"சக்கரவர்த்தி திருமகள்" அப்டின்னு ஒரு படம் வந்திச்சே! ஞாபகம் இருக்கா. அதிலே இளவரசர் எம்ஜிஆருக்கும், உண்மையான இளவரசி அஞ்சலி தேவிக்கும் திருமணம் நடக்கும். ஆனால் அந்த நாட்டுக்கு எப்படியாவது இளவரசியாக வேண்டும் என இளவரசியின் தோழி வரலட்சுமிக்கு பேராசை. அதேநேரம் PS.வீரப்பா எப்படியாவது இளவரசியை அடைய துடிப்பார். இதைப் பயன்படுத்திக் கொண்டு இளவரசியின் தோழி வரலட்சுமி ஒரு திட்டமிடுவார். முதலிரவு அறையில் காத்திருக்கும் இளவரசியிடம் மணமேடையில் நடந்ததையெல்லாம் சூசகமாகக் கேட்டுத் தெரிந்துகொண்டு, இளவரசியை கடத்தி PS.வீரப்பாவோடு அனுப்பிவைத்து விட்டு , அந்த அறையில் மணப்பெண் உடையில் புகுந்து காத்திருப்பார். தான் முன்னாள் கண்ட இளவரசியை நினைத்துக் கொண்டு உள்ளே வந்து எம்ஜிஆர் ஒரு பாட்டே பாடி முடித்து விட்டு முகத்தைப் பார்த்தால் அதிர்ச்சி. காரணம் அங்கிருப்பது வேறு யாரோ! இந்த சண்டாளி சொல்லுவார் நான் தான் இளவரசி என்று. ஆனால் எம்ஜிஆர் அதை ஒப்புக் கொள்ள மாட்டார். உடனே இவர் "அத்தான், நீங்கள் மணமேடையிலே என்னைக் கிள்ளி குறும்பு செய்தீர்களே! மறந்து விட்டீர்களா?" எனக் கேட்க எம்ஜிஆர் குழப்பமாகி விடுவார்.

இந்தப் படத்தை இப்போது அப்படியே கலரில் ரீமேக்கினால் அது தான் ஆயிசா சித்திக் குறித்து சோயிப் மாலிக் ஆரம்பத்தில் சொன்ன விவகாரம். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆயிசான்னு ஒரு சுமாரான குண்டுப்பொண்ணு துபாயில வாத்தியாரம்மாவா வேல பாத்துக்கிட்டு இருந்திருக்கு. அவங்க கூட மஹான்னு சொல்லி ஒரு அழகான பொண்ணும் தோழிகளானாங்களாம். இந்த நிலையில ஒரு தடவ சோயிப் மாலிக் கலந்து கொண்ட ஒரு விழாவில ஆயிசாவும்,மஹாவும் சோயிப் மாலிக்கை போயி மீட் பண்ணி ஆட்டோகிராப் கேட்டிருக்காங்க. இப்பதான் கதையோட டெர்னிங் பாயிண்டே!
மஹாவின் அழகில அப்படியே மயங்கி சொக்கிப்போயிடுறாரு சோயிப். இந்தப் பக்கம ஆயிசா எப்படியாவது சோயிப்ப கல்யாணம் பண்ணனும்னு முடிவெடுக்குறாங்க. ஆனா சோயிப் மஹாவின் அழகில மயங்கிவிழுந்ததும் ஆயிசாவுக்கு நல்லாத் தெரியும். அதனால இந்தப் பொண்ணு ஆயிசா ஊருக்கு வந்து மஹாங்கிற பேர்ல சோயிப்பை சாட்டிங்ல புடிக்குது. மஹான்னு பேரப்பாத்ததும் ஓடிவந்து சாட் செஞ்சாராம் மாலிக். நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு மஹா பேர்ல சாட் செஞ்ச ஆயிசா கேட்க, இவரும் அவர் கண்ட மஹான்னு நெனச்சி ஓக்கே சொல்ல பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகியது.
இரு வீட்டாரும் சந்தித்துக் கொள்கிறார்கள். திருமணம் நிச்சயமாகிறது. சோயிப் அந்த நேரத்துல ஆட்டத்துல பிசியா இருந்ததால இருவருக்கும் தொலைபேசி வழி திருமணம் நடக்கிறது (இன்னும் கொஞ்ச நாள்ல SMS வழி திருமணத்தையும் கண்டுபுடிச்சிடுவானுங்க). மஹாவை நினைத்து நினைத்து உருகியே திரும்பி வந்து பார்க்கும் போது அங்கேயிருந்தது ஆயிசா. சக்கரவர்த்தி திருமகள் படத்துல எம்ஜிஆருக்கு என்ன நிலைமை வந்ததோ அதே நிலைமையில் சோயிப்.
மஹாவும் நான் தான் ஆயிசாவும் நான் தான் என ஆயிசா சொல்ல, இல்லவேயில்லை நீ மஹாவின் பேரைச்சொல்லி கள்ளாட்டம் ஆடிட்டே என கோவித்துக் கொண்டு பாகிஸ்தானுக்கே செனறுவிட்டார் சோயிப். இது தான் சோயிப் மாலிக் - ஆயிசா விசயத்தில் முன்னர் சொல்லப்பட்ட கதை.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஹைதராபாத்தில் சானியா மிர்சாவுக்கும், எவனோ ஒரு பான்பராக் வாயனுக்கும் கல்யாணம் நிச்சயமாகியது. ஆனால் திடீரென்று சானியாவுக்கும் சோயிப்புக்கும் லிங்க் ஏற்பட பான்பராக் வாயனுக்கு பல்பு கொடுக்கப்பட்டு விட்டது.. பின்னர் சானியாவுக்கும் சோயிப் மாலிக்குக்கும் வரும் 15 ஆம் தேதி கல்யாணம் என நிச்சயம் செய்ததும் கிளம்பியது ஆயிசா பூதம்.
ஏமாற்றி விட்டார் என ஆயிசா குமுற, ஏமாற்றுத் திருமணம் என சோயிப் பொரும, முதலில் ஏமாற்றுத் திருமணம் எனச் சொல்லிய சோயிப் பின்னர் நான் ஆயிசாவை சந்திக்கவேயில்லை என அப்பட்டமாக ஒரு பொய்யை அவிழ்த்து விட்டார். ஜியோ நியூஸ் போன்ற பாகிஸ்தான் தொலைக்காட்சிகளும், இந்தியாவின் அனைத்து செய்தி சேனல்களும் சானியாவின் வீட்டு வாசலே கதி என கிடந்து இந்த விவகாரத்தை விடாப்பிடியாக பிடித்து செய்திகளை தொடர்ந்து ஒளிபரப்பி வந்தன. சோயிப் தனது குடும்ப நண்பர் என்றும் அவர் குறித்து தனக்கு முன்பே தெரியும் எனவும் சானியா கூறியிருந்தார்.
இவர்கள் செய்யும் கோமாளி வேலைகளுக்கு இஸ்லாத்தை பகடைக் காயாக்கி சில ஊடகங்கள் மோசமாக விமர்சித்து வருகின்றன.. சானியா, ஆயிசா, சோயிப் மாலிக் ஆகியவர்களை விமர்சித்தால் அது நியாயம். ஆனால் இவர்களை விட்டு விட்டு இஸ்லாமிய மார்க்கத்தை மிக மோசமாக விமர்சிக்கிறார்கள். ஆயிசாவை மாலிக் தொலைபேசி வழி திருமணம் செய்து கொண்டது உண்மை தான். ஆனால் இந்த தொலைபேசி வழி திருமணத்தை இஸ்லாம் அனுமதிக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளாமல் ஆளாளுக்கு தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். ஆயிசா, சோயிப் போன்றவர்கள் தங்கள் சுய நலனுக்காக வேண்டி அவர்கள் சார்ந்துள்ள மார்க்கத்தை வளைத்து நெளித்து அதுவும் இஸ்லாம் மார்கத்தில் உள்ளது போல காட்டிவிடுகிறார்கள். இது பிரபலமானவர்கள் சம்பந்தப் பட்டதால் வெளியே வந்திருக்கிறது. இல்லாவிட்டால் பத்தோட பதினொன்னு அத்தோட இது ஒன்னு என அமுங்கிப் போயிருக்கும்.
முதலில் நாம் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டியது இந்த தொலைபேசி வழி திருமணம் என்பது இஸ்லாத்தில் இருக்கிறதா என்பதை? இங்கே ஆரம்பமே அடிபட்டுப் போய் விட்டது. அதாவது சோயிப் மாலிக், மஹா தான் பெண் என்று நினைத்துக் கொண்டு ஆயிசாவை திருமணம் செய்து கொண்டதாக முன்னர் சொல்லியிருக்கிறார். எனவே இது முழுக்க முழுக்க மோசடி ஏமாற்று வேலை. ஆக இஸ்லாத்தைப் பொருத்தவரை ஆணுக்கும் பெண்ணுக்கும் பிடித்தால் தான் திருமணம். இந்த விசயத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமஉரிமை உள்ளது. அதே போல விவாகரத்து விசயத்திலும் சம உரிமை உள்ளது. அது மட்டுமின்றி பெண்ணுக்கு சாட்சியாக இரண்டு பேர் இருந்து தான் அந்தப் பெண்ணின் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும்.

இதையெல்லாம் விடுத்து தொலைபேசி வழி எப்படி திருமணம் செய்தார்களோ தெரியவில்லை. இந்தப் பக்கம் யார் இருந்தார்கள் என்று சோயிப்புக்குத் தெரியாது, அதே போல அந்தப்பக்கம் யார் இருந்தார்கள் என்று ஆயிசாவுக்குத் தெரியாது. இந்த நிலையில் இதை எப்படி திருமணமாக ஏற்றுக்கொள்ள முடியும்? இதே போலத் தான் தொலைபேசி வழி விவாகரத்தும். எந்த விதமான முகாந்திரமும் இன்றி தொலைபேசி வழி விவாகரத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. தொலைபேசி வழி திருமணம் எவ்வாறு ஏற்றுக்கொள்ளத் தகாததோ அதே போலத் தான் தொலைபேசி வழி விவாகரத்தும். ஆனால் இது முந்தைய நிலை தான். இப்போது கடினமான பிரச்சாரத்திற்கு பிறகு தொலைபேசி வழி விவாகரத்துக்கள் 99% ஒழிந்துவிட்டன.
இப்போது ஆயிசா பலமான ஆதாரங்களை வெளியிட்டவுடன் திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக சோயிப் முழிக்க ஆரம்பித்து தான் ஆயிசாவை திருமணம் செய்து கொண்டது உண்மைதான் எனவும் அறிவித்து விட்டார். அதன் பிறகு சோயிப் தரப்பும், ஆயிசா தரப்பும் இரு குழுவாக தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்து ஆயிசா வீட்டாருக்கு பெரிய்ய்ய்ய்ய்ய பத்து ரூவாய் ஒதுக்குவதாக அறிவித்ததாக ஒரு பக்கம் செய்திகள் உலவுகின்றன. சானியா திருமணத்தை நிறுத்தியே தீர்வது என தீர்மானமாக இருந்த ஆயிசா வீட்டார் இன்றைக்கு சோயிப் திருமணத்தை வாழ்த்தி இது எங்க வீட்டு கல்யாணம் என்பதை போல ஆதரிக்கிறார்கள். விட்டால் கல்யாணத்தில் ஆயிசாவின் தகப்பனார் பந்தியிலே நின்று பிரியாணிக்கு தயிர் வெங்காயம் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இஸ்லாமிய திருமணச் சட்டத்தின் படி பெண்களுக்கு நிச்சயமாக இரண்டு சாட்சிகளை வைத்துத் தான் மணமுடிக்க வேண்டும். திருமணத்தின் போது அதிக இழப்புகளை காலம் முழுவதும் சந்திக்கப் போவது பெண் தான் என்பதால் அவளுக்கு மணமகன் மஹர் எனப்படக்கூடிய மணக்கொடையை கொடுத்து தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.அதேபோல அந்த திருமணத்தை சாட்சிகளுடன் மணப்பெண், மணமகன் கையெழுத்திட்டு பதிவுசெய்து விடுவார்கள். அந்தப் பதிவுப் புத்தகம் அந்தப் பகுதி பள்ளிவாசல் நிர்வாகிகளால் பாதுகாக்கப்படும். ஆனால் இதெல்லாம் இல்லாமல் இவர்கள் டெலிபோன் வழித் திருமணம், தபால் வழி திருமணம் என இல்லாத ஒன்றை இருப்பது போலக் காட்டி தங்களின் தேவையை பூர்த்தி செய்து கொண்டபின் பிரச்சனை என வரும் போது அதை ஒட்டு மொத்த சமுதாயத்தின் மீது சாயமாக்கி பூசி விடுகிறார்கள்.
இதெல்லாம் சரி! இவ்வளவு பிரச்சனைகள் வந்தும் சானியா மிர்சா ஏன் ஒரு பாகிஸ்தானியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது தான் பலரது நியாயமான கேள்வி.. படித்தது, பயிற்சி எடுத்தது, விளையாடியது என எல்லாமே இந்தியாவின் நிழலிலே இருந்து விட்டு இப்போது ஒரு பாகிஸ்தானியை திருமணம் செய்து தொலைக்க என்ன வந்தது சானியாவுக்கு. ஏன் இந்தியாவிலே சானியாவுக்கு ஏற்ற ஆண்மகன்கள் யாருமே கிடையாதா? இந்திய மக்களின் வரிப்பணத்திலே படித்து இந்திய அரசின் பாராட்டுதல்கள், பட்டயங்களோடு வளர்ந்து படித்து முடித்த பிறகு அமெரிக்காவுக்கு சென்று அங்கே டாலர்களுடன் செட்டிலாகி விடுபர்களை துரோகிகள் என்று அழைப்பார்கள். அதே மாதிரி தான் சானியாவை நினைக்கத் தோன்றுகிறது. ஏற்கனவே முஸ்லீம்கள் பாகிஸ்தான் அபிமானிகள் என திட்டமிட்டு பரப்பப்படும் பாஸிஸக் குரல்களுக்க்கு இது மேலும் வலு சேர்க்கும் வகையிலே அமைந்து விட்டது. இதை நாம் கேட்டால் அது அவளின் சொந்த உரிமை என்று சொல்வார்கள். ஏற்கனவே அவிங்களோட இருக்கிற பிரச்சனை போதாதுன்னு சானியாவும் ஏதாவது குடும்பப் பிரச்சனை என வந்து நின்றால் (அவர் ஒரு முக்கிய பிரபலம் என்பதால்) அது சானியாவின் வீட்டு பிரச்சனையிலிருந்து நாட்டு பிரச்சனையாக மாறி விடும் அல்லது மாற்றி விடுவார்கள் என்பதை இங்கே நாம் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.
ஏற்கனவே அவிங்க கூட நமக்கு வாய்க்கா தகறாரு இருக்கு, இப்ப பொம்பள தகராறு வேறையா?


சரியான சாடல், சோயிப் செய்ததற்கும்
சானியாவிற்கும்
சரியான போடு. ஆமா. சின்ன்ன்ன அஞ்சு ரூபான்னுதானே பேப்பர்ல வந்திச்சி:))
இவர்கள் செய்யும் கோமாளி வேலைகளுக்கு இஸ்லாத்தை பகடைக் காயாக்கி சில ஊடகங்கள் மோசமாக விமர்சித்து வருகின்றன..//
இது தனிப்பட்ட விசயம், இதிலே சாதி, மதம், நாடெல்லாம் பார்ப்பது செம காமெடி, இதில் மதத்தை இரு குடும்பத்தினரும் துணைக்கழைத்திருக்கின்றனர். (தினமலர் செய்திப்பிரகாரம், அவற்றில் உள்ள புனைவுத்தன்மை எவ்வளவு என்றெல்லாம் என்னிடம் கேள்வி கேட்ககூடாது).
எந்த நாட்டுக்காரன யார கல்யாணம் பண்ணா நமக்கு என்னா சார். சானியா யாரை கல்யாணம் பண்ணனுமின்னு முடிவெடுக்க நமக்கு இன்னா அதிகாரம் இருக்குன்னேன்.
பிரபல இருக்கிறதால நானும் என்னுடைய திருமண வாழ்த்துக்களை சானியா-சோயப்புக்கு சொல்லிக்கிறேன்.அதுக்கு மேல எனக்கு எந்த உரிமையும் கிடையாது.
இப்படிக்கு நிஜாம் அவர்களே!!!
தொடர்பதிவில் வந்து கலந்து
கொள்ளுங்கள்.
http://nizampakkam.blogspot.com/2010/04/kathaikkaalam.html
தனிப்பட்ட மூன்று பேரின் சொந்த விஷயம் இது. இதில் ஊடகங்கள்தான் அளவுக்குமீறி தலையிடுகின்றன என்றால், நீங்களும் கண்ணியமில்லாத வார்த்தைகள் பயன்படுத்தி விமர்சித்திருக்கிறீர்கள்.
ஒரு இந்திய ஆண், வெளிநாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்தால், அதை இந்தியக் கலாச்சாரத்தின் மகிமை என்றெல்லாம் வெகுவாகப் பாராட்டி வரவேற்கும் நாம், அதுவே ஒரு இந்தியப் பெண், வெளிநாட்டவரைத் திருமணம் செய்தால் ஏன் வருந்தவேண்டும்?
இந்தியா-பாகிஸ்தான் இடையே திருமணங்கள் எப்பொழுதும் நடந்துகொண்டேதான் இருக்கிறது. இவர்கள் பிரபலம் என்பதால், தெரிகிறது. அவ்வளவுதான். இந்தியராய்ப் பிறந்ததினாலேயே, ஒரு பாகிஸ்தானையைக் காதலிக்கக் கூடாது என்பது எழுதாத விதிபோல!!
//
இவ்வளவு பிரச்சனைகள் வந்தும் சானியா மிர்சா ஏன் ஒரு பாகிஸ்தானியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது தான் பலரது நியாயமான கேள்வி.. படித்தது, பயிற்சி எடுத்தது, விளையாடியது என எல்லாமே இந்தியாவின் நிழலிலே இருந்து விட்டு இப்போது ஒரு பாகிஸ்தானியை திருமணம் செய்து தொலைக்க என்ன வந்தது சானியாவுக்கு. ஏன் இந்தியாவிலே சானியாவுக்கு ஏற்ற ஆண்மகன்கள் யாருமே கிடையாதா?
//
இது நியாயமான கேள்வியே இல்லை நிஜாம். அநியாயமான கேள்வி. அவர் இந்தியாவில் தான் பிறந்தார், ஆனால் அவரது டென்னிஸ் வெற்றிக்கு இந்தியாவில் பிறந்தது மட்டுமே காரணம் அல்ல. அப்படியெ இருந்தாலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையை விலையாக கேட்க முடியாது. பாகிஸ்தானோ பங்களாதேஷோ அமெரிக்காவோ அது அவரது தனிப்பட்ட விருப்பம். இதில் தேசம் தலையிட முடியாது.
ஹூசைனம்மா சொல்வது போல ஒரு அமெரிக்க பெண் இந்தியரை திருமணம் செய்தால் ஆஹா ஓஹோ என்பவர்கள் இதை மட்டும் எப்படி குறை சொல்ல முடியும்? உளுத்து போன மனநிலைகள் தான் இதற்கெல்லாம் காரணம்.
மற்றபடி, சானியா ஆயிஷா ஷோயிப் விவகாரம் அவர்களது தனிப்பட்ட பிரச்சினை, சட்டப்பிரச்சினை அவ்வளவு தான்.
//NIZAMUDEEN said...
சரியான சாடல், சோயிப் செய்ததற்கும்
சானியாவிற்கும்//
நன்றி நிஜாம்! தொடர்ந்து வாங்க
// வானம்பாடிகள் said...
சரியான போடு. ஆமா. சின்ன்ன்ன அஞ்சு ரூபான்னுதானே பேப்பர்ல வந்திச்சி:))//
இல்லண்ணே! ரெண்டு செய்தியுமே கன்ஃபார்ம் இல்லை. ஏதாவது ஒன்னா இருக்கலாம்..
//குடுகுடுப்பை said...
இவர்கள் செய்யும் கோமாளி வேலைகளுக்கு இஸ்லாத்தை பகடைக் காயாக்கி சில ஊடகங்கள் மோசமாக விமர்சித்து வருகின்றன..//
இது தனிப்பட்ட விசயம், இதிலே சாதி, மதம், நாடெல்லாம் பார்ப்பது செம காமெடி, இதில் மதத்தை இரு குடும்பத்தினரும் துணைக்கழைத்திருக்கின்றனர். (தினமலர் செய்திப்பிரகாரம், அவற்றில் உள்ள புனைவுத்தன்மை எவ்வளவு என்றெல்லாம் என்னிடம் கேள்வி கேட்ககூடாது).
எந்த நாட்டுக்காரன யார கல்யாணம் பண்ணா நமக்கு என்னா சார். சானியா யாரை கல்யாணம் பண்ணனுமின்னு முடிவெடுக்க நமக்கு இன்னா அதிகாரம் இருக்குன்னேன்.
பிரபல இருக்கிறதால நானும் என்னுடைய திருமண வாழ்த்துக்களை சானியா-சோயப்புக்கு சொல்லிக்கிறேன்.அதுக்கு மேல எனக்கு எந்த உரிமையும் கிடையாது.//
தங்களின் மேலான கருத்துக்கு நன்றி குடுகுடுப்பை. தொடர்ந்து இணைந்திருங்கள்.
// ஹுஸைனம்மா said...
தனிப்பட்ட மூன்று பேரின் சொந்த விஷயம் இது. இதில் ஊடகங்கள்தான் அளவுக்குமீறி தலையிடுகின்றன என்றால், நீங்களும் கண்ணியமில்லாத வார்த்தைகள் பயன்படுத்தி விமர்சித்திருக்கிறீர்கள்.
ஒரு இந்திய ஆண், வெளிநாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்தால், அதை இந்தியக் கலாச்சாரத்தின் மகிமை என்றெல்லாம் வெகுவாகப் பாராட்டி வரவேற்கும் நாம், அதுவே ஒரு இந்தியப் பெண், வெளிநாட்டவரைத் திருமணம் செய்தால் ஏன் வருந்தவேண்டும்?//
ஹூசைனமா! அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கு இந்தியா இடையே உள்ள நட்புறவு குறித்து தெரிந்து கொள்ளுங்கள். அமெரிக்காவோடு ஆயிரம் நடந்தாலும் பிரச்சனையில்லை என்பவர்கள் அதிகம். அதனால் தான் இது குறித்து எழுதியிருக்கிறேன்., இங்கே கண்ணியமில்லாத வார்த்தைகளை கொஞ்சம் சுட்டிக்காட்டினால் நல்லா இருக்கும்???????
//அது சரி said...
//
இது நியாயமான கேள்வியே இல்லை நிஜாம். அநியாயமான கேள்வி. அவர் இந்தியாவில் தான் பிறந்தார், ஆனால் அவரது டென்னிஸ் வெற்றிக்கு இந்தியாவில் பிறந்தது மட்டுமே காரணம் அல்ல. அப்படியெ இருந்தாலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையை விலையாக கேட்க முடியாது. பாகிஸ்தானோ பங்களாதேஷோ அமெரிக்காவோ அது அவரது தனிப்பட்ட விருப்பம். இதில் தேசம் தலையிட முடியாது.
ஹூசைனம்மா சொல்வது போல ஒரு அமெரிக்க பெண் இந்தியரை திருமணம் செய்தால் ஆஹா ஓஹோ என்பவர்கள் இதை மட்டும் எப்படி குறை சொல்ல முடியும்? உளுத்து போன மனநிலைகள் தான் இதற்கெல்லாம் காரணம்.
மற்றபடி, சானியா ஆயிஷா ஷோயிப் விவகாரம் அவர்களது தனிப்பட்ட பிரச்சினை, சட்டப்பிரச்சினை அவ்வளவு தான்.//
கருத்துக்களுக்கு நன்றி அதுசரி! இருந்தாலும் நாம் மீண்டும் மீண்டும் கேட்பது பதிவின் கடைசி வரியைப் படியுங்கள்
// www.bogy.in said...
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
//
நன்றி போஹி! தொடர்ந்து வாங்க.