May 25, 2010

விஜயகாந்த் மகன் கார்மீது தாக்குதல்

நிஜாம் கான் @ 6:26 PM
செய்தித் துளிகள் 25/05/2010:
காங்கிரஸ் அமைச்சர் வீட்டில் கச்சேரி நடத்திய கொள்ளையர்கள்: சென்னை நுங்கம்பாக்கத்தில் நாகேஸ்வர ராவ் சாலையில் குடியிருக்கிறார்காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் அலி. ஒரு திருமணத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று தன் சொந்த ஊரான இராமநாதபுரத்திற்கு சென்றுவிட்டார். இந்த சூழ்நிலையை மிகச்சரியாக பயன்படுத்திய கொள்ளையர்கள் சிலர்நேற்று இரவு அவர் வீட்டில் புகுந்து ஒரு பிளாஸ்மா டிவி உள்ளிட்ட சிலபொருட்களைத் திருடிக்கொண்டு, இரவு நேரத்தில் தப்பிச் செல்வதற்கு வாகனவசதி இல்லாததால் வாசலில் சும்மா கிடந்த அவரது காரையும் லவட்டிக்கொண்டு சென்று விட்டார்களாம். காலையில் அவரது வீட்டு பறவைகளைக்குஉணவு போட வந்த பணியாளர்கள் காரைக் காணாமல் காவல்துறையிடம் புகார்செய்ய , உடனே இந்த செய்தி ஹசன் அலிக்கு தெரியவர அவர் அவசர அவசரமாகசென்னைக்கு திரும்பிக் கொண்டுள்ளாராம். அதெல்லாம் சரி! இந்த ஹசன் அலியார் தெரியுமா? வன்னிப்போர் நடந்து கொண்டிருக்கும் போது கொடூரன்ராஜபக்சேவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் ஏபிடி பார்சல் சர்வீஸ் அனுமாராய்மும்முரமாய் செயல்பட்டவர் இவர் என்பது தான் முக்கியமான தகவல்

கொடூரன் ரத்தோருக்கு 18 மாதச்சிறை:

ருச்சிகா என்ற சிறுவயது டென்னிஸ் வீராங்கனையை பாலியல் பலாத்காரம் செய்ய இரண்டு முறை முயற்சி செய்தார் இந்த முன்னாள் டிஜிபி ரத்தோர். இதனால் மனம் உடைந்த ருச்சிகா பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டார். இதை அவர்களின் பெற்றோர் வேண்டாம் பிரச்சனை என விட்டு விட, ருச்சிகாவின் தோழியின் பெற்றோர் இதை விட மனசில்லாமல் நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தனர். அன்று முதல் கடுமையான மிரட்டல்களை சந்தித்து வந்தனர் இந்த இரண்டு குடும்பத்தினரும். ஆனால் இவர்கள் கொஞ்சமும் தளராமல் வழக்கை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ரத்தோர் சகல மரியாதையோடு பணிஓய்வு பெற்றார். இருந்த போதும் வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது . ரத்தோருக்கு ஆதரவாக அவரது மனைவியே வாதாடினார். இந்த நிலையில் ரத்தோருக்கு 18 மாதம் சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம். அதை மேல் முறையீடு செய்தார் ரத்தோர். ஆனால் இன்றைக்கு அந்த தண்டனை உறுதி செய்யப்பட்டு ரத்தோர் சிறையில் அடைக்கப்பட்டார். என்ன தான் இருந்தாலும் இது மிகத் தாமதமான தீர்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது. ரத்தோர் - ருச்சிகா வழக்கு குறித்து விரிவாக அறிய இங்கே கிளிக்கவும்.

இம்சைதரப்போகும் இலவச சிம்கார்டுகள்:

தமிழகத்தின் அனைத்துப்பகுதிகளும் இப்போது எங்கு பார்த்தாலும் செல்பேசி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சிம்கார்டுகளை இலவசமாக கொடுக்கின்றன. ஏதாவது ஒரு அடையாள அட்டை நகலும், ஒரு போட்டோவும் இருந்தால் போதும். 60 ரூபாய் வரை இலவச டாக்டைம் அளிக்கப்படுகிறது. ஒருவர் எத்தனை கார்டுகள் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ள கடைக்காரர்கள் கூவிக்கூவி அழைக்கிறார்கள். நான் கூட இன்றைக்கு ஒரு சிம்கார்டு வாங்கலாம் என்று சென்றேன். அங்கிருந்த கடைக்காரர் ஒன்று போதுமா என்று கேட்டார். எத்தனை தருவீர்கள் என்று கேட்டேன். 5 வரை வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். சரி ஒரு கார்டுக்கு 60 ரூபாய் டாக்டைம் இருக்கிறதே, விடுவானேன் என இன்னும் 4 கார்டுகளுக்கு போட்டோவும், நகலும் கொடுத்து வாங்கி வந்து விட்டேன். இப்போது சொல்ல வருவது என்னவென்றால் ஏற்கனவே தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருக்கும் நமது நாட்டில் இது போன்ற இலவச சிம்கார்டுகளை அள்ளிவீசுவது தீவிரவாதிகளின் தொலைதொடர்புக்கு சிறப்பான வழிகாட்டுதலாக அமைந்து விடும் என்பது தான். கடைக்காரர்களுக்கு செல்பேசி நிறுவனங்களுக்கு சலுகைகள் கிடைக்கிறது என்பதற்காக அவர்கள் இப்படி அள்ளிவீசுவது எந்த வகையில் நியாயம்? இப்படி சிம்கார்டுகளை விற்பதால் அந்த நிறுவனத்திற்கு என்ன லாபம்? எல்லாரும் அந்த டாக்டைம் முடிந்தவுடன் தூக்கி வீசத்தான் போகிறார்கள். இவ்வளவு சிம்கார்டுகளின் ரெக்கார்டுகளை அந்தந்த நிறுவனங்கள் கடைசிவரை பாதுகாக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் ? நாட்டின் பாதுகாப்பு விசயத்தில் விழிப்புடன் இருப்பதாக சொல்லிக்கொள்ளும் அரசாங்கம் இது போன்ற சிம்கார்டு விற்பனைகளை கண்டுகொள்ளாமல் இருந்தால் அது தீவிரவாதிகளுக்கு அல்வா சாப்பிடுவது போன்றதாகிவிடும். இனியாவது இதை கவனித்து சரிசெய்வார்களா?

விஜயகாந்த் மகன் கார் மீது தாக்குதல்:

தாம்பரத்தில் உள்ள ஒரு வணிக நிறுவனத்தின் ஊழியர்கள் வேலை முடிந்து ஒரு வேனில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.பின்னால் வந்த ஒரு வெள்ளை நிற கார் அந்த வேன் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் வேனில் ஓரமாக அமர்ந்திருந்த ஊழியர்கள் சிலர் காயம் அடைந்தனர். மோதிய வேகத்தில் அந்த கார் நிற்காமல் சென்றது. இதனால் கோபமடைந்த வேன் ஓட்டுநர், அந்த காரை மடக்குமாறு தன் நண்பர்களுக்கு தகவல் தந்தார். கூடுவாஞ்சேரி அருகே அந்த கார் வந்தபோது அதை மடக்கிய பொதுமக்கள் சராமாரியாக தாக்குதல் நடத்தி அந்த காரின் கண்ணாடிகளை உடைத்தனர். அப்போது அந்த வேனும் அங்கு வந்து சேரவே, அவர்களும் சேர்ந்து கொண்டு அந்த காரின் ஓட்டுனரை இழுத்துப் போட்டு அடித்தனர். அப்போது பின்பக்கமிருந்து ஒருநபர் வேகமாக இறங்கினார். அவரைப் திடீரென‌ பார்த்ததில் பயந்த மக்கள் பின்வாங்கினார்கள். உடனே அவர் நான் தான் விஜயகாந்த் மகன் பிரபாகரன் என்று சொல்லவே, அங்கு கூடியிருந்தவர்கள் கும்மாளமிட்டு சிரிக்கத் தொடங்கினர்.
புளி மூட்டைக்கு பேண்ட் சட்டை போட்டது மாதிரி இருக்கே, நீ விஜயகாந்த் மகனா என லொல்லு சபா ரேஞ்சுக்கு கலாய்க்க, மெர்சலான பிரபாகரன், அந்தப் பகுதி வட்டச் செயலாளருக்கு போன் போட்டு வரவழைத்து பின்னர் சமாதானமாகி போனார்களாம். சினிமாவில் யாருக்காவது ஏதாவது கஷ்டம் வந்தால் ஓடிவந்து உதவி செய்வது போல நடிக்கும் விஜயகாந்தின் கார் டிரைவரே தான் செய்த தவறை மறைக்க ஓடி ஒழிந்த இந்த நிகழ்ச்சியை என்னவென்று சொல்வது? அவர் அருகே இருப்பவர்களே அவர் கொள்கைகளை பின்பற்றாத போது தூரமாய் இருக்கும் அவரது கட்சித் தொண்டர்கள் எவ்வாறு அவரின் கொள்கைகளைப் பின்பற்றுவார்கள் என யாரும் கேட்டுவிடக்கூடாது.
already seen this

9 Response to "விஜயகாந்த் மகன் கார்மீது தாக்குதல்"

  1. goma said...

    செல் ஃபோன் ஊடுருவல் மாணவ சமுதாயத்துக்கு ஒரு சீரழிவுப்பாதை...இதை எப்பொழுது உணர்கிறார்களோ அன்றுதான் விடிவு காலம்

  2. முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

    புளி மூட்டைக்கு பேண்ட் சட்டை போட்டது மாதிரி இருக்கே, நீ விஜயகாந்த் மகனா என லொல்லு சபா ரேஞ்சுக்கு கலாய்க்க, மெர்சலான பிரபாகரன், அந்தப் பகுதி வட்டச் செயலாளருக்கு போன் போட்டு வரவழைத்து//

    வருங்கால முதலமைச்சர் ரெடியாயிட்டாரு போல..

    தமிழகம் தாங்குமா?..( சார்.. நான் உருவத்துக்காக சொல்லலை..ஹி..ஹி..)

  3. அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

    செய்திகள் அனைத்தும் துளிகளாய்
    இருந்தாலும் நறுக்!

  4. THE UFO said...

    அஸ்ஸலாமு அலைக்கும்,
    நிஜாம் பாய்,
    சில மாதங்களாக வந்து விட்டு ஏமாற்றமாக செலவதாக என் கதை செல்கிறது. எதற்காக எதிரொலியில் இப்படி எந்த இடுகையும் போடாமல் விட்டுவிட்டீர்கள்?

    செய்திகள் நன்றாகத்தான் இருக்கின்றன, என்றாலும்... அவற்றை அறிந்து கொள்ள ஆயிரம் தளங்கள், தொலைக்காட்சி சேனல்கள், வானொலி அலைவரிசைகள் உள்ளன.

    ஆனால், நிஜாம் பாய், எதிரொலி இடுகை நீங்கள் மட்டுமே இட முடியும்.

    தங்களின் 'தஸ்லிமா நஸ்ரின்/கவிமதி' பின்னூட்டங்கள் மறக்கமுடியாதவை. இப்படிப்பட்டவர் 'பிளேயிங் லெவெனில்' இல்லாமல் போகலாமா? தயவு செய்து உங்கள் முடிவை பரிசீலியுங்கள்.

    மீண்டும் பதிவுகளை இடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்...
    உங்கள் அன்பு சகோதரன்,
    Ubaithulla From Orathanadu.

  5. நிஜாம் கான் said...

    // goma said...

    செல் ஃபோன் ஊடுருவல் மாணவ சமுதாயத்துக்கு ஒரு சீரழிவுப்பாதை...இதை எப்பொழுது உணர்கிறார்களோ அன்றுதான் விடிவு காலம்//

    நன்றி கோமா...தொடர்ந்து வாங்க‌

  6. நிஜாம் கான் said...

    //பட்டாபட்டி.. said...

    புளி மூட்டைக்கு பேண்ட் சட்டை போட்டது மாதிரி இருக்கே, நீ விஜயகாந்த் மகனா என லொல்லு சபா ரேஞ்சுக்கு கலாய்க்க, மெர்சலான பிரபாகரன், அந்தப் பகுதி வட்டச் செயலாளருக்கு போன் போட்டு வரவழைத்து//

    வருங்கால முதலமைச்சர் ரெடியாயிட்டாரு போல..

    தமிழகம் தாங்குமா?..( சார்.. நான் உருவத்துக்காக சொல்லலை..ஹி..ஹி..)//

    பட்டாபட்டியின் நக்கலுக்கு அளவேயில்லை.. தொடர்ந்து இணைந்திருங்கள்

  7. நிஜாம் கான் said...

    // NIZAMUDEEN said...

    செய்திகள் அனைத்தும் துளிகளாய்
    இருந்தாலும் நறுக்!//

    நன்றி நிஜாம் பாய்! தொடர்ந்து வாங்க‌

  8. நிஜாம் கான் said...

    // www.thalaivan.com said...

    //

    விரைவில் இணைவோம்.. நன்றி

  9. நிஜாம் கான் said...

    // UFO said...

    அஸ்ஸலாமு அலைக்கும்,
    நிஜாம் பாய்,
    சில மாதங்களாக வந்து விட்டு ஏமாற்றமாக செலவதாக என் கதை செல்கிறது. எதற்காக எதிரொலியில் இப்படி எந்த இடுகையும் போடாமல் விட்டுவிட்டீர்கள்?//

    வ அலைக்கும் சலாம் பாய். நலமா! கடுமையான வேலை நிமித்தம் காரணமாக முன்போல பதிவிட முடியவில்லை. காரணம் ஒரு பதிவை இடுவதற்கு அதைவிட அதிகமாக சிந்திக்க வேண்டியுள்ளது. அதே நேரம் செய்திகளை பதிவிட்டு அத்தோடு சேர்த்து நம் கருத்துக்களையும் சொன்னால் பதிவுலகில் கொஞ்ச காலம் நிலைத்திருக்கலாம் என்பது என் ஆசை. நேரமிருந்தால் என் மெயிலில் தொடர்பு கொள்ளுங்கள்.

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,