அதிராம்பட்டினத்தில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற 3 மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடுமையான காற்றுடன் மழை பெய்து வருகிறது. பலத்த காற்றின் காரணமாக இராமேஸ்வரம் பாம்பன் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 150 க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக கடலோர மீனவ கிராமங்களில் இருக்கும் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. தமிழகத்தின் வட காலோர மாவட்டங்களில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்னும் 48 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு நடுவம் தெரிவித்துள்ளது.
already seen this


//ஆந்திராவில் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.//
தமிழ்நாட்டிலும் பாதிப்புக்களுக்கு ஏற்ப
முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்
திருப்திகரமாயிருகிறதா?
தமிழ் நாட்டுக்கு அவ்வளவு பாதிப்பு இல்லைண்ணே!