May 19, 2010

தண்ணீரில் மிதக்கும் சென்னை

— நிஜாம் கான் @ 11:20 AM
சென்னைக்கு தென்கிழக்கே 190 கிலோ மீட்டரில் மையம் கொண்டுள்ள லைலா புயல் நாளை அதிகாலை ஆந்திராவில் ஓங்கோலுக்கும் விசாகப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது 125 கிலோ மீட்டர் வேகத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆந்திர கடலோர மாவட்டங்களில் 7 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயலின் பாதிப்புகளை எதிர்கொள்ள மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆந்திர முதல்வர் ரோசய்யா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் பல‌ இடங்களில் கணமழை பெய்து வருகிறது. சென்னையில் அனைத்து சாலைகளிலும் தண்ணீர் வெள்ளம் போல ஓடுகின்றது. அனைத்து வாகனங்களும் மிதமான வேகங்களில் செல்வதால் நகரின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக இருசக்கர வாகணங்களில் செல்லும் மக்கள் மழை காரணமாக இன்றைக்கு பேரூந்துகளிலும் ஆட்டோக்களிலும் பயணம் செய்வதற்காக பேருந்து நிலையங்களில் கூடியிருக்கின்றனர். இதனால் சென்னையின் பேரூந்து நிறுத்தங்களில் மக்கள் நெரிசல் காணப்படுகிறது. நேற்று வரை சுட்டெரித்த கத்தரி வெயிலால் அவதிப்பட்ட சென்னை மக்கள் இந்த திடீர் மழையின் காரணமாக கொஞ்சம் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
already seen this

6 Response to "தண்ணீரில் மிதக்கும் சென்னை"

  1. ஹுஸைனம்மா said...

    வருஷா வருஷம் திருவிழா மாதிரி புயல், மழை, வெள்ளமும் வருது, போகுதுன்னு ஆகிடுச்சு!! ஒரு முன்னேற்பாடும் செய்ய முயற்சி இல்லை போல!!

  2. vasu balaji said...

    குளு குளு இடுகை:). எங்க தலைவரே ஆளையே காணோம்.

  3. அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

    வந்திட்டீங்களா, வாங்க!

    பிரேக்கிங் நியூஸ் - வித்தியாச
    முயற்சி!

  4. நிஜாம் கான் said...

    வருகைக்கு நன்றி ஹூசைனம்மா! தொடர்ந்து வாங்க‌

  5. நிஜாம் கான் said...

    //வானம்பாடிகள் said...

    குளு குளு இடுகை:). எங்க தலைவரே ஆளையே காணோம்.//

    அண்ணே! கொஞ்ச நாள் பிசியண்ணே!

  6. நிஜாம் கான் said...

    // NIZAMUDEEN said...

    வந்திட்டீங்களா, வாங்க!

    பிரேக்கிங் நியூஸ் - வித்தியாச
    முயற்சி!//

    முழுமையா கவனம் செலுத்த முடியலைன்னு தான் இந்த பிரேக்கிங் நியூஸ் நிஜாம் பாய். தற்காலிகமாகத்தான்,

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,