செய்தித் துளிகள் : 12/06/2010:
சனிக்கிழமை இரவு ரிலாக்ஸாக டிவி பார்த்து விட்டு அப்போது தான் படுக்கச் சென்றோம். இரவு 1 மணி இருக்கும்.கொஞ்ச நேரம் படுக்கையில் இருந்தவாறு பேசிக் கொண்டிருந்து விட்டு லேசாக சாய்ந்தோம். படுத்து ஒரு 5 நிமிசம் இருக்கும் எனக்கு லேசாக உதறல் ஏற்படுவது போல இருந்தது. சரி நமக்குத் தான் ஏற்கனவே உடம்பு வேற சரியில்லாம லேசான தலைவலியோடு மயக்கமும் இருக்கிறதே என்ற நினைப்பில் அதை நான் கண்டுகொள்ளவில்லை. இருந்தாலும் அருகே படுத்திருந்த என் நண்பனிடம் என்னடா பில்டிங் லேசா ஷேக் ஆன மாதிரி இருந்திச்சேன்னு கேட்டேன். அதுக்கு அவன் சிரித்துக் கொண்டே அதெல்லாம் பிரம்மை என்றான். ஒரு 3 நிமிஷம் போயிருக்கும்,உடனே பதறி எழுந்த அவன் ஆமாண்டா பில்டிங் ஷேக் ஆகுது என கத்திக் கொண்டே ஓடினான். இவன் ஓடி வருவதைப் பார்த்து மெயின் ஹாலில் உக்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தவனும் எழுந்து ஓட, வேகமாக சட்டை கூட போடாமல் பனியனுடன் ஓடி வந்தோம். வந்து தெருவில பார்த்தா யாரையுமே கானோம். நாங்க மட்டும் தான் இருந்தோம்.

நான் என் நண்பன்கிட்ட கேட்டேன்,"ஏன்டா நீ உண்மையிலேயே ஃபீல் பண்ணுனியா இல்ல நான் சொன்னேன்னு நீயும் ஓடியாந்தியான்னு". அதுக்கு அவன் உண்மையிலேயே உணர்ந்ததாக சொன்னான். நாங்க போய் கொஞ்ச நேரத்தில் எங்க ஏரியா மக்கள் சிலரும் வெளியே வந்தார்கள். அவர்களும் பீதியோடு காணப்பட்டார்கள். அவர்களிடம் சென்று நிலநடுக்கம் பத்தி கேட்டோம். அவர்களும் உணர்ந்ததாக்ச் சொன்னார்கள். நான் என் மொபைலை வீட்டுக்குள் வைத்து விட்டு வந்து விட்டதால் மீண்டும் உள்ளே சென்று மொபைலை எடுத்து வந்து விண்டிவியைத் தொடர்பு கொண்டு விசயத்தைச் சொன்னேன். உங்க ஏரியாவிலும் உணர்ந்தீர்களா என அவர் கேட்க, விசயம் ஏற்கனவே வெளியாகி விட்டது என நினைத்துக் கொண்டு அவரிடம் விவரம் கேட்க சென்னை நகர் முழுவதும் லேசான நிலநடுக்கம் என்றும், அந்தமான் நிக்கோபரில் 7.7 க்கு நிலநடுக்கம் எனவும் செய்தியைச் சொன்னார். நாங்கள் இருந்த பகுதியில் மக்கள் கூட்டம் கூட ஆரம்பித்தது. பலர் வேகமாக மோட்டார் பைக்கை எடுத்துக் கொண்டு பீச் நோக்கி விரைந்தார்கள்.

ஆனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் ஐஸ்ஹவுஸில் நின்ற இரவு ரோந்து காவல் துறையினர் அவர்களை உள்ளே விடாமல் திரும்ப விரட்டினர். நாங்களும் வண்டியை எடுத்துக் கொண்டு நகரின் சில பகுதிகளில் வலம் வந்தோம். ஆங்காங்கே சைக்கிளில் டீ, சிகெரெட் வியாபாரங்கள் களைகட்டி இடுந்தது. அங்கே ஒரு டீயை போட்டு விட்டு நேராக வீட்டுக்கு வந்து விட்டோம். இங்கு வந்தால் யாருக்கும் தூக்கம் வருவதாகத் தெரியவில்லை. எனவே ஆளுக்கு 2 மணி நேரத்திற்கு விழித்திருந்து காவல் இருக்க வேண்டும் என ஒப்பந்தம் ஆகியது. ஆனால் யார் முதலில் விழித்து இருப்பது என பிரச்சனை வரவே மூவரின் பெயரையும் சீட்டில் எழுதி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்தலில் என் பெயர் முதலில் வந்து தொலைத்து விட்டது. சரி சும்மா முழிச்சிக்கிட்டு இருக்காம சுடச்சுட இத பதிவா போட்டுறலாமுன்னு தான் இந்த வேலய செஞ்சி முடிச்சேன். இதற்கு இடையில் கொழும்பில் இருந்து அண்ணன் லோசனும் அவர் உணர்ந்த நிலநடுக்கம் குறித்து ஒரு அவசர செய்தியை பதிவேற்றி விட்டார்.
நில நடுக்கம் பற்றிய விவரங்கள் சில:
- அந்தமான் நிக்கோபர் தீவில் சனிக்கிழமை நள்ளிரவு 12.56 க்கு 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது
- நிக்கோபர் தீவுகளில் ஏற்பட்ட நில நடுக்கம் சென்னையின் பல பகுதிகளில் பரவலாக உணரப்பட்டது
- சென்னையில் இரண்டு முறை கட்டிடங்கள் லேசாக குலுங்கின.. சில வினாடிகள் மட்டுமே இது நீடித்தது
- நில நடுக்கத்தால் மேஜை நாற்காலிகள் அதிர்ந்தன. சென்னை நகர் முழுவதும் உணரப்பட்ட இந்த நில நடுக்கத்தால் மக்கள் அதிகபட்சமாக சாலைகளிலும் தெருக்களிலும் நின்று கொண்டிருந்தனர்
- இந்திய பெருங்கடலில் மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து ஆகிய ஆறு நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது
- நிக்கோபர் தீவுகளுக்கு மேற்கே 160 கிலோ மீட்டர் தொலைவில்,10கிலோ மீட்டர் கடலுக்கு அடியில் நில நடுக்கம் மையம் கொண்டுள்ளதாக தகவல்


தமிழ்நாட்டின் நிலை கண்டு நிலமே நடுங்குகிறதோ
எந்த சனிக்கிழமை என்று தேதியை குறிப்பிட்டால் நல்லது.ஏனெனில் பின்னாளில் இதே செய்தியை திரும்பவும் பார்க்கும்போது எந்த நாள் என்று தெரிந்துகொள்ளலாம்.எப்பொழுதும் எந்த தகவலையும் தேதியுடன் சொல்லவும்.தகவலுக்கு நன்றி.
படிக்கவே கஷ்ட்டமா இருக்கு.
//பலர் வேகமாக மோட்டார் பைக்கை எடுத்துக் கொண்டு பீச் நோக்கி விரைந்தார்கள்.//
அது சரி,எதுக்காக எல்லோரும் பீச்சுக்கு போனாங்க?
நிலநடுக்கம் தீவிரவாதிகளின் சதிவேலையாக இருக்கும்.
//goma said...
தமிழ்நாட்டின் நிலை கண்டு நிலமே நடுங்குகிறதோ//
நேற்று யார் மீதோ பழி போட்டுவிட்டார்கள். இன்றைக்கு யார் மீது பழி போட கோமா???
thamizh elango said...
எந்த சனிக்கிழமை என்று தேதியை குறிப்பிட்டால் நல்லது.ஏனெனில் பின்னாளில் இதே செய்தியை திரும்பவும் பார்க்கும்போது எந்த நாள் என்று தெரிந்துகொள்ளலாம்.எப்பொழுதும் எந்த தகவலையும் தேதியுடன் சொல்லவும்.தகவலுக்கு நன்றி.//
நிச்சயமாக!! மாற்றிவிட்டேன் நண்பரே!
அமைதி அப்பா said...
படிக்கவே கஷ்ட்டமா இருக்கு.
//பலர் வேகமாக மோட்டார் பைக்கை எடுத்துக் கொண்டு பீச் நோக்கி விரைந்தார்கள்.//
அது சரி,எதுக்காக எல்லோரும் பீச்சுக்கு போனாங்க?//
சென்னை நகர சந்துகள் குறுகலானவை என்ற பயத்தில், சென்னையில் இருக்கும் ஒரே பரந்த வெளியான பீச் நோக்கி விரைந்தார்கள். ஆனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் திரும்ப அனுப்பப்பட்டார்கள். அதுமட்டுமில்லாம நம்ம மக்களுக்கு எல்லாமே ஒரு ஜாலிதானே!
// ramalingam said...
நிலநடுக்கம் தீவிரவாதிகளின் சதிவேலையாக இருக்கும்.//
எப்புடி நண்பரே! விழுப்புரம் சம்பவம் மாதிரியா??? ஆஹா! சீட்ரெட்ட வெளிய சொல்லக்கூடாது..
நான் பதிவிட்ட நடு இரவிலும் வேகமாய் வந்து பதிவு படித்து ஓட்டுப்போட்டு விட்டுச் சென்ற அண்ணன் வானம்பாடிகள் பாலா அவர்களை நான் என்னவென்று சொல்வது?? நன்றி தான் சொல்ல வேண்டும்..
சுடச்சுட செய்தி, நான் லேட்டாதான் தெரிந்துக்கொண்டேன் டிவிட்டரில்(காலையில்)
இறைவந்தான் எல்லோரையும் காப்பாத்தனும்
நாம் செய்யும் அனைத்துக் காரியங்களையும்
இறைவன் கவனித்துக் கொண்டிருக்கிறான்
என்பதை உணர்த்தவே அவ்வப்போது
இதுபோன்ற நில அதிர்வுகள் தந்து,
அவன் நினைவூட்டுகிறான்.
அவனே நம்மனைவரையும் காப்பாற்றுபவன்.
நன்றி அப்ஸர், நன்றி நிஜாம் பாய்.., தொடர்ந்து வாங்க