விமானத்தில் பயணம் செய்த அனைவரும் இறந்து விட்டதாக முதலில் கூறப்பட்டது. தீ கொழுந்து விட்டு எரிந்ததாலும் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. படுகாயங்களுடன் 4 குழந்தைகள் உட்பட 8 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இறுதியில் 158 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவர்களின் பெயர் பட்டியலை ஏர் இந்தியா நிர்வாகம் வெளியிட்டது. போதிய வெளிச்சம் இல்லாததும் விமானியும் கவனக்குறைவுமே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த விபத்துகளில் இது தான் தான் மோசமான விபத்து எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூபாய் 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்ததுள்ளது. கருகி உருக்குலைந்த நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதால் யார் என அடையாளம் காண்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மண்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதலமைச்சர் கலைஞர் ஆகியோர் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். விமானத்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் கர்நாடகா மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இவர்களில் அதிகபட்சம் துபாயில் வேலை செய்துவிட்டு விட்டு ஊருக்குத் திரும்பியவர்கள் எனவும் தெரிகிறது.
உயிரிழந்தவர்களில் யாரும் தமிழர்கள் இல்லை. இந்த விமானம் ஓடு பாதியில் இறங்காமல் நேராகச் சென்றதாகவும் விபத்துக்கு முன்பு விமானியிடம் இருந்து எந்த விதமான அவசர சமிக்கைகளும் வரவில்லை எனவும் மங்களூரு விமான கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. போதிய வெளிச்சம் இல்லாததும், விமானியும் கவனக்குறைவுமே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
அது மட்டுமின்றி லைலா புயல் காரணமாக பெய்த மழையால் விமானம் தடுமாறியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த விமானத்தின் கருப்புப் பெட்டி இன்னமும் கிடைக்காததால் விபத்து குறித்த சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.
already seen this


உண்மையிலேயே மிகுந்த துயரமான சம்பவம்.
இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!
ஆழ்ந்த அனுதாபங்கள்
அழைக்கவந்தவர்களின் மனம் எப்படி இருக்கும்
தமிழ்குடும்பம்.காம்
காட்சி என்று தலைப்பில் இருப்பது என்னவோ போல் இருக்கிறது. இது ரசனைக்குரியது அல்ல, காட்சிப்படுத்த ஒன்றும் இல்லை. மங்களூர் விமான விபத்து படங்கள் என்றே போட்டு இருக்கலாம்
//NIZAMUDEEN said...
உண்மையிலேயே மிகுந்த துயரமான சம்பவம்.
இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!//
நிச்சயம் செய்வோமாக
// தமிழ் குடும்பம் said...
ஆழ்ந்த அனுதாபங்கள்
அழைக்கவந்தவர்களின் மனம் எப்படி இருக்கும்
தமிழ்குடும்பம்.காம்//
எல்லாருக்கும் பொதுவான இறைவன் அவர்களுக்கு அமைதியைக் கொடுக்கட்டும்
// கோவி.கண்ணன் said...
காட்சி என்று தலைப்பில் இருப்பது என்னவோ போல் இருக்கிறது. இது ரசனைக்குரியது அல்ல, காட்சிப்படுத்த ஒன்றும் இல்லை. மங்களூர் விமான விபத்து படங்கள் என்றே போட்டு இருக்கலாம்//
கருத்துக்கு நன்றி! மாற்றிவிட்டேன் தோழரே!
'உயிரிழந்தவர்களில் யாரும் தமிழர்கள் இல்லை'. ungluky ethu nleruk?