Apr 5, 2010

மருத்துவர் ராமதாஸ்-விஜயகாந்த் ரகசிய சந்திப்பு--பரபரப்பு ரிப்போர்ட்

நிஜாம் கான் @ 12:36 PM

மருத்துவர் ராமதாஸ்-விஜயகாந்த் ரகசிய சந்திப்பு

இடம்: தைலாபுரம் தோட்டம்

பங்கேற்பவர்கள்: மருத்துவர் ராமதாஸ், விஜயகாந்த், வைகோ, விஜய.T.ராஜேந்தர், லொல்லுசபா மனோகர் மற்றும் கோ.க.மணி

நேரம்:காலை 9 மணி

(குரங்கு முகமூடியைப் போட்டபடி மினி பஸ்ஸில் வந்து இறங்குகிறார் விஜயகாந்த்)

கோ.க.மணி: அய்யா! அங்க பாருங்க ஏதோ ஒரு மிருகம் நம்ம நோக்கி வருது. வாங்க எஸ்ஸாயிடலாம்.

ராமதாஸ்: அட இருய்யா! நடையப் பார்த்தா தெரியல! அது நம்ம புரட்சிக் கலைஞர்யா..

கோ.க.மணி: அவரு ஏன் இங்க வர்றாரு? இப்ப தான் நாம எந்தப் படப்பொட்டியையும் தூக்கிக்கிட்டு ஓடுறது இல்லையே!

ராமதாஸ்: வாங்க தம்பி. அத கெழட்டுங்க. மணி பயப்படுறாரு. ஆமா இத ஏன் மாட்டிக்கிட்டு அலையிறீங்க?

விஜயகாந்த்: முன்னையே தெரிஞ்சிருந்தும் என் டெப்பாசிட் காசுக்கு வேட்டு வச்சிட்டியேயா, உன்னய சும்மா விட மாட்டேன்னு கத்திக்கிட்டு எங்க கட்சி பென்னாகரம் வேட்பாளரு கட்டையோட அலையிறதா ஒரு செய்தி வந்திச்சி. அதான் இப்படி முகமூடி மாட்டியிருக்கேன். அது சரி என்னய எதுக்காக இங்க வரச்சொன்னீங்க?

ராமதாஸ்: நாமெல்லாம் தனித்தனியா பிரிஞ்சி இருக்கறதால தான் வெற்றிவாய்ப்பை தவறவிட்டுட்டோம். இனிமே நாம ஒன்னு சேர்ந்து செயல்படலாமேன்னு தான் உங்கள கூப்பிட்டேன்.

(அப்போது கதவைத் திறந்து கொண்டு ஃபுல் மேக்கப்பில் லொல்லு சபா மனோகர் வருகிறார். அவரது அக்மார்க் முத்திரையான கையை சுழற்றியபடியே பேச ஆரம்பிக்கிறார்)

லொ.ச.மனோகர்: ஏம்ம்ம்ம்பா! இங்க ஏதோ சூட்டிங் நடக்குறதா சொன்னாங்கோ!.

கோ.க.மணி: யோவ்! சூட்டிங் இல்லைய்யா! மீட்டிங். அதாவது கூட்டம்..

லொ.ச.மனோகர்: கூட்ட்ட்டமா? மொத்தமே 3 பேரு தான் இருக்கீங்க, இதப்போயி கூட்ட்ட்டமுன்னு சொல்றீங்க!

ராமதாஸ்: யோவ்! என்னய்யா இது? இந்த ஆளையெல்லாம் யாருய்யா இங்க கூப்பிட்டது?

கோ.க.மணி: நீங்க தானே அய்யா ரகசியக் கூட்டத்துக்கு மனோகர கூப்பிடுன்னு சொன்னிங்க! அதான் விஜய் டிவி புகழ் லொல்லு சபா மனோகர கூப்பிட்டேன்.

ராமதாஸ்: நாசமாப்போச்சி! நான் சொன்னது வடசென்னை மாவட்ட செயலாளர் மனோகரய்யா! நீ மக்கள் டிவி தவிர எல்லா டிவியும் பாரு!

கோ.க.மணி: அய்யா! டிவிங்கிறது ஆங்கில வார்த்தை.

ராமதாஸ்: ரொம்ப முக்கியம். எப்பா! லொல்லு சபா மனோகரு தப்பு நடந்து போச்சி! இது ரகசியக் கூட்டம். அதனால நீ வெளிய போயிடு.

லொ.ச.மனோகர்: ரகசிய கூட்ட்ட்டமா? அப்பறம் ஏன் எல்லாம் சத்த்த்தமா பேசுறீங்க?

ராமதாஸ்: யோவ்! மரியாதையா வெளிய போ

லொ.ச.மனோகர்: ஹான்ன்ன்ன்ன்! நான் பேட்டா வாங்காம இங்கிருந்து போக மாட்டேன்..

ராமதாஸ்: நீ பேட்டாவால வாங்காம இங்கிருந்து போக மாட்டே!

கோ.க.மணி: தலைவரே!

ராமதாஸ்: தெரியும்யா! Bataங்கிறது ஆங்கில வார்த்தை.

விஜயகாந்த்: அல்லோ! என்னையும் உங்கள மாதிரி பொழுதுபோகாத ஆளுன்னு நெனச்சீங்களா? எனக்கு நெறைய வேலை இருக்குங்க. விசயத்த சொல்லுங்க.

ராமதாஸ்: இருங்க தம்பி! நமக்கு துணையா இன்னும் 2 கட்சித்தலைவருங்க வரனும்.

(அப்போது வைகோ கும்பிட்டபடி உள்ளே நுழைகிறார்)

வைகோ: தமிழினமே! உனக்கு தண்ணீர் தர மறுக்கிறானே! அய்யகோ 1973 லே....

ராமதாஸ்: அய்யா சாமி! கொஞ்சம் நிப்பாட்டுங்க. இப்படி வந்து உக்காருங்க. இன்னும் ஒரே ஒரு ஆளுதான் பாக்கி

(அடுத்த வினாடி கதவு படீரென தெறிக்க அங்கே வீராசாமி கெட்டப்பில் விஜய‌.டிஆர் வந்து நிற்கிறார். அந்தக் காட்சியைக் கண்டதும் தூணில் கட்டிக்கிட‌ந்த‌ மருத்துவர் அய்யா வீட்டு நாய் சங்கிலியை அறுத்துக் கொண்டு அலறிக்கொண்டே நாலு கால் பாய்ச்சலில் வெளியே ஓடுகிறது.)

விஜய‌.TR: மருத்துவர் அய்யா வணக்கம்! மதுரமல்லிதான் மணக்கும். வாங்க கேப்டன். இப்ப சிம்பு படம்தான் டாப் டென். அய்யா, நீங்க முன்னாடி ஒரு டாக்டரு..,இன்னும் கொஞ்ச நாள்ள தமிழ்சினிமாவ‌ கலக்கப் போறா என் டாட்டரு..

ராமதாஸ்: போதும்யா உன் டார்ச்சரு! பேசாம வந்து உக்காரு

கோ.க.மணி: தலைவரே டார்ச்சருங்கிறது...

ராமதாஸ்: தெரியும்யா! நீ சும்மா இரு..

லொ.ச.மனோகர்: அய்ய்ய்யிய்யோ! இவரு இங்க வருவாருன்னு முன்னயே சொல்லியிருந்தா நான் வந்திருக்கவே மாட்டேனே!

விஜய‌.TR: தம்பி மனோகரு! நீ ஒரு நான்சென்ஸ்ஸூ, இப்ப நான் சைலன்ஸ்ஸூ.. இப்ப ஓடுன உங்க நாயிக்கு இருக்கா லைசன்ஸ்ஸூ???

விஜயகாந்த்: அட சும்மா வள்வள்னு..ச்சீசீ வளவளன்னு பேசாம விசயத்துக்கு வாங்கய்யா!

வைகோ: தமிழினமே! நான் நடை பயணம் மேற்கொண்ட நாட்களிலே ………

ராமதாஸ்: அட நீங்க வேற சும்மா இருங்க! எப்ப பாரு நடைபயணம், மறியல்னு

லொ.ச.மனோகர்: ஏம்ம்ம்ம்ம்பா! கூட்டம் முடிஞ்சி கெடா வெட்டுவீங்களா?

விஜயகாந்த்: வர்ற கடுப்புல உன்னத்தான்டா வெட்டனும். அரசியல் மீட்டிங்கிக்கு நீயெல்லாம் ஏன்டா வந்தே!

விஜய‌.TR: டாய் மனோகரு! என் கட்சி பேரு லதிமுக..அதைப் பாத்து நடுங்கும்டா திமுக‌ நீ உடனடியா என் கட்சியில சேரு.., உனக்கு 3 வேளையும் நான் போடுறேன் சோறு

வைகோ: அடச்சீ! வாய மூடுய்யா! உன் கட்சியில உன் பையனே உறுப்பினர் இல்ல! இதுல பாவம்! இந்த அப்பாவி வாயில்லா பூச்சி மனோகர உன் கட்சியில் சேர்த்து பலி குடுக்கப் பாக்குறீயா!

விஜய‌.TR: இது இல்லங்க பலி! நான் போறது அண்ணா வழி!

வைகோ: அப்பறம் நாங்கல்லாம் என்ன தம்பி வழியிலயா போறோம்?

விஜய‌.TR: அதெல்லாம் இருக்கட்டும்.. விசயம் என்னன்னு சொல்லுங்க..,அந்த பிளாஸ்டிக் சேர‌ இந்தப்பக்கமா தள்ளுங்க‌

ராமதாஸ்: அதாவது நாம தனித்தனியா நின்னு, தனித்தனியா பணம், மூக்குத்தின்னு குடுத்தம்னா நமக்கு ஓட்டு கெடைக்காது. அதுனால ஓட்டு தான் பிரியும்..இப்ப கூட பாருங்க நம்ம தம்பி விசயகாந்து அதிமுக ஓட்டை பிரிச்சி அவங்களுக்கு டெப்பாசிட்டே காலியாக வச்சிட்டார்.

லொ.ச.மனோகர்: என்னாது? ஓட்டப் பிரிச்சிட்டாரா? அந்த வீட்டுக்காரங்க இவர சும்மாவா விட்டாங்க? மழ பேஞ்சா ஒழுகாதா??

வைகோ: யோவ் ஒனக்கு ஓட்டுக்கும், ஓட்டுக்குமே வித்திசாயம் தெரியல, நீயெல்லாம் எப்படிய்யா அரசியல் கூட்டத்துக்கு வந்தே??

கோ..மணி: அது என்னால‌ நடந்த தவறு, ஒரு நாளைக்கு 3 மணி நேரம் போகுது பவரு

ராமதாஸ்: யோவ்! நீ நல்லாத்தானய்யா இருந்தே! உனக்கும் தொத்திக்கிச்சா

கோ.க.மணி: இல்ல தலைவரே! சும்மா T.R மாதிரி டிரை பண்ணி பாத்தேன்.

ராமதாஸ்: டிரை பண்றதோட நிறுத்திக்கய்யா! அப்பறம் மற கழண்ட கேஸூ சீசன் 2ன்னு உன் பேரப் போட்டுறுவானுங்க‌

வைகோ: அடடா அத விடுங்க. இந்த பவர்கட்ட கண்டிச்சி குமரி முதல் கூடுவாஞ்சேரி வரை நடைபயணம் ஒன்னு போடப்பேறேன். நாளைக்கு வர்ரீங்களா?

ராமதாஸ்: அய்யோ! நாளைக்கு எங்களுக்கு வேலையிருக்கு.கொஞ்சம் சப்ஜெக்ட் பக்கமா வர்ரீங்களா?

கோ.க.மணி: தலைவரே! சப்ஜெக்ட்ங்கிறது...

ராமதாஸ்: நீ சும்மா இருய்யா!

விஜயகாந்த்: இவருக்கு சர்க்கரை வியாதி வந்ததும் போதும் இத சாக்குவச்சி நடையா நடக்குறார். ஏங்க நீங்க கூட ஒரு ஓட்டுக்கு 500 ரூபாயும் மூக்குத்தியும் குடுத்தீங்க. அவங்களும் குடுத்தாங்க. ஆனா நான் பத்து பைசா கூட குடுக்கல.

ராமதாஸ்: அதத்தான் நானும் சொல்றேன். இனிமே நீங்களும் நாங்களும் ஒன்னா கூட்டணி வச்சி போட்டியிட்டா மொத்த வாக்கையும் கூடையப்போட்டு அள்ளிடலாம்.

விஜய‌.TR: இனிமே என்னோட‌ வையுங்க கூட்டணி..சும்மா இருந்தா மத்தியானம் போகலாம் மேட்டனி

விஜயகாந்த்: கூட்டணி வைக்கிறதெல்லாம் ஓக்கே! ஆனா அந்தக் கூட்டணிக்கு நான் தான் தலைவரா இருப்பேன்

விஜய‌.TR:: என்னாது... அப்ப எங்களுக்கெல்லாம் என்ன வேல..உங்களுக்கு மட்டுந்தானா விழனும் மால?

விஜயகாந்த்: கொஞ்சம் இருங்க. முதல்ல கூட்டணி அமைப்போம்.அதுக்கப்பறம் யாருக்கு எத்தன சீட்டுங்கிறத பேசி முடிவு பண்ணிக்கலாம்.

லொ.ச.மனோகர்: ஏம்ம்ம்பா! மொதல்ல எனக்கு ஒரு சீட்டு குடுப்பா. ரொம்ப நேரமா கீழ உக்காந்து இருக்கேன்.

விஜயகாந்த்: அட இது வேற இம்சை. நான் சொல்றத கேளுங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும். நல்லபடியா அமைஞ்சா நம்ம கூட்டணிக்கு நான் தான் கேப்டன்

லொ.ச.மனோகர்: நீங்க தான் கேப்ப்ப்ப்டனா.அப்ப நான் தான் ஓப்பனிங் பேட்ஸ் மேன்

ராமதாஸ்: நாம எதப்பத்தி பேசறோம், இவன் எதப்பத்தி பேசுறான் பாரு. டேய் மனோகரு இனிமே நீ வாயத்தொறந்தே உன்ன அடிச்சி துவச்சிடுவேன்.ராஸ்கல்

கோ.க.மணி: தலைவரே! ராஸ்கல்ங்கிறந்து..

ராமதாஸ்: இது அவனுக்கு மட்டுமில்ல‌! உனக்கும் சேத்துத்தான்யா சொல்றேன். அதெல்லாம் முடியாது தம்பி நான் தான் தலைவரா இருப்பேன்.

விஜய‌.TR: நோ சான்ஸ்.. கூட்டணிக்கு நான் தான் தலைவன்..சுப்ரமண்ய சாமி கட்சியின் சின்னம் ஏர் உழவன்..

வைகோ: அய்யிய்ய! இது வேலைக்காவது. அப்பறம் என்ன எதுக்கு கூப்பிட்டீங்க. நமக்குள்ள இப்பவே இவ்ளோ பிரச்சனை கருத்து வேறுபாடு. இன்னும் ஆரம்பிக்கவேயில்ல அதுக்குள்ள ஆளுக்கு ஒரு பக்கம் இழுத்துக்கிட்டு போறோம். இதெல்லாம் வெளங்கவா? உங்களுக்கு தலைவராகனும்னு ஆசையிருந்தா அதான் உங்க வீட்டு ரேசன் கார்டுல குடும்பத்தலைவர்னு போட்டு இருக்குல்ல. அது போதாதா? எங்கள யூஸ் பண்ணி நீங்க தலைவராகலாம்னு பாக்குறீங்களா?

ராமதாஸ்: வேண்டாம்யா உங்க கூட்டணி. பென்னாகரம் மாதிரி இனிமே நான் எல்லாத் தொகுதியிலும் தனிச்சி நிக்கப் போறேன்.

விஜயகாந்த்: பென்னாகரம் தொகுதி உங்க ஆளுங்க‌ ஏரியா..அதுனால ரெண்டாவது எடத்துக்கு வந்திட்டீங்க. இதே மாதிரி மதுரையில,சென்னையில் நீங்க தனியா நிக்க முடியுமா?

ராமதாஸ்: நானாவது ரெண்டாவது இடத்துக்கு வந்தேன். ஆனா உங்களுக்கு டெப்பாசிட்டே போச்சே!

விஜயகாந்த்:: எனக்கும் மட்டுமா டெப்பாசிட் போச்சி? ஆனானப்பட்ட அம்மாவுக்கே மக்கள் தண்ணி காட்டிட்டாங்க‌

வைகோ: மறுபடியும் அதையே ஞாபகப்படுத்தாதீங்க‌! நானே அம்மாவுக்கு டெப்பாசிட் போச்சின்னு கவலையா இருக்கேன்.இதுல வேற‌….

ராமதாஸ்: பாமக சிங்கிளா நின்னதால தான் இந்த இரண்டாவது இடம். நான் மட்டும் ஏதாவது ஒரு கட்சி கூட கூட்டணி வச்சிருந்தா நிச்சயம் வெற்றி பாமகவுக்கு தான்.

விஜய‌.TR: அதான் அப்பவே உங்ககிட்ட சொன்னேன் . என்னோட கூட்டனி வச்சி பென்னாகரத்துல நில்லுங்கன்னு.. நின்னு இருந்தா...

ராமதாஸ்: டெபாசிட்டும் போயிருக்கும் அதானே!

லொ.ச.மனோகர்: ஏம்ம்ம்பா! எல்லாரும் டெப்பாசிட்டு,டெப்பாசிட்டுன்னு சொல்றீங்களே! எந்த பேங்குலபா அக்கவுண்ட் ஓப்பன் பண்ணுனீங்கோ

(இதைக் கேட்டு கடுப்பான மருத்துவர் அருகே கிடந்த கட்டையை எடுத்து மனோகரை சாத்து சாத்து என சாத்த அருகே இருந்த தலைவர்கள் எல்லாம் பயந்து போய் ஜன்னல் வழியே எகிறி குதித்து ஓடுகிறார்கள்)

அறிவிப்பு: இது முழுக்க முழுக்க கற்பனையே! யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல!

already seen this

14 Response to "மருத்துவர் ராமதாஸ்-விஜயகாந்த் ரகசிய சந்திப்பு--பரபரப்பு ரிப்போர்ட்"

  1. Anonymous said...

    எங்கள சிரிக்க வச்சு அவுங்கள யோசிக்க வச்சிட்டீங்க.
    கற்பனை ஒக்கே, பாஸாயிடுத்து

  2. vasu balaji said...

    சிரிச்சி முடியல நிஜாம்:)). சூப்பர்ப்

  3. இராகவன் நைஜிரியா said...

    அரசியலில் எதுவும் நடக்கலாம்.

    இந்த கூட்டணி அமைந்தாலும் ஆச்சர்யபட முடியாது..

  4. அப்துல்மாலிக் said...

    சிரிச்சு கண்ணுலே தண்ணீ வந்துடுச்சு நிஜாம்..

    //லொ.ச.மனோகர்: என்னாது? ஓட்டப் பிரிச்சிட்டாரா? அந்த வீட்டுக்காரங்க இவர சும்மாவா விட்டாங்க? மழ பேஞ்சா ஒழுகாதா??//

    இதுதான் டாப்ப்ப்ப்பூ

  5. அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

    //கோ.க.மணி: தலைவரே! சப்ஜெக்ட்ங்கிறது...//

    இதுதான் காமெடி!

    கோ.க.மணி: ஐயா, காமெடிங்கிறது...

    இதுக்குமேல எழுத வரல...

  6. அன்புடன் மலிக்கா said...

    சிரிப்பிலும் சிந்தனைகளை அள்ளிதெளிச்சிட்டீங்க நிஜாம்.
    என்ன ஆளையே காணோம்.

    மூன்று தளத்திலும் பதிவு போட்டுயிருக்கேன் வந்துபாருங்க.
    எல்லாம் உங்களால ஏன் நீங்க தானே எப்படி இப்புடின்னு கேட்டிங்க அதான்..

  7. நிஜாம் கான் said...

    //Monks said...
    எங்கள சிரிக்க வச்சு அவுங்கள யோசிக்க வச்சிட்டீங்க.
    கற்பனை ஒக்கே, பாஸாயிடுத்து//

    நன்றி மான்க்ஸ்! தொடந்து வாங்க‌

  8. நிஜாம் கான் said...

    //வானம்பாடிகள் said...
    சிரிச்சி முடியல நிஜாம்:)). சூப்பர்ப்//

    நன்றியண்ணே! தொடந்து வாங்க‌

  9. நிஜாம் கான் said...

    //இராகவன் நைஜிரியா said...
    அரசியலில் எதுவும் நடக்கலாம்.

    இந்த கூட்டணி அமைந்தாலும் ஆச்சர்யபட முடியாது..//


    நன்றியண்ணே! தொடந்து வாங்க‌

  10. நிஜாம் கான் said...

    // அபுஅஃப்ஸர் said...
    சிரிச்சு கண்ணுலே தண்ணீ வந்துடுச்சு நிஜாம்..

    //லொ.ச.மனோகர்: என்னாது? ஓட்டப் பிரிச்சிட்டாரா? அந்த வீட்டுக்காரங்க இவர சும்மாவா விட்டாங்க? மழ பேஞ்சா ஒழுகாதா??//

    இதுதான் டாப்ப்ப்ப்பூ//



    நன்றி அபுஅஃப்ஸர்! தொடந்து வாங்க‌

  11. நிஜாம் கான் said...

    //NIZAMUDEEN said...
    //கோ.க.மணி: தலைவரே! சப்ஜெக்ட்ங்கிறது...//

    இதுதான் காமெடி!

    கோ.க.மணி: ஐயா, காமெடிங்கிறது...

    இதுக்குமேல எழுத வரல...//



    நன்றி நிஜாம்! தொடந்து வாங்க‌

  12. நிஜாம் கான் said...

    நன்றி! தலைவன்.காம். ஆலோசிப்போம்

  13. நிஜாம் கான் said...

    //அன்புடன் மலிக்கா said...
    சிரிப்பிலும் சிந்தனைகளை அள்ளிதெளிச்சிட்டீங்க நிஜாம்.
    என்ன ஆளையே காணோம்.

    மூன்று தளத்திலும் பதிவு போட்டுயிருக்கேன் வந்துபாருங்க.
    எல்லாம் உங்களால ஏன் நீங்க தானே எப்படி இப்புடின்னு கேட்டிங்க அதான்..//

    கொஞ்சம் பிசி மலிக்கா! இனிமே முயற்சி பண்றேன். நான் வரலைங்கிறதுக்காக எதையும் நிறுத்த வேண்டாம். தொடந்து எழுதுங்க‌

  14. Anand said...

    Ultimate :)

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,