சிபுசோரனுக்கு ஆப்பு வைத்த பாஜக:
வெட்டுத்தீர்மானத்தில் காங்கிரஸுக்கு ஆதரவாக வாக்களித்த சிபுசோரன் மீது காட்டத்தில் இருந்த பாஜக சிபுசோரனுக்கு கொடுத்திருந்த ஆதரவை வாபஸ் வாங்கப்போவதாக தெரிவித்து இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிபுசோரன் அவசர அவசரமாக ஜார்கண்டில் பாஜக முதல்வரை நியமிக்க ஒப்புக்கொண்டார். இதனால் உற்சாகமான பாஜக மேலிடம் அர்ஜூன் முண்டாவை முதல்வராக அறிவித்தது. ஆனால் மீண்டும் போங்கு ஆட்டம் ஆடிய சிபுசோரன் முதல்வர் பதவியில் இருந்து தான் விலகப் போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்தார். இதனால் கடுப்பான பாஜக அவரோடு இருக்கும் கூட்டை உடைத்துக் கொள்ள முடிவு செய்து விட்டது. ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸிடம் ஆதரவைக் கேட்க அப்பாயிண்மென்ட் கேட்டுக் கொண்டிருக்கிறார் சிபுசோரன்.
ராகுல் காந்திக்கு பிரதமர் பதவி:
எல்லாரும் எதிர்பார்த்த அந்த தருணம் இதோ வந்துவிட்டது. ஆங்காங்கே மண்சுமந்து, கயிற்றுக் கட்டிலில் படுத்து தன்னை ஏழையாக காட்டிக்கொண்ட ராகுலுக்கு பட்டாபிஷேகம் விரைவில் நடக்க வாய்ப்பிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி அமைந்து இன்றோடு ஒருவருடம் முடிந்துவிட்ட நிலையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர்,ஆட்சிக்கட்டிலுக்கு இளைய தலைமுறை வரவேண்டிய காலம் வந்துவிட்டது என்றும் சூசகமாக தெரிவித்து விட்டார். காங்கிரஸ் கட்சி உத்தரவிட்டால் ராகுலுக்கு பிரதமர் பதவியை விட்டுத்தர காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சோனியாவும், ராகுலும் தான் காங்கிரஸ் கட்சி என யாருக்குமே தெரியாது என்று நினைத்து விட்டார் போலும் பிரதமர்.
மோர் பந்தல் நடத்தும் ரஜினிகாந்த்:
சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தின் வாசலில் கருவேப்பிலை, மல்லி போட்டு போட்டு இளஞ்சூடா தாளிச்ச மோர் அன்லிமிட்டாக வழங்கப்படுகிறது. சென்னையை சுட்டெரிக்கும் இந்த அக்னிக்கு இந்த அருமையான மோர் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார் ரஜினிகாந்த். இதைப் போல அனைத்து அரசியல் வாதிகளும் செய்தால் நல்லா இருக்கும்ல. மோர் குடிக்க வேனும்னா வர்ரேன்..பந்தலெல்லாம் அமைக்க முடியாது என சொன்னாலும் சொல்வார்கள் போல....
டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு:
டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீநகர் செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானம் ஓடுதளத்திலிருந்து சென்ற பிறகு அந்த ஓடுதளத்தை சோதித்த சிப்பந்திகள் அங்கே டயர் துண்டுகள் சிதறிக்கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அது சற்றுமுன் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயராக இருக்கலாம் என சந்தேகம் எழவே, அவசர அவசரமாக அந்த விமானத்தை தொடர்பு கொண்டது கட்டுப்பாட்டு அறை. விமானத்தை உடனடியாக தரையிறக்கவும் என உத்தரவிடப்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் அவசர கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஸ்பைஸ் ஜெட் விமானம் உடனடியாக மீண்டும் டெல்லிக்கு திரும்பி வந்து தரையிறங்கியது. அதை சோதித்த விமான நிலைய அதிகாரிகள் அந்த விமானத்தின் டயர்கள் நல்ல நிலையில் உள்ளதாக அறிவித்தனர்.ஆனால் சிதறிக்கிடந்த டயர்களின் துண்டுகக் எந்த விமானத்தினுடையது என்பது தெரியவில்லை.
தகுதியற்ற விமான நிலையம்:
158 பேரை பலிகொண்ட விபத்து நடந்த மங்களூர் விமான நிலையம் விமான போக்குவரத்துக்கு தகுதியற்றது என சில அமைப்புகள் தெரிவித்துள்ளன. அந்த ஓடுதளத்தின் நீளமும் மிக குறைவு என்றும், அவசர காலத்தில் பயன்படுத்தும் ஓரச்சாலைகள் இல்லாததும் இந்த விமான நிலையத்தின் பெரிய குறையாக தெரிவிக்கப்படுகின்றது. அதுமட்டுமின்றி விமானம் ஓடுதளத்தை விட்டு தவறினால் பள்ளத்தாக்கில் தான் விழும் எனவும் தெரிவிக்கின்றனர். அந்த விமானத்தின் விமானி இதுவரை 19 முறை மங்களூர் விமான நிலையத்தில் அதே விமானத்தை தரையிறக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுங்கள் நண்பர்களே!
already seen this


கலைஞர் சித்திரம்...விரைவில் அனைவரையும் கவரும் வகையில் இருக்க வேண்டுமே முக்கியமாக குழந்தைகளை...தகவலுக்கு நன்றி...
tip top news:)
//இந்த சித்திரம் தொலைக்காட்சியில் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான கார்ட்டூன்கள் மட்டுமே இடம்பெறும்.//
செய்திகள் சேனல், கட்டணச் சேனலாக மாறட்டும், பிரச்சினையில்லை.
கார்ட்டூன் சேனலை 24 மணி நேரமும் ஒலிபரப்புவார்களே, எந்தக்
குழந்தைகளுக்காக?
//ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸிடம் ஆதரவைக் கேட்க அப்பாயிண்மென்ட் கேட்டுக் கொண்டிருக்கிறார் சிபுசோரன்.//
புரிந்துகொள்ளவே முடியலையே, இந்த சிபுசோரனை!!!
//காங்கிரஸ் கட்சி உத்தரவிட்டால் ராகுலுக்கு பிரதமர் பதவியை விட்டுத்தர காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.//
பிரதமர் தகுதியுடைய (இரு)வர் டாக்டர் மன்மோகனும், ராகுல் தம்பியும்தான்
இருக்கிறார்களா, அந்த காங்கிரஸில்????
ரஜினிபற்றி ஒரு செய்தி,
கமல்பற்றி ஒரு செய்தி...
பேலன்ஸ் பண்ணிட்டீங்க...
ரஜினிபற்றி ஒரு செய்தி,
கமல்பற்றி ஒரு செய்தி...
பேலன்ஸ் பண்ணிட்டீங்க...
நிஜாம் நியூஸ் சூப்பர்.
அனைத்துவிதமான செய்திகளும் ஒரேயிடத்தில் பார்க வசியாக இருக்கு பாராட்டுக்கள் நிஜாம்..
நீங்கள் கேட்கும் முன்பே நான் விபத்துநடந்த அன்றே அக்காலையிலேயே கவிதையெழுதிவிட்டேன் நிஜாம் பார்க்கவும்
http://niroodai.blogspot.com/2010/05/blog-post_22.html
நல்ல தகவல்கள் நிஜாம்.
அன்புள்ள நிஜாம்,
மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி.
// ஓடுதளத்தின் நீளமும் மிக குறைவு//
இதுபோல பல டேபிள் டாப் ரன்வேக்கள் உலகில் உள்ளன. விமான நிலையத்தை மட்டும் குற்றம் சொல்வது போதாது...
சில ஆண்டுகளுக்கு முன், 'சென்னை சர்வதேச விமான நிலையம்' என்று தவறாக நினைத்து(?!) பக்கத்தில் உள்ள மிலிட்டரி ஏர் பேசில்(?) மிக மிக சிறியதூர மற்றும் குறுகிய ரன்வேயில் கச்சிதமாக, இதைவிட பெரிய 2x5x2 இருக்கை வசதி கொண்ட சவூதி ஏர்லைன்சை தரை இறக்கவில்லையா? (அதற்காக அவ்விமானிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டது வேறு விஷயம்...) "விழிப்புடன்" / "சுய உணர்வுடன்" இருந்தால் தரை இறக்க முடியும் என்பதே கவனிக்கப்பட வேண்டிய அம்சம் இங்கே...
இந்த துயரமான சூழ்நிலையில் இதுவரை யாருமே விவாதிக்காத இன்னும் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி அவசியம் சொல்ல வேண்டி உள்ளது.
ஏர் இந்தியா பற்றி அதை உபயோகிக்கும் அனைவருக்குமே தெரியும். இதுவரை அது சரியான நேரத்தில் கிளம்பியதும், வந்தடைந்ததும் மிக மிக அரிது. சரியான நேரத்தில் கிளம்பினாலும் சரியான நேரத்தில் சேர்வது மிக அரிது. பலமுறை "ஒரு நாள் தாமதமெல்லாம்" அதற்கு சர்வசாதாரணம். திடீரென்று ரூட் மாத்தி விடுவது,திடீர் ரத்து(விமானக்கோளாறு அல்லது மினிஸ்டர் மகளுக்காக வெல்லாம்..!)என இதுவும் அடிக்கடி நடப்பதுதான். ஆறு மாதங்களுக்கு முன்னால் தமாமில் சுமார் முப்பத்து எட்டு பேர் போர்டிங் பாஸ் வாங்கியவர்களுக்கு சென்னை விமானத்தில் சீட் இல்லை!!! காரணம் : சென்னையிலிருந்து வந்தது சிறிய விமானம்???
பல முறை பல நாட்கள் விமானிகள் வேலை நிறுத்தம்... விமானத்தில் சில சமயம் எ/சி வேலை செய்யாமல் போய்விடுதல்... சரியான உபசரிப்பு இல்லாமை... வயதான ஏர் ஹோஸ்டஸ்(?) என்று எவ்வளவோ பேருக்கு ஏர் இந்தியாவின் மீது வெறுப்பு இருகிறது.
இவை எல்லா வற்றையும் சகித்துக்கொள்ளலாம்.... சொல்லப்போனால் இவை எல்லாமும் ஒன்றுமே இல்லை...
ஆனால்...
ஒன்றே ஒன்றை மட்டும் மன்னிக்கவே முடியாது...
அதை சகித்துக்கொள்ளவே முடியாது...
கை மீறி போய் விட்ட அதை... யாராலுமே தடுக்க முடியாதா?
அது அந்த விமானிகள் நினைத்தால் மட்டுமே முடியும்...
அது என்ன?
அது...
விமானிகள் குடித்து விட்டு போதையில் விமானத்தை ஓட்டுவது... (???!!!)
கொடுமை...
இதை யாரிடம் போய் சொல்லி அழுவது..?
இப்போது சொல்லுங்கள் நிஜாம் பாய்:
""அவ்வளவு அனுபவம் வாய்ந்த விமானிகள், 'இது சிறிய டேபிள் டாப் ரன்வே என்று தெரிந்தும்- பிரேக் கண்ரோல் கிடைக்காது என்று நன்கு அறிந்தும்' பாதி ரன்வேயில் இறக்குவார்களா?""
நம்பவில்லையா? சரி...
இந்த சுட்டியில் சென்று படியுங்கள்:
http://thatstamil.oneindia.in/news/2009/10/20/india-drunk-pilot-delays-ai-fight-to-new-york.html
மிக முக்கியமாய் செய்தியின் கடைசி வரியை படியுங்கள்...
தயவு செய்து படித்துவிட்டு சிரிக்காதீர்கள்... என் நெஞ்சு வெடித்து விடும்...
// Geetha Achal said...
கலைஞர் சித்திரம்...விரைவில் அனைவரையும் கவரும் வகையில் இருக்க வேண்டுமே முக்கியமாக குழந்தைகளை...தகவலுக்கு நன்றி...//
நன்றி கீதா..தொடர்ந்து இணைந்திருங்கள்
// வானம்பாடிகள் said...
tip top news:)
//
நன்றியண்ணே!
//NIZAMUDEEN said...
//காங்கிரஸ் கட்சி உத்தரவிட்டால் ராகுலுக்கு பிரதமர் பதவியை விட்டுத்தர காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.//
பிரதமர் தகுதியுடைய (இரு)வர் டாக்டர் மன்மோகனும், ராகுல் தம்பியும்தான்
இருக்கிறார்களா, அந்த காங்கிரஸில்????//
நல்லா கேட்டீங்கண்ணே! புரியறவங்களுக்கு புரியட்டும்.
// அன்புடன் மலிக்கா said...
நிஜாம் நியூஸ் சூப்பர்.
அனைத்துவிதமான செய்திகளும் ஒரேயிடத்தில் பார்க வசியாக இருக்கு பாராட்டுக்கள் நிஜாம்..
நீங்கள் கேட்கும் முன்பே நான் விபத்துநடந்த அன்றே அக்காலையிலேயே கவிதையெழுதிவிட்டேன் நிஜாம் பார்க்கவும்
http://niroodai.blogspot.com/2010/05/blog-post_22.ஹ்ட்ம்ல்//
நன்றி மலிக்கா!
// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நல்ல தகவல்கள் நிஜாம்.//
நன்றி ஸ்டார்ஜன். தொடர்ந்து வாங்க
//UFO saiட்...//
மிகச்சிறப்பான, அருமையான தகவல்கள் UFO
உங்கள் சுட்டி வேலைசெய்யவில்லை அல்லது நீக்கப்பட்டு விட்டது.
Mr.Nijam,
//உங்கள் சுட்டி வேலைசெய்யவில்லை அல்லது நீக்கப்பட்டு விட்டது.//
Don't worry... here it is....
போதையில் ஏர் இந்தியா விமானி: விமானம் 45 நிமிடம் தாமதம்
செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 20, 2009, 10:34[IST]
மும்பை: விமானி குடிபோதையில் இருந்ததால், மும்பையிலிருந்து நியூயார்க் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் 45 நிமிடம் தாமதமாகப் புறப்பட்டது.
திங்கள் கிழமை ஏர்டிராபிக் மிகுந்த நள்ளிரவில் இச்சம்பவம் நடந்ததால் விமான நிலையத்தில் பரபபரப்பு ஏற்பட்டது. பல வெளிநாட்டுப் பயணிகளும் இதனால் வெறுத்துப் போய் திட்டத் தொடங்கிவிட்டனர்.
அனைத்து விமானங்களின் விமானிகளுக்கும் இப்போது குடிபோதை டெஸ்ட் (breathalyzer test) நடத்தப்படுகிறது. விமானம் கிளம்புவதற்கு முன் இந்த சோதனை நடத்தப்படும். இந்த சோதனையில், விமானிகள் குடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக அவர்கள் தடுக்கப்பட்டு விடுவார்கள். மாற்று விமானிகள் அனுப்பப்படுவார்கள்.
நேற்று மும்பையிலிருந்து நியூயார்க் நகருக்கு கிளம்பத் தயாராக இருந்த ஏர் இந்தியாவின் போயிங் 777-200. இந்த விமானம் மிகவும் மதிப்பு வாய்ந்த பெருமைக்குரிய விமானமாகக் கருதப்பட்டு வந்தது. காரணம் இதுவரை ஒருநாள் கூட இந்த விமானம் தாமதமாகக் கிளம்பியதே இல்லையாம்.
மும்பையிலிருந்து நியூயார்க் நகருக்கு எங்கும் நிற்காமல் செல்லும் 'நான் - ஸ்டாப்' விமானம் இது. 11 வெவ்வேறு 'டைம் ஸோன்'களை ஒரே மூச்சில் கடந்து செல்லும் இந்த விமானம், பயணிகளுக்காகக் கூட 5 நிமிடம் தாமதித்ததில்லையாம். இதனால் எப்போதும் இந்த விமானத்தில் இடம் பிடிக்க, இந்திய - வெளிநாட்டுப் பயணிகள் பெரிதும் விரும்புவார்களாம்.
ஆனால் முதல்முறையாக தனது விமானியால் தாமதத்துக்குள்ளாகியிருக்கிறது இந்த விமானம். இந்த குடிபோதை கமாண்டரின் பெயரை ஏர் இந்தியா வெளியிடவில்லை.
45 நிமிட தாமததுக்குப் பிறகு, அதிகாலை 1.30 மணிக்கு மாற்று விமானி ராமலிங்கம் வந்த பிறகு கிளம்பிச் சென்றதாம்.
இந்தியாவில் விமானிகள் குடித்துவிட்டு விமானத்துக்குள் ஏறக் கூடாது என்பது விதி. அதற்காகவே குடிபோதை அறியும் டெஸ்ட் வைக்கிறார்கள். இதில் முதல்முறை மாட்டுபவர்களை எச்சரித்துவிடும் ஏர் இந்தியா, மறுமுறை மாட்டினால் சஸ்பெண்ட் செய்கிறது.
ஆனால் கடுமையான தண்டனை என்று எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. பல நேரங்களில் குடிபோதையில் பைலட்டுகள் தூங்கிவிட, மும்பையில் இறங்க வேண்டிய விமானம் கராச்சி வரை போய் திரும்பியதெல்லாம் நடந்திருக்கிறது.