகளின்கற்போடு விளையாட உத்தரவிட்டானோ, அவனுக்கு இன்றைக்கு சிவப்புகம்பளம் விரித்து விருந்து கொடுக்கிறது இந்திய அரசாங்கம். ஆக இரண்டுசெய்திகளிலும் ஒன்றே ஒன்று நன்றாக புலப்படுகிறது. கேட்பாரற்றவர்களுக்குஒரு நீதியும், எஜமானர்களுக்கு ஒரு நீதியும் தான் இந்த உலகம் வழங்கும் எனமிகச் சிறப்பாக செய்துகாட்டி விட்டது இன்றைய இந்திய அரசாங்கம்.

பாவப்பட்ட மக்கா கட்சி:

இன்றைய நிலையில் பாமகவிற்கு இப்படித்தான் விரிவாக்கம் செய்ய வேண்டியிருக்கிறது. அந்த அளவிற்கு பணிந்து போய் படிந்து கிடக்கிறது பாமக. எப்படியாவது ஒரு மேல்சபை எம்பி சீட் வாங்கிவிடலாம் என கனவோடு பேச்சுவார்த்தைக்கு வந்தவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே! அக்காள பொண்ணு கேக்க வந்தவன் கொழுந்தியாளையாவது கட்டித்தாங்கன்னு கேட்ட கதையா இது போனா போவுது வருகிற சட்டமன்ற தேர்தலுக்காவது கூட்டணி போட வாங்கன்னு கெஞ்சாத குறையாக அறிவாலயப் படி ஏறியது பாமக. ஆனால் ஆளுங்கட்சிக்கு எதிராக வழக்கமாக ஜெயா டிவி செய்யும் சில்லறை வேலைகளை பென்னாகரம் தேர்தல் சமயத்தில் மக்கள் தொலைக்காட்சி செய்ததில் பாமக மீது பயங்கர கடுப்பில் இருக்கிறது அறிவாலய வட்டாரம். அதே நேரம் அவர்களை கூட்டு சேர்த்துக் கொள்வதா வேண்டாமா என பலமான ஆலோசனையிலும் இருக்கிறது அறிவாலய வட்டாராம். முழுசா நனைஞ்ச பிறகு முக்காடு எதற்கு என்ற நிலையில் களத்தில இறங்கிய கையோடு எப்படியாவது வெற்றி மாங்கனியை பறிச்சிக்கிட்டு வாங்க என உத்தரவிட்டுள்ளாராம் மருத்துவர் அய்யா.

புகையில்லா சென்னை:

இன்றைக்கு சென்னையின் முக்கிய பகுதிகளைச் சுற்றிலும் நீல கலரில் பசுமைத் தாயகம் சார்பாக புகையில்லா சென்னை என்ற வாசகங்கங்களுடன் கூடிய பேணர்களைத் தாங்கிய மீன் பாடி வண்டிகள் வலம் வருவதைக் காண முடிந்தது. உண்மையிலேயே இது நல்ல முயற்சி தான் என்றாலும் அந்த வண்டியை இழுத்துச் செல்பவர்களே வண்டியை ஓரம் கட்டி விட்டு தம் அடித்த காட்சிகளையும் காணமுடிந்தது. அத்தோடு பாமகவில் இருக்கும் உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தம் பார்ட்டிகள் என்பது எல்லாருக்குமே தெரிந்த செய்தி தான். முதலில் அய்யா அவர்களின் கட்சியினருக்கு இதை அமுல்படுத்தி விட்டு பின்னர் மற்றவர்களுக்கு அமுல்படுத்தட்டும் என்ற குரல்களையும் கேட்க முடிந்தது.

பாடாய்படுத்திய சோடா உணவு:

பதிவிட்டு 10 நாட்களாகிவிட்டது. போன வாரம் திடீரென்று மயக்கம் சுற்றவே நிலை குலைந்து விட்டேன். உடனடியாக டாக்டரை போய் பார்த்த பிறகு லோ பிரசர் என்று சொன்னார். சரியாக சாப்பிடாத காரணத்தினால் இந்த மயக்கம் எனவும் சொன்னார். அன்றிலிருந்து 2 நாட்களுக்கு எதுவுமே சாப்பிட இயலவில்லை. வெறும் தண்ணீர் மட்டும் தான். இனி இங்கே இருந்தம்னா உசுருக்கு உத்திரவாதம் இல்லை என இரவோடு இரவாக பஸ் பிடித்து ஊருக்குப் போய் சேர்ந்திட்டேன். இந்த டாக்டர் எழுதி கொடுத்த மருந்துகளைத் தவிர வேறு எதுவுமே உள் செல்லவில்லை. வாய்க்கசப்பு வேற கொமட்டிக் கொண்டு வந்தது. நிலைமை சீரியஸாகிறத பார்த்து உடனே பக்கத்து ஊரு டாக்டர்கிட்ட பார்த்தா உடனே பெட்ல அட்மிட் பண்ணி ஸ்கேன் எக்ஸ்ரே, இரத்த டெஸ்ட் என ஏகத்தையும் எடுத்துத் தள்ளிட்டார்.

வயிறு வெந்து புண்ணாகிப் போச்சுன்னும், ஹோட்டல் சாப்பாட்டில கலக்கும் சோடா தான் இது எல்லாத்துக்கும் காரணம்னு சொல்லியும் உடனடியா ட்ரிப் போட்டார். ஒரு நாள் பெட் ரெஸ்டுக்கு பிறகு தான் இப்ப கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட முடியுது. காலாவது மருந்துகள், காலாவதி உணவுப் பொருட்கள் வரிசையில் இந்த சோடா மாவு சாப்பாடும் கலந்து வயித்த கெடுத்திடுது. காலாவதி உணவுப் பொருட்களை சோதனை செய்யும் அதிகாரிகள் இந்த மாதிரி சாப்பாட்டில சுண்ணாம்பு, சோடா கலக்கிறவனுங்களையும் புடிச்சி சீல் வச்சா மக்களின் கொஞ்ச நஞ்ச உடல் நலமாவது கெடாம இருக்கும்கிறது என் சின்ன அபிப்ராயம்.

already seen this

No Response to "செய்தி இரண்டு பார்வை ஒன்று"

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,